ஒங்களுக்கு ஸௌகர்யப்படுமா?

Thanks to Sri Gowrishankar for the article.

Periyava_doing_chandramouleeswarar

1964-ல் சோழவரத்தில் இருந்த மீனாக்ஷிஸுந்தரமையர், ஒரு பள்ளி ஆசிரியர்; பெரியவாளிடம் அபார பக்தி. ஆனால், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்ஶனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார்.

அன்று காரடையார் நோன்பு. அந்த முறை, பங்குனி மாஸம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள்.

அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!

எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார்! அவருடைய பாதங்களில் விழந்து நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..

“வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமஸங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…

ஸந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவுதான் என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள்.

“ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்!… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்ணணும்-ன்னு எப்டி ஆசைப்பட்ருக்கேன்!..”

மனைவி சொன்னாள்.

1965 நவம்பர் மாஸம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாஸலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், ஶிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.

“மீனாக்ஷிஸுந்தரமையர்….??…….”

“ஆமா….நாந்தான்…..மீனாக்ஷிஸுந்தரம்…. வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”

“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டிருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு ஒரு எடத்துல தங்கி பூஜை பண்ணிண்டு, மாஸக் கடைசீல மெட்ராஸ் போகணும்ன்னு உத்தேஸம்!….”

[அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு தம்பதிகள் இருவரும் மயக்கம் போடாத குறைதான் !]

“….நவம்பர் 15…..இங்க சோழவரத்துல தங்கப் போறா….அதான்….ஒங்களோட க்ருஹத்தை ரெண்டு நாளைக்கு கொஞ்சம் குடுத்தா…..பெரியவா இங்கேயே தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் பண்ணிப்பார்….. எப்டி?…ஒங்களுக்கு ஸௌகர்யப்படுமா?”

“ஸௌகர்ய…படு…மாவா? எங்களோட பரம பாக்யம்…ன்னா !! எத்தனை நாள் வேணாலும் பெரியவா தங்கிக்கலாம். என்ன ஏற்பாடு பண்ணணுமோ சொல்லுங்கோ!……ஆஹா! …”

உணர்ச்சி வேகத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நாங்க… மடத்துலேர்ந்தே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம். எடம் மட்டும் குடுத்தா போறும்..”

அன்று ஸாயங்காலமே ஊர் முக்யஸ்தர்களை கூப்பிட்டு பெரியவா ஸ-பரிவாரங்களோடு தங்க, தக்க ஏற்பாடுகளை ப்ளான் பண்ணினார்கள்.

ஒரு தெருவையே மடத்துக்கென்று காலி பண்ணிக் குடுத்தார்கள். யானை, ஒட்டகம் கட்ட, ஆபீஸ், பாரிஷதர்கள் ஓய்வெடுக்க, ஸமையல் செய்ய, ஸாப்பாடு போட என்று ஒவ்வொருவரும் ஆசை ஆசையாய் ஏற்பாடு பண்ணினார்கள். சுற்று வட்டார க்ராம மக்கள், தான்யம், காய்கறி கொடுத்தனர். செட்டிநாடு ராஜா அரிசி மூட்டைகளை அனுப்பினார்.

நவம்பர் 14 அன்று பூர்ண கும்பத்தோடு பெரியவாளை ஊர் எல்லையிலிருந்தே தக்க மரியாதையோடு அழைத்து வந்தனர். மூன்று நாட்கள் தங்குவது என்று முடிவானது கடைசியில் ஐந்து நாட்கள் தங்கி அத்தனை பேர் மனங்களையும் குளிரப் பண்ணினார். மீனாக்ஷிஸுந்தரமையரின் மனைவியின் கனவில் வந்ததை உண்மையாக்கி, அவளுடைய பக்தியை ஊர்ஜிதப்படுத்தினார்.

இப்படி ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பாதங்கள் தேய நடந்து, மூன்று கால பூஜை [அதுவும் க்ரமம் தப்பாத பூஜை], அனுஷ்டானம், ஸமையல் ஸாப்பாடு, அன்னதானம், நேரங்காலம் தெரியாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் குறைகளை கேட்பது, தீர்வு சொல்வது, பரிவாரங்களோடு, மடிஸஞ்சியை கூண்டு வண்டிக்குள் வைத்துக் கொண்டு, வெய்யிலோ, மழையோ, அத்வானக்காடோ, ஆகாஶம் பார்க்கவோ, குடிஸையோ, கல்லோ, முள்ளோ எல்லாவற்றையும் “ஒன்றே” எனக்கொண்டு, பெரியவா எதற்காக, யாருக்காக தன்னை இப்படி வருத்திக் கொண்டார்?

“எல்லாம் நமக்காகத்தான்! நாமெல்லாம் கடைத்தேறத்தான்!” என்பதை நாம் துளி உணர்ந்தால் கூட, அதுவே நாம் பெரியவாளுக்கு செய்யும் நமஸ்காரம், பூஜை.Categories: Devotee Experiences

19 replies

 1. Periavah Saranam

 2. Jaya Jaya Sankara Hara Hara Sankara

 3. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

 4. Thanks to Mr.MAHESH jaya jaya shankara hara hara chandrasekara (engal maha periyava)

 5. English translation

  UngaLukku Soukaryappadumo ?

  Year 1964. Meenakshi Sundaram Iyer was a school teacher in Chozhavaram and had tremendous devotion towards Periyava. But due to the schedule at his school, he was unable to go take His Darshan and was very sad about it.

  It was ‘Karadaiyar Nombu’ that day. That year, since the ‘Panguni masam’ dawned during the night, his wife finished the ‘Nombu’ late at night and went to sleep. She had a wonderful dream that night.

  Periyava, who brought glory to the tribe of Sanyasis, stood in front of that lady. She fell at His feet and did her Namaskarams to Him. Then Periyava’s divine voice spoke.

  “In life, all difficulties are driven away merely by the Lord’s ‘Namasankeerthanam’. Don’t worry. I will come and do Pujai at your house”

  She immediately woke up and though she realized it was just a dream, she felt extremely happy. The couple would often speak about the dream and feel happy.
  “I’m too greedy! How can I have expected Maha Periyava to perform Pujai at our house!”

  It was a Sunday in the year 1965. A car came and stopped at their house. An elderly brahmin with kudumi and Panchakachcham alighted from it.
  “Meenakshi Sundaram Iyer….?”
  “Yes, I’m Meenakshi Sundaram. Please come inside. Please tell me who you are”
  “I’m coming from the place where the Sri Matham is presently camped. Periyava is on His way from Tirupati to Madras. HE is camping at places at 15 miles intervals for His Pujais and plans to reach Madras towards the end of this month”
  [On hearing his next words, the couple almost fainted with joy !]
  “HE plans to halt at Chozhavaram on November 15th. If you agree, Periyava will stay here and perform his Pujai and ‘AnushtanangaL’. Are you ok with this ?”
  “Ok with this ???!!! This is our greatest fortune ! Periyava can stay here for as long as He wants. Please tell us what arrangements we have to do !”
  Tears of joy appeared in the eyes of the couple
  “We will do all arrangements. You need to just give us the house”
  That evening itself, the elders of the village gathered and plans were made for Periyava’s stay along with His group.
  An entire street was vacated and handed over for their stay. People enthusiastically participated and arrangements were made joyfully for the stables of elephants and camels, office use, living quarters for His assistants, kitchens, dining halls etc.
  People from nearby villages donated pulses and vegetables. The king of Chettinadu donated rice bags.

  Periyava was received with ‘PoorNa Kumbham’ at the village border and was escorted inside respectfully. Though His stay was planned initially only for 3 days, He eventually stayed for 5 days to everybody’s delight. Periyava fulfilled Meenakshi Sundaram Iyer’s wife’s dream and confirmed her devotion.

  This way, Periyava would go from village to village, town to town not minding heat or rain or cold, perform ‘Thrikaala Pujai’ strictly as per traditions, perform His Anushtanams, supervise cooking and Annadanams, listen to the grievances of people at all unearthly hours and give resolutions. Why did He do all this, subjecting His Body to all kinds of physical discomfort and pain ?

  We should realize that it was all for us. That alone would amount to our Namaskaram and Pujai to Maha Periyava

 6. English translation please. Thanks!

 7. OM Hreem Shreem Maha Periyavaa Paadangal Saranam

 8. Sree Maha Periyavaa Saranam…

 9. I bow for their devotion. It is a blessing of janma janma prarthanai. Let Periyava bless
  His devotees and elevate their mind to divine ectasy

 10. Very very heart melting incident.

 11. When I read this, I felt as though I am some where in Sholavaram, enjoying dharsan of MAHAPERIYAVA. THAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAANKS to you for mailing this .

 12. sMT MEENAKSHI SUNDARAMIAR COUPLE ARE BLESSED ONE WHEN MAHAPERIYAVA CHOSEN THEIR HOUSE FOR POOJA.GIVING ADVANCE NOTICE IN A DREAM.
  LAXMAN.

 13. Thank you Sri Mahesh by posting this and making His devotees to be in His Thoughts and shed ‘Anandha Kanneer’,… Avan Arulale Avan Thal Vangi….

 14. Periyava Charanam

 15. புண்ய தம்பதி…. புண்ய செய்துகொண்ட கிராம மக்கள். அருள் பாலித்த தெய்வம்.

 16. Periyava, please bless us with supreme bhakthi that will bring You into our dreams and homes. …

 17. தென்னாடுடைய பெரியவா போற்றி
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
  மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!

 18. Touching story. They ( Meenakshi Sundarmiyer & his wife) are gifted .

Leave a Reply

%d bloggers like this: