அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
புத்தகம்-தாயுமான மகான்-3
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன் – Thanks mama for the share….
ஒரு வெள்ளைக்காரன்.இதாலி அவன் சொந்த ஊர். பிலாசபி படித்தவர். என்ன படித்து என்ன? ஏதாவது பார்க்க வேண்டும். செய்ய வேண்டும். மிகவும் ஏழை.பணம் கிடையாது. ஏதோ வேலை. ஏதோ வேலை.அதில் மாதம் 100 சேர்த்து வந்தான்.
வெளிநாடு போகலாம் என்று தோன்றவே எல்லா பெயர்களையும் எழுதி குலுக்கி போட்டதில் இந்தியா என்ற பெயர் வந்தது.
இந்தியா வந்து டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கினான். இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. எங்கு போவது என்றும் தெரியாது. பாம்பேக்கு டிக்கெட் கேட்டான். இல்லை,சென்னைக்கு இருக்கு என்றதும் சென்னைக்கு வந்துவிட்டான்.விமான நிலையத்தின் வெளியே வந்து ஒரு டீ குடித்துவிட்டு அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம், ‘இங்கு பெரிய வி.ஐ.பி. யார் இருக்கார்’ என்று கேட்டார்.
அந்த டிரைவர், ‘இங்கு காஞ்சிபுரம் என்று ஒரு சிட்டி இருக்கு. அங்கு ஸ்ரீ பெரியவா என்று ஒரு மகராஜ் இருக்கார்’ என்றார்.
சரி கூட்டிப்போ என்றதும்,அந்த டிரைவர் 2500 ஆகும் என்றவுடன், சரி என்று சொல்லி காஞ்சிபுரம் வந்தான். அப்போது ஸ்ரீ மகா பெரியவர் ஓரிக்கையில் ஒரு சின்ன குடிசையில் இருந்தார். ஸ்ரீ பெரியவா பிக்ஷை செய்து விட்டு படுத்துக் கொண்டார். நல்ல வெயில் வைகாசி மாதம்.
நானும் ரவியும் வெளியில் வந்தோம். வெளியில் ஒரு பம்பு செட் இருக்கு.அங்கு நாங்கள் உட்கார்ந்தோம். அப்போது இந்த வெள்ளைக்காரர் காரில் வந்திறங்கினார்.
எங்களிடம் சங்கராசார்யார் என்றார்.
நாங்கள், “தாங்கள் யார்? என்று கேட்க அவர் நான் இத்தாலியிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
‘நான் ஒரு பிரம்மச்சாரி,எனக்கு பிலாசபி தெரியும் என்றார்.எனக்கு பெரியவாளை பார்க்கணும் என்றார்.
நாங்கள், அவரிடம் ஸ்ரீபெரியவா படுத்துக் கொண்டு இருக்கா என்று சொல்ல முடியாதலால், அவர் தியானம் செய்கிறார்
கொஞ்சம் பொறுங்கள் என்றோம். அவரும் எங்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தார். 30 நிமிடங்கள்
ஆகிவிட்டது. நான் ரவியிடம் 1-30 மணி நேரம் ஆகிவிட்டது. இதற்கு மேல் ஸ்ரீ பெரியவா படுத்துக்க மாட்டார். வா போய்
பார்க்கலாம் என்று சென்றோம்.
ஸ்ரீ பெரியவா எழுந்துவிட்டார். எங்களிடம், “அவன் வந்துவிட்டானா, வந்துவிட்டானா” என்று கேட்டார்.
‘ஒருத்தரும் இல்லை. இரண்டு மூன்று ஸ்தீரிகள் தான் இருக்கிறார்கள்’ என்றோம். நாங்கள் அவர்களை வாழும் பாம்பு என்போம். தெரியாமல் ஸ்ரீ பெரியவாளிடம் ‘வாழும் பாம்பு தான்இருக்கிறார்கள்’ என்றோம். (வாழும் பாம்பு என்றால் இருந்த இடத்தை விட்டு செல்லாதவர்கள்)
ஸ்ரீ பெரியவா உடனே என்ன வாழும் பாம்பா? என்றார். நாங்கள் அவரிடம் சொல்ல முடியுமா? அந்த பெண்களுக்கு வைத்த பெயர் என்று.
திரும்பவும் ஸ்ரீ பெரியவா என்ன வாழும் பாம்பு என்றாய் என்று கேட்டார்.
நாங்கள் ஒன்றுமில்லை, இரண்டு,மூன்று பெண்கள் வந்திருக்கிறார்கள்,என்றோம்.
“ஸ்ரீ பெரியவா, அவன் வந்திருக்கானா என்று கேட்டால் வாழும் பாம்பு என்கிறாய்” என்றார்.
‘ஆமாம், ஒரு வெளிநாட்டுக்காரன் வந்திருக்கான்’ என்றேன்.
“அவனை அழைத்து வா” என்றார்.
அவரும் வந்து ஸ்ரீ மகா பெரியவாளை நமஸ்காரம் செய்தார். பிறகு ஒரு ஓரமாக நின்று கொண்டார். சிறிது நேரத்தில்
கொஞ்சம்,கொஞ்சமாக நகர்ந்து ஸ்ரீமகா பெரியவா பக்கத்தில் வந்தார். ஸ்ரீ பெரியவாளிடம் பசும் சாணியால் செய்த ஒரு
கடத்தை வைத்தேன்(எந்த தோஷமும் அவரை அண்டாது என்று ஐதீகம்) ஆனால் ஸ்ரீ பெரியவா அதை நகர்த்திவிட்டார்.
அந்த வெள்ளக்காரர் ஸ்ரீமகாபெரியவர் பக்கத்தில் வந்துவிட்டார்.
பெரியவா, “அவரை ஒன்றும் சொல்லாதே” என்றார்.
வந்தவர் பெரியதாக ஆனந்தமாக சிரித்தார்.
நான் அவனிடம் என்ன ஆகியது (what happened to you) என்று கேட்டேன்
அவர் என்னிடம் “நீங்கள் ஒளியைப் பார்க்கவில்லையா? இயேசுவை பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.
O God,O God என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
நான் அவரிடம் “இல்லை இவர் சங்கராச்சாரியர்” என்றேன்.
ஸ்ரீ பெரியவா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு 15 நிமிடம் அப்படியே அசையாமல் இருந்தார். பிறகு அந்த
வெள்ளைக்காரரிடம் “சரி சென்று வாருங்கள்” என்றார்.
“நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன். எப்படிப் போவேன்” என்று சொன்னார்.
ஸ்ரீபெரியவா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. என்னிடம் இவரை சமாதானப்படுத்தி அனுப்பு என்றார்.
நான் ஸ்ரீபெரீயவாளின் ஒரு சால்வையும்,கொஞ்சம் பழங்களையும் அவரிடம் கொடுத்து, இதை ஸ்ரீ பெரியவா உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று கொடுத்தேன்.
ஒரு வெள்ளைக்காரனுக்கு, அவன் வணங்கும் தெய்வமாக காட்சி கொடுத்தார் ஸ்ரீபெரியவா.!
Categories: Devotee Experiences
மகாபெரியவா பதம் சரணம்.
The way of presenting the fact could be much better than this
Reblogged this on Gr8fullsoul.
I fully agree with Mr. Venkat Natarajan. Let us not make a ‘Miracle man’ out of MahaPeriava, through such stories (be them true or false). MahaPeriava tried His best to correct the way the humans and especially Brahmins lived (and live) their life. We have to follow His advice, Upadesam etc. and correct ourselves. How many of those who spin out such stories would have read Deyvathin Kural? Let each one of us try to follow His upadesam to the maximum possible extent and that in itself will be a great tribute to His memory.
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Have anyone confirmed this with Sri Balu mama?.. is this book authenticated by Sri Kamakoti mutt?.. pls avoid comparing our God and Swamijis with other religion.. have you ever seen any mosque or church having any of our Hindu God and worshipping it.. they dont.. its a henious crime both to their ideaology and ours.. again I reiterate, I feel this article as like another article which was taken off later(on remarriage approval by Mahaperiyava), are all false articles floating around to slowly inject the venom of conversion into Hindu minds by mischevious sources..
I sincerely feel Mahaswamy will not be approving of denegration of such holy mutt as Sri Kama koti mutt, which has been the refuge to Sanatana dharma..
Seeking the grace of Mahaswamy,
P. Vijay
There is no doubt in my mind that, not just this, many many more narratives floating around in blogs,forums, TV programs, upanyaasams these days are nothing more than figment of imagination of persons with vested interests. These persons are speakers, writers, Facebook authors and the like who have successfully built a fan following of their own using “Sri Mahaperiyava brand” as a launchpad for their popularity.
These persons who were nobody till few years back today are respected as great followers of Sri Mahaperiyava and I wonder why the general public tend to believe baseless fictitious stores.
Sri Mahaperiyavaa Sharanam
Great incident. God reveals himself only to sincere seekers, not necessarily to the rich and intelligent.
O..GOD, O.. GOD ! புல்லரிக்கிறது! பெரியவா is great!
Satchat bhagwan thann… no doubt … Proved yet again
Reblogged this on My blog- K. Hariharan and commented:
PERIYAVA AND HIS MIRACLES….
The incident is beautiful. But please edit out statements that denigrate women. In any case they are irrelevant to this essay. And Periyava would never make such unkind statements – he was equally compassionate to all.