பூசலார் நாயனார் மாதிரி பக்தி!

Thanks to Smt Saraswathi mami for the article.

Before anyone comments whether Sri Brahmachari could have talked like this to Periyava etc, I will tell you this – yesterday, Sri Kumar narrated me an incident on how Sri Neyveli Mahadevan used to talk with much more freedom to Periyava.

Periyava_sitting

காஞ்சியில் இருந்தபோது பெரியவா பல மாதங்கள் பேசாமல் காஷ்ட மௌனமாகவே இருந்தார்கள்.

தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு வெறும் தரிசனம் மட்டுமே கிடைத்தது. அவர் பேச்சையோ, அனுக்ரஹத்தையோ அனுபவிக்க இயலவில்லை.

அந்த சமயம் ஒரு செட்டியார் தரிசனத்துக்கு வந்தார்; பேசும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் கேள்விப்பட்டு, மனசுக்குள்ளேயே பூசலார் நாயனார்
மாதிரி பக்தியை வளர்த்துக்குக் கொண்டவர்.

‘ஆனால் பேசும் தெய்வம் இப்படி பேசாத் தெய்வமாக ஆகிவிட்டதே ! நம்மிடம் பேசாவிடாலும், மடத்துச் சிப்பந்திகளிடமோ, பெரிய வித்வாங்களிடமோ
பேசினால் அதைக் கேட்டாலே போதும், அதுவே மகிழ்ச்சியளிக்குமே” என நினைத்து வருந்தினார்.

பார்ஷதர்கள் சில முறைகளைக் கையாண்டு, அவரைப் பேசவைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதனால் எவ்வித ப்ரயோஜனமும் இல்லை.
தங்களுக்காக இல்லாவிடினும், வரும் பக்தர்களுக்காவது அவர் பேசினால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே, அதற்காகவாவது பேச வேண்டும் என ஆதங்கப்
பட்டார்கள்.

திருவேட்டீஸ்வரன் பேட்டை வெங்கடராமையர் என்பவர் சிவலொக ப்ராப்தி அடைந்தார். இந்தச் செய்தியை அவரிடம் தெரிவித்தபோதும் ஒரு சலனமுமில்லை.
வெங்கடராமையர் மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். சுத்தாத்மா. அவருக்காகவாவதுமௌனத்தைக் கலைத்து, ஏதேனும் உத்தரவு இட்டிருக்கலாம்; கை ஜாடையிலாவது ஏதேனும் சொல்லியிருக்கலாம் . ஆனால் ஒரு சலனமுமில்லை.
தொண்டர்களுக்குத் தாங்கவொணா வருத்தம்.

ப்ரஹ்மச்சாரி ராமக்ருஷ்ணன் என்பவர் ” நீங்கள் பேசாமல் இருப்பதால் பூமி ஒரு முழம் உயர்ந்துவிடப் போகிறதா என்ன? வெங்கடராமையர் காலமாகி
விட்டார், அவருக்கு குழந்தை, குட்டி கிடையாது; ஏதாவது உத்தரவிட்டால் குறைந்தா போய் விடும்? இத்தனை நாள் மௌன விரதம் இருந்தது போதுமே”
என்று பொரிந்து தள்ளிவிட்டார். (இப்படி அவரிடம் பேச எவ்வளவு ராமக்ருஷ்ணனுக்கு உரிமை இருந்திருக்க வேண்டும்? புண்ய சாலி!)

பெரியவாளின் திருமேனியில் ஓர் அசைவில்லை. அப்படிப் பேசினதற்காக அந்த ப்ரஹ்மச்சாரி நாலு தடவை நமஸ்காரம் செய்து விட்டுப் போனார்.

போனவர் ஐந்து நிமிஷத்தில் திரும்பினார்.

”பெரியவாளை தரிசிக்க ஒரு செட்டியார் வந்திருக்கார்……குரலைக் கேட்க தபஸ் இருக்கார்….”

உடனே பெரியவாளின் அசைவற்ற உடலிலிருந்து முகத்தில் புன்னகை! அத்திபூத்தாற்போல்! ப்ரஹ்மச்சாரிக்கு உடம்பு வியர்த்துவிட்டது; இப்படி பெரியவா புன்னகை செய்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன!…

பெரியவா ஜாடை காட்டி, செட்டியாரை அருகில் அழைத்தார்கள்; உட்காரச் சொன்னார்கள், ஜாடை காட்டி. பக்கத்திலிருந்த தட்டிலிருந்து ஒரு மாம்பழத்தைக் கையில் எடுத்து மார்புக்கு நேரே வைத்துக் கொண்டு ,பிறகு செட்டியாரிடம்
கொடுக்கும்படி ஜாடையில் சீடரிடம் சொன்னார்.

காஷ்டமௌன காலத்தில் இவ்வாறு செய்யமாட்டார்கள்.

ஆனால் ஒரு பக்தனின் தவம் தன்னை தரிசனம் செய்ய என்றால் அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டாமா? தன் விரதம் பங்கப் பட்டாலும், பக்தனை ஏமாற்றம்
அடையச் செய்யக்கூடாதே?

செட்டியார் ”இது போதும்.. இதுபோதும்.. என்று சொல்லி கைலாசபதியின் தரிசனம் கண்டாற்போல் இருக்கிறது, இது ..இந்த ஜன்மாவுக்குப் போதும்” என்று பரமானந்த
பரவசத்துடன் சென்றார்.

ப்ரமச்சாரிக்கு அக்ஞானம் விலகிற்றோ என்னவோ, நமக்கு ஞானம் … பழமாகத்தான்..கிடைக்கும் என்று புரிகிறது!

ஜய ஜய சங்கரா..



Categories: Devotee Experiences

5 replies

  1. There was a post on Sishya Sweekaranam which is now missing. Have not read completely. where to find this post?

  2. A SMALL CORRECTION PLEASE. IT IS NOT NEYVELI MAHADEVAN, BUT NEYVELI M A H A L I N G A M, WHO USED TO TAKE LIBERTIES WITH SRI MAHAPERIYAVA.
    Source: Sri Kothandarama Sarma’s Book.

    • Yes RS RAVICHANDRAN Me too go with you! It is Mahadevan and not Mahalingam who used to talk freely with Periyava as a family member. Once brought a bed too for Periyava that Periyava declined with affectionate words and offered that bed to some deserving soul! Mr. Mahdevan never consider Him as a family member only!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading