வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!


Thanks to Sri Varagooran mama for this sharePeriyava_Rudraksham
(பெரியவாளின் சிறுநீரக சிகிச்சை)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
“சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை.ரொம்பவும் சிரமம். ஸ்பெஷலிஸ்டுகளிடம் போய்  மருந்து
சாப்பிட்டு ஏகப்பட்டது செலவழித்தாயிற்று”-(ஒரு நபர்)
பெரியவா எதிரே வந்து நின்று ஒரு குரல் அழுதார்.
பொதுவாக இம்மாதிரி நிலைமைகளில் கருணை பொங்கப் பேசும் பெரியவா,அப்போது கடுமையாகச்
சாடினார்கள்.
“எல்லாரும் தப்பு-அதர்மம் பண்ணிவிட்டு, கஷ்டம் வந்தபிறகு இங்கே வருகிறா. தான் தப்பு செய்ததைப் புரிஞ்சுக்கிறதில்லே. நான் என்ன செய்யட்டும்?”
ஏன் இந்தக் கோபம்?- என்று யாருக்கும் புரியவில்லை.
பின் பெரியவா சொன்னார்கள்.;
“தர்ம கார்யத்துக்குன்னு இவரோட மூதாதையர்கள் டிரஸ்ட் வெச்சிருக்கா. நன்றாக விளைகிற நிலம். தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்யணும், இவர். அந்த சொத்தையே விற்று சாப்பிட்டுட்டார்.
சிறுநீரகக் கோளாறு என்று சொல்லிக்கொண்டு வந்தவருக்கு நெஞ்சில் உறைத்தது.

“இனிமேல் தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்கிறேன்” என்று  உறுதிமொழி அளித்தார்.

பெரியவா மனம் இளகி, “வசம்பு தெரியுமா? நாட்டு மருந்துக் கடையிலே கிடைக்கும். அதை அறைத்து அடிவயத்திலே தடவிண்டு வா…” என்றார்கள்.
பத்து பன்னிரண்டு நாள்கள் சென்றபின் அதே நபர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாள் கேட்பதற்கு
முன்னதாகவே, “இப்போ டிரபிள் ஏதும் இல்லை” என்றார்.
டிரபிள் எப்படி வரும்?

‘வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!’Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. அவர் மருந்துக்கு நிகர் ஏது? ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  2. His Holiness Is Dhanvanthri….and Sakshad Swamy Vaidyalingesgwar…

  3. நான் இந்த வைத்யத்தை சமீபத்தில் ஒருவருக்கு சொல்ல அவர் சிறு நீரகம் பழுதுபட்ட நிலையிலிருந்து இதனை செய்த பின் நடமாடும் நிலைக்கு வந்துவிட்டார். சங்கரன் க்ருபை!

  4. Greetings,

    I’m planning a house renovation and wanted to share some ideas with you, take a look please

    All best, mkmanavalan

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: