ஸௌந்தர்யலஹரி சொல்லச் சொல்

Thanks Saraswathi mami for this article. Thanks to Krishna for   the translation.

Periyava_chandramouliswarar_puja_color

பெரியவா ஒரு முறை சென்னையை அடுத்த வானகரம் என்ற இடத்தில் சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். நான் தினந்தோறும் வில்லிவாக்கத்திலிருந்து போய் தரிசனம் செய்வது வழக்கம்.

ஒரு நாள் மாலை வேளை பெரியவாள் சன்னிதியில் தள்ளி நின்று ஒரு பெண் ஸ்தோத்ரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பெரியவா என்னைக் கூப்பிட்டு, ”அந்தப் எண் யாத்ரா ப்ரபந்தம் (ச்யாமளா தண்டகம்போல) சொல்லிக் கொண்டிருக்காளா கேளு” என்றார்.

நான் போய்க் கேட்டபோது அந்தப் பெண்ணும் ஆமாம் என்றாள்.

உடனே பெரியவா அந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி முடித்ததும், ”ஸ்வாமி சன்னிதிக்குப் போய் அங்கு ஸௌந்தர்யலஹரி சொல்லச் சொல் என்றார்கள். அவளும் அப்படியே செய்தாள். 

மாலை ஆறு மணிக்கு மேல் பெரியவா பூஜைக்கு வந்தார்கள்.

பூஜை ஆரம்பிக்கு முன்பே அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு”யரோடு வந்திருக்கிறாய்” என்று விசாரித்தார்.

”பக்கத்து வீட்டார்களோடு வந்தேன்”

”இப்போது அவர்கள் இருக்கிறார்களா?”

”நாழியாகிவிட்டது என்று அவர்கள் போய் விட்டார்கள்”

அதைக் கேட்டுவிட்டு பூஜைக்கு நேரமானதால் பொஜை செய்யச் சென்று விட்டார்கள். பூஜை முடிந்ததும், எல்லாருக்கும் தரிசனம் கொடுக்கும்போது,

அந்தப் பெண்ணை அழைத்து, ”நாற்பத்தைந்து நாளைக்கு துளஸிமாடத்துக்கு நெய் விளக்கேற்றி, ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு வா” என்று உத்தரவிட்டார்கள்.

பிறகு அங்கு தரிசனத்துக்கு வந்திருந்த கன்னிவாடி ஜமீந்தாரிடம் ”இந்தப் பெண்ணை அவர்கள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு விட்டு விடு” என்றார்கள். அவரும் அப்படியே செய்தார்.

ஒன்றரை மாசம் கழித்து ஒரு நாள் அந்தப் பெண் கணவருடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ”இதே மாமாதான் ” என்று தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவள் வேண்டுகோளுக்கு ஏற்ப நான் அன்று நடந்ததை அவள் கணவரிடம் எடுத்துச் சொன்னேன்.

கடைசியில் அந்தப் பெண்(அப்போது 25 வயதுதான் இருக்கும்) சொன்னாள் ” நாங்கள் இத்தனை நாள் பிரிந்து இருந்தோம். எனக்கும் நல்ல காலம் பிறக்குமா என்று ஏங்கித்தான் பெரியவா தரிசனத்துக்கு வந்தேன்; அவர் அனுக்ரஹந்தான் இன்றைக்கு அவருடன் சேர்ந்து வந்திருக்கிறேன் ” என உருக்கத்தோடு சொன்னாள்.

இரண்டு குழந்தைகளோடு தற்போது ஸௌக்யமாக இருப்பதாகக் கேள்வி.

இதனை தில்லை நாதன் என்பவர், சென்னையைச் சேர்ந்தவர் ‘தரிசன அனுபவங்கள் நாலாம் தொகுதியில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜய ஜய சங்கரா….

Once, Periyava was observing Chaaturmaasyam at a place called Vaanagaram near Chennai. I used to go there daily from Villivakkam and take His Darshan

One day, a lady was standing a little away from Periyava Sannithi and chanting some shlokam

Periyava called me and said, “Ask that lady if she is chanting ‘Yaathra Prabandham’ (like Shyamala Dhandakam)”

When I went and asked, that lady said yes.

Immediately Periyava said, “Once she is done chanting that shlokam, ask her to go to Swami Sannithi and recite Soundarya Lahiri”. That lady followed instructions.

Periyava came for Pujai after 6 in the evening.

Before starting with the Puja, Periyava called that lady and asked her, “With whom have you come ?”

“I have come with my neighbours”

“Are they here now ?”

“They left because it is getting late”

After this discussion, since it was getting late for His Puja, He proceeded for His Puja.

After the Puja, when He was giving Darshan, He called that lady and ordered, “For 45 days, you should light ghee lamps to ‘Tulsi Madam’ and do PradakshaNam”

Later, He asked the Kannivadi Zamindar who had come for Darshan, “Escort this lady to her house and drop her there safely”. The order was carried out.

About after 45 days, that lady came again, this time with her husband. On seeing me, she said to her husband, “This is the man I was telling you about” and introduced me to her husband. On her request, I explained all that had happened last time.

Eventually, that lady said tearfully (she must have been around 25 years old), “All these days, me and my husband were separated. I came to take Periyava’s Darshan in quest of better times. It is purely due to His grace that we have come together today”

I hear she is living happily with two kids now.

Chennai based Thillai Nathan has shared this experience in the 4th chapter of ‘Darisana AnubavangaL’



Categories: Devotee Experiences

Tags:

13 replies

  1. hara hara shankara jeya jeya shankara

  2. MahaPeriyava Charanam Saranam

    It also happend in my mother’s life, when mother was not with my father for 8 years. My mother went asked Periyava and He said it will be all right you will be with my father soon. Accordingly, my mother went back to my father and then I came into this world.

  3. English translation

    Soundarya Lahiri cholla chollu

    Once, Periyava was observing Chaaturmaasyam at a place called Vaanagaram near Chennai. I used to go there daily from Villivakkam and take His Darshan

    One day, a lady was standing a little away from Periyava Sannithi and chanting some shlokam

    Periyava called me and said, “Ask that lady if she is chanting ‘Yaathra Prabandham’ (like Shyamala Dhandakam)”

    When I went and asked, that lady said yes.

    Immediately Periyava said, “Once she is done chanting that shlokam, ask her to go to Swami Sannithi and recite Soundarya Lahiri”. That lady followed instructions.

    Periyava came for Pujai after 6 in the evening.

    Before starting with the Puja, Periyava called that lady and asked her, “With whom have you come ?”

    “I have come with my neighbours”

    “Are they here now ?”

    “They left because it is getting late”

    After this discussion, since it was getting late for His Puja, He proceeded for His Puja.

    After the Puja, when He was giving Darshan, He called that lady and ordered, “For 45 days, you should light ghee lamps to ‘Tulsi Madam’ and do PradakshaNam”

    Later, He asked the Kannivadi Zamindar who had come for Darshan, “Escort this lady to her house and drop her there safely”. The order was carried out.

    About after 45 days, that lady came again, this time with her husband. On seeing me, she said to her husband, “This is the man I was telling you about” and introduced me to her husband. On her request, I explained all that had happened last time.

    Eventually, that lady said tearfully (she must have been around 25 years old), “All these days, me and my husband were separated. I came to take Periyava’s Darshan in quest of better times. It is purely due to His grace that we have come together today”

    I hear she is living happily with two kids now.

    Chennai based Thillai Nathan has shared this experience in the 4th chapter of ‘Darisana AnubavangaL’

    Jaya Jaya Shankara

  4. Dear Sir,
    I just read in your blog long time back , where Periyava has given to his devotee a Sloka for vision. If you have the link, could you kindly share it. I am having a severe eye pressure and looking for this sloka for a long time.

    God bless.,

    • SUNDARAR THEVARAM AS BELOW:

      ஆலந்தான் உகந்து அமுது செயதானை
      ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
      சீலந்தான் பெரிதும் உடையானைச்
      சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
      ஏலவார் குழலாள் உமைநங்கை
      என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
      காலகாலனைக் கம்பன் எம்மானைக்
      காணக்கண் அடியேன் பெற்றவாரே”

      பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
      பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
      கற்ற வர்பர வப்படு வானைக்
      காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
      கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
      குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
      நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
      நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

      Also, SAUNDARYALAHARI Stotram 52 (Gathe Karnaapyarnam…)

      • @krishvidhya2000
        God Bless You., You helped me a lot.
        Thanks a lot. Using the first line of Slokam, came with a story of periyava.
        ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய்
        விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை
        கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.

        பேச்சின் இடையில் “பெற்றம்” என்றால் என்ன? என்று பெரியவா
        கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் “கால் நடைகள்”
        என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட” பெற்றம்
        மேய்த்துண்ணும் குலம்” என்று வந்திருக்கிறதே என்று
        தான் சொன்னதை நிறுவினார்.

        இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார்.
        பெரியவா. ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப்
        பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர். அவர் அது சரி எந்த இடத்தில்
        எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை
        நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும்
        சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக
        எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்-
        அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச்
        செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி
        விடுகிறாள்.சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே!
        பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு
        சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார்.
        நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து
        கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே
        மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக்
        காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல்
        ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.

        அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து
        “சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு”
        என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு
        சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த
        மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி,
        இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத்
        தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
        சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர்
        தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார்.
        திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும்
        பார்வை இழந்தன.

        சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும்
        சமம்தான்!” தண்டித்தாலும் நீயே கதி!” என்று சிவனைப் போற்றி
        சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.

        இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,
        “இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்” என்று
        முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக்
        கூடியவர் பெரியவா.

        ஆலந்தான் உகந்து அமுது செயதானை
        ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
        சீலந்தான் பெரிதும் உடையானைச்
        சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
        ஏலவார் குழலாள் உமைநங்கை
        என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
        காலகாலனைக் கம்பன் எம்மானைக்
        காணக்கண் அடியேன் பெற்றவாரே”

        என்ற அந்த தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும்
        பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச்
        செய்தார்.

        ஏதோ, “பெற்றம்” என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல்
        பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி
        பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி
        வழிகாட்டிய அனுக்கிரகம் இது.

        சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி
        மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
        இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற
        ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
        https://groups.google.com/forum/#!topic/sathvishayam/FSuMESvoZPU

  5. Jaya jaya shankara! Of late I’ve been wanting to chant Lalitha Sahasranamam, but some say one needs initiation, while others say it’s ok to chant. Can someone advise please? Appreciate it. Thanks.

    • திருவாரூர், குடவாசல் வட்டத்தில் உள்ளது “கண்கொடுத்த வனிதம்’ என்ற ஊர்! இங்கு அருள்மிகு தேவநாயகி சமேத அருள்மிகு நயனவரதேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

      திருவாரூரிலிருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தாயார் அவதரித்த கமலாபுரம் வழியாக கொரடாச்சேரி செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் இயற்கைச் சூழலில் உள்ளது இந்த திருக்கோயில்.

      கண்பார்வையற்ற ஒரு பெண் குழந்தையின் தாயின் எல்லையில்லா பக்திக்கு மனமிரங்கிய இறைவன், அப்பெண் குழந்தைக்கு கண்பார்வை அருளியதாக தலவரலாறு தெரிவிக்கிறது. இங்கு இறைவன், கண்ணொளி வழங்கும் வள்ளலாக, நயனவரதேசுவரர் எனச் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.

      கண்நோய் உள்ளவர்கள், இக்கோயிலில் தொடர்ந்து பதினாறு வாரம் வழிபட, கண்நோய் அகன்று குணமடைகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் “பிள்ளை கனியமுது’ என்னும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கண்பார்வை குறை போக்கும் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 03.04.2015 அன்று வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் இவ்வைபவத்தில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.

      தொடர்புக்கு: 99620 04544.

  6. ‘Kangal Panikkindrana’

    Jaya Jaya Shankara, Kripanidhe!!

  7. Shankaraaaaaaa photokooda venndaam enru Adam hublil paper la photos vvandappo advertisementaa endru oru pokkavoi siruppu appa. Ennappaaaa..

Leave a Reply

%d bloggers like this: