ஸ்ரீ குரு கீதை

Thanks to Hinduism for sharing this..

Namaskarams to our great guru parampara HH Mahaperiyava, HH Pudhu Periyava and HH Bala Periyava…

 

1888473_616442668409685_526532623_n

ஸ்ரீ குரு கீதை …
எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை

– “ஸ்ரீ குரு கீதை”

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

ஸதாஸிவ-ஸமாரம்பாம் ஸங்கராச்சார்ய-மத்யமாம்
ஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:

ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
ஜகதாம் குருவர்யஞ்சகாமகோடிதிவம் சிவம்
ஸ்ரீ சந்தரசேகரம் குரும் ஸ்மராமி.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி –
குருவுக்கும் குருவான பெரிய குரு, ஆதி குரு.
ஸர்வேஸ்வரா, உனக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
…..
அகத்தியர் மூல மந்திரம் …
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம

கும்பமுனி அகத்திய மகாபிரபு திருவடி சரணம்
ஓம் அகத்தீசாய நம:
…..
“குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி”Categories: Bookshelf

Tags:

1 reply

  1. Srio Guruibhyo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

%d bloggers like this: