Thanks to Sri Halasya Sundaram Iyer for the article.
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்
சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், “உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்” காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.
“பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்.” தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், ” நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்…” அவர் உடனே, “திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)” என்றார்.
“ரொம்ப சரி…இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?”
“உத்திரவுப்படி…”
“சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே…”
சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.
அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.
சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். “அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்” என்றார்கள்,பெரியவாள்.
Categories: Devotee Experiences
Reblogged this on Gr8fullsoul.
Sri Mahaa Periyavaa is far beyond gossip. His thoughts are always for ‘sarva jano sukhinoo bhavanthu…
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!