அது என்ன ..த்ரஸ்யதி?பிப்யதி என்பதுதானே வழக்கமான பாடம்?

Thanks to Smt Sarawathi Thyagarajan Mami.Periyava_giving_theertham

பஜ கோவிந்தத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது:–

யாவத்பவனோ நிவஸதி தேஹே
தாவத்ப்ருச்சதி குசலம் கேஹே|
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்ய த்ரஸ்யதி தஸ்மின் காயே||

இந்த ஸ்லோகத்தை சுஸ்வரமாகச் சொல்லி முடித்ததும், ‘எங்கே இன்னொரு தடவை சொல்லு”என்று பெரியவா
ஆக்ஞாபித்தார்கள்.

சொன்னேன்.
” அது என்ன ..த்ரஸ்யதி? பிப்யதி என்பதுதானே வழக்கமான பாடம்?”

”எங்க அப்பா இப்படித்தான் சொல்லிக் குடுத்திருக்கா”

”த்ரஸ்யதி, பிப்யதி இரண்டுக்கும் என்ன வித்யாசம்?”

உடனே மடத்திலிருந்த பண்டிதர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.ஸ்ரீ மடத்திலிருந்த பல அச்சுப் புஸ்தகங்களும்
கொண்டு வரப்பட்டன. எல்ல புஸ்தகங்களிலும் பிப்யதி என்றே போட்டிருந்தது. வித்வாங்கள் இரண்டு சொற்களிலும் தாது, அர்த்தம் என்று அலச ஆரம்பித்தார்கள்.

முடிவாக பெரியவா சொன்னார்கள்.

பிப்யதி என்றால் சாதாரணமாக ஏற்படும் அச்சம். ஆனால் ஸ்லோகத்தில் விளக்கப்பட்டிருக்கும் சூழ் நிலையில் வெறும் பயம் என்று சொல்வது ஆசாரியாள் அபிப்ராயமாக இருக்க முடியாது. என்னன்னா, ..பத்நி என்பவள் ரொம்ப காலமாக உடன் இருந்தவள். ரொம்ப நெருக்கமா, அன்யோன்யமாக இருந்தவள். பர்த்தாவுக்கு கடுமையான நோய் வந்தபோது கூட அந்த சரீரத்தைக் கண்டு பயப்பட்டவளில்லை. ஆனா இப்போ உயிர் போனதும் என்ன ஆச்சு?
பர்த்தாவின் உடம்பு மேல் ஓர் அசூயை, வெறுப்பு வந்துடறது, த்ராஸம் என்றால் வெறுப்புடன் கூடிய பயம். இதுதான் சரியாக இருக்கும்னு தோணறது. என்ன இனிமேல் பஜகோவிந்தம் அச்சுப் போடற போது பிப்யதி தலை மேல் ஒரு ஸ்டார் போட்டு foot note லே பிப்யதி என்றும் ஒரு பாடம் போடச் சொல்லு.”

வித்வான்கள் மனம் நிறைந்து திரும்பினார்கள்

தகவல்: ஸ்ரீ மடம் ப்ரும்மஸ்ரீ ராமக்ருஷ்ண தீக்ஷிதர்
கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்.

ஜய ஜய சங்கரா…

பெரியவா மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கும் விளக்கம் கொடுக்க யாரால் முடியும்?Categories: Devotee Experiences

Tags:

7 replies

  1. Probably Mahaperiava wanted the words to be brought before Him for correction and,clarifification .The new paatam also accepted which seems to be more apt than the pibyathi.
    innocuous intervention only to bring home the existence of another apt word.
    Who else can enlighten us like Maha Periava!!

  2. some how the picture of H H mahaswamigal next to lord nataraja is not appealing and the same may be avoided

  3. Pibyathhi!!!!thank god periava sonnnamathhirithan enakku 1941 lae thhiruvanakoile muthukrishna sastrigalum Subrahmanya ssrowtigalum sollikuduthuirkkirargal.

  4. Maha Periyava solves the problem very aptly. This intervention is possible only through Him, the Incarnation of Adi Sankara! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. “…என்ன இனிமேல் பஜகோவிந்தம் அச்சுப் போடற போது பிப்யதி தலை மேல் ஒரு ஸ்டார் போட்டு foot note லே பிப்யதி என்றும் ஒரு பாடம் போடச் சொல்லு.” I think there is a mistake in reproduction here. “த்ரஸ்யதி என்றும் ஒரு பாடம் போடச் சொல்லு – என்று இருக்கவேண்டும்” [Thank you Sri Ganapathi. I simply cut and pasted from your comment]

  6. //பிப்யதி என்றும் ஒரு பாடம் போடச் சொல்லு// – த்ரஸ்யதி என்றும் ஒரு பாடம் போடச் சொல்லு – என்று இருக்கவேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: