Thanks to Smt Saraswathi Thyagarajan for the article.
எனக்கும் நீதிபதிகும் இருந்த நெருக்கமான நட்பைப் பார்த்து, பொறாமையால் சிலர் எங்களைப் பற்றி துஷ் ப்ரசாரம் செய்ததோடு, மேலிடத்திற்கும் கடுமையான குற்றச்ச்சாடுகளுடன் மனு கொடுத்தார்கள். அதுவும் விஜாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி எஹற்கும் கவலைப் படவில்லை. தர்மம் உண்மையானால் காப்பாற்றும் என்று கூறி, இந்த விஷயத்தை பெரியவாளிடம் சொல்லுமாறும், அது ஒன்றே போதுமானது என்றும் என்னிடம் கூறினார்.
காஞ்சிபுரம் சென்று ஸ்ரீசரணாளிடம் இது பற்றி விவரம் எல்லாம் ப்ரஸ்தாபித்தேன். சயனத்தில் இருந்தபடி
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவா , ஒன்றும் சொல்லாமல் பூஜ மண்டபத்துக்குப் போய்
ஸ்ரீசந்த்ரமௌளீச்வரர் ஸ்ரீ த்ரிபுரசுந்தரியின் பாதங்களில் பூஜை செய்த குங்குமதையும், அன்று பூஜையில்
இருந்த மகிழம்பூ மாலையையும் எடுத்து மரத் தட்டில் வைத்துக் கொண்டு ”உன்னையும் ஜட்ஜையும் ஒன்றும் செய்ய முடியாது, என்னுடைய பரமானுக்ரஹம் இருக்கிறது கவலைப்படாமல் ஊருக்குப் போ ” என்று ப்ரசாதத்தை வழங்கினார்கள்.
அந்தச் சூழ்னிலையில் உணர்ச்சி வசப்பட்டு ,”இதுவே எங்களுக்கு கவசமாக இருக்கிறது ”என்று சம்ஸ்க்ருதத்தில் உரக்கக் கத்தி விட்டேன். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீ பெரியவாள் தன் கழுத்தில் இருந்த மகிழம்பூ மாலையை எடுத்து, ” உனக்கு கவசமே போடுகிறேன்” என்று கூறி என் கழுத்தில் போட்டாதுடன் கவலை இல்லாமல் ஊருக்குப் போய் வா” என ஆசிர்வதித்தார்.
இதை நீதிபதியிடம் சென்று தெரிவித்தேன்; அவர் ”தர்மம் காப்பாற்றும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
பின் புகார் மனு மேலதிகாரிகளால் தள்ளுபடி செய்யப் பட்டது. சப்ஜட்ஜ் பதவியிலிருந்த அவருக்கு உயர்
பதவியான ஜில்லா நீதிபதியாக உயர்வும் கிடைத்தது.
அதன்பின் நீதிபதி வேத பாடசாலை, ஸ்ரௌத காலேஜ் இவற்ற்றை ஆரம்பிக்க எடுத்துக் கொண்ட முயற்சி
எழுத்தில் சொல்ல முடியாதது. பல இடையூறுகளிடையில் வெற்றிகரமாக இருவரும் சேர்ந்து அப்போதைய
ட்ரஸ்டிகளிடம் பேசி வழீக்குக் கொண்டு வந்தது ஒரு பெரிய கதை.
மருதா நல்லூரில் அந்த சமயம் பெரியவா தங்கியிருந்தபோது இது பற்றிக் கூறியபோது, அந்த டிரஸ்டிகளிடம் பேசி அவர்களை வழிக்குக் கொண்டு வந்தார்.
ஆந்த்ராவில் க்ருஷ்ணா நதிக் கரையில்முகாமிட்டிருந்த போது அர்த்தோதய புண்ய காலம் வந்தது. கும்பகோணம் வேதபாடசாலை மாணாக்கர்களும் அங்கு சென்றிருந்தார்கள். அவர்களிடம்
ஸ்ரீசரணாள் (ஒன்றும் தெரியாதவர்போல்) வேதக்கல்லூரியை ஏற்படுத்தியவர் யார்?” என்று கேட்டார் கேட்டுவிட்டு அந்த ஜட்ஜ் பெயரையும் சொல்லி ”அவர் க்ஷேமமாக இருக்கவேண்டும்” என்று சங்கல்பம் செய்து கொண்டு ஸ்னானம் செய்தாராம்.
ஒரு முறை நான் பெரியவாளைத் தனிமையில் சந்தித்த போது, நீதிபதியின் க்ஷேமத்தை விஜாரித்துவிட்டு ”அவர் ஆழ்வார், நாயன்மார் போன்றவர்” என்று விரிவாகப் போற்றிப் பேசினார்கள்.
வேதப் ப்ரசாரத்துக்காக பெரும் பணியாற்றிய அந்த உத்தமர் மாவட்ட நீதிபதி கமாலுதீன்!
இதனைப் பகிர்ந்தவர் கும்பகோணம் டாக்டர் வி.ஆர்.எல் .லக்ஷ்மிகாந்த சர்மா .எனது சிறிய தந்தை.
ஹர ஹர சங்கரா….
Categories: Devotee Experiences
Reblogged this on Gr8fullsoul.
HARA HARA SHANKARA!JAYA JAYA SHANKARA! JUDGE KAMALUTHEEN ,A BLESSED SOUL.
Sent from my iPad
>
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! The Islamic Judge Sri. Kamaluddin is a man of Godliness!
Judge ismai judge kamaluddin apart from jagan ath Mishra ouur. Super super judge oh no…..
.
What to. Call Him other than periava!!!!!!
The same judge escorted the SriMatam Srikaryam to one of their Madarsas and showed him as to how a Patashala should be run.( as seen in another article)He was responsible for standardising certain day to day working etc in the Patashala.
Jaya jaya Samkara Hara Hara Samkara