ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே? விழுப்புரமா, ஈச்சங்குடியா ?

Thanks Sri Narayanan mama for this important article.

Eachangudi1
அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள். எனக்கு சந்தேகமாக இருக்கு. ஈச்சங்குடியில் ஸ்ரீமகாபெரியவாளின் தாத்தா இருந்தார். அம்மாவின் அப்பா. அவருக்கு இரண்டு பெண்கள். ஒரு பெண்ணுடைய பிள்ளை ஸ்ரீமகாபெரியவாளின் குரு ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் என்று பெயர். அம்மாவின் தங்கையின் பிள்ளை.

ஸ்ரீ மகாபெரியவாளின் பெயர் சுவாமிநாதன். ஸ்ரீமகாபெரியவா ஈச்சங்குடியில் பிறந்தார் என்று ஸ்ரீமகாபெரியவாளின் சகோதரர்கள் சொல்கிறார்கள். ஆனால் புத்தகங்களில் திரு சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், “தம்பி ஸ்ரீமகாபெரியவா விழுப்புரத்தில் பிறந்தார்”, என்று எழுதிவிட்டார்.

நான் (பாலு) ஸ்ரீமகாபெரியவாளிடம் இதை பற்றி கேட்டபோது ஸ்ரீமகா பெரியவர் சொன்னார்-,

“நான் பொய் சொல்லமாட்டேன் சத்தியத்திற்கு பேசுபவன். எனக்கு எங்கு பிறந்தேன் என்று தெரியாது. ஒரு தம்பி நான் விழுப்புரத்தில் பிறந்தேன் என்று ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கான்.சாம்பமூர்த்தி சாஸ்திரி. மற்றொரு தம்பி சிவன் சாஸ்திரிகள் என்பார்கள். என் தங்கை லலிதாம்மா அவர்கள் நான் இரண்டாவது குழந்தையாக இருப்பதால் ஈச்சங்குடியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். அதனால் நான் பிறந்த இடம் எனக்கு தெரியாதலால் நான் பொய் சொல்லமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

அதனால் ஸ்ரீமகாபெரியவாளுக்கு ஈச்சங்குடி,விழுப்புரம் இந்த இரண்டு இடங்களிலும் அவதார ஸ்தலம் கட்டப்பட்டுள்ளது.



Categories: Announcements

Tags:

20 replies

  1. சாட்சி பூதமாய் சரணாள் இருப்பதை!

    சற்றும் மறக்காமல் சரியான செயல்களை !

    மாட்சி குறையாமல் மனம் எனும் தராசில் இட்டு!

    மண்மீது வாழ்வதற்கு மகா பெரியவாளின் பாதுகை தொட்டு!

    வேண்டினேன் வேண்டினேன் குருவே!

    வரமதனை அருள்வீர் நீரே!

    யோகபூமி பாரதத்தில் எம்மை பிறக்க செய்து!

    ரோகமது களையும் எம் குருவே சரணாளே!

    யாகமது செய்ததில்லை உம் பாதமலர் பற்றினேன்!

    சோகமது அகற்றி பாதகம் ஏதும் வாராமல்!

    பரிவுடன் எமைக்காப்பீர் பெரியவாளே எம் குருவே!

    ஸ்ரீ சரணாளே சரணம்!

  2. Evar avdhaara purushar. Oridathil peranthu oridathil valarunthu irrukalam.. Entha manil peranthaar namai kakiraar.

  3. ஸ்ரீ மகாபெரியவா அடிபோற்றி 🙏
    ஈச்சன்குடியா ? என்பதில் ஐய்யமிருந்தாலும், அத்திருத்தலம் , மாயப்பிறப்பறுக்கும் ஈசன் குடிகொண்ட தலம் என்பதே நம் அனைவருக்கும் சிறப்பு 🙏
    விழுப்புரமா ? என்றறியாவிடினும் , நம் சஞ்சிதம் தந்த இச்சங்கடமான
    சம்சார வாழ்கையில் நாம் படும் விழுப்புண் துயர்தீர்க்கும் அருமருந்தாம் அத்தலமே என்றறிவோம் 🙏🌹

  4. அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
    தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்
    Seems to be a new book on Maha Periyava. Smt. Revathi Kumar had written two small books by Brahmasri Vedapuri SasthrigaL(Thaayumaana Mahaan) containing great Experiences with Maha Periyava. Can Sri Varahooraan Narayanan Maama give details about this book, if it had been published?
    Maha Periyava’s Birthplace whatever it is, will remain Holy! But for the sake of historical accuracy, it must be clarified.
    Hara Hara Shankara, jaya Jaya Shankara!

  5. whether paramacharya after becoming sanyasi would have told “En thangai, En Thambi” like that, ? may be the phrasing is wrong. I request to kindly check.

  6. It is only a matter of accuracy of historical interest. And it does not matter to us otherwise.
    Since, the fact has not been recorded/established from the above article, it may not be deemed important.
    If and when revealed later with authenticity, the fact will get corrected.

  7. He was born in this Bharatha Punya Boomi. He was SriKanchi Kamakoti Matathipathi. His Adhishtanam is in Kanchi. There need not be an unnecessary debate on His Place of Birth. What is most importanat is to follow His Upadesam.

  8. மேற்படி கட்டுரை சற்று எடிட் பண்ணி

    “ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?”

    (விழுப்புரமா, ஈச்சங்குடியா)

    புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

    அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

    தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

    ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும்
    சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள்.
    எனக்கு சந்தேகமாக இருக்கு.ஈச்சங்குடியில்
    ஸ்ரீமகாபெரியவாளின் தாத்தா இருந்தார்.அம்மாவின் அப்பா.
    அவருக்கு இரண்டு பெண்கள்.ஒரு பெண்ணுடைய பிள்ளை
    ஸ்ரீமகாபெரியவாளின் குரு ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் என்று பெயர்.
    அம்மாவின் தங்கையின் பிள்ளை.

    ஸ்ரீ மகாபெரியவாளின் பெயர் சுவாமிநாதன். ஸ்ரீமகாபெரியவா
    ஈச்சங்குடியில் பிறந்தார் என்று ஸ்ரீமகாபெரியவாளின்
    சகோதரர்கள் சொல்கிறார்கள்.ஆனால் புத்தகங்களில்
    திரு சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், “ஸ்ரீமகாபெரியவா
    விழுப்புரத்தில் பிறந்தார்”, என்று எழுதிவிட்டார்.

    நான் (பாலு) ஸ்ரீமகாபெரியவாளிடம் இதை பற்றி கேட்டபோது
    ஸ்ரீமகா பெரியவர் சொன்னார்-,

    “நான் பொய் சொல்லமாட்டேன் சத்தியத்திற்கு பேசுபவன்.
    எனக்கு எங்கு பிறந்தேன் என்று தெரியாது. ஒரு தம்பி
    நான் விழுப்புரத்தில் பிறந்தேன் என்று ஒரு புத்தகத்தில்
    எழுதியிருக்கான்.சாம்பமூர்த்தி சாஸ்திரி.

    மற்றொரு தம்பிசிவன் சாஸ்திரிகள் என்பார்கள்.
    என் தங்கை லலிதாம்மாஅவர்கள் நான்
    இரண்டாவது குழந்தையாக இருப்பதால்
    ஈச்சங்குடியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்
    நான் பிறந்த இடம் எனக்கு தெரியாதலால் நான் பொய்
    சொல்லமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

    அதனால் ஸ்ரீமகாபெரியவாளுக்கு ஈச்சங்குடி,விழுப்புரம்
    இந்த இரண்டு இடங்களிலும் அவதார ஸ்தலம்
    கட்டப்பட்டுள்ளது

  9. HE is ENTERNAL, so there is no question of HIS birth or end. It is only for a mortal like me. But He lives in our hearts for ever.

  10. “Ella Porulilum, Ella idathilum, Ellamai Ennul Iruppvane” – Unakke Unakke Namaskaram

    Nadamadum Deiyvam…

    Bagawan Sri Ramana Maharshi Born in Thiruchuzhi, grown in Maduari… We have avatharasthalam at both places – Sundara Mandiram ( Thiruchuzhi) and Ramana Mandiram (Madurai). Tiruvannamalai His abode and Brindavanam.

    Sri Paramacharya – Etchangudi-Vizhupuram-Kanchipuram (This I learnt today – Thanks for this post)

    Maharishi & Mahaperiyava are the same avatars of Eswara in different form.

    My namaskarams to Ananth and Balaji for their words above

  11. மஹா ஸ்வாமி ஈச்சங்குடியில் பிறந்து இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
    பெண்கள் பிரசவத்திற்கு பிறந்தகம் செல்வது வழக்கம். அந்த காலத்தில் பிரசவ ஆஸ்பத்திரி குறைவு.
    எனவே ஈச்சங்குடி தாத்தா வீட்டில் பிறந்து இருப்பதற்கு லாஜிக்கலாஹ ஏற்றுக் கொள்ளலாம்!!!.

  12. அவர் எங்கு பிறந்தால் என்ன? அவரின் வருகையே இந்த பாரத தேசம் செய்த புண்யமல்லவா?

  13. Bhagawan does not have a birth 🙂

    Sir Maha Periyava Thriuvadigaley Saranam Saranam!

Leave a Reply

%d