நீ நூறு வயசு இருப்பே, நாலு நக்ஷத்ரம் கொறையும் – மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை

Thanks to Sri Harekrishna, Sri Halasaya Sundaram Iyer and Karthikeyan Nagarathinam for the article.

 

 

periyava-chronological-425

முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ் ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரி ல எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.

வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.

அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.

இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .

பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.
சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.

அந்த அம்மா வந்தா.

பெரியவா அவ கிட்டே சொன்னா.

“நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.”

நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.

“ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.”

நான் எப்பேர்ப்பட்டவன்?

இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.

“ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.”

ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.

“இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு” என்றார்.

அந்த அம்மா சொன்னார்.

“நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள்” அவள், ஆசிர்வாதம் செய்வது போல

தொடர்ந்தாள் அவள்,

“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.”
இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.

இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.

ஆச்சிரியம். நடந்தது என்ன?

1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.

அந்த பதிவிரதை சொன்னது என்ன?

நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே – நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.

ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.

அப்புறம் தான் தோணித்து.

இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?

பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?

பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!

ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..
.
நன்றி – ஸ்ரீ கணேச சர்மா, ‘தெய்வத்தின் குரல்’ உபன்யாசத்தில்.
இதோ தெய்வத்தின் குரல்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

என்று சொல்லியிருக்கிறது. இதிலே ‘நீதி மன்னர் நெறி’ என் ஜூரிஸ்டிக்ஷனில் [அதிகார எல்லைக்குள்] இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை.

ஆனால் வேதியரை வேதம் ஓதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய ‘சான்ஸ்’ களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று ‘ஆமாம் பூசாரி’ யாகத் தலையாட்டி விடவும் கூடாது. ‘போனது போனது தான்; சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்’ என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே [பீடத்தில்] உட்கார்த்தி வைத்திருக்கவில்லை.

அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீதர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்கொடுத்துவிட்டு ‘ஜகத்குரு’ பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை.

பகவான் [கீதையில்] சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும்.

ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.



Categories: Devotee Experiences

11 replies

  1. ஸ்ரீமகா பெரியவர் இல்லை என்று ஒரு பொழுதும் நினைக்கவில்லை. எப்போதும் நம்முடன இருக்கிறார்கள்.முளுநம்பிக்கையோடு வேண்டீனால் அனுகிரகம பண்ணிக் கொண்டிருக்கிறார்.உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அவ்வப்போது என்கிறார்கள்.

  2. பெரியவா தனக்கே தபஸ் பற்ற வில்லை என்று சொல்லியுள்ளாரென்றால் இதை சொஸைட்டிதான யோசிக்க வேண்டும். இதை இன்னும் சில சமயங்களில், பெரியவா சொல்லி உள்ளார்கள்.

    • Well this Stree dharma has been the fulcrum of our vedic dharma and this is what is being assaulted with great vigour by all in the name of equality and promoting gender justice. Only way Periyava can stop the current fall into the abyss is by shedding his Apara Karuna sindhum image and take up his gora thandavam at the yuga pralayam time.

      Regards

  3. It is really thrilling and amazing to know that such saintly Pathivrathas lived as commoners amongst Us incognito in this Holy Land of ours India That is Bharat.She must have attained Moksha definetly
    Great soul.Pranams to Her the Kaliyuga Nalayini!

  4. Maha Periyavaa speaks for us in the last paragraph, though veiling Himself.
    May HE Bless us to follow HIS teachings.

  5. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  6. “ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும்.”

    இந்த வார்த்தைகள் லௌகீக வாழ்க்கையிலே எவ்வளவு அழகாக பொருந்தும். அய்யன் எவ்வளவு சொல்லியும் இந்த பாழாய் போன மனசு கேக்க மாட்டேன் என்கிறது

    அய்யனே நீர் தான் கை தூக்கி விடவேண்டும் மனம் சுத்தமாக

  7. Translation please. Please

  8. Periyava’s explanation of purpose of ‘Jagadguru’ is the meaning of His life and our meaningless lives in the drag net of kaliyugam.
    We are adrift and helpless and powerless.Periyava please, grace us with moksha.

  9. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Great Treasure of Experience. Thanks to Mukkur SwamigaL and Sri. Ganesa Sarma for bringing this out.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading