பெரியவா இதை சாப்பிடவா போகிறார்?

Thanks to Sri Varagooran mama for the article…Aradhana6_2014

சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகா பெரியவாளை தரிசனம் செய்யப்போகும் முன் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு போய்,அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ஒரு தம்பதியினர், பழக்கடைக்குப் போய், பழங்களை வாங்கினார்,கணவர். வாழைப்
பழங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தார்.

மனைவிக்கு கோபம் வந்தது.

“என்ன நீங்கள் பழங்களை இப்படி தேடித் தேடி எடுக்கிறீர்கள். பெரியவா இதை சாப்பிடவா போகிறார்?” என்று எரிந்து விழுந்தார். கணவர் அதைப் பொருட்படுத்தாமல், நல்ல கனிந்த வாழைப்பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்தார்.

அப்போது மகான் கர்நூலில் முகாமிட்டு இருந்தார். தம்பதியினர் தங்களது குழந்தையோடு மகானைத் தரிசித்து விட்டு, கொண்டு வந்திருந்த பழத்தட்டை அவர் முன் வைத்தனர்.

தட்டை தன் அருகே கொண்டு வரும்படி அடியார்களிடம் சொல்ல, அவர்களும் தம்பதியினர் கொடுத்த தட்டை பெரியவா முன் நகர்த்தி வைத்தனர்.அடுத்தபடியாக மகான் செய்த காரியம், எல்லோரையும் வாயடைக்கச் செய்தது.

வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்து உரித்தார். தான் பாதி சாப்பிட்ட பீன்னர்,மீதமிருந்ததை எதிரில் இருந்த பெண்ணிடம் கொடுத்து உண்ணச் சொன்னார்.

“பார்த்துப் பார்த்துப் பொறுக்குகிறீர்களே…..இதை பெரியவாளா சாப்பிடப் போகிறார்?” என்று கேட்ட பெண் அவர் தானே? அவர் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டதோடு அப்பெண்ணுக்கும் கொடுத்தார்.

குழந்தையின் கையிலும் பெரியவா ஒரு வாழைப் பழத்தைக் கொடுத்தார்.

அப்பெண்ணின் கண்களில் நீர் பெருக, மகானின் திருவடிமுன் விழுந்து வணங்கினார். கணவரிடம், பழவிஷயமாக தான் சொன்னது எவ்வளவு தவறான வார்த்தைகள்? அது மகானுக்குத் தெரியப் போவதில்லை என்று நினைத்தது மடத்தனமல்லவா?

சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?

 Categories: Devotee Experiences

Tags:

6 replies

 1. God knows everything.

 2. Eashwaraanugraham is essential in meeting the Avathaara purushaal and visiting Holy places. I wish everyone should go to Kanchipuram Sricharanaal Adhishtaanam with devotion & faith to be graced by Him.
  Jaya Jaya Shankara Hara Hara Shankara.

 3. Each day something or the other happens. He selects that few to happen. But what is more important is that He Plays the Part only with them who becomes due in turn. So, everyone can get his/her chance provided their FAITH in HIM is from the Heart.
  Jaya Jaya Shankara Hara Hara Shankara.

 4. English translation

  HE is omniscient. Is there anything He does not know ?

  Compilation: Ra Venkatsamy
  Typist: Varasooran Narayanan

  A couple who wanted to go and take MahaPeriyava’s Darshan went to a fruit stall with the intent of buying and presenting some fruits to Him. The husband spent a long time picking and choosing the bananas.

  This irritated the wife

  “Why are you spending so much time in selecting the bananas ? Do you think Periyava is going to eat these fruits ?” The husband just ignored her. He picked good bananas and brought them.

  Periyava was camping in Kurnool then. The couple along with their child took His Darshan and placed the fruit plate in front of Him.

  Periyava indicated that the fruit plate be placed nearer to Him. The Matham assistants there moved the fruit plate close to Him. What Periyava did next completely stunned everybody there.

  HE picked one banana and peeled it. Having eaten half, he asked the lady sitting in front of Him to eat the rest.

  She was the lady who said, “Why are you spending so much time in selecting the bananas ? Do you think Periyava is going to eat these fruits ?” Not only did He accept the Prasadam, He also gave the remnant prasad to that lady.

  Periyava also gave one banana to the child.

  Tears in her eyes, that lady fell at Periyava’s Feet. She realized how wrong were the words spoken to her husband. And how foolish she was to assume that Periyava would not come to know about it !

  HE is omniscient. There is nothing that He does not know.

 5. Shankaraaaaaaaaaa palabbishekam parka koduthu vacchirekenn

 6. Dear Sri Mahesh and Blessed Devotees,

  Thanks for sharing this… With the Brindavan in picture, one recent incident comes to my mind to say, Sri Periyava is every where and in His Brindavan too to recieve.

  During 1st Week March I was Blessed to be at Kanchi… Had 3 sets of fruits for their Holiness…

  As Sri HH Bala Periyava was in Sri Chandra Mouleeswara Pooja, I submitted the offerings at the steps…

  I was told Sri HH Pudhu Periyava was giving Darshan to go and come… By the time Sri HH Pudu Periyava went in for a while and Brindavanam door was shut little for pooja… I was standing at the entrance of Sri HH Pudu Periyava with the riped Banana (Malai Pazham) which I fondingly purcahsed for offereing with and all other flowers and fruits… Sri Sri Periyava Came out, I offered satstaga Namaskaras and Blessed to Follwo His Holiness for the Brindavan for Pooja by their Holiness to Loha Maha Guru. I was Blessed to sit in Steps. Then it happened like as follows,

  COW along With its Calf was brought to Pooja and was standing facing its face towards Sri Sri Pudhu Periyava’s place. Then, the cow stretched its neck and was asking for MALAI PAZHAM… I removed few from plate and offered to it and their Holiness was Blessing with His Smile from teh Brindavan before Pooja…

  For Me, SRI SRI MAHA PERIYAVA recieved the RIPED BANANA purchased with fondly love and care through the GO (Cow)…. Tears rolled that day and now too while writting…

  JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

  Om NAMO BAGAWATHE SRI RAMANAYAH

  Bagawan Ramana use to say, ‘Ayar, eppa, entha roopathla varuvannu theriyathu”is the words ringing in my ears.

Leave a Reply

%d bloggers like this: