காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 2


Periyava Sketch Sudhan

Thanks to Sri Venkatasubramaniam for the share….Thanks to Sudhan for this beautiful sketch….

1975 முதல் 1978 ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில், காஞ்சி முனிவர் காஞ்சியில் தங்கியிருந்தார். சில சமயங்களில் அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலவையில் முகாமிட்டிருப்பார்.

அக் காலகட்டத்தில் மத மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு வரி விதிக்கும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட இருந்தது. மதம் மற்றும் தர்ம ஸ்தாபனங்கள் வருமானவரி செலுத்தும் விதிகளின்படி, அந்த ஸ்தாபனங்கள், தங்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் அந்த வருடத்திற்குள்ளாகவே முறைப்படி செலவிட்டுவிட வேண்டும். அப்படி செலவிடாமல் மிகுதி இருக்கும் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். இவ்விதிமுறை, திருப்பதி, குருவாயூர் மற்றும் சபரிமலைக் கோவில்களுக்கும் மற்றும் காஞ்சி சங்கர மடம், சிருங்கேரி சங்கர மடம் ஆகிய ஸ்தாபனங்களுக்கும் மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. வருடத்தின் மொத்த வருமானத்தையும் அதே வருடத்திற்குள் செலவிடுவது என்பது முடியாத காரியமாயிருந்தது. அதுமட்டுமில்லாமல், ஒரு புதிய விதிமாற்றத்தின்படி, ஸ்தாபனங்களுக்கு (கொடுப்பவர்) அறியாமல் வரும் தொகைக்கும் (உதாரணமாக, கோவில் உண்டியல் மூலம் வரும் பணம்) வரி செலுத்தியாக வேண்டும். இதனால் திருமலைக் கோவில் மற்றும் உள்ள கோவில்கள், தர்ம ஸ்தாபனங்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகளை உணர்ந்து, ஆந்திரபிரதேஷ் முக்கிய செயலாளர் திரு கிருஷ்ணஸ்வாமி ராவ்ஸாஹேப் ஒரு குழுவுடன் டெல்லிக்குச் சென்று அன்றைய பிரதம மந்திரி ஸ்ரீமதி இந்திரா காந்தியைச் சந்தித்து இந்த ஸ்தாபனங்கள் அந்த விதி மாற்றத்தால் சந்திக்கவிருக்கும் தொல்லைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்.

இதன் பலனாக, இந்திய அரசாங்கம், வருமானவரி முறையில், ‘section10(23)(c) என்ற ஒரு புதிய ‘செக்ஷனை’ப் புகுத்த முடிவெடுத்தது; இதன் படி, ‘நேர்முக வரிகள் மத்தியக் குழு’ சில ஸ்தாபனங்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்களிப்பதாகக் குறிப்பிடலாம். இந்த சலுகையைப்பெற அந்த ஸ்தாபனங்கள் வருமானவரி ‘கமிஷன’ருக்கு ஒரு விண்ணப்பம் அளிக்கவேண்டும். அவர்கள் இதை ஆராய்ந்து அந்த விண்ணப்பத்தின் நியாயத்தை நிர்ணயித்தபின்பு, அதற்கான பரிந்துரை செய்யலாம்.

இந்தப் பின்னணியில், டாக்டர் வி.கௌரிஷங்கர், என்னுடைய தந்தை (அமரர்) ஸ்ரீ ஆர்.சங்கரன் (அப்பொழுது அவர் திருப்பதிக் கோவிலுக்கு ஆலோசகராக இருந்தார்), மற்றும் நான் அனைவரும், கூடி, ஒரு விண்ணப்பம் தயாரித்து அனுப்பினோம்—-இதில் திருப்பதி கோவில், காஞ்சி சங்கர மடம் மற்றும் குருவாயூர் கோவிலுக்கு விலக்கு அளிக்கும்படிக் கேட்கப்பட்டிருந்தது—–. சில மாதங்களுக்குப்பின், நேர்முக வரி மத்தியக்குழு, இவைகளுக்கு விலக்கு அளித்தது.

இது நடந்து சில மாதங்களுக்குப்பின், டாக்டர். கௌரிஷங்கர், என் தந்தை ஆர்.சங்கரன், என் தாயார் மற்றும் நான் அனைவரும், பெரியவாளைத் தரிசனம் செய்ய கலவைக்குச் சென்றோம். அன்று பௌர்ணமி, மாசி மகம்.

நமஸ்காரம் செய்தபின், பெரியவா பேச ஆரம்பித்தார்.

“திருமலைக் கோவில், காஞ்சி சங்கர மடம், குருவாயூர் கோவில்——மூன்று பெரும் ஸ்தாபனங்கள்—-மூன்று நபர்கள்—–கௌரிஷங்கர், ஷங்கர், சந்த்ரமௌலி; நீங்க மூணுபேரும் இந்த ஸ்தாபனங்களுக்கு ஒரு மகத்தான சேவை செஞ்சிருக்கேள். இந்த ஸ்தாபனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள், வரி அளிப்பதிலிருந்து, சேமிக்க உதவியிருக்கேள். உங்கள் சேவையைக் கண்டு நான் ரொம்ப ஸந்தோஷம் அடைஞ்சிருக்கேன்”

மஹானின் இந்த வாக்குகளுக்கும் மேலான ஆசீர்வாதம் ஒன்று உண்டோ ?Categories: Devotee Experiences

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: