பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது – Lyrics

Thanks to Sri Varagooran Mama for the lyrics. I will soon write a special post about Sri Varagooran Narayanan mama for his selfless contribution to the world of Mahaperiyava.

Periyava_with_Balu_mama
பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பெரியவாளை
பார்த்துக்கிட்டே இருக்க தோணுது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மங்கள நீராடிடும் போது மெதுவாய் மூங்கிலிலே எழுந்திடும் போது
மேலாடை போர்த்திடும் போது திருநீர் மேனி எல்லாம் பூசிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

அனுஷ்டானம்   துவக்கிடும் போது அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
அதிகாலை ஒரு மணி நேர ஜெபத்தில் ஆழ்ந்த அழகாய் அமர்ந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

ஜபமுடிந்து நோக்கிடும் போது கண்ணால் ஜெயம் என்று நோக்கிடும் போது
ஜகமெல்லாம் மறைந்திடும் போது அந்த சன நேர பூரிப்பின் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

தண்டம் அதை ஏந்திடும் போது அழகாய் தளிர் நடை தான் போட்டிடும் போது
தொண்டர் படை உடன் வரும் போது நாமும் திரு வீதி வலம் வரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

தரிசனம் தான் தர வரும் போது ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது
தனியாக நடந்திடும் போது முன்னால் படி என்று  ஒலி வரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மேனாவில் அமர்ந்திடும் போது பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது
மேடை மேல் ஏறிடும் பொது வந்தொர் மனமெல்லாம் களித்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மலராக குவித்துடும் போது பக்தர் கரம் சேர குவித்திடும் போது
மனமார ஏற்றிடும் போது மலரை சிரம் சேர போட்டிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பத்திரிக்கை படித்திடும் போது மூக்கு கண்ணாடி அணிந்திடும் போது
நான்கைந்து  மாற்றிடும் போது கூடை உள் எடுத்து வைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

லென்ஸ் எடுத்து படித்திடும் போது கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
புத்தகங்கள் படித்திடும் போது கீழே வைக்காமல் படித்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பிரசாதம் பல வரும் போது திருநீறு குங்குமங்கள் இட்டிடும் போது
தேங்காயை தொட்டிடும் போது கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

அருள் நமக்கு என்றிடும் போது கோயில் குடுமுழுக்கு என்று வரும் போது
அருள் மழையாய் பொழிந்திடும் போது பூர்ண பலம் குடுத்து மகிழ்ந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

புறங்கையை கட்டிடும் போது அழகாய் ஒய்யார நடை இடும் போது
வேகமுடன் நடந்திடும் போது சீடர் ஓடி உடன் வழி செய்யும்  போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பாலகுரு படித்திடும் போது அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
பெரும் குருவாய் அமர்ந்திடும் போது பரிவாய் தீக்ஷண்யம் வீற்றிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

சர்ச்சைகள் நடந்திடும் போது தானும் சந்தேஹம் கேட்டிடும்  போது
விற்பன்னர் விளக்கிடும் போது தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மெதுவாக நடந்திடும் போது கமல பதமலரை கண்டிடும் போது
பதமாக நடை இடும் போது மனதும்  இதமாக  சுகம் பெரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மனை போட்டு அமர்ந்திடும் போது முறையாய் மாத்யானம் புரிந்திடும் போது
மென்கரத்தால் ஜபித்திடும் போது இமைகள் மூடி தவம் தான்  செய்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

புசித்தே பின் வந்திடும்  போது  கயிற்று கட்டில் மேல் அமர்ந்திடும் போது
கற்கண்டை மென்றிடும் போது ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மதியத்தில் காத்திடும் போது அயரும் நேரத்தும் அருளிடும் போது
மனமார சிரித்திடும் போது வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

திருநீறு அணிந்திடும் போது மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது
முக்காலம் முடித்திடும் போது இதையே எக்காலும் புரிந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

இரவென்னும் வேளையின் போது பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது
இறக்கம் தான் ஏந்திடும் போது  இறையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

ஓய்வுக்கு அமர்ந்திடும் போது கயிற்று கட்டில் மேல் ஒய்ந்திடும் போது
ஓரிரு பேர் வந்திடும் போது அவரின் குசலம் தான் கேட்டிடும் போது  (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

விஸ்ராந்தி பொழுதெனும் போது தொண்டர் வினயதொடு இயம்பிடும் போது
குழந்தை போல் கேட்டிடும் போது அவர்கள் வேண்டலுக்கே இணங்கிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

யாரும் தான் இல்லை எனும் போது மேனா கதவை தான் மூடிடும் போது
துயில் கொண்டார் இவர் எனும் போது நாமும் தாலாட்டு இசைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது
பெரியவாளை பிரிந்து வர மனமும்  மறுக்குது

ஜெய ஜெய ஜெய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா சிவ சிவ சிவCategories: Bookshelf

Tags:

8 replies

 1. Excellent posting thank you so much!

  I am looking for an Album released 1994 (Audio tape) on the Kanakabeshekam celebration of Paramacharya! SPB sung about 7 to 8 Songs! Music was by TR Papa!! Audio tape worn out!! wonder any 1 has any digital one! It has songs like 1) Oru Puraana nilavu 2) Saivam Vaishnavam 3) Thangathanalae! etc!! Its a 15 yr hunt!!!

 2. DEVAGANAM NAAN THANIYAN ANAAN

 3. Varagooran Maama’s contribution to spreading Maha Periyava related Anubhavams and Songs are tremendous and our Namaskaarams to him! I recollect Sri. Halasya Sundaram Iyer posting this great song in Maha Periyava related sites in Facebook for the first time, when only the audio was available and the script was not available. I copied the lyrics and used to do ParayaNam thinking about Maha Periyava. One spends an entire day with Maha Periyava watching Him! What more one wants? Great song written by AgaththiyaanpaLLi Sri Kruttinamurthy, Pradosham Maama’s relative! Beautifully sung by Mahesh Vinayakram! periyava.org posted the video nicely in their site and in You tube last year and also gave a free CD as Prasadam during 2014 Vaikasi Anusham, Maha Periyava Jayanthi! The complete lyrics are given below:

  தென்னாடுடைய பெரியவா போற்றி
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  சர்வக்ஞா சர்வ வ்யாபி பெரியவா சரணம்
  மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி
  மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி
  மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி
  பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
  பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
  பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
  பெரியவாளை பிரிந்து வர மனமும் மறுக்குது
  பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  விஸ்வரூப தரிசனம் காண
  பக்தர் விடியகாலை காத்திடும் போது
  வாழ்த்தொலிகள் ஒலித்திடும் போது
  மேனா விளக்கினிலே துயில் எழும் போது
  பெரியவாளை பார்த்துக்கிட்டடே இருக்கத்தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பஞ்சாங்கம் படித்திடும் போது
  செவியில் பாங்காக கேட்டிடும் போது
  பணிவோர்கள் யார் எனும் போது
  யாதும் புரியார் போல் நடித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத்தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மங்கள நீராடிடும் போது
  மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது
  மேலாடை போர்த்திடும் போது
  திருநீறு மேனியெல்லாம் பூசிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  அனுஷ்டானம் துவக்கிடும் போது
  அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
  அதிகாலை ஒரு மணி நேர ஜபத்தில்
  ஆழ்ந்தழகாய் அமர்ந்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  ஓர் மணி தான் நிறைவுறும் போது
  மணியும் ஓசையுடன் ஒலித்திடும் போது
  ஓர் இரு கண் திறந்திடும் போது
  விந்தை யீதனையாம் வியந்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  ஜபம் முடிந்து நோக்கிடும் போது
  கண்ணால் ஜயம் உனக்கு என்றிடும் போது
  ஜகம் எல்லாம் மறந்திடும் போது
  அந்த க்ஷண நேர பூரிப்பின் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  கை தட்டி அழைத்திடும் போது
  பாலு ஸ்ரீகண்டன் உடன் வரும் போது
  வேதபுரி விரைந்திடும் போது
  மௌலி குமரேசன் குழைந்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  தண்டமதை ஏந்திடும் போது
  அழகாய் தளிர்நடை தான் போட்டிடும் போது
  தொண்டர் படை உடன் வரும் போது
  நாமும் திருவீதி வலம் வரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  தரிசனம் தான் தர வரும் போது
  ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது
  தனியாக நடந்திடும் போது
  முன்னால் படி என்று ஒளி வரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மேனாவில் அமர்ந்திடும் போது
  பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது
  மேடை மேல் ஏறிடும் போது
  வந்தோர் மனம் எல்லாம் களித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மலராகக் குவிந்திடும் போது
  பக்தர் கரம் சேர குவித்திடும் போது
  மனமார ஏற்றிடும் போது
  மலரை சிரம் சேர போட்டிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பூவினந்தான் சேர்ந்திடும் போது
  கொன்றை சரமாகத் தான் வரும் போது
  தாமரையும் உடன் வரும் போது
  சிரம் மேல் சூட்டியுடன் சிரித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மல்லிகைப் பூ மலர் வரும் போது
  அல்லி மூவகையும் மலர்ந்திடும் போது
  மெய்யன்பர் கொணர்ந்திடும் போது
  ஏற்று மணம் எங்கும் பரப்பிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பழமாக குவித்திடும் போது
  அன்பர் தொழுதேற்ற தினம் வரும்போது
  பழுதில்லா மனம் எனும்போது
  பார்த்து அழகாக கரம் தொழும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  வந்தோரை விளக்கிடும்போது
  அவரின் தந்தை யார் என்றிடும் போது
  சொந்தம் கூற் எனும் போது
  அன்னார் முந்தை எல்லாம் தான் சொல்லும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மானசீக பூஜையின் போது
  கரத்தால் வந்தனைகள் புரிந்திடும் போது
  உபசாரம் பல செய்யும் போது
  மலர்கள் திருக்கரத்தால் கொட்டிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா
  பத்திரிக்கை படித்திடும் போது
  மூக்குக் கண்ணாடி அணிந்திடும் போது
  நான்கைந்து மாற்றிடும் போது
  கூடைக்குள் எடுத்து வைத்திடும்போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  லென்ஸ் எடுத்து படித்திடும் போது
  கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
  புத்தகங்கள் படித்திடும் போது
  கீழேவைக்காமல் முடித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பிரசாதம் பல வரும் போது
  திருநீற் குங்குமங்கள் இட்டிடும் போது
  தேங்காயை தொட்டிடும் போது
  கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  தீர்த்தங்கள் வந்திடும் போது
  ஹோமம் செய்வோர்கள் கொணர்ந்திடும் போது
  ரட்சைகள் உடன் வரும் போது
  நெற்றித்திலகம் என தரித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  தஞ்சமென வந்திடும் போது
  ஏழை திருமணங்கள் என வரும் போது
  அஞ்சேல் என அருளிடும் போது
  வாரி தங்கம் என வழங்கிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  அருள் எனக்கு என்றிடும் போது
  கோவில் குடமுழுக்கு என வரும்போது
  அருள் மழையாய் பொழிந்திடும்போது
  பூர்ணபலம் கொடுத்து மகிழ்ந்திடும்போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

  புறங்கையை தட்டிடும் போது
  அழகாய் ஒய்யார நடையிடும் போது
  வேகமுடன் நடந்திடும் போது
  சீடர் ஓடியுடன் வழி செய்யும்போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பாலகுரு படித்திடும் போது
  அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
  பெருங்குருவாய் அமர்ந்திடும் போது
  பரிவாய் தீஷண்யம் வீற்றிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  சர்ச்சைகள் நடந்திடும்போது
  தானும் சந்தேகம் கேட்டிடும் போது
  விற்பன்னர் விளக்கிடும் போது
  தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  வலக்கரத்தால் அருளிடும் போது
  இதமாய் இடக்கரத்தால் அருளிடும் போது
  இரு கரத்தால் அருளிடும் போது
  மேலே உயர்க்கரத்தால் அருளிடும்போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  விழியிரண்டால் நோக்கிடும் போது
  கனிவாய் மொழி சொல்லும் போல் நோக்கிடும் போது
  கருவிழியால் நோக்கிடும் போது
  கருணை மொழித் தாய்போல் நோக்கிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  அருள்நோக்காய் நோக்கிடும் போது
  மனதில் இருள்நீக்க நோக்கிடும் போது
  களி நோக்காய் நோக்கிடும் போது
  ஞான ஒளிநோக்காய் நோகிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

  மெதுவாக நடந்திடும் போது
  கமல பதமலரை கண்டிடும் போது
  பதமாக நடையிடும் போது
  மனதும் இதமாக சுகம் பெரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

  அபிஷேகம் நிறைவுறும் போது
  பூஜை ஹாரத்தி நடந்திடும் போது
  அவசரமாய் விரைந்திடும் போது
  சந்திர மௌலீஸ்வர் வலம் வரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

  குருவணக்கம் செய்ய சொல்லும் போது
  ஆதி குருபீடம் பணி செய்யும் போது
  என் முறை தான் வணங்கிடும் போது
  தோடகாஷ்டகம் தான் முடித்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  காய்கறிகள் குவித்திடும் போது
  பிக்ஷாவந்தனத்தார் கொணர்ந்திடும் போது
  ஒவ்வொன்றாய் ஆய்ந்திடும் போது
  அவற்றை தனித்தனியாய் வை எனும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  அரிசி எங்கே என்றிடும் போது
  பருப்பு வகைகள் என்றிடும் போது
  வெல்லம் எங்கே என்றிடும் போது
  தரமாய் வகைபிரித்து நகைத்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  வாழைக்காய் வைத்திடும் போது
  அவரை வெண்டைக்காய் உடன் வரும் போது
  மென்விரலால் அள்ளிடும் போது
  வந்தோர் எண்ணமெல்லாம் குளிர்ந்த்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பழவகைகள் பார்த்திடும் போது
  கீரை பசுக்களுக்கு என வரும் போது
  வேறு வகை கொண்டிடும் போது
  தானே பசுக்களுக்கு ஊட்டிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  வேழம் தான் முன்வரும் போது
  கையால் வாழைக்கனி கொடுத்திடும் போது
  உண்டாயா என்றிடும் போது
  யானை கொண்டாட்டம் கொண்டிடும் போது
  பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மனை போட்டு அமர்ந்திடும் போது
  முறையாய் மாத்யானியம் புரிந்திடும் போது
  மென்கரத்தால் ஜபித்திடும் போது
  இமைகள் மூடித் தவம் தான் செய்யும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  காட்சிக்கள் பல தரும் போது
  வந்தோர் யாவர்க்கும் விடை தரும்போது
  பிஷைக்கு இலை கொளும்போது
  தானும் பிஷைக்கு திரும்பிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பசி சேர்த்து வந்திடும் போது
  கயிற்றுக் கட்டில் மேல் அமர்ந்திடும்போது
  கற்கண்டை மென்றிடும் போது
  ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  காத்திருப்போர் நிறைந்திடும்போது
  தானும் காத்திருந்தே அகன்றிடும் போது
  குறை சொல்வோர் கேட்டிடும் போது
  மேலும் கருணை கொண்டு அருளிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மதியத்தில் காத்திடும் போது
  அயலும் நேரத்தும் அருளிடும் போது
  மனமார சிரித்திடும் போது
  வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  மாலைத்தான் வந்திடும் போது
  மீண்டும் மெய்யன்பர் சேர்ந்திடும் போது
  மெதுவாக வெளிவரும் போது
  மாலை மதியம் போல் களி தரும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  திருநீறு அணிந்திடும் போது
  மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது
  முக்காலம் முடிந்திடும் போது
  இதையே எக்காலம் புரிந்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  பிரதோஷ பூஜையின் போது
  சிரஸில் ருத்ராட்சம் தரித்திடும் போது
  மார்பெங்கும் அணிந்திடும் போது
  மாலை மலை போல மிளிர்ந்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  இரவென்னும் வேளையின் போது
  பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது
  இரக்கம் தான் மேலிடும் போது
  இதையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  ஓய்வுக்கு அமர்ந்திடும் போது
  கயிற்றுக் கட்டில் மேல் ஓய்ந்திடும் போது
  ஓரிருபேர் வந்திடும் போது
  அவரின் குசலம் தான் கேட்டிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  விஸ்ராந்தி பொழுதெனும் போது
  தொண்டர் விநயத்தோடு இயம்பிடும் போது
  குழந்தை போல் கேட்டிடும் போது
  அவரின் வேண்டலுக்கு இணங்கிடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
  மேனாவுள் அமர்ந்திடும்போது
  மீண்டும் ஓர் முறை தான் நோக்கிடும் போது
  ஓர் கதவைமூடிடும் போது
  திறந்த ஓர் கதவால் பார்த்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  யாரும் தான் இல்லை எனும் போது
  மேனா கதவைத்தான் முடிடும் போது
  துயில் கொண்டார் இவர் எனும் போது
  நாமும் தாலாட்டு இசைத்திடும் போது
  பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
  ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
  ஹர ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர
  ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
  சம்போ சங்கர சாம்பசதாசிவ
  பிரதோஷ சங்கர பிரத்யச்ய சங்கர
  ஓரிக்கை சங்கர ஓங்கார சங்கர
  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  https://www.youtube.com/watch?v=A1t5Q8mg-fQ

  Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam!

 4. simply superb!!! It is Great!!!

 5. melodious singing. kettukitte irukka thonudhu. Simply marvelous.

 6. நமஸ்காரம். அவை அடக்கத்துடன் என் பணிவான எண்ணங்களை , ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
  மகாபெரியவா மலர்த்தாள் பணிந்து சமர்பிக்கிறேன்.
  யாரையும் புண்படுத்தும் நோக்கம் இச்சிறியேனுக்கு இல்லை 🙏
  ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ப்ரவச்சனத்தில் நான் ஒரு முறை கேட்டறிந்தது –
  நமக்கு தமிழும் சமஸ்க்ரிதமும் நன்கு அக்ஷரசுத்தியா தெரியாமபோனா , நாம் பகவானிடமிருந்து தூரவிலகிடறோம் 😒
  பெரியவாள பாத்துக்கிட்டே இருக்கதோணுது பாடியவர் , ‘ பெரியவால ‘ என்று கொஞ்சம் கொச்சையாக தமிழ் உச்சரிப்பு சரி இல்லாமல் பாடி இருப்பது கேட்பதற்கு சற்று வருத்தம் தருகிறது 😔
  பெரியவாள என்று அழகாக உச்சரிதுப்பாடிருந்தால் , காதில் தேன்வந்துபாய்வதுபோல் மகிழ்ச்சியான பரவசபேருணர்வை தந்திருக்கும் 🙏🌹

  • அன்று இரவு பெரியவா முற்றத்தில் மேனாவில் அமர்ந்திருந்தார். பத்துமணி அளவில் நாங்கள் அம்மாவுடன் வந்தனம் செய்து நின்றிருந்தோம்.
   வித்யார்த்தி நாராயண ஐயரும் உடனிருந்தார்.

   அவரைப் பார்த்து பெரியவா”இவாளை உனக்குத் தெரியுமா”?
   என்றார்.

   நாராயண ஐயர்”தெரியுமே நெல்லிக்குப்பம் வைஷ்ணவ தம்பதிகள்” என்று பதில் சொன்னார்.

   ”காலையில் ஸ்னானம் செய்யும்போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும்படி அவாளிடம் சொன்னேன்.” என்றார்.

   சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு பெரியவா ஒரு ஸ்லோகம் சொல்லி நாராயணாய்யரிடம் அதற்கு அர்த்தம் கேட்டார். அவரும் அர்த்தம் சொன்னார்.

   ஸ்ரீபெரியவாள் அந்தச் சொல்லுக்கு” ப்ரம்மா என்றுகூட அர்த்தமாகிறதே! விஷ்ணுன்னுதான் சொல்லணுமா? ப்ரம்ம என்று வைச்சுண்டே அதற்கு முழு அர்த்தமும் சொல்லலாமே!இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. நீ போய் அவனுக்கு புத்தி சொல்லப் போயிட்டயோ?ஏதோ அவனுக்குத் தெரிந்ததை ஆசையாகச் சொன்னான்”

   அன்று முதம் வித்யார்த்தி நாராயண ஐயர் எங்களிடம் அதிகப் ப்ரியமாகப் பழகினார்.

   இதுவும் நெல்லிக்குப்பம் தம்பதினர் அனுபவமே! இவர்களுக்கு பெரியவாளோட பரிபூர்ண கடாக்ஷம் இருக்கு என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ! கர ஹர ஹர சங்கரா….

 7. Thanks Mahesh for sharing the lyrics:

  https://www.youtube.com/watch?v=A1t5Q8mg-fQ

  Youtube video link for the song so that we can hear the song and follow the lyrics.

Leave a Reply

%d bloggers like this: