பெரிவா சொன்ன சில காரியங்களை புது வருடத்தில் செய்ய வேண்டியது அவசியம்!

Thanks to SwastikTV for this article – very timely. While we need 10 janmas to read and understand all His upadesams, they have captured few  to remember and they are easy to follow too.  For non-Tamil readers, please wait till either Krishna or Sai to do the translation.

புது வருடம் / புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் சில நல்ல விஷயங்களையும் செய்ய உறுதிகொள்வோம். நம்மால் முடிந்ததை செய்தால் போதும், அதுவே தர்மமும் கூட. இதைப் பற்றி மஹா  பெரியவா சொன்ன பல விஷயங்கள் நிறைய நிறைய சமுத்திரமாக இருகின்றது, அவற்றுள் சில உங்களுக்காக ;

உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (”சிவ” என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ”கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே” – சம்பந்தர்.)

பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச்செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.

கண்கண்ட தெய்வம் காஞ்சி  மஹா பெரியவா  சொன்ன அருள் மொழிகளில் நம்மால் முடிந்தவற்றை முடிந்தவரை கடைபிடிப்போம்.

 



Categories: Upanyasam

8 replies

  1. எல்லா ஆஸ்திக அன்பர்களுக்கும் அன்பார்ந்த வந்தனங்கள்.

  2. Reblogged this on V's ThinkTank.

  3. ஸ்ரீ பெரியவா சரணம்

  4. Om Nama Shivaya! Om Namo NaaraayaNaaya! Om Shakthi! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Let us become even better in the New Year by Maha Periyava’s Grace! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. புது வருதத்தில் ஸ்ரீ மஹாப் பெரியவர்களின் அம்ருத வாணியை படிப்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் புத்தாண்டு வணக்கங்களும் , நல் வாழ்த்துக்களும் .

  6. mahesh ,shall we have a seperate thread for new year 2016 goals as per periyaval’s sayings.

  7. Here is the English translation of the above article. For me, making this translation was reaffirming my faith in MahaPeriava.

    MAHAPERIAVA’S UPADESAM.
    A RECOLLECTION FOR THE NEW YEAR 2016.

    Let us take a resolution to do some good karmas (deeds), when we celebrate the new year. Let us recollect a few drops from the ocean of what MahaPeriava has said about the way we should live:

    We must do good Karmas with our body. Go to the temple, do Pradhakshanam (circumambulation) and prostrate before the God. This is called ‘ Offering of Dhandam’. It is like falling like a pole. We should lay down our body, which is not ours, at His Sannidhi.

    It is necessary to do certain good things which will be useful even after this birth. Wearing of sacred ash, Rudhraksham, and performing ‘Sradhdham’ (annual rites for the departed souls)—these are some Karmas which will help us live a happy and healthy life.

    Our religion has no name, and no shape. Why no name? why no identity ? Other religions have all these—-I thought about this. Afterwards, I felt very happy. It struck me that it is an honour to go without a name.

    Our religion has been there for ages; some unknown power is supporting this; In spite of so many differences, this religion has survived all that and is living. Even if the world goes topsy turvy, we should be doing our duties, and protecting the simple Dharmas, in addition to trying to protect the special Dharmas as much as we can. May God give us the required strength for it.

    Lord Paramasivan is ruling above the three Moorthis. He blesses Brahma. He blesses as Kameswaran; Parasakthi will shower Her blessings as Kameswari; Brahma learns Vedas with the blessings of Lord Parameswaran. He is performing the duty of creation, reciting the four Vedas with His four faces.

    The eighteen Puranas make us understand Vedas; additionally, there are eighteen sub—Puranas; there are totally 400,000 Granthas in these eighteen Puranas. One Grantham contains 32 letters. Seventeen Puranas contain 300,000 Granthas; the remaining 100,000 Granthas are in the eighteenth Purana, which is the Skanda Puranam. Ten Puranas speak about only Parameswaran; One among those ten, contains 100,000 Granthas.

    There is one thing that wipes out the sin in a second; it is name with two letters. The essence of the Vedas is that. It exists in the midst of Vedas like MahaLingam in a temple and the life in the mortal body. (those two letters are ‘SIVA’ (in Tamil this will be two letters only). It is enough if the Nama is uttered once. It can be uttered in the midst of doing some other duty. If uttered, sins will be wiped off instantly.

    Among Vedas, Yajurvedam is the most important. The fourth division in the middle is again the most important. In that also the central portion, the fourth chapter is very important. That is Sri Rudhram. In that also, the five—letter word ‘Nama: Sivaya’ is in the centre. In this five—letter word itself, the two lettered ‘SIVA’ is in the centre. Elders used to call this as ‘Jeeva Rathnam’ Abbayya Dheekshidhar has expressed this opinion in his ‘Brahma Dhargasthavam’. It is understood that that Brahmam is ‘Siva—swaroopam’.

    The devotees of Siva must be performing five kinds of duties for worshipping that ‘Swaroopam’. They are (1)Wearing sacred ash, (2) Wearing Rudhraksham, (3)Reciting the ‘Panchaakshara Manthram, or just reciting the two letter—word ‘SIVA’. (4) offering Bilva leaves to Parameswaran, and (5) Always worshipping SIVA in one’s mind. Each of these will please Eswaran.

    (Note: It is good If one gets Upadesam of the five—letter Mantra and recites it; But those who did not get this mantra through Upadesam, can also recite it.)

    If we speak about or hear about Lord Parameswaran’s glory, we become pure. No one can go against His will. He punishes those who act with ego. We punish children if they commit some mistake; same way, Parameswaran punished Devas; when the ‘HalaHala’ Poison appeared from the ocean of milk, He ate it and saved all. All Devas are the children of Parameswaran.

    Parameswaran is ‘Omkaram’; Brahmam also is ‘Omkaram’. Ther is an Upanishad which explains the meaning of the ‘Omkaram’. Its name is ‘Mandukya Upanishad’. Sivaswaroopam is Brahmam. We must have Siva Dharsanam during Pradhosham. All Devas com to Siva temples to worship Siva during Pradhosha Time.

    In ‘sankya Sutra, He is described as ‘One who has three eyes’. ‘Amaram’ also says the same. The word Eswaran is given only to Siva, He is a MhaPurusha’. In ‘Brahma Sutra’ it is mentioned ‘SabdaDevaprameedha’. The meaning of the ‘Sabdam’ ESANAN is Brahma Swaroopam.

    Our Acharyar asks a question in His Grantham ‘Prachnothra Rathna Malika’; Which is the matter which shines in all the three, Gaythri, Agni and Sun ? It is only Siva, He is the inner principle of Gayathri; He is the one who shines in the sun. In SriRudhram, it is mentioned that He is ‘ AgniSwaroopi’. Therefore in all these three, we should worship Siva.

    We should worship ‘Ambal’ during marriage time. Rukmini worshipped Ambal that Krishna should become her husband. Worship of Ambal brings ‘Pathi Bakthi’ and ‘Guru Bakthi’. That is why, Rukmini worshipped Her.

    We should have devotion towards the ‘Paradevatha’ who is the Mother of this universe. As a mother gives milk to her child, ‘Jagan Matha’ enables us to attain Vidhya and wealth and helps us achieve ‘Brahmanandam’.

    Let us all try our best to follow the guidelines given by our ‘Prathyaksha Deyvam’ MahaPeriava.

  8. A welcome and timely alert.

Leave a Reply to B.Narayanan.Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading