பத்ரம், பலம், தோயம்…புது விளக்கம்….

Thanks to Smt Saraswathi mami for the article.

Mahaperiyava_Puja_with_periyavas_samaram

 

 

பெரியவா கர் நாடகாவில் மீரஜ் என்ற ஊரில் தங்கி, அங்கிருந்து சதாரா நோக்கி யாத்திரை சென்றார்கள்.

அந்த யாத்திரையில் பஹிர்வாடி என்ற ஊரில் கோசாலையில் அவர் தங்கியிருக்கும்போது, நானும் சேர்ந்து சதா வரை சென்றேன். நடுவில் கராடு என்ற ஊர். இரவு வேளை க்ருஷ்ணமாயீ மந்திர் என்ற கோவில் போய்ச் சேர்ந்தார்கள். கராடு என்ற நதி க்ருஷ்ணா நதியுடனும், மற்றொரு நதியுடனும் சங்கமிக்கிறது. அங்கேயுள்ளவர்கள் அதை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள் அந்தக் கரையில்தான் கோவில் இருக்கிறது. விடியற்காலையில் சங்கம ஸ்னானம் செய்து, அம்மன் கஒவிலில் வந்து அமர்ந்தார்கள். பக்தர்கள் புஷ்பம், வில்வம், துளஸி, பழம் போன்ற பூஜா த்ரவியங்களை அவருக்கு சமர்ப்பித்துவிட்டு தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.

பெரியவா தன் முன்னே இருந்த வில்வம், துளஸி, வாழைப்பூ, மாம்பழம்,வாழைப் பழம் ,இளனீர், இவற்றை வரிசையாக எடுத்து வைத்தார்கள்.

பகவான் கீதையில்

பத்ரம், புஷ்பம், பலம்,தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி|
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன: ||

என்று சொல்கிறார் அச்நாமி என்றால் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம். பூஜை செய்யும் பத்ரத்தை யாராவது சாப்பிடுவாளா? ஆனால் வில்வம் துளஸி இரண்டையும் சாப்பிடலாம். அவை மருந்தாகவும் பயன்படுகிறது. புஷ்பங்களில் கதலீ புஷ்பம் வாழைப்பூ ஒன்றுதான் சாப்பிடவும் பயன்படும். பழங்கள் எல்லாவற்றையும் சாப்பிடுகிறோம். தோயம் என்றால் நீர்; இளநீர்தான் மிக சுத்தமானது, கை கால் படாத ஒன்று;மதுரமானது;

இவற்றையெல்லாம் பக்தர்கள் சிரத்தையாகக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இவற்றைப் பார்த்தவுடன் கீதையின் ஸ்லோகம் ஞாபகம் வந்தது. இவைகளைத்தான் பகவான் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார் என்று தோன்றியது என்றார்கள்.

கீதையின் ஒரு ஸ்லோகத்துக்கு இப்படிப்பட்ட விளக்கத்தை பெரியவாளைத்தவிர யாரால் கொடுக்கமுடியும்?

இப்படியாக கோதண்டராம சர்மாவின் அனுபவ தரிசனங்கள் நான்காம் தொகுதியில் சென்னை தில்லைனாதன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.



Categories: Upanyasam

3 replies

  1. I have earlier heard an explanation for THOYAM that if one sheds a drop of TEAR from EYES that he is not even in a position to offer PATRAM OR PUSHPAM OR PHALAM either because of his financial situation or at a remote place where none is available. This one about tender coconut is an entirely different one and SUPERB
    TRC

Leave a Reply

%d