காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா !

Thanks to Sri Krishnamoorthi Balasubramanian for the article.

Enjoyed these lines – well-written!

Periyava_with_left_hand_on_ear

காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா !

கண்ணின் ஒளியே கருவிழியே காமகோடி பீடத் தவநிதியே
நமசிவாயத்தின் உட்பொருளே நான்மறை போற்றும் நவநிதியே
காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா !

பக்தர்கள் உள்ளத்தின் பெருநிதியே பாவங்கள் தீர்க்கும் தயாநிதியே
கற்பக தருவே கருணாகரனே கற்பனைக்கு எட்டா பரம தயாளனே
காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா !

தெய்வ திருமகன் தேவாதி தேவனே தோன்றா துணையே ஸ்வயம் பிரகாசனே
அண்டமெலாம் தொழும் அற்புதமே பொற்பதம் பணிந்தேன் நித்தியமே !
காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா!

காஞ்சியிலே நீரும் அருளாய் அமர்ந்திருக்க
நெஞ்சில் உம் நினைவோடு நாங்கள் இருக்க
பஞ்சமில்லா அருளாலே பாபமெல்லாம்
பறந்தோடி போய்விடுமே வந்த வழியே

திருநீறில் உம் மகிமை தெரிந்திடுமே
அருமருந்தாய் அது இங்கே மாறிடுமே
பெரும் நன்மை உடனே சேர்ந்திடுமே
வருவதெல்லாம் நல்லதாக மாறிடுமே

தஞ்சம் என்றும் வந்துவிட்டால்
வஞ்சம் இன்றி அருள் பொழியும்- அதனால்
நெஞ்சில் உடன் நிம்மதியும் வந்திடுமே
அஞ்ச இனி தேவையில்லை நீர் இருக்கையிலேCategories: Bookshelf

Tags:

5 replies

 1. HARA HARA SHANKARA,JAYA JAYA SHANKARA, KANSHI SHANKARA, KAMACHI SHANKARA!

 2. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

 3. வருவதெல்லாம் நல்லதாக மாறிடுமே …

  நல்லதாய் மாற வேண்டும் அய்யனே……
  நலம் பெற வேண்டும் பெரியவா
  நல் எண்ணம் வரவேண்டும் பெரியவா
  நின் அருள் வேண்டும் பெரியவா……….

 4. GURAVE SARANAM JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

Leave a Reply

%d bloggers like this: