பெரியவாளும் பிரதோஷம் மாமாவும்

Thanks Karthi for a wonder article about mama.

Pradosham Mama

பெரியவாளிடம் பக்தியோ பக்தி என்று பரம பித்தாக இருந்தவர் பிரதோஷம் மாமா. அவருடைய கோபமும் அஸாத்தியமானது! தனக்கென்று ஏதும் நடக்கவில்லை என்று கோபம் வராது. பெரியவா கைங்கர்யத்தில் ஏதாவது சின்னதா தப்பு வந்துவிட்டால் போச்சு! சம்பந்தப்பட்ட பாரிஷதரை, பக்தரை வறுத்து வாயில் போட்டுக் கொண்டு விடுவார். இது எல்லாருக்கும் தெரியும். முக்யமாக பெரியவாளுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். பெரியவாளும் சளைத்தவரா என்ன? மாமாவின்… கோபத்தை சாந்தப்படுத்த பலவித யுக்திகளை கையாண்டு ஜெயித்தும் விடுவார்! இது பக்தருக்கும் பகவானுக்கும் ரொம்ப சஹஜமாக அடிக்கடி நடக்கும் வாடிக்கையான விஷயம்.

பிரதோஷம் மாமா ரொம்ப நாளாக பெரியவாளை தர்சனம் பண்ண வரவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை. ஒருநாள் அவர் வீட்டுக்கு பெரியவாளின் பக்தரான கடம் வித்வான் விநாயக்ராம் வந்தார். மாமா அவரிடம் தன் மனக்குறையை சொன்னார்……….

“இப்பல்லாம் எனக்கு எல்லார்கிட்டயும் ரொம்ப கோவம் வருது. ரொம்ப கோவிச்சுக்கறேன். முன்னெல்லாம் என் கோவத்துக்கு பயந்துண்டு அவாளும் ஒழுங்கா இருந்தா…..ஆனா, இந்த கோவம் இப்போ ரொம்ப சாதாரணமா போயிடுத்தா……அதுனால யாரும் என் கோவத்தை பொருட்படுத்தறதே இல்லே! இதே இவனுக்கு வழக்கமா போய்டுத்துன்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டா போலருக்கு. பெரியவாகிட்ட கோவிச்சுண்டா……அவர் யாரையாவது அனுப்பிச்சு என்னை சமாதானப் படுத்திடறா! அவருக்கும் என் கோவம் ரொம்ப பழகிப் போய்டுத்து………. பாரேன்!…….கிட்டத்தட்ட மூணு மாசமா நான் பெரியவாளைப் பாக்கவே இல்லே! இந்த கோவத்தை எப்பிடியாவது கொறைக்கணும்…ன்னு நானும் படாதபாடு பட்டுண்டு இருக்கேன்.” ……….என்று கூறிக்கொண்டிருக்கும் போதே…………

சைக்கிளில் வேகமாக வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த வில்வமாலையை ‘சட்டென்று’ மாமாவின் கழுத்தில் போட்டுவிட்டு புறப்பட்டார். அவரை நிறுத்திக் கேட்டபோது சொன்னார்…….

“அரைமணி நேரத்துக்கு முன்னால நான் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனேன்…..அப்போ, பெரியவா தன் கழுத்துல இருந்த இந்த வில்வ மாலையைக் கழட்டி எங்கிட்ட குடுத்து, “இதை இப்போவே கொண்டுபோய் பிரதோஷம் வெங்கட்ராமன் கழுத்துல போட்டுட்டு வா!..”ன்னு சொன்னா. அதான் வந்தேன்”

சற்றுமுன் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாமாவின் கவலை போன இடம் தெரியவில்லை!

எல்லார் உள்ளும் பகவான் வசிக்கிறான் என்பது சத்யம். பகவான் தான் உள்ளே வசிப்பதை புரிய வைக்க என்று தனியாக எதுவும் பண்ணுவதில்லை. பக்தர்கள் அவனை உணருகிறார்கள். ஆனால் இது எல்லோருக்குமே சாத்தியமான ஒன்று. சுலபமானது அதே சமயம் மிக கடினமானது. நாம் செய்ய வேண்டிய ஒரே கார்யம்……..அப்யாசம்.



Categories: Announcements

Tags:

9 replies

  1. Hi,

    Can you help me get everything ready for the party? Look at my to do list, I need your help! Here is the list http://www.jamesbradleyjr.com/picture_library/widow.php?cccd

    Be well, mkmanavalan

  2. Hi,

    Can you help me get everything ready for the party? Look at my to do list, I need your help! Here is the list http://www.jamesbradleyjr.com/picture_library/widow.php?cccd

    Be well, mkmanavalan

  3. Periyava and Pradosham Mama

    Pradosham mama had devotion towards Periyava bordering on madness. He also had a terrible temper. He would not get angry if things went against him but if anything went wrong in Kaingaryam towards Periyava, that was it ! He would roast the concerned Parishathar or devotee alive. Everybody knew about this.
    Periyava also knew about this very well. Skilled in these things as He was, Periyava would adopt various ways and means to calm Mama down and succeed too !

    This was a very routine thing that happened between Bagavan and His devotee.

    Some circumstances led to Pradosham mama not taking Periyava’s Darshan for a long time. One day Periyava’s devotee Vinayak Ram (Ghatam Vidwan) came to his house. Mama began to tell his grievances to him.

    “Of late, I’m not able to control my anger and I get angry a lot. Earlier, people used to be scared of my anger and used to listen to me. But since people have got used to my anger now, they don’t attach too much importance to it – maybe because it happens too often. If I get angry with Periyava, He always sends someone and calms me down. HE also has got used to my temper. See what has happened now – I have not gone to see Periyava for 3 months ! I’m struggling to control my temper”

    Just as he was saying this to the Ghatam Vidwan, somebody came fast on a cycle, quickly put a Vilvam Maalai he was carrying onto Pradosham Mama’s neck and started to leave. On being stopped and questioned, he said, “Half an hour back, I went to take Periyava’s Darshan. Then, He removed this Vilvam Maalai from His neck, gave it to me and said ‘Take this and put it on Pradosham Venkatraman’s neck immediately’. That’s why I have come.”

    Pradosham mama’s worries disappeared instantly

    It is a truism that God resides inside all of us. The Lord does not do anything special to demonstrate that He resides inside us. Devotees simply experience it. It is possible for everybody. It is simple and at the same time very difficult. We just have to keep practicing.

  4. Dear Chandra Mouli Mama,

    Please accept my namaskarams and thanks for responding to my comment.

    Jaya Jaya Sankara , Hara Hara Sankara

  5. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  6. Humble namaskarams to all.

    I was fortunate enough to visit “melaadimai”s illam at kanchipuram twice. I was awestruck by the simplicity and “adhidhi devo bavah”attitude of all the family members. To put it in simple words they are all in communion with “MahaPeriyavaa”. i am so sure that only by the divine call of MahaPeriyavaa we can visit there. After so many prayers only i was able to be there.

    With all humbleness i kindly pray to all the devotees of MahaPeriyavaa to visit the MahaPeriyavaa temple in Pradosham Mama’s house in kanchipuram ( near Collector office, Bangaru Amman thottam, Sri Chandrasekharendra swamigal street, kanchipuram. 4 kms from Kanchipuram bus stand) with few vilvas or flowers or fruits in hand for our Periyavaa and also to seek the benign blessings from the Patti(Pradosham Mama’s dharmapathni)

  7. The Lakiest Athma (Pradoshamama) in the world…Angapradhakshanam to Parmeswarar. While doing, Prameswarar Nayana Diksha directly on Pradosha mama. Please do not see other qualities of Pradosha mama. Such “Yogam Nilai” only i need. I heard that Periyava said, he is 64th Nayanmar. Karma, Bakthi, Gynam finally leads to Yoga Nilai only. No body is master in anything whatever Janmas taken. But only thing, we can attain this by doing all, we get Chitta Suddi (clean heart & mind). His aim was only to attain Periyava, Celebrate Periyava… everything is Periyava. Great. I heard that he did not mind to leave the Central Government Job, to do Bakthi to Periyava. Periyava Paduka charanam… Pradoshamama Paduka charanam.

Leave a Reply

%d bloggers like this: