தேவர்கள் – முனிவர்கள் – கலியுக மறையோர்கள் செய்த விண்ணப்பம்

periyava-chronological-339

தேவர்கள் – முனிவர்கள் – கலியுக மறையோர்கள் செய்த விண்ணப்பம்!பலித்தது! ஆம்! இது கலியுகத்தில் நிகழ்ந்தது!

காஞ்சி காமகோடி மஹா பெரியவா ஆச்சார்ய ஸ்வரூபமாய் ஒரு அவதாரம் செய்து, நம்மோடு வந்து பிறந்து, நம்மோடு வாழ்ந்ததை இக் கலியுகம் கண்டது! இது நிகழ்ந்தது!

காஞ்சி காமகோடி மஹா பெரியவா ஒரு அவதாரம்- கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து கலியுகம் கண்ட மஹான்.

ஒரு அவதாரம் நடைபெற வேண்டுமானால், தேவர்களும், முனிவர்களும், மறையோரும் சேர்ந்து அந்த நான்முகனையோ, நாராயணனையோ, சங்கரனையோ நாடி, விண்ணப்பம் செய்வார்கள் என்பதே, புராணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.

அப்படி இருக்க, ” காஞ்சி காமகோடி மஹா பெரியவா” என்ற அவதாரம் மட்டும், சாதாரணமாக நிகழ்ந்து விட்டிருக்குமா என்ன?

அதனால், காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் அவதாரத்தைப் பற்றிப் பேசப் போகும் தொடங்குமுகமாக, தேவர்களும், முனிவர்களும், மறையோரும் என்ன விண்ணப்பம் செய்திருப்பார்கள்?

தேவர்கள் – முனிவர்கள் – கலியுக மறையோர்கள் செய்த விண்ணப்பம்:

புண்ணிய பாரத தேசம் தன்னை, புண்ணிய பூமி தன்னை,
பாரது போற்றும் ஞான பூமியாய் மாற்றி வைக்க,
மாரதர் ஒருவர் வேண்டும்; ஞானியர் போற்றும் பார்த்த
சாரதி சொன்ன கீதை மீண்டுமே சொல்ல வேண்டும்
ஆதியில் வந்து அந்த சங்கரர் சொன்ன வார்த்தை
பாதியில் விட்ட மக்கள் மனமதை மாற்ற வேண்டும்
வேதியர் ஓத வேள்வித் தீயுமே ஓங்க அந்த
சோதியில் பொய்ம்மை எல்லாம் விலகியே ஓட வேண்டும்!

என்றென்றும் அருளின் வடிவாகி
வணங்கிடும் அடியவர்க்கு வாழ்வின் உற்ற துணையாகி
தாயினும் மேலாய் அன்பினைச் சொரிந்து
தந்தையினும் மேலாய் சாலப் பரிந்து
குருவாய் இருந்து குணத்தினை வளர்த்து
இறையாய் அனுக்ரஹப் பந்தலில் சேர்த்து
நாளும் அருள் மழை பொழிகின்ற தெய்வமாக
குருவாய் அத்வைத ஞானம் மீண்டுமே சொல்ல வேண்டும்!
காஞ்சியிலுரை காமகோடித் தெய்வமாக வந்துதிக்க வேண்டும்!
தேவர்கள் – முனிவர்கள் – கலியுக மறையோர்கள் செய்த விண்ணப்பம்.

பலித்தது! ஆம்! இது கலியுகத்தில் நிகழ்ந்தது! காஞ்சி காமகோடி மஹா பெரியவா ஆச்சார்ய ஸ்வரூபமாய் ஒரு அவதாரம் செய்து, நம்மோடு வந்து பிறந்து, நம்மோடு வாழ்ந்ததை இக் கலியுகம் கண்டது! இது நிகழ்ந்தது!

Composed and Posted by: Dr.Krishnamoorthi Balasubramanian
Founder THE MAHAN OF THIS MILLINEUM
Courtesy: Sri.Vishaynathan



Categories: Devotee Experiences

5 replies

  1. Great. The poetic line itself reveals the bhavam of Sri Dr.krishnamurthy. namaskaram to him.periyava charanam.jaya jaya Sankara hara hara sankara

  2. Excellent thought and beautifully penned ! Thank you !

  3. My dear Mahesh:

    Greetings from Chennai Campus. I am here since Dec 10th and will be in India at various

    places until Feb 27th and arrive at Chicago on 28th.

    I am so thrilled about this particular blog of Paramacharya as Avatar which I felt, my

    Classmate Late Dr. Sundarraman felt and many others. But more and more people who

    have met him know this but many should know how they are also blessed since some

    part of their life coincided with Maha Periayava’s life. Certainly enjoyed the Prayes

    in Tamil and God Bless all who can even see this; Best personal wishes: Bal

    Bala V Balachandran
    J L Kellogg Distinguished Professor (Emeritus in service) of Accounting & Information Management, Northwestern University, USA
    Founder, Dean & Chairman, Great Lakes Institute of Management, India
    b-bala@kellogg.northwestern.edu | +1 847 491 3427
    **********************************************************************

    ________________________________

  4. Sri Periyavaa: Namaskaram anantam. Please save my country, please protect this punya bhoomi from the onslaught of Rome through its barmaid in a powerful position. Please give us victory over mlechchas with evil intentions on Sanatana Dharma.

  5. WOW..BEAUTIFUL POEM…NARRATION..EXCELLENT. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA.

Leave a Reply

%d bloggers like this: