Periyava Golden Quotes-156

Upanayanam

உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு, சாஸ்திர விரோதமானது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் ‘ஷோ’ அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது. பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமாதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The upanayana samskara must not be postponed on any pretext whatsoever. Sometimes the marriage of a girl is delayed because the parents do not have enough money to meet all the wedding expenses. This is also not justified and is against the sastras. There is a lot of “Show” in our weddings and this has come to be accepted as inevitable. Even if we, for our part, do not like any lavish display at weddings we yield to the wishes of the groom’s people. The marriage of a girl is delayed until her parents manage to raise the money to celebrate it in a big way. It is also held up because a suitable groom does not turn up. Then there is the problem of the groom’s people giving approval to the alliance. There are no such reasons for the “upanayanam” to be delayed nor is there is any compulsion to make it expensive. It is not like a marriage in which we have to take into consideration the views and wishes of the groom’s people. So there can be no valid excuse for failure to perform the upanayana of a son at the right time. The delay is unforgivable on any count. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading