எழுதுவதற்கு என்ன இருக்கிறது ?

Thanks to Sri Krishnamurthi Balasubramanian for this wonderful FB share.

namavali071

எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்னுடய நடமாடும் தெய்வத்தை பற்றி?
காஞ்சி மஹா பெரியவாள் வாழ்ந்த காலத்திலே நாமும் வாழ்கிறோம்
என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும்
என்ன தவம் செய்தோமோ? அது தான் மஹா பெரிய பாக்யம் !
காமகோடி தரிசனம்! காணக்காணப் புண்ணியம்!
கனவில் அவர் உருவம் காணவேண்டும்
நினைவில் அவர் நாமம் சொல்லவேண்டும்

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்களின் அமுத மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது :

“நான் எத்தனையோ அனுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம், எவ்வளவு பண்ணவில்லை, எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும், ஜீவனோபாயத்தை அனுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும். மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பஸ்சாதாபமாவது பட வேண்டும்.”.

குரு என்ற ஸ்தானத்தில் யாருமே இல்லாமல் ஒரு பெரிய மடத்தின் மிகப் பெரிய பொறுப்பை மிகச் சிறிய வயதில் ஏற்றதை எழுதுவதா?

வழி காட்ட குரு இல்லாமல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இன்று நான் இருக்கிறேன் என்று பிறருக்கும் உபதேசித்ததை பற்றி எழுதுவதா?

சக்கரம் வைத்த வாகனத்தில் ஏறினால் புழு, பூச்சி போன்ற உயிரினங்கள் வண்டி சக்கரத்தில் அடிபட்டு உயிர் துறக்குமே என்று சிறு உயிரினங்களின் மீது கூட கருணை வைத்து பாரதம் முழுவதும் நடந்தே சென்றாரே அதை எழுதுவதா?

எத்தனையோ அற்புதங்கள் செய்தாலும் ஒன்றுமே தெரியாத மாதிரி ஒரு சிரிப்பை சிரித்து அட அசடே எல்லாம் பரம்ஸ்வரன் சித்தம், அம்பாள் சித்தம்னு சொல்றதை எழுதுவதா?

தன் மூச்சு உள்ளவரைக்கும் வேதம், பாடசாலை இரண்டை பற்றி அதிகம் சிந்தித்தவாறே இருந்தாரே அதைப் பற்றி எழுதுவதா?

எந்தக் குழந்தையை பார்த்தாலும் குழந்தையோடு குழந்தையாக அவர் உரையாடுவதை பற்றி எழுதுவதா?

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வதை பற்றி எழுதுவதா?

ஒரு சந்யாசி, ஒரு துறவி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியதை பற்றி எழுதுவதா?

எனையும் நீயே ஆட்கொள்ளவேண்டும்—வேறு குறையொன்றுமில்லை காமகோடி சங்கரா

பெரியவா சரணம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர.



Categories: Devotee Experiences

9 replies

  1. Om namobagavathe kamakoti chandrashekaraya

  2. Guruvadi, Thiruvadi.Malaradi Charanam. Charanam Charanam Swaminatha Charanam.

  3. Eswaran MahaPeriyava Padma Padham Charanam Sharanam

  4. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

  5. BEAUTIFUL PICTURE OF MAHA PERIYAVA FOLLOWED BY HEART TOUCHING NARRATION..JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA..MAHA PERIYAVA ANUGRAHAM..

  6. Jaya Jaya Sankara Hara Hara Sankara Kanchi Sankara Kamakoti Sankara.

  7. what to write except say. Periava charanam

  8. பெரியவா சரணம்.
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

  9. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply to ethiswaranCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading