யார்  பாக்யசாலிகள்? Who are the blessed souls?

Only some articles touch our heart – this is one of them from our beloved Sri BN Mama.

Maha-Periva-Viswaroopam-BN

இதோ  இந்த  நடமாடும்  தெய்வம்,  காலை  3 மணிக்கு  விழிப்பது  முதல்   இரவு  11  மணிக்கு  உறங்கச்  செல்லும்  வரை  அவர்  கூடவே  இருந்து,  அவர்  செய்யும்  எல்லா  கர்மங்களுக்கும்  வேண்டிய  தேவைகளைப்  பூர்த்தி  செய்து,  ‘என்  கடன்  பணி  செய்திருப்பதே’  என்றிருந்த  நூற்றுக்கணக்கான  அணுக்கத்  தொண்டர்கள்  அந்த  பாக்யசாலிகள். 

அவர்,  தம்  பொற்பாதங்கள்  பதித்து,  ஆயிரக்கணக்கான  மைல்கள்  நடந்து  இப்புண்ணிய  பூமியை  மேலும்  புனிதமடையச்  செய்த  போது,  தாமும்  அவர்  கூடவே  நடந்து,  பசி,  தாகம்  களைப்பு  எல்லாவற்றையும்  ஒதுக்கி  வைத்து,  அவர்  பணியே  செய்து  கோடி  புண்ணியங்களைப்  பெற்ற  அந்த  அணுக்கத்  தொண்டர்களே  அந்த  மாபெரும்  பாக்யசாலிகள்.

வேதங்களையும்  சாஸ்த்ரங்களையும்  நன்கு  கற்றறிந்து,  அந்த  ப்ரத்யக்ஷ  தெய்வம்  ஒவ்வொரு  வருஷமும்  நடத்திய  ஆகம,  சில்ப,  விஸ்வ  பாரத,  வேத  சாஸ்த்ர  சதஸுகளில்  பங்கேற்று  அவர்  தந்த  சம்மானங்களைப்  பெற்ற  அந்த  வேத  விற்பன்னர்களே  அந்த  பாக்யசாலிகள்.

அவருடன்  மிக  நெருங்கிப்  பழகி,  அவருடன்  சம்பாஷித்து,  தர்க்கம்  செய்து  அவர்  அனுக்ரஹத்தால்,  அவரைப்  பற்றிய  அரிய  விஷயங்களை  நம்முடன்  பகிர்ந்து  கொண்ட,  ரா. கணபதி,  பரணீதரன்  போன்ற  எண்ணற்ற  எழுத்தாளர்களும்  சில்பி  போன்ற  ஓவிய  விற்பன்னர்களுமே  அந்த  பாக்யசாலிகள்.

‘எத்தனை  பேர்  தன்னை  தரிசனம்  செய்ய  வந்தாலும்,  அத்தனை  பேருக்கும்  தீர்த்தப்  பிரசாதம்  வழங்கி  விட்டே  பிக்ஷைக்குச்  செல்வார்’  என்ற  உறுதியான  நம்பிக்கையுடன்,  ‘க்யூ’  வில்  காத்திருந்து,  அவர்  வழங்கும்  தீர்த்தப்  பிரசாதத்தைப்  பெற்ற  பின்பே  செல்லும்,  லக்ஷக்கணக்கான  பக்தர்களே  அந்த  பாக்யசாலிகள்.

‘வேதம்  காக்கப்படவேண்டும்’  என்ற  உன்னதமான  குறிக்கோளுடன்   நாடெங்கும்  நிறுவச்  செய்த  வேதபடசாலைகளில்  படித்து,  தாம்  கற்றவற்றை,  அந்த  தெய்வத்திடம்  ஓதிக்  காண்பித்து,  விலைமதிபற்ற  அவருடைய  அனுக்ரஹத்தையும்  சன்மானங்களையும்  பெற்ற  அந்தப்  பால்  மணம்  மாறாத  பாலகர்களே  அந்த  மஹாபாக்யசாலிகள்.

லௌகீக  வாழ்வில்  தமக்கு  நேர்ந்த  எண்ணற்ற  துயர்களை,  இந்தத்  துயர்  துடைக்கும்  பெம்மானிடத்தில்  கொட்டி  அழுது,  அவருடைய  அன்பையும்,  ஆதரவான  சொற்களையும்  கேட்டு  மனசு  லேசாகிச்  சென்ற,  லக்ஷோப  லக்ஷம்  பக்த  கோடிகளே  அந்த  பாக்யசாலிகள்.

இன்னும்  சொல்லிக்  கொண்டே  போகலாம்.

அந்த  பாக்யசாலிகளில்  நானும்  ஒருவனாக  இருக்கக்  கொடுத்து  வைக்கவில்லையே  என்ற  தாபம்  தீரும்  வரை  அந்த  பாக்யசாலிகளைப்  பற்றி  சொல்லிக்கொண்டே  போகலாம்;  அவர்களுடைய  அநுபவங்களைப்  படித்து,  கண்களில்  நீர்  பெருக  நம்  பாவங்களைக்  கழுவிக்  கொள்ளலாம்.

தாபமும்  தீராது;  கண்ணீரும்  நிற்காது.

மஹாபெரியவா  திருவடிகள்  சரணம் !

Those  hundreds  of    attendants,  who  were  with  Him  from  the  time  (3 A.M)  He  ‘wakes  up’  ,  until   the  walking  GOD   ‘retires’  to   His  Mena  at  11 P.M,  and  looked  after  all  His  needs  in  performing  His  daily  routines,  as  their  prime  duty,   are  the  true  blessed  souls.

Again,  those  attendants,  who  went  with  Him,  when  He  imprinted  this  holy  land  with  His  Golden  Feet,  while  walking  thousands  of  miles  and  looked  after  His  needs,   unmindful  of  their  own  needs  such  as  food,  thirst  and  sleep,  are  the  true  blessed  souls.

Those  Vedic  scholars  who  have  mastered  the  Vedas,  Sastras  and  Arts,  and  participated  in  the  yearly  conferences  on  ‘Agama,  Silpa,  Veda  Sastras  and  folk  arts’   conducted  by  this  ‘visible’  God,  and  received  His  blessings  and  gifts,  are  the  true  blessed  souls.

Those  prolific  writers  and  artists  such  as  Ra.Ganapathy,  Baraneedharan,  Silpi  and  many  more,  who   had  the  rare  opportunities  to  move  with  Him  closely,  talked  to  Him,  discussed  many  subjects  and  shared  their  experiences  with  all  of  us, are  the  true  blessed  souls.

Those  lakhs  and  lakhs  of  devotees,  who,  with  the  assurance  that  He  will   go  for  His  Biksha (lunch)  only  after  giving  the  holy  water  prasadam  to  ALL  those  who  have  come  for  His  Dharsan,  stood  in  the  lengthy  queues,  and  received   the  ‘Prasadham’   from  Him,  are  the  true  blessed  souls.

Those  tender  Brahmacharis,  who  willingly  joined  the  various  Vedapatasalas   established  due  to  His  initiatives,  in  fulfilling    one  of  His  most  important  objectives  —–that  ‘The  Vedas,  the  study  of  which  was  vanishing  slowly  from  our  midst,  must  be  protected  from  total  disappearance’—–learned  Vedas,  and  in  course  of  time,  demonstrated  their  knowledge  before  Him,  and  received  His  blessings  and  gifts,  are  the  true  blessed  souls.

The  lakhs  and  lakhs  of  devotees,  who  poured  their  miseries   in  front  of  Him  and  prayed  for  their  salvation  and  returned  home   with  lighter  hearts,  after  getting  His  soothing  words  and  blessings  and  remedial  ways,  are  the  blessed  souls.

I   can  keep  on  enumerating—-keep  on  enumerating  till  the  fire  burning  in  me  with  the  thought  that  I  was  not  one  among  those  blessed  souls,  is  doused.—keep  hearing  about  them  and  reading  about  them  till  all  my  sins  are  wiped  out  by  the  tears  from  the  soulful  cries.

But,  the  fire  will  not  be  doused;  nor  the  tears  will   stop.

MAHAPERIAVA  THIRUVADIKAL  SARANAM.



Categories: Photos

Tags:

7 replies

  1. Dear Mahesh,

    I am sure there are thousands of us who are sad that we did not get to meet/do darshan of His Holiness.

    I had been to Kanchipuram as a 10-year old for some competition and I remember going for the darshan of Periyava. But there was no understanding or interest at that age – so it was more of a sight-seeing for me. I do not recollect any other detail other than standing in a long queue.

    I have an younger brother who till today rues the fact he (as a teenager) refused to go in for darshan as he did not want to remove his shirt. Thankfully, we all got to know about Mahaswami and picked up this devotion from our Mother.

    In fact,you are a blessed soul in that you are managing a forum like this and are helping so many millions read about, remember and/or get to know Periyavaa. This is the first site I log into, as soon as I turn on wifi in the mornings.

    Keep up the Noble work and Periyavaa’s blessings will always be there with you and your family.

    Regards,

  2. IPPOTHUM AVARIDAM THANATHU MANA NIRAIKUAIKALAI SAMARPITHU AVARIDAM IRUNTHU THEERVU KANDUKONDIRUKKUM AVARATHU BAKTHARKAL ANAIVARUM BAKYASALIHAL
    JAYAKUMAR 9444455320

  3. Namaskarams mama!!

    Very nice sketch. Is it done on 1:1 scale for Periyava’s height??

  4. நம் எல்லோருடைய எண்ணமும் அதுவே. சரியாக சொன்னீர்கள். நன்றி.

  5. வீட்டில் உட்கார்ந்து கொண்டே கம்பூயுடரில் பெரியவா வொர்ட்ப்ரேச்ஸ் ஓபன் பண்ணிய உடன்
    பெரியவா தரிசனத்தை காணும் நாமும் ஒரு வகையில் பாக்யசாலிகளே .
    புண்ணியம் ஸ்ரீ. மகேஷ் மற்றும் இதற்கு உதவும் அனைவருக்கும் .

  6. Most UNFORTUNATE NOT TO be one among them, but VFRY FORTUNATE to know about them for which FULL credit to you for the opportunity given.

  7. I belong to the last category! Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Leave a Reply

%d bloggers like this: