Mahashivarathiri Special Drawing by Sri BN

An oil painting of Chidambaram Gopuram, Natarajar and Periyava – all beautifully done! Also mama has typed a beautiful incident from Shri Ra Ganapathi’s book as a way to remember anna on his siddhi day…Thanks mama….

Chidambaram_Natarajar_Periyava_Painting_BN

 

 

(For all devotees, who have been waiting to have an all-encompassing Chidambaram picture for your puja room – this is it! – print it ; frame it!)

During  a  discussion  between  MahaPeriava,  Ra.Ganapathy  Anna  and  another  devotee  on  the  subject  of  an  article  titled  “Sankarar  Endra  Sangeetham”  written  by  Ra.Ga.  Annaa  for  a  souveneer,  MahaPeriava  talks  to  the  devotee  which  I  am  quoting  below :

அவரிடம்,  “இவரைப்  பத்தி  எனக்கு  என்ன  ஸந்தோஷம்னா…………  இந்த  நாள்ல  எழுத்தாளர்னு  இருக்கறவாள்ல  முக்காலே  மூணு  வீசம்  பேரு  நவீனக்  கொள்கைக்காராளாதான்  இருக்கா.  அவா  எழுதறதுலேயும்  அதையேதான்  நன்னா  ஸ்ட்ரெஸ்  பண்ணி  எழுதறா.  ‘புரட்சி’ன்னு  லோகமும்  கொண்டாடிண்டு  அவா  பின்னாடி  போறது.  இவர்  —-   எள  வயஸு;  படிச்சதோ  லிட்ரேசர்  [  அந்நாளில்  ஆங்கில  இலக்கியத்தைத்தான்  லிட்ரேசர்  என்றே  சொல்வது ].  —  ஆனாலும்  ‘சட்’னு  சாஸ்த்ர  தர்மங்கள் —  லாம்  தெரிஞ்சுண்டு,  அந்த  வழியை  விட்டுப்  போகாம  தானும்  அபிமானிச்சுண்டு,  எழுதறச்சேயும்  அதையே  ஸ்ட்ரெஸ்  பண்ணிண்டு,  நவீனக்காரா  தப்பாப்  புரிஞ்சுண்டிருக்கற  ஸமாசாரங்கள்  அநேகம்  ‘அப்படியில்லை’ன்னு  அங்கங்கே  ‘க்ளாரிஃபை’  பண்ணி  எழுதறார்.  இதுக்கெல்லாம்  ஏதோ  அனுக்ரஹம்  இவருக்கு  இருக்கு………’நவீனக்கருத்து’—ன்னு  லோகம்  பூரா  பரவியிருக்கறதுக்கு  வேறேயா  இவர்  சொல்லிண்டு  போனாலும்,  அதுக்காக  யார்  கிட்டயும்  சண்டையாவும்  போகலை.  இப்பப்  பெரிய  மெஜாரிடியாயிருக்கற  மத்த  எழுத்தாளர்கள்  போற  கரென்டுக்கு  மாறா  இவர்,  இவர்  மாதிரி  இன்னும்  பொறுக்கி  யெடுத்தாப்பல  செல  பேர்,  போயிண்டிருக்கறதுதான்  எங்களுக்கெல்லாம்  கொஞ்சம்  ஆறுதலாயிருக்கு.  ஏன்னா,  ‘எழுத்துலகம்’ —  கிறதுக்கு  இன்னிக்கு  அவ்வளோ   ‘இன்ஃப்ளூயென்ஸ்’  இருக்கு.

இன்னூரு  விஷயம்  —-  சாஸ்த்ரஜ்ஞாள்னே   இருக்கப்  பட்டவாள்  –லயும்  செல  பேர்  இப்பவும்  சாஸ்த்ர  சம்பிரதாய  விஷயமா  எழுதிண்டு  பத்ரிகை  நடத்திண்டு,  பொஸ்தகம்  போட்டுண்டு –ல்லாமும்  இருக்கத்தான்  செய்யறா.  ஆனா  அவாளுக்கு  ஜனகார்ஷணம்   பண்ணும்படியான  ஸ்டைல்  இல்லாததனாலே,  அவா  பண்றதுக்கு  ரிஸப்ஷன்  இல்லாம  அவா  வருத்தப்பட்டுண்டு,  நஷ்டப்பட்டுண்டு  இருக்கும்படி  இருக்கு.  இவருக்கு  அந்த  ஆகர்ஷண  ஸ்டைலும்  இருக்கு.  அதனால்   ரொம்பப்பேர்  ஆர்வமா  படிக்கறா.  புரட்சி  எழுத்தாளர்கள்  பின்னாடியே  போயிண்டிருந்தவாள்ள   கொஞ்சம்  பேராவது  அதனால்  எங்க  பின்னாடி  வர  ஆரம்பிச்சிருக்கா.  அவாள்ள  செல  பேர்  எங்கிட்டவே  அப்டி  சொல்லியிருக்கா……”

எளிதில்  உவப்புற்றுவிடும்  ‘ஆசுதோஷி’யான  பெரியவாள்  சொல்லிக்கொண்டே  போனார்.

அவருடைய  வாக் –அம்ருதத்தில்  ஒரு  சொட்டும்  இழந்து  விடக்கூடாது  என்று  காது  கொடுத்துக்கொண்டேதான்  போனேனென்றாலும்  இடையே  அவர்  கூறிய  ஒன்றே  உள்  மனத்தில்  சுழன்று  சுழன்று  வந்தது.  நவீனக்  கொள்கையாளர்களிடையில்  நான்  சாஸ்த்ராபிமானத்துடன்  இருந்து  கொண்டு,  என்னளவில்  அப்படி  இருப்பதுடன்  என்  எழுத்துப்  பணியால்  நவீனர்களுக்கும்  பல  விஷயங்கள்  ‘க்ளாரிஃபை’  செய்வதாகச்  சொல்லி  எனக்கு  இதற்கெல்லாம்  ‘ஏதோ  அனுக்ரஹம்’  இருக்கிறது  என்றாரே,  அதுதான் !.

‘ஏதோ’வாவது  ‘ஏதோ’ ?  சாக்ஷாத்  இதோ  உட்கார்ந்து  கொண்டிருக்கும்  இவரொருத்தருடையதேயான  அனுக்ரஹம்  அல்லவா  அது ?  பொதுவாக  இன்றைய  உலகிலுள்ள   நவீனர்களை  விடவும்  நவீனனாக,  இவரையே  அறிவுக்குப்  பொருந்தாத  அழிவு  வழியில்  அழைத்துச்  செல்பவர்  என்று  வெறுத்த  தீவிர  நவீனனாக,  வீணனாக  அல்லவோ  இந்த  அற்ப  ஜீவன்  ஒரு  காலத்தில்  இருந்தேன் ?

தவற்றைக்  காட்டிக்  கொடுக்காமல்,  சிறிதளவு  நல்லதையும்  பெரிதாக  மதித்து   வெளியிடும்  அவரது  உயர்  பண்பை  என்  சொல்ல ?  நிகழ்  நூற்றாண்டின்  புதுமை – விரும்பிச்  சூழலில்  ஆங்கிலத்தில்  பட்டம்  பெற்றும்  பாரதத்தின்  புராதன  கலாசாரத்தில்  நான்  ஈடுபட்டிருப்பதைத்  தட்டிக்  கொடுத்துப்  பாராட்டும்  பாணியில்  அல்லவோ  பேசினார் ?  உண்மையிலோ,  ப்ரதிகூலமான  சூழ்நிலையில்  எதிர்நீச்சல்  போட்ட  பெருமைக்கு  நான்  உரியேனே  அல்லன்.  வெளியுலகின்  புதுமை—விரும்பிச்  சூழலிலும்  ப்ராசீன  கலாசார  தர்மாசாரங்களைப்  போற்றிய  குடும்பச்  சூழலில்  பிறந்து  வளர்ந்தவனே  நான்.   பதின்மூன்று  வயது  வரையில்  ப்ரிய  பக்திகளுடன்  குடும்ப  வழியையே  பின்பற்றவும்  செய்தேன்.  அப்புறம்  திடுமென  கிறுக்குப்  பிடித்தது.  ஸனாதிகளை  அடியோடு  வெறுக்கும்  அதி  நூதனியானேன்.  இப்படி  ஒன்பதாண்டு  வீணானபின்  இவரேதான்  என்னை  மீண்டும்  பழைய  தடத்திற்கு  முன்னைவிட  இதயபூர்வமாகத்  திருப்பினார்.  எவ்வாறென்றே  தெரியாமல்,  ஆயினும்  எவ்வாறோ  ஒரே  தரிசனத்தில்  திருப்பினார்.  எனவே  பாராட்டுக்கு  முற்றிலும்  உரியவர்  அந்தப்  பரம  கருணையாளர்தான்;  இரும்பைப்  பொன்னாக்கும்  அவரது  கருணை  வல்லபந்தான் !  ரஸவாதியோ  இரும்புக்குப்  பாராட்டு  தருகிறார் !

கொழு  கொம்பை  விட்டுவிட்டு,  அப்படி  விட்டதிலேயே  பெருமிதமுற்றிருந்த  என்னை  இவரேயன்றோ  வலுவில்  இழுத்து,  எப்படியென்றே  தெரியாமல்,  ஏதோ  ‘ஞானமாயம்’  செய்து  கொழுகொம்பை  மீண்டும்  பற்ற  வைத்தது ?  வைதீக  சாஸ்த்ர  சம்பிரதாயத்தில்  அலாக்காக  ஆழங்காற்படுத்தியது ?  எதற்காக  அப்படியொரு  பேரனுக்ரஹம்  செய்தார் ?

அதை  எண்ணுகையில்  ஏற்படும்  உணர்வை  எழுத்தில்  கொண்டுவர  இயலாது.  வாய்  வார்த்தையிலோ  சொல்லவே  முடியாது.  அதுவும்  அவரிடம் ?  பந்து  பந்தாய்  நெஞ்சில்  உணர்ச்சி  முட்டுமேயன்றி  சொல்  வராது ! 

“சட்னு  சாஸ்த்ர  தர்மங்கள்ளாம்  தெரிஞ்சுண்டு” !   ‘சட்’னு  என்று  எத்தனை  சரியாகச்  சொன்னார்!  சாஸ்த்ர  நூல்கள்  என்று  நான்  படித்தது  பிற்பாடுதான்.  பிறருக்குத்  தெரிவிக்க  வேண்டிய  அவசியம்  ஏற்பட்டபோதே  அவ்வாறு  படித்தது.  என்னளவில்  என்னைத்  தடுத்தாட்கொண்டவுடனேயே ……’சட்’னுதான் !  —–  ஸகல  சாஸ்த்ரங்களிலும்  ஸாரமாக  உணரவேண்டியதனைத்தும்  உணர்வித்தவர்  அவர்தான் !  எப்படி  உணர்வித்தார் —–உணர்ந்து  கொண்டேன் —என்பது  மட்டும்  எனக்கே  தெரியாது !  “அறியென  இமைப்  பொழுதில்  வாழ்வித்த  வேதியன்”  என்று  அன்று  அருணகிரி  பாடியதை  இன்று  இவர்  மெய்யாக்கியது  மட்டும்  அநுபவ  ஸத்தியமாகத்  தெரிவது.

இதெல்லாம்  எனக்குப்  பிடித்த  அனுக்ரஹம்.  ஆனால்  அவர்  நான்  எழுத்தால்  சமய  சாஸ்த்ரப்  பணி  செய்வதையும்  சேர்த்துக்  கூறியல்லவா,  இதெற்கெல்லாம்  ஏதோ  அனுக்ரஹம்  இருக்கிறது  என்றார் ?  அந்த  எழுத்தனுக்ரஹம்தான்  எனக்கு  இடறுவது !  ஒரு  காலத்தில்  மிக  மிக  இடறிற்று.  அப்புறம்  அவர்  ஆற்றி  ஆற்றி  அது  அடங்கி  அடங்கிப்  போனாலும்,  இன்றளவும்  முற்றும்  அடங்காமல்  அவ்வப்போது  குமுறி  எழத்தான்  செய்கிறது !

காரணம்  இந்த  எழுத்துக்  காரியம்தான்  என்னை  வெளி  விவஹாரத்தில்  கட்டிப்  போட்டு,  எப்போதும்  ஏகாந்த  விச்ராந்தி  காணமுடியாமல்  தடுக்கிறது  என்ற  உணர்வுதான்.  ‘பரோபகாரம்  என்றுகூட  நாம்  ஏன்  செய்யவேண்டும் ?  நம்  ஆத்மாவை  ரக்ஷித்துக்  கொண்டு   நாம்  ஒதுங்கிக்  கிடந்தால்  போதுமே !’  என்றே  அவ்வேளைகளில்  தோன்றும்.

கர்மா  தீரவே  இது;  தீர்க்கவே  இது;  ஒருநாள்  தீர்ந்தும்  போகும்;  அதுவரை  மனஸை  அட்ஜஸ்ட்  பண்ணிக்  கொள்ளவேண்டும் —-  என்று  அவர்  சொல்லிச்  சொல்லி  என்னைத்  தணிப்பார்.  ஆயினும்  இன்றளவும்  இவ்விஷயமாக  என்  அயர்வும்  அலுப்பும்  முற்றும்  தீரவில்லைதான் !

என்னை  மாற்றிய  —  எனக்குப்  பிடித்த  —  அவரது  அனுக்ரஹத்தை  எண்ணி  விம்மி  மகிழும்போதே  என்னால்  எழுத்துப்பணி  என்பதான  எனக்கு  அவ்வளவாக  ஏற்காத  ‘அனுக்ரஹ’த்தையும்  எண்ணிச்  சற்று  வாடுவதுண்டு.  இப்போதும்  அந்தக்  கலப்புணர்ச்சியுடன்தான்   ‘ஏதோ அனுக்ரஹம்’  என்று  அவர்  சொன்னதிலிருந்து  அவரையே  பார்த்துக்  கொண்டிருந்தேன்.  அதை  அவரும்  கவனித்து  விட்டாரென்றாலும்  கவனிக்காதது  போலவே  பேசிப்  போனார்.

ப்ரஸாதத்தை  எடுத்துக்கொண்டு  புறப்படத்  தயாராயிருந்தார்  பக்தர்.

“நீயும்  படி;  தெரிஞ்சவாளுக்கெல்லாமும்  குடுத்துப்  படிக்கச்  சொல்லு.  உனக்குத்தான்  ‘ஸமாஜ்’,  ‘அகாடமி’ன்னு  நெறய  ஃப்ரெண்ட்ஸ்   இருக்காளே,  எல்லாருக்கும்  (சிரித்து)  இந்த  ப்ரஸாத  வினியோகமும்  பண்ணு”  என்றார்.

பக்தர்  புறப்படும்  தருணம்.

சட்டென்று  என்  அறிவில்  ஒன்று  உறைக்க  “விக்ஞாபனம் !”  என்று  குறுக்கிட்டேன்.  குறுக்கிட்டது  என்  வழக்கத்திற்கு  விரோதம்.  “விக்ஞாபனம்”  என்றும்  மரியாதை  அறியாத  ‘ஸ்வாதீனக்காரன்’  ஸாதாரணமாகச்  சொல்லமாட்டேன்  என்றே  நினைக்கிறேன்.  அன்று  சொன்னது  மட்டும்  இன்றும்  நினைவிருக்கிறது.

பெரியவாள்  பக்தரிடம்  சற்றுப்  பொறுக்குமாறு  ஜாடை  காட்டினார்.

நான்  சொன்னேன்,  “பெரியவா  என்னைப்  பத்தி  இவ்வளவு  சொன்னதுல  எனக்கு  வாஸ்தவமாகவே  பிரயோஜனப்படறது  ஆர்ட்கிள் –ல  இருந்த  சில  குறைபாடுகளைப்  பெரியவா  எடுத்துச்  சொன்னதுதான்…”

குறும்புச்  சிரிப்பு  வெடிக்க,  அவர்  குறுக்கிட்டு  பக்தரிடம்  சொன்னார்,  “பாத்தியா,  ஸ்வாதீனக்காரரை !  மரியாதைக்காராளான  நீங்கள்ளாம்  பெரியவா  என்ன  சொன்னாலும்  ப்ரயோஜனந்தான்னு  எடுத்துப்பேள் !  இவர்  நான்  சொல்றதுலயும்  ஏதாவது  ப்ரயோஜனப்படுமான்னு  தேடித்  தேடிப்  பார்த்து,  கெடச்சா  எடுத்துக்கறார்…”

எத்தனை  வேண்டுமானாலும்  கேலி  பண்ணு,  கிழவா !  உனக்கில்லாத  பாத்தியதையா ?  கேலி  பண்ணும்  உன்  ஜாலியே  உன்  ‘விக்டி’மையும்  தொற்றிக்கொள்ளும்படிதான்  செய்து  விடுகிறாயே !

( மேலே  உள்ள  இந்த  வரியைப்  படித்தவுடன், நெஞ்சு  பொங்கி  கண்ணீர்  பெருகியது  எனக்கு !  என்ன  ஒரு  அந்யோன்ய  பக்தி  இருந்தால்  இத்தனை  உரிமையுடன்  எழுத  வரும் ?  கண்ணப்ப  நாயனார்  நினைவுதான்  வந்தது !——-B.N).

“ஸரி  சொல்லு,  நான்  சொல்றதுலகூட  ப்ரயோஜனமா,  அந்த  ஆர்ட்கிள்—ல  கொறைபாடுகள்  இருக்கிறதாத்  தெரிஞ்சிண்டிருக்கே !  அப்பறம் ?”

“இப்பவே  பெரியவா  அதைப்  பாத்து,  எங்கெங்கே  என்னென்ன  கொறைன்னும்  சொல்லிட்டா,  திருத்திப்பேன்.  இவருக்கும்  திருத்தின  ரூபத்திலேயே  குடுத்துடலாம்.”

சில  க்ஷணங்கள்  பெரியவாள்   பேசாதிருந்தார்.  தீர்க்க  சிந்தனையாகத்  தோன்றியது.

பிறகு, “நான்  ஒண்ணும்  ஒவ்வொண்ணா  சொல்லிண்டிருக்க  வேண்டியதில்லை.  நீயே  மறுபடி,    எழுதினதைப்  புதுசாப்  படிக்கிற  மாதிரிப்  படிச்சுப்பாரு,  ஒனக்கே  தெரியும்”  என்றார்.

நான்  கேள்விக்  குறியுடன்  அவரைப்  பார்த்தேன்.

“தெரியும்”  என்று  மீண்டும்  அழுத்தமாகக்  கூறினார்.

அப்போது  அவர்  பார்த்த  பார்வை  அதை  அப்படியே  என்னுள்  அழுத்தியது.

“தெரிவிக்கப்படும்”  என்றே  அதற்கு  அர்த்தம்  என்று  ஸ்பஷ்டமாகத்  ‘தெரிவிக்க’ப்பட்டது !

காட்டுவித்தால்  யாரொருவர்  காணாதாரே ?.

This  is  only  a  portion  of  the  long  article,  in  the  book  “Sankarar  Endra  Sangeetham”.

Sri  Ra.Ganapathy  Anna  was  one  of  very  few  devotees (like  Pradhosham  Mama,  Annadhanam  Sivan )  who  had  totally  surrendered  to  HIM,  purely  out  of  true  devotion  and  love,  and  expecting  nothing  in  return.  That  is  what  Bagavan  says  in  Gita  also—TOTAL  and  UNCONDITIONAL  SURRENDER  UNTO  ME.

There  was  no  wonder  that  he  attained  sidhdhi  on  the  Pradhosha  time  on  Maha  Sivarathri  evening  in  the  year  2012.

May  these  divine  souls   bless  us  and  take  us  also  with  them.

Jaya  Jaya  Sankara !  Hara  Hara  Sankara !

 

 



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. தெய்வத்தின் குரலை படிக்க ஆரம்பித்த பிறகு தான் நிறைய சம்ஸ்க்ரித வார்த்தைகளை, அர்த்த புஷ்டியுடன் நிறைய நளினமான விஷயங்களை மௌனமாக ஸ்ரீ மகாபெரியவா சொல்ல நான் கேட்கும் அனுபவ ஆனந்தம் பெற்றேன் . அதற்க்கு முன்பு அவரை நேராக தர்சிக்காததால் அந்த மௌன சம்பாஷணையே மென்மையான தெய்வீக அனுபவம் கொடுத்தது. அனைவருக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் .

  2. Mahatmaas! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. thanks for the excellent posting with a message
    hara hara sankara jaya jaya sankara

  4. My eyes are filled with tears. No words to express my feelings. Thanks mama and Mahesh Sir for posting such a wonderful article. SARVESWARA

  5. Namaskarams!!

    I don’t have words mama. One of the best paintings of yours.

    JAYA JAYA SHANKARA, HARA HARA SHANKARA

  6. Excellent information

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading