Completion of Penmai Series

namavali086

We have reached the last chapter in the book. Please read the essence of this book in this article..

As I said earlier, I can’t think of any other detailed research done on women related matters. Periyava had advised not women but men also in this text. There is no other authority we need to quote these facts/references to vedas and other scripts other than Periyava. There is no point arguing on what He said. It is a waste of our time to say that “in today’s world, these are not practical”. Periyava is a trikala gnani and He knows all.

Jaya Jaya Shankara Hara Hara Shankara

தெய்வங்களின் உதாரணம்

நம்முடைய தெய்வங்களைப் பார்த்தாலே பெண்களுக்கு எவ்வளவு உசந்த ஸ்தானம் தந்திருக்கிறதென்று தெரியும். ப்ரஹ்மா தன்னுடைய நாக்கிலேயே ஸரஸ்வதியை வைத்துக் கொண்டிருக்கிறார்,

மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷஸ்தலத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்; பரமேச்வரன் அம்பாளுக்குப் பாதி சரீரத்தையே கொடுத்திருக்கிறார். நவயுகப் பெண்கள் தங்கள் பர்த்தாவின் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கிறார்களென்றால் நம்முடைய புருஷ தெய்வங்களோ தங்கள் ஸதிகளின் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் – உமாமஹேச்வரன், கெளரீசங்கரன், லக்ஷ்மீ நாராயணன், ஸீதாராமன், ராதாகிருஷ்ணன் என்றிப்படி. நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் பார்த்தால் ஸ்த்ரீகளுக்கே முழு முக்யத்துவம் கொடுத்து ஸுமங்களி ப்ரார்த்தனை என்று இருக்கிற மாதிரி புருஷர்களுக்கு இல்லை. ஸுவாஸினி பூஜை செய்கிற மாதிரி புருஷர்களை உட்கார்த்தி வைத்துப் பூஜை செய்வதில்லை. ஸ்த்ரீகளுக்குத் தான் ரவிக்கைத்துண்டு தாம்பூலம் உண்டே தவிரப் புருஷர்களுக்கு வஸ்த்ரம் வைத்துக் தருவதில்லை. நவராத்ரி-கொலு ஒன்பது நாள் ஸ்த்ரீகளின் கோலாஹலத்துக்கே இருக்கிற மாதிரிப் புருஷர்களுக்கு என்ன இருக்கிறது?

பானை பிடித்தவள் பாக்யம்

பாக்யத்துக்கெல்லாம் உறைவிடமாக ஸ்த்ரீயைத்தான் வைத்திருக்கிறது. புருஷனை நீண்ட ஆயுள் உடைய ‘சிரஞ்சஜீவி’ என்று சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம். அந்த சிர ஜீவனத்தில் (நீண்ட ஆயுள் காலத்தில்) எல்லாம் சுபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஸ்த்ரீகளைத்தான் சொல்லும்போது நீண்ட ஆயுள் கொண்ட ‘சிராயுஷீ’ என்பதோடு விடமால் ‘ஸெளபாக்யவதி’, ஸெளபாக்யவதி’ என்றும் சேர்த்துச் சொல்கிறோம்.

‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்யம்’ என்பதாக, ஒரு க்ருஹத்தின் ஸுபிக்ஷத்துக்கு க்ருஹிணியையே மத்யமாக வைத்துப் பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது. க்ருஹம் என்பது அவளுடைய ராஜ்யம். ‘க்ருஹம்’ என்ற வார்த்தைக்கு ‘க்ருஹிணி’ என்றும் அர்த்தமுண்டு. அதனால்தான் க்ருஹப்ரவேசத்துக்கு நாள் பார்க்கும்போதுகூட க்ருஹிணியின் நக்ஷத்ரத்துக்கே முக்யமாகப் பார்ப்பது. ‘இல்லாள்’ என்று அவளுக்குப் பேர் இருக்கிற மாதிரி ‘இல்லான்’ என்று புருஷனக்குப் பேர் இல்லை. (சிரித்து) ‘இல்லான்’ என்றால் ஒன்றும் இல்லாதவன் என்றுதான் அர்த்தம். அவள்தான் இல்லத்தில் அரசு செய்கிறாள்; அதிகாரத்தினால் இல்லாமல் அடக்கத்தினாலேயே அப்படிச் செய்கிறாள்.

அவளாகவே அப்படி இருப்பதுதான் அழகு; உத்தமம்.
சாஸ்த்ரம் எதிர்பார்ப்பது, பெண்கள் தாங்களாகவே அடங்கியிருப்பதைத்தானே தவிர, மற்றவர்கள் அவர்களை அடக்கி வைக்கும்படி அது சொல்லவில்லை. அதையே இப்போதும் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வுரையின் ஸாராம்சம்

ஸ்த்ரீத்வம்-பெளருஷம் இரண்டும் அடங்குவதான மநஷ்யத்வம் என்று பொதுவாக இருக்கிறதே. அதற்கே அடக்க குணம் அவச்யந்தான். ஆனாலும் பெளருஷம் ஒரளவுக்கு மேல் அடங்காது. பராசக்தி விசித்ரமாகச் செய்திருக்கிற இந்த லோக நாடகத்தில் புருஷர்கள் அப்படி ஒரே அடக்கமாக இல்லாமல் காரியங்களைச் செய்வதும் அவசியமாயிருக்கிறது. அவர்கள் ஒரே அடக்கமாக இருக்க வேண்டியதில்லை என்பதால் ஒரேயடியாக அடங்காமல் வெறித்தனத்தில் போக வேண்டும் என்று ஆகாது. துரதிருஷ்டவசமாக இப்போது அப்படித்தான் ஆகிக்கொண்டு வருகிறது. இது, புருஷர்களைவிட அடங்கியிருக்க வேண்டிய ஸ்த்ரீகள் அப்படியில்லாமல் பெளருஷ வியாபாரங்களில் ஈடுபடுவதன் தொடர்ச்சியாக, அவர்களை மிஞ்ச வேண்டும் என்று புருஷ வர்க்கம் போகிற போக்கால்தான். அதன் நிகர விளைவாக, ஸாத்விகத்துகும் மனத்ருப்திக்கும் பெயரெடுத்த நம் தேசத்தில் ஒரே ஹிம்ஸையும் அதிருப்தியும் அசாந்தியும் போட்டியும் பூசலும் வலுத்து வருகிறது. இப்படியே போனால் தேசமே ரண பூமியாகி விடும்.

அப்படி ஆகாமல் காப்பாற்றுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் அடங்கியிருக்க ஆரம்பித்தால்போதும், அடுப்படியிலிருந்து விறகை இழுத்தால் மேலே பொங்க ஆரம்பிக்கிற பால் தானே தணிகிற மாதிரி புருஷர்களின் வெறித்தனமான அடங்காமை கட்டுப்படும். தேசம் ரண பூமியாகாமல், ஸ்வர்க்லோகமாக மாறும்.

அடக்க குணம் மட்டுமில்லை; ‘பெண்மை’ என்பதற்கே விசேஷமாக உரித்தானதாக நான் சொன்ன எல்லா குணங்களும் இன்றைக்கு விருத்தியாக வேண்டும். அப்படி ஆனால்தான் பல தினுஸான வனமுறைகளால் அஸுரலோகமாகிவரும் தேசத்துக்கு லகான் போட்டு, சாந்தியும் த்ருப்தியும் ஸெளக்யமும் goal – ஆக இருக்கிற பாதையில் திருப்பிவிட்டதாகும். நமக்கு தர்மங்களை வகுத்துக் கொடுத்திருப்பவர்கள், தர்மம் என்ற வ்ருக்ஷத்துக்கு ஸ்த்ரீகளே வேர் என்ற உயர்ந்த அபிப்ராயம் உடையவர்கள். ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: என்றே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றேன். ‘மூலம்’ என்றால் வேர். வேர் நன்றாக இருந்துவிட்டால் மரம் முழுசுமே நன்றாக இருந்து விடுமல்லவா? அப்படி, ஸ்த்ரீகள் தங்கள் தர்மத்தில் ஸரியாய் இருந்துவிட்டால் போதும், புருஷர்களும் அப்படி ஆகி, லோகமே தர்மத்தில் நிலைப் பட்டுவிடும். அதுதான் இப்போது கார்யம்.
இத்தனை ஆயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் பெண்மை என்று இருந்து வந்திருப்பதை எப்படியாவது நாம் ரக்ஷித்துத் தர வேண்டியதே கார்யம். அதை நாம் ரக்ஷித்துக் கொடுத்தால் அது நம்மை ரக்ஷிக்கும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தர்மத்தை ஒருத்தன் ரக்ஷித்தால் அந்த தர்மம் அவனை ரக்ஷிக்கும் என்று மஹாபாரத வசனம். அப்படி தர்மம் என்று மநுஷ்ய ஜாதிக்குப் பொதுவாக இருப்பதில் குறிப்பாக ஸ்த்ரீ தர்மம் என்பதை இன்றைக்கு அந்த ஸ்த்ரீகள் ரக்ஷித்துக் கொடுத்தாலே புருஷ தர்மமும் தன்னாலேயே சீர்ப்பட ஆரம்பித்து எல்லா இடத்திலும் தர்மமும், அதோடு கைகோத்துக்கொண்டு வருகிற க்ஷேமமும் தழைக்கும்.

இதுதான் ஸமூஹம் முழுவதன் க்ஷேமத்தையும் உத்தேசித்து நான் பெண்களுக்குச் சொல்வது. ‘உங்களுக்கு இல்லாத எந்தப் பெருமையும் புருஷர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கே ஜாஸ்திப் பெருமை. அப்படி யிருக்கும்போது நீங்கள் ஏன் அவர்கள் மாதிரி ஆக வேண்டும்? அப்படி உங்களைக் குறைத்துக் கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே உசந்து நில்லுங்கள்’ என்று சொல்கிறேன்.

இப்போது மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் அம்பாள் பக்திவளர்ந்து வருகிறது. இப்படி ஸ்த்ரீ ரூபமாகப் பரமாத்மாவை பக்தி பண்ணுவதில் ஸ்த்ரீகள் விசேஷமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அம்பிகைதான் ஸ்த்ரீகளுக்குத் தாங்கள் ஸ்த்ரீகளாகவே இருக்கவேண்டும் என்ற ப்ரஜ் ஞையையும், அதிலேயே பெருமித உணர்ச்சியையும் ஊட்டி சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களால் இத்தனை காலம் சோபையுடன் வாழ்ந்து வந்த ஸ்த்ரீத்வத்துக்கு – பெண்மைக்கு – இக்காலத்திலும் எக்காலத்திலும் ரக்ஷணம் தர வேண்டும்.

As I said that I intentionally did not share the Penmai document to you in the beginning to ensure that we all read each of these articles fully. Now that we are done with this series, I am giving you the link for this entire article.

Click here to download

 



Categories: Upanyasam

Tags:

12 replies

  1. where is the link sir

  2. What a realized soul like Paramacharya says has to become true and this is inevitable ….. but unfortunately we have failed to heed paramesvaran and his words “…. ippadiye poonal desame rana boomi ayvidum” has become true.

    Men have gone berserk and it is indeed a tragi-comical scene looking at people agitating for action from the government when the next horrific action unfolds… while the medicine is with us. Stree dharmam as enunciated by Periyavaa is the solution.

    Remember the violation in the night in a mill compound – the girl who was unfortunately violated had no business to be there – fundamental. But if i go out and say this in a forum of intellectuals, i will be pelted with stones!

    Even the western thought understands that liberty and freedom are subject to limitations so that the society has reasonable chances of survival. But on this aspect of Feminism western thought has taken a nose dive as business motives and market size has trumped sanity. Thanks to Gurumurthy of Indian Express who pointed out the fundamental fact that as feminism grows market opens up exponentially. So the bed rock of feminism lies in Economics and greed and not elsewhere.

  3. Mahaperiyavaa’s deergadarshanam and compassion towards society and his divine ability to analyse the root cause is very much evident in this whole article.
    Many many thanks to Sri Maheshji for bringing out this article in such a beautiful way.
    In my honest opinion, this book should be given along with ‘Sundara Kandam’ during Kasi yatra.
    I also have a humble request at the feet of esteemed hindu gurus. They should set up pre-marital counselling for their sishya’s children, atleast a month before marriage.
    In my honest opinion, teaching the concepts of marriage as elucidated by Sri Maha Periyavaa in this ‘penmai series’ as well as important concepts as enlisted in our sampradaya are very much essential in these dark times, when the institution of marriage is facing such a crisis.
    Already other religions are doing these – see christianity or islam, they have a month of pre-marital counselling for their ‘to-be’ husband and wife.
    Society is like a small kid and it takes what is given to it. If you give them good, they will surely make the choice of taking good.
    There is bad content in all media, advertisement, newspapers, radio, etc., there is absolutely no choice of having a good content.
    If in this place, if a fresh choice like our Mahaswamy’s good sayings are there, then people will surely reach out for it.
    So much of bashing has been done to ‘Manu Smrithi’ by the so called ‘elitist’ and ‘feminist’.
    Feminism is now seen as a great damage, even by western society and is given up there, but we in India are as always, the last to follow.
    As Sri Mahaswamy points out – we in India never had women enslavement – can you imagine anywhere,
    1) women told till 1945 that they had no souls?
    2) women being put into a gunny bag kind of dress – so that they will not disturb the males?
    3) women being tortured or stonned for wearing make ups?

    All these are products of western culture. Christianity until 1945 did not recognize women having souls. Women, were even considered evil as they induced their so called ‘adam’ with the ‘original sin’.
    Where as in India, the female form was risen to the level of God and was worshipped. They were said to be divine ones and should be worshipped. Such was our system. See where we have come to be.

    Lets start inculcating good habits for female children from childhood and also educate the male children from childhood to view females as embodiment of motherly love and compassion.

    We see male kids being sent to school with vibhuti or thiruman on their foreheads – they are asked to follow the shastras, but for the females – we forgot everything…
    Even braiding the hair is now lost and we have switched to cutting the hair as short as a male.
    The female child is not asked to wear vibhuti or srichoornam or even a small tilakam.
    Worse, when they come home, there is no one to guide them and all they get to know is through the worst mega serials, which portray women as if they are villans..
    What memory will a child carry into adulthood if there is no sense of belonging that they are females in the first place?

    First the mothers must themselves change, then will the change penetrate into the children and society will change for good. Calling the child’s father by name is the first thing the child learns – if the mother herself calls her husband by name – see the level of respect that’s taught to the kid.

    I pray to Sri Mahaswamy’s lotus feet to guide us in the path.

    Seeking the grace of Sri Mahaswamy,

    Thanks and regards,

    P. Vijay

  4. Thanks for this pdf, I had been looking for this.

  5. அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் தொகுப்பு . திருமண தம்பதியர்க்கு அன்பளிப்பாக கொடுக்கவேண்டிய நூல் .
    வாழ்க உங்கள் தொண்டு

    அன்புடன்
    அனந்தகிருஷ்ணன்

  6. “அந்த அம்பிகைதான் ஸ்த்ரீகளுக்குத் தாங்கள் ஸ்த்ரீகளாகவே இருக்கவேண்டும் என்ற ப்ரஜ் ஞையையும், அதிலேயே பெருமித உணர்ச்சியையும் ஊட்டி சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களால் இத்தனை காலம் சோபையுடன் வாழ்ந்து வந்த ஸ்த்ரீத்வத்துக்கு – பெண்மைக்கு – இக்காலத்திலும் எக்காலத்திலும் ரக்ஷணம் தர வேண்டும்.”
    Om Shakthyai Namaha! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  7. Could someone direct me to a good and full translation of the Penmai series please?
    Thanks in advance.

  8. I am not able to either save or copy Penmai.pdf book for later reading? What is to be done. Canyou kindly advise?
    Regards

Leave a Reply to shanmuganandaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading