மௌனம் நா அசைத்தது!

Thanks to Shri Suryanarayanan for sharing in FB…

 

Cross_Embroidery_of_Periyava

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும், எளிய உடை (வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

“பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம் இந்த மஹந்திடம் ஆசிபெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அத்தகைய மஹந்தை (மகானை) தரிசனம் செய்ய வந்திருக்கிறோம்.”

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்! ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது, ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து, மிகவும் பக்தியோடு வந்திருக்கிறார்கள்.

“இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்” என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது, மகா அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய்ச் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர். நியாயமான துணிச்சல்காரர். ‘வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். சமயப் பற்றுடையவர்கள் மாதிரி இருக்கு. ரொம்பவும் சாந்தமா இருக்கா… பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா…”

இரண்டு நிமிஷம் கழித்துப் பெரியவாள் வெளியே வந்தார்கள். “ஆயியே… ஆயியே..” என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.

வந்தவர்கள், “நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம். பெரியவா அனுக்ரஹம் வேணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்:

“நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அதனாலேதான், உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிதுநேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவர் காப்பாற்றுவார்…”

அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும், மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்கத் திரும்பிச் சென்றார்கள்.

அப்புறம் பெரியவாளின் மௌன விரதம் தொடர்ந்தது! வெறும் கட்டைதான் – காஷ்டம்!

Special note about this picture::

This is a cross-embroidery work by a 77-year old mama, father of one of our readers here. He has done several work in the past on Hindu gods and this is his latest work!! Great work – tathroopam!!!!

Thanks to his son Shri Parameswaran Iyer for kindly sharing this with us!Categories: Devotee Experiences

Tags:

5 replies

 1. Mahesh, English translation. Please publish.

  8 Muslims from the North western parts of India came for Periyava’s Darshan. They conveyed the impression that they were wealthy people, but wore simple clothes (Veshti,skull cap).

  “We have heard that many national leaders have come here to this Mahan and have received His blessings. We have come here to have His Darshan”

  Periyava was observing ‘Kaashta Mounam’ then. Not even gestures or signals from the eye. If anything was told to Him, He would listen but there would be no responses from His side.

  The Muslims had come from very far, with a lot of Bhakthi.

  If they were sent back saying “Periyava will not speak today”, it will be really unfair. But who will tell all this to Periyava ?

  There was a Sippandhi by name MaaNampattu Kannan. Bold and outspoken by nature.
  “A group of 8 Muslims have come from the North. Peaceful countenance. They have come with a lot of desire to get Periyava’s blessings…”

  Periyava came out after two minutes. He received them saying, “Aayiye, Aayiye”, made them sit and enquired about their welfare in Hindi.

  The group said, “We are stuck in a big difficulty. We beg for Periyava’s Anugraham”.
  Periyava said:
  “All of you are good devotees. Do Namaz 5 times a day. This is the month of Ramzan. Observing fasting, you have come to see Me. That is the reason, I broke My silence to speak with you for some time. Your troubles will go away. God will protect…”

  He presented a green colour shawl to the eldest amongst the 8 people and fruits to the rest. They returned overjoyed.
  After that Periyava resumed his ‘Kaashta Mounam’.

 2. The photo is excellent and divine.Thanks for sharing with our group.

 3. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Appropriate to Ramadaan month, which eulogises prayer, fasting and Compassion, all embodied in Maha Periyava. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 4. MahaPeriyava Charanam Saranam

  Green color Salvai — ParamaAthma — Embroidery fantastic face with shadow — Tathroompam. When it is being weaved, How much time he would have thought about Him.

 5. i feel humbled and belittled by these bhaktas – both the muslim group & the elderly mama.
  (you may consider posting the other works of Gods by mama).
  naan ellam thoosu.
  miles to go. yeppodhu karai servadhu?

  may Periyava bless me and make me worthy of Him..

  thamizh chelvan

Leave a Reply

%d bloggers like this: