2nd part of Shri Ra Ganapathi’s audio chats

Ra Ganapathi

Thanks to http://www.Mahaperiyava.org for the article.

On 1st of September 1935, on a Vinayaka Chathurthi day he was born to a middle class brahmin parents. His journey started on a Vinayaka Chathurthi, came to a completion on a Maha Shivarathri day…

He is none other than our beloved Sri Raa Ganapathi Anna…Remembering him on the auspicious Vinayaka Chathurthi Day…

Let us listen to the “voice” of a great man who penned “Voice of God” (தெய்வத்தின் குரல் தொகுத்தவரின் குரல்). First part of this audio series can be viewed here

Below is the second set of audio clippings with a prologue and tamizh transcription by Sri Karthi Nagaratnam.

ஸ்ரீ ரா. கணபதி

1935 இல் ஒரு விநாயக சதுர்த்தி நன்னாளில் பிறந்து(அவதரித்து) அந்த ‘கணபதி’ அந்த ‘வியாசருக்கு’ செய்த தொகுப்பாசிரியப் பணியை, இந்த ‘கணபதி’ நம் வியாசருக்கு செய்த பெரும்பணியை நெஞ்சில் நிறுத்தி, மனம் நிறைந்து…அவர் வரிகளிலேயே…அவருக்கு நமஸ்காரங்கள்…

(வெல்லப் பிள்ளையார், அவரைக் கிள்ளி அவருக்கே நைவேத்தியம்)

சங்கீத பெரியவா

ஸ்ரீ ராக: சங்கீதத்திலேயும் பெரியவாளுக்கு ரொம்ப INTEREST … பெரியவா ரொம்ப கவனிச்சு கேப்பா…

ஜி: கணேச சர்மா, ஒரு ARTICLE எழுதறார். பெரியவாளும் சங்கீதமும் ன்னு இந்த DECEMBER SEASON க்காக…ஆனந்த விகடன் ல கேட்டு இருக்கான்னு…எல்லாத்தையும் தொகுத்துண்டு இருக்கார். நீங்க எழுதினது…அப்புறம் இன்னும் வேறே எதோ பெரியவா சொன்னது…மேட்டூர் சுவாமிகள் நிறையா இது கொடுத்து இருக்கார். MATERIAL கொடுத்து இருக்கார் அவர் கிட்டே. எல்லாத்தையும் தொகுத்துண்டு இருக்கார். தொகுத்துட்டு ‘பெரியவாளும் சங்கீதமும்’ ன்னு ஆனந்த விகடன் ல இந்த DECEMBER SEASON க்காக…

ஸ்ரீ ராக: பெரியவா பட்டணப் பிரவேசம். கும்பகோணமோ எங்கேயோ…ஏழெட்டு ஜத நாதஸ்வரம்…அதுல TN ராஜரத்தினம் பிள்ளையும் வாசிச்சு இருக்கார். அவர் மறுநாள்பெரியவாளை பார்க்க வந்த போது, எதோ ஒரு பாட்டு பாடினபோது,ஒனக்கு அரை இடம் தப்பிப் போயிடுத்து…ன்னு..(சிரிப்பு…)…

ஜி: அப்படியா? அவருக்கே…ச்சே…

ஸ்ரீ ராக: அதே அவர் மேலே அவர் யோசிச்சுண்டு இருந்தார்…

ஸ்ரீ ராக: அப்புறம் எம் எஸ் அம்மா பாடுவா…மைத்ரீம் பஜத…அதுல…

தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:! ன்னு வரும்…

பாடரச்சே தா:! ன்னு எல்லாம் கஷ்டமா இருக்கும். POETIC LICENSE எங்களுக்கு உண்டு…கவிக்கு
சுதந்திரம் உண்டு…தானே பாடி காட்டினா…

ஜி: அப்படியா???

ஸ்ரீ ராக: தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா போறும் ன்னா…

ஜி: அப்படியா? ஓ…

ஸ்ரீ ராக: அதான் சொல்லுவா…பரமசிவனோட அஞ்சு முகத்தில இருந்து ஏழு ஸ்வரம் வந்துது அப்டின்னுட்டு, தியாகராஜ கீர்த்தனை ஒண்ணுல வரும்… நாத தனுமனிசம் ன்னு… அவர் அவ்ளோ ராமனைப் பத்தி பாடினாலும், சங்கீதத்தை பத்தி வந்தா, பரமசிவன் மேலே தான் இருக்கும்.

ஜி: ஓ…

ஸ்ரீ ராக: அவர் தான் சங்கீதத்துக்கு மூலம் ன்னு…வீணா வர தக்ஷிணாமூர்த்தி… அது பெரியவாளுக்கு, அது எப்படி…அஞ்சு முகத்திலே இருந்து ஏழு ஸ்வரம் வந்ததுன்னா… பாக்கி ரெண்டு என்ன ஆச்சு…அப்டின்னு… சாம்பசிவ ஐயர், அவா..இவா…எல்லாரையும் கேட்டா… அப்புறம்…மைசூர் வாசுதேவாச்சார் தான் சொன்னார்…ச வையும், ப வையும் எப்பவுமே தள்ளிடுவோம்…அது எல்லா ராகத்துக்கும் ஒண்ணு தான். அதனால சொல்லலை ன்னு… பெரியவாளுக்கு
அதுக்கு என்ன சந்தோஷம் தெரியுமோ? அவர் என்னதோ பெரிசா பிக்ஷையை பண்ணி வெச்சுட்ட மாதிரி…

தியாக ராஜ கிருதி ஒண்ணு… “யாந்த பாந்த”- ன்னு வரும்… யாந்த பாந்த…ஒத்தருக்குமே அர்த்தம் தெரியலே… சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவாளுக்கும் தெரியலே, தெலுங்கு தெரிஞ்சவாளுக்கும் தெரியலே… பெரியவா கிட்டே கேட்டா…

யாந்த பாந்த ன்னா ராம தான்…

‘ய’க்கு அந்தத்திலே என்ன இருக்கு? ‘ரா’ தான்…ய ர…

‘பா’க்கு அந்தத்திலே ‘ம’…ப ம… சிரிக்கிறார்…

ஜி: ஓ….

ஸ்ரீ ராக: ஆமா…அத சொல்ல வேண்டாம் ன்னு அப்படி சொல்லி இருக்கார் அவர்…

காம கோடி ன்னா, தர்மார்த்த காம…காமத்துக்கு கோடில என்ன இருக்கும்? மோக்ஷம்…ன்னு அர்த்தம்…

ஜி: ஓ….(ஆச்சிரியத்தின் உச்சம்!!!) காமத்தோட கோடி வந்து மோக்ஷம்…

 

ந்ரித்யம் பெரியவா

ஸ்ரீ ராக: பத்மா, பெரியவாளாலே தான் DOCTORATE ஏ எழுத முடிஞ்சுது. அவளுக்கு ஏதோ ஒரு காரணம், என்னன்னே புரியலே… வர்ணனை ன்னு புரியலே,அவளுக்கு. நர்த்த சாஸ்த்ரத்திலே… பெரியவா அவ கிட்ட, கும்பகோணம் சாரங்கபாணி TEMPLE ல, கோபுரத்துக்கு உள்ளே, மாடிப்படி கட்டு எல்லாம் இருக்கும்…அதுல போயி தான் அவா தினம் தீபாராதனை எல்லாம் ஏத்தறது…அதுல ஏதோ ஒரு இடத்துல, அந்த சிற்பம் இருக்கு…கரண சிற்பம்…

ஜி: அப்படியா? ஆச்சிரியப் படுகிறார்…

ஸ்ரீ ராக: அது வேற ஏதோ புஜங்கத்தாசனம் ன்னு போட்டு இருக்கும். ஒன் புஸ்தகத்துல அது வேற இதோ பேர் போட்டு இருக்கும். ஆகமத்துல, நாக ரூபத்துல எல்லாம் பண்றோமோன்னோ…எங்களுக்கும், ஒங்களுக்கும் அதே முத்திரை இருக்கும், பேரு மட்டும் வித்யாசமா இருக்கும்… ன்னா… அவ அதே மாதிரி போய் பார்த்தா அங்கே இருந்தது…

ஜி: அப்பா……

ஸ்ரீ ராக: ரொம்ப ஆச்சிரியமா பெரியவா…

 

RSS பெரியவா

ஸ்ரீ ராக: சொல்றா….எதுக்கு எனக்காக சொல்லணும் ன்னா…நான் தான் அப்படி சொன்னேன்…எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்…அது என்னது?
பதத் வார காலே…ன்னு ஒரு பாட்டு…

ஜி: பதத் வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே…

ஸ்ரீ ராக: ஆமாம். அதை ரொம்ப பாராட்டி சொல்லிட்டு, இப்ப இருக்கற GOVERNMENT ல,
நேரு GOVERNMENT …புத்தர் கூட… அவர் கூட இருந்த முஹலன் தான் அவர ஏதோ போவான் அவன்… BUDDHIST MONKS எல்லாம் STARTS போட்டா போடுவான் இவனும் போடுவான்…ஹிந்து மதம் பிடிக்காது அவனுக்கு…

நீங்க காரியம் தைரியமா பண்ணிண்டு இருக்கேள். அப்பவே மகாத்மா காந்தி எல்லாம் ஆயிடுத்து..1948 ல… ஹிந்து RELIGION ங்கறது RELIGION ஏ இல்லே. அது எல்லாருக்கும் COMMON ங்கறது SUPREME COURT ல வந்துடுத்து. உங்க CASE உம் ஜெயிச்சு நன்னா ஆயிடுத்து. உங்க சேவையை நன்னா பண்ணிண்டு இருங்கோ. ரொம்ப ஆசீர்வாதம் பண்ணினா…

பெரியவா ஆந்த்ரா ல இருக்கறச்சே அவா CAMP எல்லாம் நடக்கும்.

ஜி: ஓ…

ஸ்ரீ ராக: ரொம்ப ப்ரியம்…பரம பக்தி…

ஜி: அப்படியா?

ஸ்ரீ ராக: ஆமாமாம்…அவா அம்மா காலம் ஆயி அவர் வருத்தமா இருந்தார் அவர்…அப்போ பெரியவா அவருக்கு LETTER போட சொல்லி, ஒனக்கு தான் பாரத மாதா என்னிக்கும் இருந்துண்டு இருக்காளே? ஒண்ணும் வருத்தப் படாதே…அம்மா நல்ல இடத்துக்குத் தான் போயிருக்கா…ன்னு போட்டு இருப்பா…

நம்ப பெரியவா சித்தி ஆனா விட்டு அவரை பத்தி மூணு வால்யூம் வந்தது…மேட்டூர் சுவாமிகள் போட்டு இருந்தார். அதுல மொதல்ல அது தான் போட்டு இருப்பா. பெரியவா கோல்வால்கர் க்கு எழுதின லெட்டர் காப்பி…

ஜி: அப்படியா?

ஸ்ரீ ராக: ஆமாமாம்.

ஜி: மேட்டூர் சுவாமிகள் போட்டது தர்சன அனுபவங்கள் – அந்த புத்தகம் தானே சொல்றேள்?

ஸ்ரீ ராக: அது தமிழ். இது இங்கிலீஷ் ல எல்லாமும் இருக்கும்.

ஜி: ஓஹோ…கோல்வால்கர் வந்து பெரியவால தர்சனம் பண்ணி இருக்காரா?

ஸ்ரீ ராக: நெறையா…

ஜி:அப்படியா…

ஸ்ரீ ராக: வந்தாரோ வரலியோ, தெரியாது…ஆகக்கூடி CORRESPONDENCE உண்டு.

ஜி: ஓஹோ…பெரியவா நாக்பூர் கே போயிருக்கா, இல்லே?

ஸ்ரீ ராக: நாக்பூர்…..

ஜி: நான் அந்த யாத்ரை லிஸ்ட் ல பாத்தேன்…நாக்பூர் போட்டு இருந்துது…

ஸ்ரீ ராக: பாத்து இருப்பாளோ, என்னமோ….

ஸ்ரீ ராக: …முகர்ஜி…ஷாம் பிரசாத் முகர்ஜி…ன்னுட்டு…அறு அறு ங்கறதுக்கு மூக்கு
அறு…

ஜி: மூக்கு அறு….சிரிப்பு…..

 

சர்வ மத பெரியவா

ஸ்ரீ ராக: அலெக்சாண்டர் ன்னு ஒரு கவர்னர் இருந்தார். அவருக்கு பெரியவா கிட்டே ரொம்ப பக்தி…ஒரு
CHRISTIAN…அலெக்சாண்டர் ன்னு…

அவர் பெரியவாளைப் பத்தி எவ்ளோ உருகி பேசுவார் தெரியுமோ? எங்கே கூப்டாலும் போவர். பாம்பே லயும்…

TO THINK OF HIM, TO SPEAK OF HIM… IT IS GREAT MERIT…புண்யா… அப்டிம்போ…

அவர் சொன்னார்…. பெரியவா கிட்டே, அவர் என்ன கேட்டார் ன்னு தெரியலே…

‘அவர் அன்னிக்கு சொன்ன விஷயங்கள வெச்சுண்டு ஒரு DOCTORATE ஏ எழுதி இருக்கலாம்’ ன்னார்
அவர்…

ஜி: அப்படியா?

ஸ்ரீ ராக: அவர் WIFE க்கு ரொம்ப பக்தி, பெரியவா கிட்டே…அக்கம்மா ன்னு பேரு அவளுக்கு…எம் எஸ்
அம்மா கிட்ட தான் பெரியவா படம் வாங்கிண்டா அவோ…அலெக்சாண்டர் WIFE…




Categories: Audio Content, Devotee Experiences

Tags:

7 replies

  1. golvalkar swamiyai santhiththu patri therinthu konden rompa perumaiyai irunthathu swaym sevak jayakumar 9444455320

  2. மிக்க நன்றி. தெய்வத்தின் குரல் (குறள் என்றும் சொல்லலாம் அல்லவா ?) படித்ததன் மூலம் நிறைய சம்ச்க்ரித வார்த்தைகளும் , நம் சனாதன தர்மம் பற்றியும் மகா பெரியவாளின் சரளமான , சுகமான பேச்சுக்களையும் அனுபவிக்கமுடின்தது .

  3. Can anyone confirm if the book “In the presence of the Divine” (which is the English translation of “Darisana Anubhavangal”), contains the letter written by Mahaperiyavaa to Shri Golwarkar? If so, what is the page # in the book?

  4. Karthi,

    This is Sai Saravanan. I am so glad to have stumbled upon this site and really glad to see you sharing such great articles about Sri Mahaa Periyava.

    Please email me back when you get a chance.

    Thanks
    Sai Saravanan

  5. Many grateful thanks to Anna Sri Ra. Ganapati and Sri Sivaraman for these great interviews. It is a Blessing to be able to hear Anna’s Voice again regarding Maha Periyava, on the occasion of Vinayaka Chathurthi. Our humble Namaskarams to Maha Periyava and Anna. Many thanks to Sri. Karthi Nagarathinam and Mahesh for sharing. Hara Hara Shankara, Jaya Jaya hankara!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading