நினைத்துகிட்டே இருக்க தோணுதே!

Smt Lalitha Krishnamurthy, one of the major contributors in Dheivathin Kural spell-check project, has penned these wonderful lines! So many poets from this blog!!!!

W_Mambalam_Periyava_with_Padhukas(Photo Courtesy: Sri Thamizh Chelvan Sankaramani – Taken @W.Mambalam Sri Mecheri Pattu Sastrigal’s Jayanthi event). Of several vigrahams I’ve seen, this one is very close to my heart – Periyava is prathyaksham! Yes, it is a golden padhuka!!!

நினைத்துகிட்டே இருக்க தோணுதே – பெரியவாளை
நினைத்துகிட்டே இருக்க தோணுதே.

விடிகாலை முழித்திடும் போது
கைகளை பார்த்திடும் போது
காலண்டர் படித்திடும் போது -பெரியவாளை

ஸ்நானம் செய்திடும் போது
ஆடை அணியும் போது
திலகம் வைக்கும் போது  – பெரியவாளை

பூஜைக்கு அமரும் போது
விளக்கை ஏற்றிடும் போது
பூவால் அர்ச்சிக்கும் போது – பெரியவாளை

செடியில் பூ பறிக்கும் போது
காக்கைக்கு அன்னம் இடும் போது
பக்ஷிக்கு நீர் வைக்கும் போது – பெரியவாளை

உணவு சாப்பிடும் போது
ஸ்லோகம் ஜபிக்கும் போது
ஸ்ரீராமஜயம் எழுதும் போது  – பெரியவாளை

வெளியில் கிளம்பிடும் போது
பிறரிடம் பேசிடும் போது
சந்தேகம் வரும் போது – பெரியவாளை

இரவு மன்னிப்பு கேட்கும் போது
கண் மூடி தூங்கிடும் போது
தூக்கத்தில் கனா காணும் போது – பெரியவாளை

திருப்பதி மலை ஏறிடும் போது
இராமேஸ்வரம் கடல் கடக்கும் போது
காமாக்ஷி கோவில் போகும் போது – பெரியவாளை

ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா



Categories: Bookshelf

Tags: ,

10 replies

  1. athithyamdu,

    ATHI AMUDHAM.

  2. சொல்லிகிட்டே இருக்க தோணுது! குருவின் நாமம்

    சொல்லிகிட்டே இருக்க தோணுது!

    சொல்லிகிட்டே இருக்க தோணுது! நாமமதை

    சொல்ல மறந்தால் மனமும் மருகுது!

    அதிகாலை எழுந்திடும்போதும்!

    ’ஆ’வின் பாலை அருந்திடும்போதும்!

    இன்றைய நாள் தொடங்கிடும்போதும்!

    ஈசன் கோவில் சென்றிடும்போதும்! (சொல்லிகிட்டே)

    உற்றாரை பார்த்திடும்போதும்!

    ஊர் செய்தி கேட்டிடும்போதும்!

    எம் மனது சோர்ந்திடும்போதும்!

    ஏற்றம் ஏதும் வந்திடும்போதும்! (சொல்லிகிட்டே)

    ஐயமேதும் தெளிந்திடும்போதும்!

    ஒற்றுமையாய் வாழ்ந்திடும்போதும்!

    ஓம் என தியானம் செய்திடும்போதும்!

    ஒளவை சொல்வழி நடந்திடும்போதும்! (சொல்லிகிட்டே)

    அஃதே என எழுதிடும்போதும்!

    பக்தன் நானும் அழுதிடும்போதும்!

    சக்தி தர கேட்டிடும்போதும்! சரணாளே

    சரணம் என வேண்டிடும்போதும்! (சொல்லிகிட்டே)

  3. The poem tells me what all i could be doing in a day
    and when all i should be thinking of Him.
    God! Miles to go.

    love,
    chelvan

  4. jaya jaya sankara hara hara sankara

  5. True Bhakthi reflected by the lines and makes one feel that Paramacharya is everywhere.

  6. Jeya jeya shankara hara hara shankara

  7. Shankara enakkagave ingu varugirai mudiyatapothu aatkku vandu kooppottu darsanam. Enakku enna vendum. Neethan shankaraaaaa

  8. very true lines. periyava smaranam always.

  9. Think of Maha Periyava even when doing your routine chores! This nice song reflects the same spirit contained in “Paarththukkittee Irukkath Thoonuthu, PeriyavaaLaip Paarththukkittee Irukkath Thoonuthu” ! Either way, we are benefitted by Maha Periyava Association.These songs make you feel better, even temporarily. That such an Experience becomes permanent, should come through His Grace and That also will come in due course, with our continued Bhakthi to Him! Highly elevating content! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply to thamizh chelvanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading