This is a short but very important message to all of us….
மேல் நாட்டுக்காரர்களிடம் எவ்வளவோ நல்ல விஷ்யங்கள் கத்துக்க இருக்கு அவைகளை
ஏற்றுக்கொள்ளலாம் excuse me,sorry, thanks என்றெல்லாம் சொல்கிறார்கள். இது போற்றத்தக்க பண்பாடு,இதெல்லாம் விட்டுவிட்டு நாம் கேவலம் டிரெஸ்ஸை மட்டும் காபி அடிக்கிறோம் . நாளடைவில் நம் கலாசாரமே மறைந்து விடும்.
மேற்சொன்னவாறு பெரியவாதான் ஒரு பெண்ணுக்கு அறிவுறித்தினார். ஒரு சமயம் சாமான்யமான குடும்பத்து பெண் ஒருத்தி நம் தென் நாட்டுப் பாரம்பர்ய உடையில்
அடக்கமாக வந்திருந்தாள். இன்னொரு பெண் பணக்கார குடும்பம் அமெரிக்காவிலிருந்து நவ நாகரீக உடை,ஆண்கள் அணியும் மேல் சட்டை, கால் சராய் என்று வழங்கப்படும் பாண்ட் எல்லம் அணிந்து ஆண்கள் போல் வந்திருந்தாள்.
பெரியவா அப்போது ஒரு புஸ்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். இரு குடும்பத்தினரையும் பார்த்து. சற்று நேரம் படித்துவிட்டு புஸ்தகத்தை மூடி வைத்தார்கள்.
தென் நாட்டுப் பாரம்பர்ய உடையிலிருந்த சாமானிய குடும்பப் பெண்ணைப் பார்த்து”நீ என்ன பண்ரே, இங்கே பாரு இந்தப் பெண் காலேஜில் படிச்சுட்டு அமெரிக்கா போயிருக்கா, நீ என்ன பண்றதா உத்தேசம்” என்று கேட்டார்கள்.
அந்தப் பெண் ”நானும் பிஏ படிச்சுருக்கேன்.”
”அப்புறம்”
”அப்பா அம்மா சொல்றபடி சிக்கனமா குடும்பம் நடத்துவேன்; புடவை கட்டிப்பேன்; வேறே டிரஸ் போட்டுக்கமாட்டேன். நமக்குன்னு ஒரு கலாசாரம் இருக்குன்னு அப்பா அடிக்கடி சொல்வார்”
பளிச்சென்ற இந்த பதிலில் பணக்காரப் பெண்ணிடம் ஒரு இன்பகரமான மாறுதல்! தடாலென்று பெரியவா முன்னால் விழுந்தாள்.
”பெரியவா மன்னிக்கணும். நான் இந்த டிரஸ்ஸில் வந்தது ஒரு அஹங்காரத்தால்தான்; நான் அமெரிக்காவில் இருக்கேன் ! என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் உள் நோக்கந்தான். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்” என்று கெஞ்சுகிறாற்போல் சொன்னாள்.
அதற்குத்தான் மேலே சொன்ன உபதேசம் அந்தப் பெண்ணுக்கு! அந்தப் பெண்ணூக்கு மட்டும்தானா?
நம் எல்லோருக்கும் சேர்த்துத்தான்!
ஜய ஜய சங்கரா….
நன்றி :மஹாபெரியவா அனுபவ தரிசனங்கள் 4ஆம் தொகுதி,
திரு. கோதண்ட சர்மா தொகுப்பு.
Article: Smt Saraswathi Thyagarajan
Categories: Devotee Experiences
tears in my eyes… ippadipattava nammoda illaye ninaichinndu scroll panna Periyavavoda quotes en kanngalai kulamakkidhu….great jaya jaya sankara hara hara sankara..
JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…WOW. GREAT TEACHINGS. GOT TEARS IN EYES, WHEN I READ IT. SOME OF US FORGET OUR TRADITIONS..GOOD REMINDER TO ALL OF US INCLUDING ME…JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…
Kevalam Dressai Mattum Copy Adikkarom
There are a lot of things we can learn and adopt from the westerners. Saying ‘Excuse me’, ‘sorry’, ‘thanks’ are some examples. Leaving all this, we are just copying their dressing style. In due course of time, we will forget our own culture.
Periyava was advising a lady. Once, a lady from a middle class background had come dressed in the traditional south Indian attire. Another rich lady who evidently had lived in the United States had also come dressed modernly – in shirt and trousers.
Periyava was then reading a book. He looked at the two families, continued to read the book for some time and then closed it.
He looked at the lady dressed in traditional south Indian dress and asked her. “What do you do ? This lady here has studied in a college and has gone to America. What do you intend to do ?”
That lady replied, “I have also studied B.A”
“After that ?”
“As my parents advise, I will try to lead an austere life; I will dress only in sarees. I will not wear any other dresses. My father keeps saying that we should be aware of our traditions”
Suddenly, there was a pleasant transformation in the modern lady. She fell at Periyava’ feet.
“Periyava should forgive me. I came here dressed like this due to my arrogance. I stay in America. I wanted to advertise that fact. I will never behave in this way again”, she pleaded to Periyava.
This is the reason Periyava gave His advice to the other lady. Was it meant only for that lady ?
It is applicable for all of us !
Jaya Jaya Shankara
Courtesy: MahaPeriyava Anubhava DarisanangaL Part 4
Compiled by Shri Kodanda Sharma
Article: Smt Saraswathi Thyagarajan
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Absolutely True Jaya Jaya Sankar Hara Hara Sankara