ஜோதிர்லிங்கம் பற்றி மகா பெரியவா

  
Thanks Hariharan for the share..

அது 1965 ஆம் ஆண்டு சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர் வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். பெரியவாளை அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.

அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய துளஸிதாசரின் ஹநுமான் சாலீஸாவை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார்.அந்த அன்பரும் ஹநுமான் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது மடத்தின் சிப்பந்தி ஒருவர் ”ராமேஸ்வரத்தில் உள்ள ஹநுமான்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்” என்றார்.

அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
”பெரியவா…ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்.நான் வடக்கே சோம்நாத் ஓம்காரேஸ்வர் மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன்.அங்கெல்லாம் ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, அப்னே ஆப் ஹுவா!ன்னு தானாகவே உண்டானது…சுயம்பு ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான்.ஆனா அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா…அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே…
அதற்கு ஸ்வாமிகள் ஜ்வாலாமுகியை பார்த்திருக்கியா? என்று கேட்டார்.நான் பார்த்ததில்லை. ஆனால் அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!” என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள் சரிதான்.ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே…பல அக்னி குண்டங்கள் எரிந்து கொண்டிருக்கும்.அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது.வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா? என்று கேட்டுவிட்டு அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.
வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள் என்றார் கண்ணன்.உடனே

அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்…

அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:||

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும்,நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும்,மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது…

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்…நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்…மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே.சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல அது சிவ சொரூபம் மட்டுமல்ல…லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்.நடுப் பீடம் விஷ்ணு பாகம்.மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம்.அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள்.அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள்.ஜோதிதான் லிங்கம்… லிங்கம்தான் ஜோதி என விளக்கி ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்Categories: Upanyasam

9 replies

 1. excellent, excellent, excellent true

 2. An eye-opener for all to end confusion and doubts. Only Sri Mahaa Periyavaa can give a lucid explanation quoting from many observations like Vadalur and jwalamukhi. Hara Hara Sankara.

 3. Excellent information ! Thanks for the post and the reply from Mr.Nanjappa.

 4. இது ஒரு முக்கியமான குறிப்பாகும். ஜ்யோதிர்லிங்கத்தைப் பற்றிமட்டும் அல்ல, பொதுவாகவே லிங்கத்தைப் பற்றிய உண்மையை மஹாபெரியவா விளக்கியிருக்கிறார்.

  வெள்ளைக்காரர்களும், அவர்கள் எழுதுவதையே ப்ரமாணமாகக் கருதும் ஆங்கிலப் படிப்பு படித்த நமது வர்கத்தினரும் ‘லிங்கம்’ என்பது பற்றி ஏதேதோ சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். இவர்களில் யாரும் மூலத்தைப் படித்ததாகத் தெரியவில்லை; அல்லது தெரிந்தும் மறைக்கிறார்கள்.

  1930களில் திருவண்ணாமலை கோவிலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே, அருணாசல கிரியைப்பற்றிய வழக்கு கோர்ட்டில் நடந்துவந்தது. கோவில் சிவாசாரியார்கள் கிரியின் நிலையைப்பற்றி விளக்க ஸ்ரீ ரமண பகவானைச் சாட்சியாக அழைத்தனர். ஒரு கமிஷன் ஸ்ரீ பகவானின் வாக்கைப் பதிவுசெய்தது. அப்போது ஸ்ரீ பகவான் ஸ்காந்த புராணத்திலிருந்து மேற்கோள்காட்டி அதன் மஹத்வத்தை விளக்கினார். பின்னர் அதைத் தமிழில் செய்யுளாக ஆக்கித் தந்தார். இதில் நந்தி வசனமாக வரும் பாடல்கள்:

  அதுவே தலம் அருணாசலம் தலம்யாவிலும் அதிகம்
  அது பூமியின் இதயம் அறி அதுவே சிவனிதயப்
  பதியாமொரு மருமத்தலம் பதியாமவன் அதிலே
  வதிவான் ஒளிமலையா நிதம் அருணாசலமெனவே

  ஆதியருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்
  ஆதி நாள் மார்கழியில் ஆதிரை அச்- சோதியெழும்
  ஈசனை மால்முன்னமரர் ஏத்தி வழிபட்ட நாள்
  மாசி சிவராத்திரியாம் மற்று.

  சிவ வாக்கியமாக வருவது:

  அங்கியுருவாயும் ஒளி மங்குகிரியாகத்
  தங்கல் அருளால் உலகம் தாங்குவதற்கு.

  ஆகவே, லிங்கம் என்பது ஆதியில் எழுந்த ஜோதி ஸ்வரூபத்தின் உருவம் என்பதும், அருணாசலமே ஆதிலிங்கம் என்பதும், அது தன் ஒளியைமறைத்து வெறும் கல்மலையாகக் காட்சியளிப்பது, ஈசனுடைய கருணையினால் [ அந்த தெய்வீக ஒளியைத் தாங்கும் சக்தி நம் ஊனக்கண்களுக்கு இல்லை ] என்பதும் தெளிவாகிறது. இதைக் காட்டவே ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கர்பக்கிரஹத்துக்கு நேர்பின்புறம் ‘லிங்கோத்பவ’ மூர்த்தியின் விக்ரஹம் அமைக்கப்பட்டிருக்கிறது.

  இத்தனை விஷயத்தையும் ஸ்ரீ மஹாபெரியவா இங்கே சுருக்கிச் சொல்லிவிட்டார்.
  அபார கருணாஸிந்து அல்லவா !

  • Thanks Sir for the information, I never know that Shri Ramanar’s description, Super TamilNadu MahaPeriyava Charanam Saranam

  • NAMASTAE SIR, WE NON-TAMILIANS CANT UNDERSTAND THE LANGUAGE. CAN ANYONE TRANSLATE THE SCRIPTS INTO ENGLISH PLEASE SO THAT WE TOO CAN READ AND ENJOY

   • Radhika, here is a summary (not translation)
    R. Nanjappa is quoting an incident from Ramana Maharishi’s life.
    When there was some kind of court case between Arunachala temple and the govt, Ramana Maharishi was questioned as a witness about Arunachala hill.
    He referred to skanda puranam which mentions a concept similar to what Periyava talked about and wrote a poem about Arunachala hill – he calls Arunachala as a mountain of fire – “oli malai”.

Leave a Reply

%d bloggers like this: