ஸ்ரீ மஹா பெரியவாளின் அநுக்கிரஹத்தில்தான் ஞானம் கிடைக்கும்!

Thanks to Smt Vyjayanthi Chandrasekharan for the article

 

Periyava_rare_picture_Chennai-2
எவரை நாம் நேரில் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நம் மனதில் நினைவாகவும் நிழலாகவும் இருந்து கொண்டு அவரை மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு பேரானந்தத்தை அளிக்கிறாரோ அவர்தான் நம்முடைய சத்குரு.

எவரை பார்த்தாலே நம் உள்ளம் பரவசமாகி வேறு எந்த சிந்தனையுமின்றி நம்மை மகிழ்ச்சியில்
திளைக்க வைக்கின்றாரோ அவரே நம் சத்குரு. சந்நிதியின் முன்னில் வந்து சென்னியின் மேல் கை கூப்பி சங்கரா சர்வேஸ்வரா என்றே நெஞ்சம் உருகி வேண்டிடவே தஞ்சம் தந்து தாளில் சேர்த்து பஞ்சமில்லா அருளை தரும் சர்வாந்தர்யாமி நம் சத்குருவரின் அருமை பெருமைகளை சொல்லத் தரமாகுமா மனதினில் வரவேற்று மகிழ்வுடன் உபசரித்து அனுதினம் அடி பணிய அருளெல்லாம் அள்ளித் தந்து அல்லலெல்லாம் ஒழித்து அன்புடன் அரவணைக்கும் ஈஸ்வர ச்வரூபரின் நம் சத்குருவரின் அருமை பெருமைகளை சொல்லத் தரமாகுமா இவ்வுலகில் தாய் தந்தையர்கள் தந்ததையும் தாண்டி நம் வாழ்க்கையை சுகமானதாகவும் ப்ரயோஜனம் மிகுந்ததாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டியதான க்ருபையை குருவானவரே நமக்குத் தந்துவிடுகின்றார்.

குருவின் தீக்ஷை கிடைக்குமானால் தமோகுணம் நீங்கப் பெறலாம்; மனமயக்கம் அகன்று விடும் என்பதாக ஜீவன் முக்தாலஹரி கூறுகிறதாம். ஈச்வரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்? என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கமுடிவதில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்ககடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து ிடுகிறது என்றருளினார்கள் ஸ்ரீசரணாள்.

குருவின் அநுக்கிரஹத்தில்தான் ஞானம் கிடைக்கும் என்ற விஷயம் சாந்தோக்ய உபநிஷத் சொல்லியிருக்கிறது என உபன்யாஸகர்கள் மூலமாக அறிகின்றோம். இப்படியாக குருவின் பெருமைகளை யெல்லாம் அறிந்துவரும் நாம் அனைவரும் அனுதினமும் குருவை ஸ்மரணித்து அவரது ்ருபாகடாக்ஷத்த ை எக்காலமும் அனுபவிக்கும் வகையினிலே நம்மையெல்லாம் வழி நடத்துபவரும் நம் மஹாகுருவான சாக்ஷாத் பரமேஸ்வர பரமேஸ்வரி ஸ்வரூபியான ஸ்ரீமஹாஸ்வாமிகள் தாமே!

அனைவருக்கும் குருக்ருபா கிடைத்து அனைவரும் ஆனந்தமாய் வாழ்ந்து குருவை த்யானித்து
வாழவேண்டும் என்பதான ப்ரார்த்தனையை செய்வோம்.

தப::ப்ரபாவிராஜத் ஸந்நேத்ரகா நமோ நம;

தம் தபோபலத்தின் ப்ரபாவத்தால் எப்பொழுதும் ப்ரகிசிக்கும் அழகிய நயனமுடையவா்க்கு நமஸ்காரம்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஸ்ரீ மஹா பெரியவா தவ பாதம் சரணம் சரணம்!!Categories: Upanyasam

Tags:

5 replies

 1. “எவரை நாம் நேரில் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நம் மனதில் நினைவாகவும் நிழலாகவும் இருந்து கொண்டு அவரை மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு பேரானந்தத்தை அளிக்கிறாரோ அவர்தான் நம்முடைய சத்குரு. எவரை பார்த்தாலே நம் உள்ளம் பரவசமாகி வேறு எந்த சிந்தனையுமின்றி நம்மை மகிழ்ச்சியில்
  திளைக்க வைக்கின்றாரோ அவரே நம் சத்குரு. சந்நிதியின் முன்னில் வந்து சென்னியின் மேல் கை கூப்பி சங்கரா சர்வேஸ்வரா என்றே நெஞ்சம் உருகி வேண்டிடவே தஞ்சம் தந்து தாளில் சேர்த்து பஞ்சமில்லா அருளை தரும் சர்வாந்தர்யாமி நம் சத்குருவரின் அருமை பெருமைகளை சொல்லத் தரமாகுமா….”

  Superb words reflecting the feelings of every Devotee! Lot of lessons to the lawyer as mentioned in Sri. Vedanarayanan’s post. Also to all of us. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 2. In the context ..’Sri Maha Periyava Anaugrahathaal Gnanam peralaam’…I recall this anecdote. My wife Kamala and I were present during this.
  Venue Satara camp of Sri Maha Periyava…1982-83
  Sri Maha Periyava was having an interesting discussion with a Lawyer (Dont remember the name) apparently close to Matam affairs and other Dharmic related affairs.
  Sri Periyava was enquiring with keen interest…about the progress of some case which was in court without much progress. We were watchingfrom close quarters. .. Now the conversation.:__

  Lawyer.: The case is very weak for us. I am not hopeful of favourable results.
  Sri MP. You won the most difficult and complicated Chadambaram case . How you are not optimistic in this.
  Layer: That was won because of Periiyava Anugraham. ………
  Sri M.P. What made you think that …in this case, Periyava Anugraham is not there….
  Layer….ille… vandhu….
  Sri M.P. You have all my blessings. Go ahead confidently… you will succeed.
  ……after a pause……What your son is doing.?
  Law: He is in States. With Periyava Anugraham….they are fine and prosperous.
  Sri MP: What about you. ?
  Law: I am also fine,,,Good health… No wants…ellam Periyava anugraham.

  Sri M.P. Sari vere edhavadu sollanama ?
  Law: onnum ille. Periyava anugraham irukkanam eppavum.. GNANAM KEDAIKANAM.. PERIYAVA Aasirvadhikanam.
  Sri MP. aaama…. indha VAkil udyogathule onakku varumaanam eppadi ?
  Law: Onnum koraichal ille. neraya varadhu. Periyava aasirvaadham……
  Sri M.P. appadiya…santhosham….aaamaa… inda casele nee enna fees vaanre ?
  Law: Jaasthi vaangale.. summa. poga vara ….ippadi ….konjama…….
  Sri M.P. onakku thaan nerya varumaanam varadhe. Fees Vaangaame..
  vere onnum charge paNNaaame…..indha casai nadathu.
  onakku nerayya GNANAM kedaiakum……en aaseervaadamum.
  indhaa prasadam…vangiko. poytu vaaa.. Casai sariya nambikkai yoda nadathu.
  GNANAM VARUM.

  (naangal ellorum vai vittu sirichom)

 3. பற்றற்றான் பற்றை பற்றுக அப்பற்றை
  பற்றுக பற்று விடற்கு

  பற்றட்ட மஹா ஞானி மகாஸ்வாமி பற்றினை (பாதங்களை ) பற்றி கொண்டால் , அவர் அருளால் ஆசை துன்பத்திலிருந்து விடுபட்டு வீடு (மோக்ஷம் ) பெறலாம்

 4. பரமேஸ்வர பரமேஸ்வரி ஸ்வரூபி

  shree shivashivashakthi iykkya swaroopini potri potri

  om shree anusha jyothiye potri
  avathamm thiruppaadhangale potri potri

Leave a Reply

%d bloggers like this: