Govindapuram Thapovanam Moolavar Photo Released – Parama Bhaghyam

Today being a pradosham day, all periyava devotees are blessed with a great opportunity to have the photo of Mahaperiyava moolavar from Thapovanam. This is the first time this photo is released. It seems Sankara TV was there on the recent Anusham day at Govindapuram to cover this kshetram and make it known to the whole world. During that process they took a high quality photo of this place including moolavar. This photo was with the mami (a.k.a Kamakshi mami) who manages this thapovanam. She just called Shri Suresh Krishnamoorthy to share this with all devotees of Periyava around the world. Suresh called me right away and he was very excited – so am I. Very beautiful photo of Periyava. We all should print this and to our puja room. Thank you Suresh.

Govindapuram_Moolavar

Govindapuram_Urchavar

Govindapuram_Periyava

பெரியவா சரணம்.

இன்றைய தினம் ஒரு மகத்தான பாக்கியம் தனை நாம் அனைவரும் பெற்றிருக்கின்றோம்.

ஆம்! மத்யார்ஜுன க்ஷேத்திரமான திருவிடைமருதூர் எல்லையிலே இருக்கின்ற மஹாபுண்ணியத் தலமான கோவிந்தபுரத்தில் தபோவனத்தில் தம் 67 குருமார்களையும் ப்ரார்த்தித்தபடியாக நம் அனைவரது நல்வாழ்க்கைக்கென தவக்கோலத்தில் இருந்து சூக்ஷமமாய் நமக்கெல்லாம் திருவருள் புரிந்து வரும் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் மூலவிக்ரஹத்தின் திருவுருவப் படத்தினை தம் பக்தர்கள் அனைவருக்கும் கிட்டிடச் செய்யும் வரம்தனைத் தந்துள்ளார்.

அந்த பாக்கியம் இந்தப் பதருக்கும் கிட்டியது என் சான்றோர்கள் செய்த புண்ணியம் தாமே தவிர வேறேன்ன சொல்வது?

கோவிந்தபுரம் தபோவனத்தைப் பற்றியும், அங்கு நிறைந்திருக்கின்ற குரு ரத்திங்கங்களுக்கு பிக்ஷாவந்தன கைங்கர்யத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது பற்றியுமான எந்தன் முந்தைய பதிவினை நினைவுகூர்கின்றேன்.

அனேக பக்தகோடிகள் பற்பல நாடுகளில் வசித்துவந்த போதிலும், இந்த கைங்கர்யத்தில் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமாகின்றனர் எனும் போது எனக்கும் இதனில் சிறிய அணிலின் பகுதியாக கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிட்டியதற்கு அந்த பரப்ரஹ்ம மூர்த்தியின் பாதாரவிந்தங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.

இங்கே பகிர்ந்துள்ள லிங்க் மூலமாக இந்த விவரங்களை பக்த கோடிகள் பெறவழி வகை செய்ய முயற்சிக்கின்றேன்.

http://mahaperiyavaa.blog/2014/04/30/kanchi-sri-mahaswamy-bikshavandana-trust-at-thapovanam-in-govindapuram/

தபோவன மூர்த்தியான காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் திருவுவப்படங்களை (மூலவர் – உற்சவர் – பெரியவா) இங்கே பகிரும் நொடிப்பொழுதினில், உலகமெங்கும் உள்ள அன்புறவுகள் அனைவருக்கும் உண்டான மனக்கஷ்டங்கள், ரோகங்கள், துயரங்கள், இல்லாமை, இயலாமை அனைத்து நீங்கப் பெற்று, சகல சம்பத்துக்களும் பெற்று, மன நிம்மதியோடு, நல்லெண்ணம் கூடி, இறையுணர்வு மேலோங்கி, தர்மம் கூடி, நேர்மை கொண்டு நல்வாழ்வு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.

கச்சி மடம்கொண்டு கவினுறவே அலங்கரித்து
சச்சி தானந்தப் பேரொளியாய் பவனிவரும்
மெத்த குருமார்கள் மத்தியிலே தவக்கோலம்
சித்தப் பேரொளியாய் சசிசேகர சங்கரனார்

கோடி யுடுத்தியதோர் கோமகனாய் தவக்கோலம்
கோடி புண்ணியஞ்சேர் கோவிந்த புரமதிலே
கோல மயிலழகாய் தவ வனத்து தலமதிலே
ஞால மாந்தர்க்கும் அருள்தரவே அனுதினமும்

சித்தச் சீரெடுத்துச் செப்பினமே இன்னாளில்
பத்தி மனதோடுப் பணிவர்தம் இல்வாழ்வில்
சத்திச் சிவமருளாய் சங்கரனின் தரிசனமும்
மெத்த சீர்பலவும் தந்திடுமே என்னாளும்!!

பெரியவா கடாக்ஷம்.



Categories: Announcements, Photos

Tags:

10 replies

  1. True

  2. ஸ்ரீமஹாஸ்வாமி த்யான ஸ்லோகம்:

    அபாரகருணாஸிந்தும் ஜ்ஞாநதம் சாந்தரூபிணம் |
    ஸ்ரீசந்த்ரசேகரகுரும் த்யாயாமி தமஹர்நிசம் ||

    ஸ்ரீசங்கராசார்யமபரம் ஸ்ரீசிவாசிவரூபிணம் |
    பூஜ்யஸ்ரீகாமகோட்யாக்யபீடகம் தம் தயாநிதிம்

    அனுதினமும் ஆச்சார்யாளை அன்போடு துதித்து அனுக்ரஹம் பெறுவோம்.

    நமஸ்காரங்களுடன்,
    சாணு புத்திரன்.

  3. பெரியவா சரணம்.

    நம் ஒவ்வொருவர் கிரஹத்திலும் பரிபூரணத் தூயவராம் மஹாபெரியவாளின் மூலவிக்ரஹத் திருவுருவம் பூஜைமாடத்தில் அலங்கரிக்கின்றது என்ற எண்ணமே மனதிற்கு ஒரு புத்தொளியையும், தைரியத்தையும் வரவழைக்கின்றது. ஒவ்வொரு காலையும் குளித்து விட்டு, அனுஷ்டானத்தைக் கட்டாயமாக செய்தல் வேண்டும்; அறம் பேணிடல் வேண்டும் என்று நமக்கு அறிவுருத்துகின்றார். துஷ்ட விஷயங்கள் ஏதும் நம் கிரஹத்தினில் நுழையாது காப்பாற்றுகிறார் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு காலையும் மாலையும் பூஜை அறையின் முன்னம் வந்ததுமே காஞ்சி சென்று அபரகாமாக்ஷி சன்னிதானம் முன்பாய் நிற்பது போன்று தோன்றுகிறது. நம் யாவரது தவப்பயனே இந்த மூர்த்தி நம் கிரஹத்திற்கு வந்திருக்கின்றார் என நினைக்கையில் ஒவ்வொரு ப்ரார்த்தனையும் கட்டாயமாக இனி ரக்ஷிக்கப்படும் என்ற வலிமை மனதிலூன்றி, பக்தி எண்ணம் மேலோங்குவதை உணர்கின்றேன்.

    பிறைசூடன் அவதாரப் பேரொளியாம் சங்கரனின்
    மறைஞான வுருகொள்ள மாதவமும் செய்தனமோ
    குறையாவும் களைந்தோடி குற்றங்களும் தாம்நீங்கி
    நிறைவான மனதோடே குருவடியிற் மனச்சரணம்!

    பெரியவா சரணம்.

    நமஸ்காரங்களுடன்,
    சாணு புத்திரன்.

  4. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Through Suresh and Mahesh, Maha Periyava has entered every Devotee’s house and showers His Blessings! Thanks a lot!

  5. Excellent. Suresh, thanks for sharing the photographs. Thodaruttum thangal punithamana pani.

  6. மூல உற்சவ படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

  7. Enna Punniyam Enna Bhaghyam Bhagawane

  8. thank you for posting…

  9. Maha Bhagyam!

    ஜகதாம் குருவர்யம் தம் காமகோட்யதிபம் சிவம் |
    ஸ்ரீ சந்த்ரசேகர யோகீந்த்ர தேசிகம் ஸமுபாஸ்மஹே ||

    இந்த திவ்யதரிசனம் நுழையும் கிரஹங்கள் எல்லாம் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து அத்தனை குடும்பங்களும் இன்பமோடு வாழனும்னு ஜெகத்குருவை மனதார ப்ரார்த்தனை செய்கிறேன்.

    பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா சரணம்!!

    நமஸ்காரங்களுடன்,
    “சாணு புத்திரன்” சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply to Neelakanda Iyer krishnaiyer NeyyattinkaraCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading