Thanks to Smt Saraswathi mami for posting in FB…
பஞ்சாங்கத்தில் வபன பௌர்ணமி என்று போட்டிருக்கும் நாளில்தான் காஞ்சி மடத்தில் பெரியவாள் தலை மழித்துக் கொள்ளும் சடங்கைச் செய்து கொள்வது வழக்கம். ஒருமுறை பெரியவாளுக்கு ரொம்ப ஜுரம் கடுமையாக இருந்தததால் அந்த தினத்தில் வபனம் என்ற தலை மழித்தலைச் செய்து கொள்ள முடியாமல் போய் விட்டது.ஒரு பௌர்ணமி தப்பினால் இன்னொரு பௌர்ணமி வரை காத்திருக்க வேண்டும். அதனால் பெரியவாளுக்கு தலை முடியும், தாடியும் மிக அதிகமாகவே வளர்ந்து விட்டது.
அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் பெரியவா ஒரு மரத்தடியில் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு தம்பதியினர் அவரை தரிசிக்க வந்தார்கள். அவரை அடையாளம் காண முடியாமல் யாரோ வேறு ஒரு சன்னியாசி என நினைத்து அவரிடமே ”ஸ்வாமி எங்கே” என்று கேட்டார்கள்.
பெரியவா கொஞ்சமும் பதட்டப் படாமல் ”ஸ்வாமியைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கேன்” இருக்கும் இடந்தான் தெரியவில்லை”என்று பதில் சொன்னார்.
வந்தவர்களுக்கு ஏமாற்றம்! ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தால் அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே!
அதற்குள் அங்கு வந்த தொண்டரிடம் விசாரிக்க அவர் ”அங்கே உட்கார்ந்திருக்காளே” எனச் சொல்ல தம்பதியினர் வெல வெலத்து விட்டனர்.
எவ்வளவு அபசாரம் செய்துவிட்டோம் என தவித்துக் கொண்டிருந்தபோது பெரியவாளே அவாளை அழைத்து
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்கள்.
”தாடி ரொம்ப வளர்ந்து போச்சு,அதனால்தான் அடையாளம் தெரியவில்லை. நாந்தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்; பரவாயில்லை ”என சமாதானமாகப் பேசி ,ப்ரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் சர்வ சாதாரணம்! சிஷ்யர்களுக்க்ந்தான்!
கோதண்டராம சர்மா தரிசன அனுபவங்கள்..
ஜய ஜய சங்கரா..
We hear innumerable stories about MahaPeriava after His attaining samadhi.Though we lived during His period as Kanchi mutt chief ,many of us have missed such experiences with this Mahan.But we are atleast fortunate enough to read the experiences of others with this Nadamadum Daivam-Our Pranams to the great Mahaperiyava
Reblogged this on Gr8fullsoul.
சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!
Reblogged this on kahanam.
”ஸ்வாமியைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கேன்” இருக்கும் இடந்தான் தெரியவில்லை”
Mahaan’s Divine Play! If we pray to Him sincerely, He will be in our grasp! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
உண்மை தான். காலை வேளைகளில் இம்மாதிரி விளையாட்டுகள் சாதாரணம். அந்த தம்பதிகள் கொடுத்து வைத்தவர்கள்.
Reblogged this on My blog- K. Hariharan.