காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 3

MahaPeriava_elephant_drawing_BN

Thanks to Sri Venkatasubramaniam for the article and BN mama for the sketh

1976—ஆம் வருடம், C.A.G (Comptroller and Auditor General of India) ஆக இருந்த திரு பக் ஷி அவர்களைக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர் அப்போது சிவாஸ்தானத்தில் இருந்தார்., ஒரு பெரிய அரசாங்க அலுவலகரை கூட்டிச் செல்கிறோம் என்று எனக்கு சிறிது பரபரப்பாக இருந்தது. பெரியவர் குடிசைக்குள் இருந்தார்; நானும் பக் ஷியும் வெளியில் நின்றுகொண்டிருந்தோம். எங்கள் நமஸ்காரங்களைத் தெரிவித்தபின்னர் பெரியவா அவருடைய அரசாங்க அலுவலைப் பற்றியும், அரசு சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பற்றியும், விசாரித்தார். பிறகு பெரியவா அவருடைய சொந்த ஊரின் பெயரைக் கேட்டார். மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயரை அவர் கூறவும், பெரியவா அங்கு வசித்த ஒரு யோகியைப் பற்றியும் அவர் நலனைப் பற்றியும் கேட்டார். ஸ்ரீ பக் ஷி அவர் இப்பொழுது உயிரோடில்லை என்று சொல்லிவிட்டு, அந்த யோகியைப்பற்றி பெரியவாளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க, “நான் காசி யாத்திரை சென்றபோது, மேற்கு வங்கத்திலும் யாத்திரை செய்தேன்; அந்த கிராமத்திற்குச் சென்று அவரை சந்தித்தேன்” என்றார். ஸ்ரீ பக் ஷி பெரியவாளின் அஸாத்ய ஞாபக சக்தியை நினைத்து ஆச்சரியமுற்றார். நான்கள் பின்னர் சென்னை திரும்பும்போது, ஸ்ரீ பக் ஷி, “சங்கராசார்யார் ஒரு பெரிய மாளிகையில் பரிவாரங்களுடன் வசிப்பார் என்று எதிர்பார்த்தேன்; இப்படி ஒரு எளிமையான வாழ்க்கையா!” என்று ஆச்சரியப்பட்டார்.

1986—இல் அப்போதைய பிரதம மந்திரி திரு ராஜிவ் காந்தியின் ஆலோசகராக இருந்த திரு எல்.கே.ஜா அவர்களுடன் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றிருந்தேன். சுமார் இருபது நிமிடங்கள் இருவருக்கும் சம்பாஷணை நடந்தது. அதில் மிக ரசிக்கும்படியாக இருந்த பகுதி இதோ:–

பெரியவா:—நீங்க பிஹாரி பிராமின்தானே ? மாமிசம் சாப்பிடுவீர்களில்லையா ?”
ஜா:————–“ஆமாம்.”
பெரியவா:—-“ஆனா, வாராணசி சென்றால் மாமிசம் சாப்பிடுவதில்லை இல்லியா?”
ஜா:————– “ஆமாம்”
பெரியவா:—–“நீங்க பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு ஆலோசகர்தானே? எனக்கு ஆலோசகராக இர்ப்பீர்களா?”
ஜா:—————-“உங்களைப் போன்ற மஹா தபஸ்விக்கு நான் எப்படி ஆலோசகராக முடியும்?”Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. BN mama,

    This is the best i like among your arts, so far.

    Thanks.

  2. Mahesh Ji, Is it possible to collate all related topics under a single link.. like All Shankaran Chandran topics under one link .. to enable us to read completely.

  3. The article is incomplete. some more conversation to continue?

    ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  4. beautiful drawing. superb

Leave a Reply

%d bloggers like this: