Thanks Sudhan for the article and drawing….
காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்தவர் சந்திரமவுலி கனபாடிகள். அவர் சொன்ன நிகழ்வைக்கேளுங்கள்.
1990, மாசி மகாசிவராத்திரி. இந்த நாளில் மகாபெரியவர் மானசீக பூஜை செய்வார். சிவராத்திரியன்று அவர் உறங்குவதில்லை. நான்கு கால பூஜை செய்வார். மூன்றாவது காலம் நள்ளிரவு 2 மணியிலிருந்து 3.30 வரை. இதை “லிங்கோத்பவ காலம்’ என்பர். அந்த வேளையில், ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யச் செல்வார். அன்று சங்கரமடம் அருகிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்நிதித் தெருவில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். யாருக்காவது ஜுரம் வந்தால், அந்த சுவாமிக்கு மிளகுரசம் சாதம் நைவேத்யம் செய்து பிரார்த்தனை செய்வதுண்டு.
அப்போது, பெரியவருடன் சென்ற நான்,”” இன்று சிவராத்திரி என்பதால், ஜனங்களும் தங்களைத் தரிசிக்க அதிகமாக வருவார்கள். பகல் பூராவும் உபவாசம் வேறு (உண்ணாமல் இருப்பது) இருந்துள்ளீர்கள். அதனால், இந்த இரவில் வெளியே செல்ல உங்கள் உடல்நிலை இடம் கொடுக்காது. மேலும், தாங்களே பரமேஸ்வரனாக இருக்கும் போது, நீங்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்,” என்றேன்.
பெரியவர் என்னிடம் பதிலேதும் சொல்லவில்லை. மவுனமாகக் கிளம்பி ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று விட்டார். அங்கு சிவாச்சாரியார் மட்டுமே இருந்தார். யாரோ இரண்டு சேவார்த்திகள் (பக்தர்கள்) சிவதரிசனம் செய்து விட்டு வெளியே
உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் உள்ளே சென்று பரமேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். பிறகு மடத்துக்கு கிளம்பினார்.
நான்காம் கால பூஜையை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஸ்நானம் செய்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அந்த சமயம், ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்திருந்தார். அவர் அதை என்னிடம் கொடுத்து பெரியவரிடம் சமர்ப்பிக்கச் சொன்னார். நான் அதை அவரிடம் கொண்டு சென்ற போது “”என்ன பிரசாதம்?” என்று பெரியவர் கேட்டார்.
“ஜுரஹரேஸ்வரர் பிரசாதம்’ என்றேன்.
பிரசாதம் கொண்டு வந்தஅர்ச்சகரை அழைத்து,””சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?” என்று கேட்டார்.
“பெரியவாள் அனுகிரஹத்தால் 3800 ரூபாய் வந்தது,” என்றார் அர்ச்சகர்.
“இதுவரை எவ்வளவுகிடைத்தது?”
“”200 ரூபாயைத் தாண்டியதில்லை,” என்றார் அர்ச்சகர்.
உடனே என்னிடம், “நீ எனக்கு வயசாயிடுச்சு. கோயிலுக்குப் போக வேண்டாம் என்றாய். நான் போகவில்லையென்றால், ஜுரஹரேஸ்வரர் கோயில் இருப்பதே இங்கு வந்த பலருக்கு தெரிந்திருக்காது. என்னையே சுத்திண்டு இருப்பா! நான் போனதால் மற்றவர்களும் போனார்கள். குருக்களுக்கும் இவ்வளவுவருமானம் வந்தது! அவருக்கும் ஜுரஹரேஸ்வரர் படியளந்தார்,” என்றார்.
“நான் சொன்னது தவறு,” என்று சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்.
———————————————————
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
Categories: Devotee Experiences
Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Reblogged this on Take off with Natarajan.
God is here
JaiShriKrishna,
Can someone translate this? Thank you. D
Apologies for any typos or mistakes in translation. Siva Siva
English Translation – How much did you make for Sivaraathiri ?
Shri Chandramouli was with Maha Periyava and performed 60 years service to the Mahaan. He recollects an incident here.
This was during 1990 Maasi month Maha Sivaraathiri. During Maha Sivaraathiri Maha Periyava does Maanaseeka Puja (Puja in mind). Periyava does not sleep during Sivaraathiri and does Naalu Kaala (4 Times) puja. The third Kaala puja starts at 2 AM and ends at 3.30 AM. This time period is called as ‘Lingodhbava Kaalam’. In this time he asks devotees to go to a nearby Sivan temple and have darshan of Lord Siva. That day, Periyava went to the Jurahareswarar temple in Ekambareswarar Sannidhi street near Sri Sankara Madam. When some one has fever they pray to Lord Jurageswarar offering Pepper rasam rice as Neivadhiya.
I was accompanying Periyava and told HIM, “since today is Sivaraathiri people will come in large numbers to have your darshan. You also observed upavasam the whole day. Therefore your body condition may not permit you to go outside. Also, since you are Parameswaran himself why is there is a need for you to go outside for darshan?”.
Periyava did not respond at all and proceeded to the Jurahareswarar temple. In the temple there was only one Sivaachariyar (priest). Couple of Bhakthas were sitting outside the temple after doing their darshan. Periyava went inside, worshipped the Lord, and sat their for some time, and then left to Sri Madam.
After completing the fourth kaala puja, he rested for sometime. After doing Snaanam, Periyava gave darshan to devotees. That time, the Jurahareswarar temple priest came to see Periyava with Prasadam. He gave it to me and told me to offer it to Periyava. When I took it to Periyava, HE asked me “What Prasadam is this?”. I replied, ‘Jurahareswarar Temple’ prasadam.
Periyava called the priest you brought the prasadam and asked, “How much money did you get for Sivaraathiri”?
The priest replied, “Due to Periyava’s grace there was a collection of Rs. 3800”.
Periyava asked, “How much do you normally get?”
The priest said, “Not more than Rs. 200.”
Periyava turned to me and said, “You said I’m old and not to go the temple. Had I not gone to the temple, many people would not have know about the existence of this temple. They would have surrounded and worshipped me. Since I went, others also went. The priest also got money. This all happened due to Lord Jurahareswara’s grace.”
I feel at Periyava’s feet and apologized for what I said.
It is great great blessing for us to live in Periyava’s time period. What punniyam did we do to see HIM and listen to his divine words?
Kamakoti Darisanam is an accumualtion of Punniyam whoever sees it.
JaiShriKrishna,
Can someone translate this? Thank you in advance. D