சங்கர நாராயணீ – Periyava Bakthi

Mahaperiyava_Rare

Thanks Shri Ganapthy Subramanian for the article.

” தாத்தா.. எனக்கு சங்கர நாராயணீன்னு ஏன் இவ்ளோ நீ..ள..மா பேர் வெச்சே..?.. எல்லாருக்கும் ஸ்டைலா ரெண்டெழுத்திலே சின்ன சின்னதா பேர் இருக்கே..” ஒருநாள் தாத்தாவிடம் மருகினாள் என் தங்கை ..

” அப்டில்லாம் சொல்லக்கூடாதும்மா.. உனக்கு பேர் வெச்சதே பெரீவா அனுக்ரஹத்னாலதான்.. ” என விஸ்தாரமாக கதையைச் சொல்ல ஆரம்பித்தார் தாத்தா…

திருவாரூரிலிருந்து ஸ்ரீமடத்தின் அன்பர்கள் சிலருடன் ஸ்ரீபெரீவாளைத் தரிசிக்கச் சென்றிருந்தார் தாத்தா (நெம்மேலி ஆடிட்டர் வெங்கட்ராமையர்)…

எப்போதுமே ஸ்ரீகாமகோடி ஆசார்யாளைத் தரிசனம் பண்ணும்போது சில ஸம்ப்ரதாயங்களை பின்பற்ற வேணும் என்பார் தாத்தா..

” ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் ராஜ ஸம்ஸ்தானத்துக்கும் மேல்..! ஆகையினால் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளுக்கு நேர் எதிரில் நிற்கக்கூடாது.. ஸ்ரீயவாளிடம் நெருங்கிப் பேசக்கூடாது..” என்பார்…

தரிசனம் செய்யப்போகும்போது அவர்களின் அருகாமையில் செல்லாது சிறிது தூரத்தில் ஓர் ஓரமாக இரண்டு கைகளையும் சிரத்தின் மேல் கூப்பிக் கொண்டுதான் நிற்பார்.

ஸ்ரீபெரீவாளின் திருக்கண் வீக்ஷண்யம் பட்டவுடன் படபடவென்று கன்னத்தில் போட்டுகொண்டு நான்கு முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பார்..

ஸ்ரீபெரீவாளிடம் சட்டென்று எதையும் பேசிவிட மாட்டார்.. ஸ்ரீயவாள் ஏதும் உத்தரவு பண்ணும் வரை அருகில் செல்லாது வாய் பொத்திக் காத்திருப்பார் ..

“அவாள் கண்ணால் சொல்வதைக் கண்ணால் நாம் புரிந்து கொள்ளணும்.. அபூர்வமாக சில சமயங்களில், தம் அடிமையாயிருப்போருக்கு தனது ஹ்ருதயத்தைத் தொட்டுக்காட்டி ஆசீர்வாதிப்பார்கள் .. அதன் சூக்ஷ்மத்தை தெரிந்து கொள்ளணும் ” என்பார்..

” ஸ்ரீயவாள் தராமல் ப்ரஸாதத்திற்குக் கை நீட்டக்கூடாது .. ப்ரஸாதம் வேணுமென்று வாய் விட்டும் கேட்கக் கூடாது.. எதை எப்போது நமக்கு தரணும்னு அவாளுக்குத் தெரியும் ” என்றே என்னிடம் சொல்லுவார்..

1970 ஜனவரி மாசம் 1ம் தேதி, ஸ்ரீமடத்தின் அன்பர்களுடன் ஸ்ரீபெரீவாளைத் தரிசிக்கச் சென்றார் தாத்தா…

அன்பர்கள் அனைவர்களின் க்ஷேம லாபங்களை கேட்டுகொண்டு, அவர்களின் அந்தரங்கமான பக்தி ச்ரத்தை கண்டு ஸந்தோஷித்து ஸ்ரீபெரீவாள் பரமானுக்ரஹம் பண்ணினார்கள் ..

ஸ்ரீபெரீவாள் திருவுளக்குறிப்பின்படி அன்பர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து ஸ்ரீபெரீவாளிடம் அனுக்ரஹ ப்ரஸாதம் பெற்றுக் கொண்டனர்..

…தாத்தாவுக்கு மட்டும் ப்ரஸாதம் தரவில்லை..

தாத்தாவைத் தன் திருக்கண்களால் நோக்கி தம் ஹ்ருதயத்தைத் தொட்டுக்காட்டி” நாராயணா.. நாராயணா..” என்று மட்டும் சொல்லி தலையை சற்று அசைத்து கிளம்ப உத்தரவாயிற்று…..

சற்று தள்ளி, சிரத்தின் மேல் கரம் குவித்தபடி இருந்த தாத்தா ஸ்ரீபெரீவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து திரும்பினார்..

” இவருக்கு மட்டும் ஏன் ஸ்ரீபெரீவா ப்ரஸாதம் தரலே” என்று.. கூட வந்தவர்களுக்குக் குழப்பம்..

“ஸ்ரீயவாள் என்ன பண்ணினாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்.. ஆனா அதக் கேக்கற யோக்யதையும் உரிமையும் சிஷ்யாளுக்கு கிடையாது ” என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டார் தாத்தா..

ஊருக்குத் திரும்பி மோட்டார் வண்டியில் கூட வந்தவர்களை அவரவர்கள் வீட்டருகில் இறக்கி விட்டுவிட்டு சாவகாசமாக ஆத்துக்கு வந்து சேர்ந்தார் …

ஆத்து வாசலிலேயே தாத்தாவுக்கு நல்ல சேதி காத்திருந்தது ..

.. ஸ்ரீபெரீவாளை தரிசித்த தினம்.. ஜனவரி ஒண்ணாம் தேதியன்று தாத்தாவுக்கு இங்கே திருவாரூரில் பேத்தி பிறந்திருக்கிறாள் ..

ஸ்ரீபெரீவா ஸன்னதியில் தாத்தா இருந்த நேரத்தில்.. பேத்தி பிறந்து வ்ருத்தி தீட்டு வந்துவிட்டதால் தன்னைக் கிட்டத்தில் வரச் சொல்லி பிரசாதம் தராமல் ஸ்ரீபெரீவா ” நாராயணா.. நாராயணா..” என்றபடி தலையசைத்துக் குறிப்பால் அனுக்ரஹம் பண்ணினது தாத்தாவுக்குப் புரிந்தது …

” அன்னிக்கு ஸ்ரீபெரீவா, ‘ நாராயணா.. நாராயணா’ ன்னு அனுக்ரஹம் பண்ணி நீ பிறந்ததுனாலதான் உனக்கு சங்கர நாராயணீன்னு பேர்ம்மா .. மத்தவா பேர் மாதிரி இது சாதாரணப் பேரில்லே. ! “என்று கதையை முடித்தார் தாத்தா..

What is more important to learn from this experience is the “madam sampradhayam”. I am sure what has been described here is only a fraction of how devotees used to follow in those days. I am sure old-timers can tell more on this. This is bakthi towards Periyava and to our great Kanchi Sri Matam Samsthanam!

Hara Hara Sankara Jaya Jaya Sankara
Kanchi Sankara Kamakoti Sankara

 



Categories: Devotee Experiences

12 replies

  1. Sri Mahesh,

    Since i was born at Tiruvarur, Im interested to know, if this Tiruvarur family that is being referred to here was living at Durgalaya Road in Tiruvarur ? My father was a close friend of auditor Sri Venkatramayyar. His first son was Sri Balu who was also an auditor. Sri Balu mama had 2 daughters, elder one was Vidhya and the younger one was Shankari. He had two sons as well, elder one was Balaji and younger one was Soori. Sri Balu mama’s wife was Meenakshi mami.

    If the family that is being referred to in this article is the same as described by me, I will be very happy, as it is more than 35 years since I had met any one from this family, as I have moved out of Tiruvarur in 1980.

    Jaya Jaya Shankara !!! Hara Hara Shankara !!!

    Swaminathan Ramanathan

  2. Hara Hara Shankara, jaya Jaya Shankara! Nemmeli auditor Sri. Venkataraman has taught us many things regarding how we should conduct ourselves when we face Mahaans! Very blessed to read this!

  3. Grandppa why I am called as “SankaraNarayani”, why did you kept that name to me it is very long. These days’ kids have only two letter name, I have to have such a long name, one day my younger sister complained to our grandad.
    Grandad, you should not say like that, that name is kept because of MahaPeriyav’s Anugraham and His blessings and started narrating the story happened in 1970.
    From Tiruvarur with the group of Madam’s Sevakas went to have Dhashan of MahaPeriyavaa, the grandad, Shri Nemmili VenkatRamaIyer.
    When he always, get the dharshan of Him follows certain rules and rituals, as SriMadam is bigger than King’s Samasthanam. Since it is even bigger than the King, in front of Shri Achariyan (MahaPeriyavaa) no body stand in the front, secondly cannot go close to Him and talk, Grandad always says to us and follows.
    When goes for Dharshan, he never go close to Him and stand aside with keep both hands above the head. When Shri MahaPeriyavaa glance at him, grandad place his hand few times in the checks and does 4 times full Nameskaram. He would not speak anything to Shri MahaPeriyavaa, unless Shri Aachariyan gives order. Grandad always understand what He says using His eyes. Sometimes Shri Aachariyan bless people by touching His heart
    Without Aachariayn gives prashadam, we should not ask for it, He knows when and whom to give.
    On 1st January 1970, with group of SriMadam Service men, grandad when and saw Shri MahaPeriyavaa.
    With the Devotees everyone coming to Him and getting prasadham and answering His questions, but Grand dad did not get his prasadham.
    At the end Shri Aachariyan looked at grandad, touches His heart said Narayana! Narayana!! and simply shake His head, obviously asked him to leave without prasadham.
    Why grandad was not given prasadham, everybody around him worried, as usual grandad put namameskaram to MahaPeriyavaa and left
    Whatever He does there is always a reason, they all returned back home in the car and dropped him back at home there the good news about the brith of Granddaughter, that is the reason Shri MahaPeriyavaa did not give prasadham as there is a NewBorn in the house
    Obviously after Poonyajanam only they get prasadham from Him. That was the reason Shri MahaPerihyava never asked grandad to come close and gave prasadham.
    Due to Shri MahaPeriyava Anugraham’s the girls is called ShankaraNarayani, it is different any other name, because the Great Shri Aachariayn’s desire and blessings.

    Blessed to translate this -apologies in case of error or omission –Ofcourse it is His desire – MahaPeriyava Padma Padham Charanam Saranam

  4. Can someone please translate for
    people who can’t read Tamil ?

    Thanks in advance

  5. Very informative about Sri Matam protocol to be followed if we are real devotees.

  6. என்னைக்கும் பெரியவா பெரியவாதான்.அவாளுக்கு ஒரு மனம், ரெண்டு சித்தம். ஒண்ணு நம்மளோட இருக்கும். இன்னொன்னு பகவானோட பேசிண்டு இருக்கும்.

  7. GURAVE SARANAM JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

  8. .நீர் சொல்றது தப்பு ஸ்வாமீ.. கடம்னா அழிக்கறதில்லே..

    வேங்கடம்னா (வேம் + கடம்) வெப்பமான பாலைநிலம்னு அர்த்தம்.. அந்த ப்ரதேசத்தின் தட்ப வெப்ப நிலை காரணமா அப்டியொரு பேர் ஏற்பட்டிருக்கு..

    வெங்கட்ராமையர்னுதான் அவருக்கு பேர்.. தஞ்சாவூர் வட்டார வழக்கு அப்டி..ஸ்ரீபெரிவா உபன்யாஸத்தில் ஸாக்ஷாத் வெங்கட்ரமணஸ்வாமின்னுதான் வரது..

    உமக்கு இதில் அபிப்ராய பேதம் இருக்க வேண்டிய அவஸ்யம் இல்லை…

  9. Ram Ram – One small clarification. There is no word in Tamil/Sanskrit as ‘வெங்கட்ராமன்’, should be spelled and pronounced as ‘வேங்கடராமன் ‘ (VeAnkataraman). ‘VeAn’ means Sin, ‘Katam’ means Destroy. Destroyer of Sins is VeAnkataramana Swamy. Adiyen has heard this in a few upanyasams. In Deivathin Kural chapters where it talks about VeAnkataramana Swamy this is how it has been written. Ram Ram.

  10. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA, BEAUTIFUL NARRATION…ALL OF US SHOULD FOLLOW THE RULES AND REGUALTIONS OF OUR OLD TIMES..GOOD FOR ALL IF WE DO SO…JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…

Leave a Reply to Sai SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading