அருள் வேண்டல் பதிகம் by Sri S V Rajan

Thanks to Sri SV Rajan for sending this poem to Periyava Radio.

Muruga TMSkanchi-acharya7
ஞான சத்குரு நாதா நமோ நம
தீன ரட்சக தீரா நமோ நம
மோனதத்பர தேவா நமோ நம.
அருள்தாராய்!….

மந்தஹாசப் ப்ரகாசா நமோ நம
மந்த்ரதந்தர ஸ்வரூபா நமோ நம
சந்த்ரசேகர ஸ்வாமீ நமோ நம
அருள்தாராய்!……

காஞ்சி மாநகர் வாஸா நமோ நம
வாஞ்சிதார்த்தப் ப்ரதாதா நமோ நம
சாந்த சற்குண ஸ்வாமீ நமோ நம
அருள்தராய்!……

தாயினும் மிகு நேசா நமோ நம
வேதநன்னெறி தாசா நமோ -நம
மானுடம் தொழும் ஈசா நமோ நம
அருள்தாராய்!…..

பார்வையால் வினை தீர்க்கும் தயாநிதே!
பாடுவார் பிணி போக்கும்
க்ருபாநிதே!
தேவர் யாவரும் போற்றும் குணாநிதே!
அருள்தாராய்!…..

அன்பு நெஞ்சமும் ஆசாரசீலமும்
கொஞ்சமும் நிலை மாறாத தூய்மையும்
கண்முன் காட்டிய ஸ்வாமீ நமோ நம
அருள்தாராய்!…..

ஆதிசங்கரர் ஸ்தாபித்த  ஜோதியை
வேத முன்னெறி  போதித்த நீதியை
மா தவத்திலே சாதித்த மாமுனி!
அருள்தாராய்!…

பாததர்சணம் பாரெங்கும் வாய்த்திட
வேத ரட்சண கைங்கர்யம் ஓங்கிட
பாதயாத்திரை மேற்கொண்ட ஞானியே!
அருள்தாராய்!……

சந்த்ரமௌலியும் அம்பாளும் நீயென
வந்தருள்தரும் காமாட்சி தாயென
எங்கள் சங்கரர்  என்றே பணிந்திட
அருள்தாராய்!…..

தென்னாடுடைய பெரியவா போற்றி
என்னாட்டவர்க்கும் பெரியவா போற்றி
சர்வேஸ்வரா சர்வக்ஞா சர்வவ்யாபீ சரணம்!…

 Categories: Bookshelf

3 replies

 1. Sir
  A very nice song in praise of sri mahaperiyavaa.

  N.Seetharaman

 2. சந்த்ரமௌலியும் அம்பாளும் நீயென
  வந்தருள்தரும் காமாட்சி தாயென
  எங்கள் சங்கரர் என்றே பணிந்திட
  அருள்தாராய்!…..

 3. Thanks Sri. Rajan for sending this padigam and thanks Sri. Mahesh for posting.
  Jaya Jaya Sankara.

Leave a Reply

%d bloggers like this: