Thanks Sri Narayanan mama for the article.
காஞ்சி மகா பெரியவர் தன்னை சந்திக்க வரும் குறிப்பிட்ட துறையில் சிறந்த வல்லுனர்களிடம் அவரவர் துறையில் ஏதாவது கேள்வி கேட்டு புதியதாக ஒரு தகவலையும் சொல்லுவார். அப்படி, ஒரு முறை இசை தொடர்பான சுவாரஸ்யமான தகவல் அவரிடம் இருந்து வெளிவந்தது.
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ஒரு முறை மகா பெரியவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரிடம் காம்போஜி ராகம் எப்படி வந்தது தெரியுமா என்றார். கேட்டு விட்டு அவரே சொன்னாராம்
காம்போதி என்று இப்போது சொல்கிறோமே?
ஆனால், புத்தகப் பெயர் காம்போஜிதான். காம்போஜம் என்பது கம்போடியாங்கிறது பல பேருக்கு தெரிந்திருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமா பரவியிருக்கு.
ஒரு வேளை அந்த தேசத்திலிருந்து இறக்குமதி பண்ணின ராகம்தான் என்று நினைக்காதீர்கள்.பேராசிரியர் சாம்பமூர்த்தி நாம் எதுவும் அங்கிருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்கிறார்.
பின் ஏன் காம்போஜின்னு பேரு வந்தது?
கம்போடியா மட்டும் காம்போஜம் இல்லை.இந்தியாவின் வடக்கு எல்லையை ஒட்டினாற்போலிருக்கிற ஒரு பிரதேசத்தையும் காம்போஜம்னு சொல்லியிருக்கிறார்கள். ரகுவம்சத்தில் காளிதாசர், தேசம் தேசமாக விவரிக்கிறபோது சிந்து நதியைத் தாண்டி வடக்கே இமயமலையை ஒட்டினாற்போல் உள்ள காம்போஜத்தைக் குஇப்பிட்டிருக்கிறார். விசால இந்தியாவென்று சொல்லுகிற பிரதேசத்தில் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஒரு காம்போஜம் இருக்கிறதா தெரிகிறது. அங்கே விசேஷமாக உள்ள ஒரு ராகத்திலிருந்து காம்போஜி வந்ததோ?
சௌராஷ்டிரம்,கன்னட, சிந்துபைரவி,யமுனா கல்யாணி….
இப்படி அந்த இடத்திலுள்ளவர்கள் அந்தந்த ராகத்தை மெருகேற்றியிருக்கலாமே? – பெரியவா சங்கீத சங்கரர்.
Categories: Devotee Experiences
Translation please anyone?