ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா திருவந்தாதி

Thanks to Sri Krishnamoorthy Balasubramanian for sharing this.

Periyava_squating_on_two_legs

அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

கணபதி உம்மையே கைதொழுது நின்றேன்
கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
கணபதி வாழ்த்தொடு இவ்வந்தாதி தொடங்கினேன்
கணபதி நீர் செய்யும் அருள்
ஞானவருளொளி எனவே ஐயனும் தோன்றினார்
ஞானவருளொளி சங்கரன் தானுமாய்
ஞானவருளொளி அம்பிகை தானுமாய்
இவ்வருளொளி உதித்தது உலகம் உய்யவே
உய்யப் பிறந்தனை நீவிர் உம்மடியாரெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் வேதனெறியெல்லாம்
உய்யப் பிறந்தனை நீவிர் அன்பும் அறமும்
உய்யப் பிறந்தனை நீவிர் தருமம் என்றுமே
என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
என்றும் இருந்திடும் உம் திரு நாமம்
என்றும் கிடைத்திடும் உம்மருட் செல்வம்
என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே
உம் திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
உம் திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே
வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
வினையே விளைத்தனன் உம்மடி சேராமல்
வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடும்
எம் அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
எம் அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
எம் அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
இப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ ?
காண்பெனோ, உம் சுடர் திருமுகத்தினை?
காண்பெனோ, உம் அருள்தரு பதத்தினை?
காண்பெனோ, உம் அபய திருக்கரத்தினை?
காண்பெனோ, உம் கருணையின் பெருக்கினை?
பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீரும்
பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
பெருக்கினை ஏக்கம் என்னுள், உம்மை நான் அடைவதற்கே
அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
அடைவதற்கென்று வீடு பேறும் தான் வந்திடாதோ?
வந்தன பக்தர் கூட்டம், உம் இடம் நாடி இங்கே
வந்தனர் தேவரெல்லாம் உம்மருள் நாடி இங்கே
வந்தனர் சிவகணங்கள் உம் ஏவல் கொள்ள இங்கே
வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே
சங்கர நாமம் உயரிய நாமம்
சகலரும் ஜெபித்திடும் சிறந்த நாமம்
மனங்களில் நின்றிடும் மகேஸ்வர நாமம்
மனத் துயர் நீக்கிடும் மங்கள நாமம்
பிணி எல்லாம் போக்கிடும் ஔஷத நாமம்
வழி தனைக் காட்டிடும் சத்குரு நாமம்
விதி எல்லாம் மாற்றிடும் ஒப்பிலா நாமம்
விக்னம் நீக்கிடும் அக்ஞானம் அழித்திடும்
என்றும் உரைத்திட எண்ணத்தில் வந்தே
எதையும் நடத்திடும் அற்புத நாமம்
அன்பரின் நெஞ்சினில் நிலைத்திருந்தே
ஆனந்தம் வாழ்வினில் தந்திடும் அருளே
இறைவனும் வாழ்த்திடும் இறையம்சம் நீயே
ஈடில்லா அமைதியை தந்திடும் தாயே
உன்னாமம் உரைத்தால் உயர்ந்திடும் வாழ்வே
ஊக்கமும் தந்து அருள்வாய் நீ குருவே
எண்ணிலா நலமே வாழ்வில் தந்திடுவாயே
ஏழை என் துணை இங்கு உனையன்றி யாரே
ஐம்புலன் அடக்கிடும் வழியதைக் கூறி
ஒவ்வாத செயல் நான் செய்வதை மாற்றி
ஒடமாம் வாழ்க்கை ஓட்டிட செய்யும்
ஔஷதம் நீயே உன் தாள் பணிந்தேனே!
தண்டம் ஏந்திய குருவின் திருவடி
அண்டம் காக்கும் அற்புத திருவடி
கண்டம் தடுக்கும் குருவின் திருவடி
பற்றிட மறைந்திடும் பாவங்கள் தானடி
மங்களம் தந்திடும் குருவின் திருவடி
மனத்தில் இருத்தி பணிவோம் மலரடி
கணத்தில் வந்து தருவான் சேவடி –
குருவாய் வந்த தாயவன் தானடி.
கூடும் அன்பிலே கும்பிட்டேன் உம்மை
நாடும் பொருள் நற்செல்வம் தருவிர்
ஆடும் பொற்திருவடி நீரருள வேண்டும்
அடியேன் உள்ளமதில் நீர் சதா உறைய வேண்டும்!
சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

Courtesy: (KANCHI ACHARYAS,Vishay Nathan,Indumathy Iyer)

Dedicated to Sri .Sri.Paramacharya 108th Peetharohana Jayanthi.Categories: Bookshelf

Tags:

8 replies

 1. Dear Mahesh,

  My name is Visvanathan. In my FaceBook page, I am known as vishy nathan. I am a Periyava devotee and I treasure this site which has brought me in touch with my Periyava again thru the experiences of devotees and articles.

  I came to know yesterday about this “kanchi periyava thiruvanthathi”. My observation is that it contains various poems penned by different people. (there are stanzas by one ‘Vishy Nathan’ and a lovely poem by Ms.Indu Iyer – I remember that beautiful poem from her FaceBook page)

  Specifically, I am referring to the following stanzas :

  கணபதி உம்மையே கைதொழுது நின்றேன்
  கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
  கணபதி வாழ்த்தொடு இவ்வந்தாதி தொடங்கினேன்
  கணபதி நீர் செய்யும் அருள்

  ஞானவருளொளி எனவே ஐயனும் தோன்றினார்
  ஞானவருளொளி சங்கரன் தானுமாய்
  ஞானவருளொளி அம்பிகை தானுமாய்
  இவ்வருளொளி உதித்தது உலகம் உய்யவே (1)

  உய்யப் பிறந்தனை நீவிர் உம்மடியாரெல்லாம்
  உய்யப் பிறந்தனை நீவிர் வேதனெறியெல்லாம்
  உய்யப் பிறந்தனை நீவிர் அன்பும் அறமும்
  உய்யப் பிறந்தனை நீவிர் தருமம் என்றுமே (2)

  என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
  என்றும் இருந்திடும் உம் திரு நாமம்
  என்றும் கிடைத்திடும் உம்மருட் செல்வம்
  என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே (3)

  உம் திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
  உம் திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
  உம் திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
  உம் திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே (4)

  வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
  வினையே விளைத்தனன் உம்மடி சேராமல்
  வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
  வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடும் (5)

  எம் அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
  எம் அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
  எம் அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
  இப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ ? (6)

  காண்பெனோ, உம் சுடர் திருமுகத்தினை?
  காண்பெனோ, உம் அருள்தரு பதத்தினை?
  காண்பெனோ, உம் அபய திருக்கரத்தினை?
  காண்பெனோ, உம் கருணையின் பெருக்கினை? (7)

  பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீரும்
  பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
  பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
  பெருக்கினை ஏக்கம் என்னுள், உம்மை நான் அடைவதற்கே (8)

  அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
  அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
  அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
  அடைவதற்கென்று வீடு பேறும் தான் வந்திடாதோ? (9)

  வந்தன பக்தர் கூட்டம், உம் இடம் நாடி இங்கே
  வந்தனர் தேவரெல்லாம் உம்மருள் நாடி இங்கே
  வந்தனர் சிவகணங்கள் உம் ஏவல் கொள்ள இங்கே
  வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே (10)

  My biggest concern with the above stanzas and they being called as ‘thiruvanthathi’ is this : it is not written by some great / divine soul (the above stanzas have been penned by yours truly in various Periyava FaceBook Group pages). The moment somebody mentions the name “anthathi”, instinctively, we think of “abirami anthathi”. But, the above stanzas are nowhere in that league. Hence, I don’t want anyone to mistake this as written by some great person and use this for their daily prayer. (also, this is not complete – it contains only the first 10 stanzas; even these stanzas seem to have been “changed / corrected” in many respects compared to their original ones by whoever posted the same in this site).

  While I pen the lines as they come to my mind, and I find that is one way that I keep praying to Periyava, that does not mean the lines penned become great! The only greatness in these lines is that they are all about Periyava. That is all there. I don’t even have the true appreciation of Tamil grammar or venba / other poetry structures of tamil; I don’t consider myself to be even a proper baktha of periyava. Far from it. May be I will become a true baktha someday if He takes pity in me…

  It might be a good idea to remove the above stanzas (personally, I think only those poems by great mahans should be appearing here on this site) – or at least caution people that these lines have not been written by any great / realised soul but rather by a soul desparately seeking periyava, by a soul which is trying to reach out to Periyava thru these lines…

  Yours truly,
  Visvanathan
  Mobile number : +91 89715 30222

  • Very deeply touched by the devotion of the author. Why this work has stopped with 10 stanzas. It is now Dhasakam! It can continue upto 100 like Abhirami Anthaathi! What is the limit to Devotion to Maha Periyava! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

   • Dear Sir,

    Thanks for your kind words.

    I have been penning the poem in some of the Facebook groups on Periyava.

    I am giving the first 65 stanzas here. Will post more once the same is completed….

    பெரியவா அந்தாதி
    இது பெரியவா என்னும் பெருங்கடலுக்கு அடியேன் சூட்ட நினைக்கும் ஒரு சிறு பாமாலை.

    கணபதி உன்னையே கைதொழுது நின்றேன்
    கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
    கணபதி வாழ்த்தொடு இவ்வுரை தொடங்கினேன்
    கணபதி நீ செய் அருள்

    அருளொளி எனவே ஐயன் தோன்றினான்
    அருளொளி சங்கரன் அவனும் தானுமாய்
    அருளொளி அம்பிகை அவளும் தானுமாய்
    அருளொளி உதித்தது உலகம் உய்யவே (1)

    உய்யப் பிறந்தனை நீ உன்னடியாரெல்லாம்
    உய்யப் பிறந்தனை நீ வேதனெறியெல்லாம்
    உய்யப் பிறந்தனை நீ அன்பும் அறமும்
    உய்யப் பிறந்தனை நீ தருமம் என்றுமே (2)

    என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
    என்றும் இருந்திடும் உன் திரு நாமம்
    என்றும் கிடைத்திடும் உன்னருட் செல்வம்
    என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே (3)

    திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
    திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
    திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
    திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே (4)

    வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
    வினையே விளைத்தனன் உன்னடி சேராமல்
    வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
    வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடப்பா (5)

    அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
    அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
    அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
    அப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ (6)

    காண்பெனோ, உன் சுடர் திருமுகத்தினை?
    காண்பெனோ, உன் அருள்தரு பதத்தினை?
    காண்பெனோ, உன் அபய திருக்கரத்தினை?
    காண்பெனோ, உன் கருணையின் பெருக்கினை? (7)

    பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீயும்
    பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
    பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
    பெருக்கினை ஏக்கம் என்னுள், உன்னை நான் அடைவதற்கே (8)

    அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
    அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
    அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
    அடைவதற்கென்று வீடு பேறும்தான் வந்திடாதோ? (9)

    வந்தன பக்தர் கூட்டம், உன் இடம் நாடி இங்கே
    வந்தனர் தேவரெல்லாம் உன்னருள் நாடி இங்கே
    வந்தனர் சிவகணங்கள் உன்னேவல் கொள்ள இங்கே
    வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே (10)

    செய்வது ஏதறியேன், சிறியேன் நன்மையொன்றும்
    செய்வது தானறியேன், பாமாலை உனக்குச் சூடச்
    செய்வதும் நீயே, பிழையெலாம் பொறுத்து அருள்
    செய்வதுன் கடனே, மற்றென்ன சொல்லுவனே (11)

    சொல்லுவன் உன் பெருமையை நித்தம் நித்தம்
    சொல்லுவன் உன் நாமம் நாவும் தழும்பேற
    சொல்லுவன் உன் அடியாரின் சிறப்பினை எந்த நாளும்
    சொல்லுவன் எந்தன் வினை முற்றுமே ஓயுமாறே (12)

    ஓயும் பழவினை நின்னாமம் சொல்லிட
    ஓயும் காலன் வேகம் உன்னடிபணிய
    ஓயும் துன்பமெல்லாம் என்னுடல் வீழ்ந்திங்கு
    ஓயும் போதும் உன்னை மறவாவரம் வேண்டுவனே (13)

    வேண்டுவது யாதுமில்லை உன்னடி சேர்தலன்றி
    வேண்டுவது யாதுமில்லை உன்னருட் பார்வையன்றி
    வேண்டுவது யாதுமில்லை உன்னடியர்களுக்கே
    வேண்டுவது ஒன்றே – என்றும் உன்னை வணங்குவதே (14)

    வணங்குதல் அன்றி வேறோர் வேலையில்லை இங்குன்னை
    வணங்கினோம் வாழ்த்தி நின்றோம் கருணையின் கடலாம் நின்னை
    வணங்கினார் தொழுது நின்றார் தேவர்கள் உன்னையிங்கு
    வணங்கினார் பிறந்திடாரே சத்தியம் சத்தியமே (15)

    சத்தியம் வந்ததிங்கு மானுட உருவெடுத்து
    சத்தியம் நடந்ததிந்த பாரதபூமி முற்றும்
    சத்தியம் செய்த கோடித் தவப் பெரும் பயனாய் வந்த
    சத்தியம் வந்து இங்கே நித்யமாய் அமர்ந்ததன்றோ! (16)

    அமர்ந்த உன் கோலம் தன்னில் அன்னை காமாக்ஷி கண்டேன்
    அமர்ந்த உன் தவக் கோலத்தில் அமைதியே பொங்கக் கண்டேன்
    அமர்ந்திருந்தளுகின்ற ஐய, நின் கோலம், அருகில்
    அமர்ந்திருந்து காணவொட்டேன் பாவியேன் பாவியேனே (17)

    பாவியேனை, கொஞ்சமும் பக்தியில்லா இக்கொடும்
    பாவியேனை, புழுவினும் கடையனாம் இவ்வெறும்
    பாவியேனை, அடைக்கலம் நீ மறுத்தால்
    பாவியேன் என்ன சொல்வேன்? என்செய்வேன் அம்மா! (18)

    அம்மாபொருளுணர்ந்த யோகிகளும் உனைக்கண்டு
    அம்மாபொருள் நீயே என்று உன்னடி பணிவார்
    அம்மாதவன் பணியும், விதிபணியும், குஹன் பணியும்
    அம்மாதொருபாகன் வந்தனனே உன்வடிவில் (19)

    வடிவம் வார்த்தையில் வடித்திடக் கூடுமோ?
    வடிவம் வடித்திட மயனாலும் ஆகுமோ?
    வடிவம், காண்பவர் மனம்போல் அமைந்திடும்
    வடிவுக்கு அரசியாய், காமாக்ஷியாய் ஒளிரும் (20)

    ஒளியே! என் நெஞ்சகத்து இருளையெல்லாம் நீக்க வந்த
    ஒளியே! ஓளியால் நிறைந்த இன்ப வெளியே! ! தன்னை
    ஒளித்து விளையாடும் சிவமே! அன்பர் மனதில்
    ஒளிரும் ஒளியே! ஆனந்தக் களியே! என் அற்புதமே! (21)

    அற்புதனே! இங்கு நீயும் மனித உடல் எடுத்துவந்த
    அற்புதமே! உன் பொற்பதமே விளைக்கும் பல
    அற்புதமே! அடியார்க்கெல்லாம் நற்பதமே தந்து நிற்கும்
    அற்புதனே! உன்னையன்றி வேறோர் தெய்வம் யாதுமுண்டோ? (22)

    யாதுமாகி நின்றாய், நீ உன் அடியார்க்கெல்லாம்
    யாதுமே இலாத இவ்வீணனை, உன்னடிசேர்த்து
    யாதுமே வேண்டாத நிலைதந்து, நீ எங்கும்
    யாதுமாகி நிற்கும் நிஜ, தரிசனமும் தந்தருள்வாய் (23)

    தந்தனை சீரடி என்றுமுன் அடியார்க்கெல்லாம்
    தந்தனை வாழ்வின் வழி, உன் குரலால், தாயுமாகித்
    தந்தையுமாய் வந்தனை, வேதபுரி சிறக்க இங்கு
    தந்தனை தன்னையே தரணியெல்லாம் மகிழவே (24)

    மகிழ்ந்தது உலகம் எல்லாம் உத்தமன் உதித்ததற்கு
    மகிழ்ந்தது வேதம், அந்த வேதியன் வந்ததற்கு
    மகிழ்ந்தனர் தேவர் இங்கு தர்மம் நீ செலுத்துதற்கு
    மகிழ்ந்தனள் காஞ்சி அன்னை, கண்மணி வரவை எண்ணி (25)
    எண்ணினார் பகவத்பாதர், மீண்டும் இவ்வுலகம் உய்ய
    எண்ணினார் பகவத்பாதர், மீண்டும் இப்புவி நடக்க
    எண்ணினார் எளிமையாக சனாதன தர்மம் சொல்ல
    எண்ணிய எண்ணம் இங்கெம் இறைவனாய்த் தோன்றிற்றன்றே (26)

    தோன்றினை, மான் மழுவும் ரிஷபமும் மதியுமின்றி
    தோன்றினை, பாம்பும் வில்லும் சூலமும் புனலுமின்றி
    தோன்றினை நஞ்சு உண்ட கண்டமும் சடையுமின்றி
    தோன்றினை தெற்கில் நீயும், கைலாயக் குளுமை விட்டே (27)

    விட்டனை வைகுண்டம்தன்னை, சேஷனை, பாற்கடலை
    விட்டனை கருடாழ்வாரை, சக்ரத்தை, கதாயுதத்தை
    விட்டனை வீட்டை, தாயை, தந்தையை, உறவையெல்லாம்
    விட்டனை குழந்தை ப்ராயம். தொட்டனை சிகரம்தன்னை (28)

    தன்னை அறிந்த தவயோக முனிவர்க்கே
    தன்னை அறிவிக்கும் தவப்பொருள் வந்திங்கு
    தன்னை இழந்து, சிவமாய் இருந்து பின்னும்,
    தன்னை இந்த தரணிக்கே கொடுத்ததுவே (29)

    கொடுத்தனை இந்தப் பிறவியை, உந்தன் மீதன்பும்
    கொடுத்தனை உன் நாமம் மறவா நெஞ்சம்
    கொடுத்தனை உந்தன் மேல் மாளாக் காதல்
    கொடுத்தனை தரிசனம் மட்டுமின்னும் கொடுத்திலையே (30)
    இலையே என்றுமுன்னைப் பணிந்தார்க்குத் துன்பம்
    இலையே உன்போலிங்கு வழிகாட்டும் ஆசான்
    இலையே உன்போல் ஓர் தெய்வம் வேறெங்கும், பின்னும்
    இலையே உன்சன்னிதியில் நானிருக்கும் யோகம் (31)

    யோகம், பெரும்பணம், பதவி கிடைப்பதன்று
    யோகம், புகழும் மற்றின்பங்களும் அன்று
    யோகம் உன்னடி மலர் தரிசனம் கிடைத்தலே
    யோகம் ஏதுமில்லேன் நானுன் தரிசனம் கண்டிலேனே (32)

    கண்டிலேன் பாத பத்மம், ஆயுளே கழிய இன்னும்
    கண்டிலேன் பரம மூர்த்தி மலர்முகம் நேரில் நானும்
    கண்டிலேன் கனவிலும் உன் அருள்மிகு தரிசனம்
    கண்டிலேன் நடமாடும் தெய்வமாய் நீயிருந்தும் (33)

    இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுன்னை
    இருந்தும் நின்னருள் என்பால் சுரக்கவில்லை, நான்
    இருந்தும் உன்னருள் இல்லாத நிலையில் இங்கு
    இருந்தும் பயன் என்ன? வாழ்ந்தும் பயனென்ன? (34)

    என்ன சொல்லி அழைப்பேன் நானுன்னை இங்கு
    என்னவென்று சொல்வேன் உந்தன் பெருமையை
    என்ன செய்து பெருவேன் உன்னருளை நானும்
    என்ன வழி ஏதென்று தெரியாத அற்பன் ஐயா! (35)

    ஐயனை, ஆரா அமுதினை, என் அப்பனை, என்
    ஐயனே என்றழைப்பார் தம்முன் தோன்றும் மெய்யனை,
    ஐயனும் அம்மையுமாய் வந்த ஐயாரனை,
    ஐயமின்றி அடிபணிந்தார் தாள் தொழுமின்களே (36)

    தொழுதுனை வாழ்த்தி வணங்குதல் அறியேன்
    தொழுதுனை நினைத்து அழுதலும் அறியேன்
    தொழுதுனை வாழ்த்தி வணங்கிடும் அடியாரைத்
    தொழுதலும் அறியேன் பாவியேன் நானே (37)

    நானே இங்குனக்கு மீளா அடிமையானேன்
    நானென் செய்யினும் கடைத்தேற்றல் உன் கடனே
    நானுன்னை நினைப்பினும் நினைவொழிந்து உன்னை
    நானே மறப்பினும் ஆண்டருள்தல் உன் கடனே (38)

    கடன்பட்டேன் நான் ரா.கணபதி அண்ணாவிற்கே
    கடன்பட்டேன் நான் என்றும் தெய்வத்தின் குரலிற்கே
    கடன்பட்டேன் நான் உந்தன் பெருமையை சொல்லும் யார்க்கும்
    கடன்பட்டேன் நான் உந்தன் அடியார் அடிமலர்க்கே (39)

    மலரடி வாழி! விரிந்த பங்கய
    மலர்முகம் வாழி! நாபி என்னும்
    மலர்மிசை வாழும் அந்தணன் தேடும்
    மலர்ப்பதம் வாழி! வாழ்க நின்னடியாரெல்லாம்! (40)

    எல்லாம் உன்னாலென்று அறியாரும் உளரோ இங்கு
    எல்லாம் நீதானென்று தெரியாரும் உளரோ?
    எல்லாமுமாய் நின்றாய், எனையும் நீ ஆட்கொண்டாய்
    எல்லாமும் உனதென்று எனை அடிமை நீ கொண்டாய் (41)

    கொண்டாயுன் அடியாரை, கொடுத்தாய் நீ தன்னையே
    கொண்டாரும் கொடுத்தாரும் ஒன்றாயிங்கானாரே
    கொண்டும் கொடுத்தும் உறவாடி நின்ற உன்னைக்
    கொண்டோம், உய்தோம், சரணம் சரணமென்றே (42)

    சரணம் சரணம் உந்தன் பொற்பதமலரடிக்கு
    சரணம் உன்மேல் தவழ் காஷாய உடைக்கு இன்னும்
    சரணம் கை கொலுவிருக்கும் தண்டமாம் செங்கோலுக்கு
    சரணம் உன் பாதம் தாங்கும் பொற்பாதுகைகளுக்கு (43)

    பாதுகை சிரம்மேற் கொண்டு பரதனும் ஆட்சி செய்தான்!
    பாதுகை ராமனேதான், பரதனும் அறிவான் இங்குன்
    பாதுகை இருக்கும் அன்பர் அகத்தில் உன் ஆட்சியேதான்
    பாதுகை கிடைக்கப் பெற்றார் உன்னையே தானும் பெற்றார்! (44)

    பெற்றோர் இலாமல் ஆதித் தென் திசை அமர்ந்தானை,
    பெற்றம் மேய்த்துண்டு கீதை பகர்ந்தானை,
    பெற்றவள் ‘சரி’ என்ன, முதலை வாய் மீண்டானை
    பெற்றோமே நாங்கள் குருவாக உன்னுருவில் (45)
    உருவாய் வந்தானை, அருவாய் நின்றானை,
    உறுதுயர் களைவோனை, வரும்பகை வெல்வோனை
    உறுவது காட்டி நல்வழி நடத்துவோனை, குரு
    உருவில் கண்டு வணங்கினோம் உனையே (46)

    உனையே அடைந்தோம் அடைக்கலம் என்றழுது
    உனையே தொழுதோம் உனக்காட்பட்டு நின்றோம்
    உனையன்றி வேறோர் தெய்வமும் யாமறியோம்
    உனக்கடிமை செய்தோமை நீ மறுத்தல் ஆகாதே (47)

    ஆகாதுனக்குக் கண் பாராதிருத்தல் உன்னடியாரை
    ஆகாதுனக்கு அடியார் குறை கேளாதிருத்தல்
    ஆகாதுனக்கு வேதம் பயில்வோர் படுதுயரம்
    ஆகாதுன் அடியார்க்கும் உன்னிடம் வாராதிருத்தலே (48)

    வாராதிருப்பாயோ உன்னடியார் முறை கேட்டும் நீ
    வாராதிருப்பாயோ உன்னாமம் சொல்லும் இடத்திலெல்லாம்
    வாராயோ தேவி பூஜை நடக்கும் அகத்திலெல்லாம்
    வாராயோ, வந்து தீராயோ, இச்சகப் பிணியையெல்லாம் (49)

    பிணி வரின், மருந்தொன்று வேண்டும் இங்குனை நினைந்து
    பிணியே போல் நானும் உருகிக் குலைவதனால் இப்
    பிணிக்கு மருந்தும் பிணியே என்றானதுவே!
    பிணியே! மருந்தே! வந்தெழுந்து அருளுகவே (50) 
    உகப்பது யாதுனக்கு? வேத நெறி ஓங்கல்
    உகப்பது யாதுனக்கு? உன் அடியாரைக் கொண்டாடல்
    உகப்பது யாதுனக்கு? தனக்கென வாழாதிருத்தல்
    உகப்பது யாதுனக்கு? எளிமையாய் வாழ்ந்திருத்தல் (51)

    வாழ்வு நீ கொடுத்தாய் எங்கள் ப்ரதோஷ மாமாவிற்கு
    வாழ்வான வாழ்வளித்தாய். நாயன்மாராக்கி வைத்தாய்
    வாழ்வான வாழ்வளிக்கும் வள்ளல் நீ இருக்க எங்கள்
    வாழ்விலோர் குறையுமுண்டோ? உன்போல தெய்வமுண்டோ? (52)

    உண்டோ தெய்வம் எனச்சிலபேர் கேட்டிடுவார்
    உண்டு தெய்வம் என்றால் அஃதிங்கே கண்டாரும்
    உண்டோ என்பார், நடமாடும் தெய்வம் நீ
    உண்டெனவே தெளிந்தபின்னர் உன்னிடமே திளைத்து நிற்பார் (53)

    நிற்பார் கைகட்டி உன்முன் தேவரும் கணங்களும்
    நிற்பர் அரியும் அயனும் உன் சன்னிதிமுன்னே
    நிற்பாய் நீயோ உந்தன் பக்தர்களின் வீட்டின் முன்னே
    நிற்பாய், செவி மடுப்பாய், புன்சிரிப்பால் குறை களைவாய்! (54)

    களைந்திடப்பா எந்தன் குறைகளை உடனே நீ
    களைந்திடப்பா எந்தன் முன்வினைக் கொடுமையெல்லாம்
    களைந்திடப்பா இந்தப் பிறவி எனும் பிணியை
    களை நீக்கி இம்மண்ணை, உன் பாத தூளியாய்க் கொள்! (55)

    கொள்வாயோ எனையும் உன் அடியார்க்கு அடியானாக?
    கொள்வாயோ என்னையும் என் பிழைகளெல்லாம் பொறுத்து?
    கொள்வாயோ என்னையும் கோபம் ஏதுமின்றி?
    கொள்வாயோ உனதடியில்? தாயே! தயாபரனே! (56)

    தயாபரனே நானுமுன் கைக் கமண்டலமாய் ஆகிடேனோ?
    தயாபரனே நீ அணியும் ருட்ராக்ஷமாகிடேனோ?
    தயாபரனே நீ தாங்கும் தண்டமாய் ஆகிடேனோ?
    தயாபரனே இவ்வுடலெரிந்துன்மேனித் திரு நீராய் ஆகிடேனோ? (57)

    ஆகிடேனோ ஒரு புழுவாய் உன்மடத்து வாய்க்காலில்
    ஆகிடேனோ ஒரு பூவாய் உன் மேனி அலங்கரிக்க
    ஆகிடேனோ ஒரு நெல்லாய் உன் பக்தன் உணவினிலே
    ஆகிடேனோ ஒரு புல்லாய் உன்னடியார் நடக்கும் வழி (58)

    வழியும் அறியாது வகையும் தெரியாது நின்றேனை
    வழி மறித்து ஒரு வகை செய்வித்து அன்பு ஊட்டி
    வழி நீயே என்றுணர்த்தி உன்னினைவு கொடுத்து
    வாழ்வித்தாய் இங்குன் தரிசனமும் தருவாயே (59)

    தருவாய் கேட்கும் வரம் நின்னடியர்க்கு கற்பகத்
    தருவாய் காமதேனுவாய், கேட்கா வரமும்கூடத்
    தருவாய் கருணைக் கடலாயிருந்து உன்பதம்
    தருவாய் உனைஎண்ணி உருகும் உன் சேயனுக்கே (60)

    சேயெனை காக்கும் என் தாயே, காமாக்ஷியே
    சேயது சிறக்கவென்று பரிந்து அனைத்தும் தந்தாய்!
    சேயுனைக் காணாமல் பதைத்தபோதும் மறைந்திருந்து
    சேயழும்போதும் அணையா நின்றாய், கல் நெஞ்சமே! (61)

    நெஞ்சிலோர் பீடமிட்டுக், கண்ணீரால் கோலமிட்டு,
    நெஞ்சக பீடந்தன்னில் என்னிறை உன்னை ஏற்றி
    நெஞ்செலாம் நெகிழ இங்கு ஊனுமே உருக நின்று
    நெஞ்சிறை உன்னை எந்தன் நெஞ்சகச் சிறை வைத்தேனே (62)

    தேனே, தெள்ளார் அமுதே என் தேவே
    தேன்மொழியாள் இடம் கொண்டு, வீணே இருன்
    தேனின் உள்ளம் கவர்ந்து, ஆட்கொண்டு அருட்
    தேனைச் சுரந்த உனையே பாடிப் பரவுவனே (63)

    பறவை விலங்கொடு மனிதராய் தேவராய்ப்
    பரவிய எம்பெருமானை தினமும் பாடிப்
    பரவி இங்குன் தொண்டர் தம்மையும் போற்றிப்
    பரவுதலன்றி வேரோர் செயலும் உளதோ? (64)

    உளனவன் உடலாய் அன்றி அடியார்கள் மனதிலெல்லாம்
    உளனவன் சர்வ வ்யாபி,சர்வேஸ்வரன் எனப்பரந்து
    உளனவன் வேத கோஷம் கேட்கும் அவ்விடத்திலெல்லாம்
    உளனவன் இன்றும் என்றும் காஞ்சி மா நகரந்தன்னில் (65)

 2. maha periyava saranam saranam. very nicely written.many thanks for forwarding it.

 3. Maha Periyava Thiruvadi Charanam!!!

 4. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
  Maha Periyava ThiruvadigaLee CharaNam!

Leave a Reply

%d