பெரியவா சரணம் by சாணு புத்திரன்

When someone writes what you often experience, it touches your heart. Here is one for me! Thanks Suresh…periyava_hand

ஒரு சில நொடிகள்…
உற்றுப் பார்த்தேன்
உயர்வான குருதேவன்
உயர்த்தியருளும் கரம்தனை!

உள்ளூடே ஓர் உயிர்ப்பு
உந்தித் தள்ளியதுபோல்
உணர்ந்தேன்…

உலகெலாம் போற்றுகின்ற
உமை பதியோனே
உலகிதனில்
உற்றதோர் குருவடிவில்
உதித்தானென்பதை
உணர்வினிலே
உந்தித் தள்ளியதோ
கரம்தந்த காரூண்யம்..!

ஒரு பிடி உணவாலே
உலகோரை யெல்லாம்
உய்ய வகைசெய்த
உயர்ந்த மஹாமுனி!

பிடியரிசி பாடம் புகட்டி
பரத்திற்கு உரமேற்றிய
பரந்தாமன்!

யாசகமாய்
வேதம் தழைத்து
பேதமில்லா பெருவாழ்வை
அருளிய
பரப்ரஹ்ம ஸ்வரூபி!

கண்டோர் காணாதோர்
யாவர்க்கும் அருளும்
கலியுகப் பெருவள்ளல்!

எதுகையும் மோனையும்
என்னுள்ளாக
எதிர்ப்பின்றி புணரச்செய்து
எழுத்திந் மூலமாய்
எல்லோருக்குமாய்
ப்ரார்த்திக்க வகைசெய்யும்
ப்ரபஞ்ச ப்ரும்மா!

எல்லாவற்றிற்குமாய்
என்ன கைமாறு
இனியும் யான் செய்வேன்
எந்தன்
மஹா குருபரனே!

இருக்கும் வரையிலும்
நின் புகழைப்
போற்றி எழுதி ப்ரார்த்திக்கும்
பேரருள் மட்டுமாய்
என்றென்றும் தாயேன்
தீன தயாபரா!

ருத்ர ஸ்வரூபம் குரு அவதாரம்
சாந்த்த ஸ்வரூபம் சந்த்ரசேகரம்
பக்த ப்ரகாசம் ப்ரபு கடாக்‌ஷம்
பாதாரவிந்தம் பஜேஹம் பஜேஹம் ||

பெரியவா கடாக்‌ஷம்Categories: Bookshelf

Tags:

13 replies

 1. Sir, superb lyrics. I am blessed one to read the above lyrics. Superb

  maha periyava kadaaksham

 2. Mr.Suresh, you are a very blessed soul of the Lord. we are also blessed to read your lines about our Mahaperiava. Hara Shankara Jaya Jaya Shankara.

 3. reading those lines multiple times, still can’t stop reading.

 4. சுரேஷ் எப்போதும் பெரியவா நிநைவின்றி வேறொன்றும் அறியாமல் வாழ்பவன்.. அவனுக்கு அவரருளாலே நான் முன்பே எழ்தியது போல் அவன் தாய் அவனைக் கருவில் சுமந்தபோதே பெரியவா அனுக்ரஹத்தால் வந்த கவிப்ரவாகம் இது! சங்கரா சரணம்.

 5. Wonderful and Blessed lines… He only writes about Him through Blessed Souls.

  Jaya Jaya Shankara

 6. ராதே க்ருஷ்ணா
  ரொம நனா இருக்கு. இதை ஏதாவது மெட்டிலோ, ராக்த்திலோ, செய்திருந்தால், அதையும் சொன்னால், பாடுவதற்கும் நன்றாக இருக்கும். ஏனென்றால், கர்தா வின் மன நிலையில் உணர வேண்டும் என்றால், அவர் மனத்தில் உள்ள மெட்டில், ராகத்தில் பாடினால் அந்த க்ருதியின் உண்மையான் / ஒரிஜினலான சுகம் கிடைக்கும்
  ஸத்குரோ பாஹி
  ராதே க்ருஷ்ணா

  • ezuthugaiyil meddinai vidavum athigamaai merugeriyathu acharyanin swaroopa dhyanam thaan aiya. manathinindru urugiya ennathivilaigalai viral nuniyil vasikka varathamoorthiyaana sricharanal krupai seivathaal kiddiya aanantha unarvugale ithu. periyava charanam

 7. wonderful very true and melting lines

  kandor kaanaathor
  yaavarkum arulum
  kaliyuga peruvallal

 8. Out of pure bhakthi such outpourings come. All Periava karunyam.
  Panchapakesan

Leave a Reply

%d bloggers like this: