பெண்ணினத்தைப் பழிவாங்குவது

 

namavali102

அவர்களுடைய உக்ரம் பொது ஸமூஹம் முழுதையும் பாதிக்கத்தான் செய்கிறது என்றாலும், அந்த ஸமூஹத்திலும் குறிப்பாகப் பெண்களை வஞ்சம் தீர்த்துக் கொள்கிற மாதிரியே அநேகம் நடப்பதையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால் நான் சொல்கிற காரணம் – இன்றைய புருஷ வர்க்கத்தின் அடங்காப்பிடாரித்தனம் ஸ்த்ரீகள் அடக்கத்தை விடுவதன் ‘ரியாக்க்ஷன்’தான் என்ற காரணம் -பைத்தியக்காரத்தனமானதில்லை என்று ஒப்புக் கொள்ளத் தோன்றலாம்.

பெண்களை எப்படி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்? பல விதங்களில் அப்படிப் பண்ணுகிறார்கள். முன்னேயெல்லாம் எங்கேயோ ஒன்றாகக் கேள்விப்பட்டு கொண்டிருந்த தப்புக்களை, குற்றங்களை இப்போது பெரிய அளவில் தேசம் பூராவிலும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஈவ்-டீஸிங்’ என்று பெண்ணைச் சீண்டுவதில் ஆரம்பித்து.. சொல்லவே வாய் கூசுகிறது.. அவர்களை வஸ்திராபஹாரணம் பண்ணி ஊர்வலமாக இழுத்து வருவது, பல பேர் சேர்ந்து மானபங்கப் படுத்துவது என்றெல்லாம்  ‘ ந்யூஸ் ‘ தினந்தினமும் வந்து கொண்டிருக்கும்படி ஒரே உத்பாதமாகப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஸினிமா,  ட்ராமாக் காட்சிகளிலும் இந்த மாதிரிப் பல தினுஸில் கொடுமைப்படுத்திக் காட்டுகிறார்கள் என்றும், கதைப் புஸ்தகங்களும் இந்த மோஸ்தரிலேயே வந்தபடி இருக்கின்றன் என்றும் தெரிகிறது. இந்த லிஸ்டில் இன்னொன்று: வரதக்ஷிணை, சீர் போதிய அளவு கொண்டு வரவில்லை என்று பெண்டாட்டிமேல் கெரஸினாயில் விட்டுக் கொளுத்துவது, தினமும் பேப்பரில் இப்படி 2-3 ந்யூஸ் வருகிறது என்றால் வராமலே ரஹஸ்யமாக நடப்பது இன்னும் எத்தனையோ இருக்கும்.

எல்லாத் துறைகளிலும் ஸ்த்ரீகளுக்கு நிறைய ஸ்தானம் கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் ஆண்களிலேயே பல பேர் ‘ஸின்ஸியரா’கச் சொல்லிக்கொண்டு,  சொல்வதைக் கார்யத்திலும் அமல்படுத்தி வருகிறபோதே இன்னொரு பக்கம் இப்படி ஸ்த்ரீகளை மேலே சொன்ன மாதிரியெல்லாம் அநியாயமாக, அக்ரமமாகக் கொடுமைப் படுத்துவதாகவும் நடந்து வருகிறது. அநியாயம்தான், அக்ரமந்தான். மனஸ் பொறுக்கவே மாட்டேன் என்றுதான் ஸங்கடப்படுகிறது. ஆனாலும் என்ன பண்ணலாம்? இயற்கை என்கிற மஹாசக்தி பார்த்துப் பார்த்து ரூபம் பண்ணியிருக்கிற ஒழுங்குமுறை என்ற அணைக்கட்டை நாம் புரிந்துகொள்ளாமல் நல்லெண்ணத்தின் மேலேயே ஏதாவதொரு விதத்திலே உடைப்பெடுத்துக் கொள்ளப் பண்ணிவிட்டால் அது பயங்கரமாக ரியாக்ட் பண்ணி இன்னொரு விதத்தில் அதைவிடப் பெரிசாக உடைப்பெடுத்துக் கொள்கிறது!

ஒரே தீர்வு

இது காரணம்.

ஸொல்யூஷன்?

இயற்கையின் ஒழுங்குமுறைக்கே திரும்புவதுதான்! ‘அது ஒழுங்கேயில்லை. நாம் முயற்சி பண்ணி ஒழுங்கு பண்ண வேண்டிய ஒன்றுதான்’ என்று குறுகிய பார்வையில் தப்பாக நினைப்பதை தைரியமாக விட்டு, ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் எடுக்கிற நடவடிக்கைகளைக் கைவிடுவதுதான் ‘ஸொல்யூஷன்’. அதாவது ஆண்களின் அடங்காமை அஸுரத்தனம் அடங்க வேண்டுமானால் அதற்கு வழி, பெண்கள் பழைய நாள் வழக்குப்படி அடக்கமாக இருந்து கொண்டு, அகத்தோடு தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதுதான். அதுதான் பெரிசாகப் பிய்த்துக் கொண்டிருக்கிற உடைப்பை மண் கொட்டி அடைக்கும்.  எப்படி நடந்தது என்றே தெரியாமல் இந்தப் பெரிய மாற்றம் ‘மாஜிக்’ மாதிரி நடந்துவிடும். யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இப்படித்தான் என் மனஸுக்கு ‘ஸ்ட்ராங்’காகப் படுகிறது. பெண்மை என்பதற்கு அங்கமாக சாஸ்த்ர வழி, சிஷ்டர்களின் வழி ஆகியவற்றில் என்னென்ன சொல்லியிருக்கின்றனவோ அவற்றைப் பேணி வளர்ப்பதே ஆண்களை நாகரிக ஸமூஹ வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரிக் கட்டுப்படுத்திவிடும் என்பதுதான் எனக்குத் தெரிகிற ஒரே ‘ஸொல்யூஷன்’.

முடியுமா என்றால், மனஸ் மட்டும் இருந்துவிட்டால் முடியாததேயில்லை. நாங்கள் சொல்கிற ஸொல்யூஷனில் ஸ்த்ரீகளால் முடியாததாக ஒன்றும் இல்லவே இல்லை. மேல் பரப்பிலே அவர்களுடைய போக்கு எப்படியிருந்தாலும் உள்மட்டத்திலே அவர்களுடைய இயற்கையே அடக்கமாயிருப்பதுதான். கொஞ்சம் மனஸ் மட்டும் வைத்துவிட்டால் போதும். அவர்கள் ரொம்பவும் ‘ஈஸி’யாக அப்படி ஆகிவிடமுடியும் கொஞ்சத்தில் கொஞ்சம் அந்த வழியில் போனாலும் அதிலேயே, அவர்கள் இப்போதைய முன்னேற்றங்களில் பெறுவதை விட அதிகமான ஆத்ம த்ருப்தியையும் நிம்மதியையும் கண்டுகொள்ள முடியும். இப்போதைய போக்கில் த்யாகமாகத் தோன்றுகிற சிலவற்றை அவர்கள் கொஞ்சம் பண்ணினாலும் போதும், பெரிய லாபம் கிடைக்க ஆரம்பிக்கும்.

அதுவே மேலே மேலே அவர்களை அழைத்துக் கொண்டு போகும். அப்போது த்யாகம் என்பதே கஷ்டப்படுத்துகிற ஒன்றாக இல்லாமல், அந்தராத்மாவைத் திருப்தியில் ரொப்பி வைக்கிற ஒன்றாக இருக்கும். அதன் அஸ்திவாரத்தில் பிரேமை, பொறுமை, ஸேவை, பணிவு முதலிய எண்ணம் தாமாகவே வந்து கைகூட ஆரம்பிக்கும்.

இயற்கையை மீறுவதுதான் மஹா கஷ்டம். அந்தக் கஷ்டத்தை ‘ஈஸி’யாகப் பண்ணியவர்கள், இயற்கையோடு ஒத்துப் போகிற ‘ஈஸி’க் கார்யத்தை எளிதாகப் பண்ண முடியாதா என்ன? மனஸ் இருந்துவிட்டால் பண்ணி விடலாம். அப்படி அவர்கள் மனஸ் வைப்பதற்கு அம்பாள்தான் க்ருபை பண்ண வேண்டும்.

ஸமத்வந்தான் வேண்டும் என்று இப்போது அவர்களுக்குத் தீவிரமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது த்யாகம்தான் வேண்டும் – குடும்பத்துக்காக, லோகத்துக்காக, பிரபஞ்ச இயற்கை தர்மம் பிறழாமலிருப்பதற்காகப் பெண்கள் த்யாகிகளாக அடங்கியிருக்க வேண்டும் – என்றால் அது நேர்மாறுதானே? அதனால் அது இக்காலப் பெண்களுக்கு புருஷ வர்கத்தின் கொடுங்கோன்மை என்றே தோன்றும்; ‘ஏன் த்யாகம் செய்ய வேண்டும், ஏன் அடங்கியிருக்க வேண்டும்? என்றே தோன்றும். அதனால்தான் அம்பாளின் அநுக்ரஹத்தை வேண்டுகிறேன். நம் சக்தி, ஸாமர்த்யத்தால் முடியாததையும் அந்தப் பராசக்தியின் அநுக்ரஹம்தான் செய்யமுடியும்.

 Categories: Upanyasam

Tags:

6 replies

  1. குருவே சரணம்! அவர் திருவடி சரணம்! குருவின் திரு வாக்குப்படி அம்பாள் அனுகிரகம் பண்ண வேண்டும்.

  2. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Maha Periyava anaivaraiyum nalvazhiyil nadaththich chellattum!

  3. A thought-provoking article. But it has literally become egg-and-chick story now. The reason for the equal status claimed by women is the long period of suppression in the name of male domination. But more than that I would say, it is the gradual erosion of values. If every individual – whether female or male – appreciates our culture and its values and begin following those principles instead of trying to copy the western culture, the progress will be much faster and stronger.

  4. yaar sonnaalum ‘aanaadhikkam’ endru kanditthuviduvaargal. aanaal ‘periyavaa’ sonnaaal..? indraikku oru periya asingam nadandhukondirukkiradhu. adhudhaan pengalai melum melum kocchaippadutthugiradhu. ‘thirumanam seidhukolgiren endru oruvan sonnaanaam , adhai nambi ori pen than udalai avanukku thirimanatthirke munbe kodutthu viduvaalaam. piragu , avan emaatrivittaal, “avan ennai karpazhitthuvittaan” endru policil pugaar seivaalaam . polisum action edukkumaam ! idhu enna petthal ? pulanadakkam oru pennirku illayendraal avalai yaardhaan madhippaargal / ‘”aangalo, aasai arubadhu naal, moham muppadhu naal” endra vidhippadi nadandhukolbavargal. Pengalai pengaledhaan kaappatrikkolla mudiyum. ‘Periyava’ adhaitthaan kanniyamaaga aruliyirukkiraar.

  5. ஸ்திரீகள் அடக்கத்தை விட்டது முக்ய காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. உதாரணமாக கோர்ட்டின் அவமதிப்புக்கு ஆளானால் சிறை தண்டனை கொடுக்க படுகிறது. ஆனால் பெண்கள் அடக்கமின்றி கணவனை அவமதிக்கும் போது அவர்கள் தண்டனை ஏதும் பெறுவதில்லை. கணவன் கையை ஓங்கினால் சட்டம் அவனுக்கு பெண்கள் பாதுகாப்பு என்ற சட்டததில் தண்டனை கொடுக்கப்படுகிறது. சட்டமும் சமூகம் சென்று கொண்டிருக்கும் வழியும் சரியில்லை.

  6. Can somebody provide English Translation?

Leave a Reply

%d bloggers like this: