ஸ்த்ரீ-புருஷ ‘ஈகாலஜி’!

Last para is the real punch-line message.Previous two paragraphs are typical Periyava’s messaging style!

namavali020

ஆண்மை-பெண்மைகளுக்கிடையே போட்டியே இல்லை; அவை ஒன்றுக்கொன்று complementary – யாகப் பரஸ்பரம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியவைகளே, ஒன்றுக்கொன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக வேண்டியவை. ஒன்றாகக் கலந்துவிட்டால் இரண்டின் ரூபமும் போய்விடுமாதலால் அப்படிப் பண்ணக்கூடாது. ஒரு தாரசில் இரண்டு தட்டுக்கள் வேறேயாக இருந்து கொண்டு ஒன்றுக்கொன்று ‘பாலன்ஸ்’ பண்ணிக்கொள்கிற மாதிரியேதான் இதுவும்.

ஸ்த்ரீ-புருஷ ‘ஈகாலஜி’!

இப்போது ஒரு ‘logy’ ரொம்பவும் அடிபடுகிறதே, ecology ecology என்று! அதிலே என்ன சொல்கிறார்கள்? “நேச்சரில் நாடு, காடு, அவற்றில் விதவிதமான தாவரங்கள், ம்ருக ஜாதிகள் என்று பல வித்யாஸங்களோடு இருக்கின்றன. அப்படி வித்யாஸமாயிருந்தாலும் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கமைப்பில் தாங்கி நிற்கும் ஒரு ‘பாலன்ஸிங் ஆர்டர்’ இயற்கையில் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான பாலன்ஸ் – தராசு. அதாவது ஏற்றத்தாழ்வு இல்லாமல், எல்லாவற்றையும் ஸமமாக்குகிற பாலன்ஸாக இல்லாமல், ஏற்றத் தாழ்வுகள் இருந்தே தீர்கிற அஸமத்வத்திலும் (ஸமமற்ற தன்மையிலும்) ஒரு ஒழுங்குப் பாட்டை – order -ஐ ஏற்படுத்டுகிற பாலன்ஸ், இப்படி ஒன்றுக்கொன்று நுட்பமாக ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டு இருக்கும்படியாக இயற்கை – இயற்கை என்ற பெயரில் இருக்கிற ஈச்வர நியதி – வைத்திருப்பதை ‘அப்ஸெட்’ பண்ணப்படாது; அதை ‘டிஸ்டர்ப்’ பண்ணப்படாது. பண்ணினால் இயற்கை முறைத்துக்கொண்டு பழிவாங்கும். புலி, பாம்பு போன்ற க்ரூர ஜந்துக்கள் உள்பட எல்லாவற்றுக்கும் அததற்கான விகிதாசாரப்படி இடமுண்டாகையால் அவற்றைக்கூட ஒழித்துவிடக் கூடாது. குறுகிய கண்ணோட்டத்தில் நல்லவை என்று நினைத்து அதற்காக இந்த ‘ஈகலாஜிகல் பாலன்’ஸை மாற்றப் பார்த்தால் பிற்பாடு பெருத்த விபரீதமாகும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த உண்மையில் எல்லோருக்கும் விழிப்பு ஏற்படுத்தவேண்டும், awareness create பண்ண வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். நல்ல கார்யந்தான்.

ஆனால் இந்த ஈகாலஜி மாதிரி ஸ்த்ரீ-புருஷ ஈகாலஜி என்றும் ஸூக்ஷ்மமாக ஒன்று இருக்கிறதென்பதையும் அதன் பாலன்ஸைக் கெடுத்தாலும் விபரீதம் என்பதையும், அந்த விபரீதம் ஸூக்ஷ்மமான மனோலோகத்திலேயே முக்யமாக நடக்கிற ஒன்றானாலும், அதோடு நின்றுவிடாமல் ஸ்தூலமாகவே இந்த லோகத்தையும் ஒரு அடங்காப்பிடாரி ஸமூஹமாக ஆக்குகிறமட்டில் ஆபத்து நீளும் என்பதையுந்தான் ஒருத்தரும் கவனிக்கமாட்டேன் என்கிறார்கள். அதைக் கொஞ்சமாவது கவனித்து எச்சரிக்கை செய்கிற எங்களைப் போன்றவர்களை முன்னேற்றத்துக்கு விரோதிகளான பிற்போக்குவாதிகள் என்று மொத்துகிறார்கள். அடங்கிக் கிடக்காமல் துணிச்சலாக ஸாஹஸத்தில் போவதுதான் முற்போக்கு என்கிறார்கள். ‘Dash and drive வேண்டும்’ என்று இதற்குப் பேர் கொடுத்துச் சொல்கிறார்களாம். எனக்கோ இதைக் கேட்கும்போது என்ன தோன்றுகிறதென்றால்: ‘ஒரு மலையிலே கிடுகிடு பள்ளத்தில் கொண்டு தள்ளுகிற விளிம்பை நோக்கித்தான் இவர்கள் முற்போக்கு என்ற பெத்தப் பெயரில் முன்னேறிக் கொண்டுடிருக்கிறார்கள். இந்த முற்போக்கைத் தடுத்து அதை எப்படியாவது பின்னே தள்ளவேண்டிய பிற்போக்கு காரியந்தான் இப்போது ஆபத்து வராமல் காப்பாற்றும். இல்லாவிட்டால் Dash and drive சொன்னவர்கள் தங்களுடைய வழியிலேயே ‘டிரைவ்’ பண்ணிக்கொண்டு போய் மலை விளிம்பிலிருந்து விழுந்து ‘டாஷ்; ஆவதில்தான் முடியும்’ என்றே தோன்றுகிறது.

இன்றைய க்ரூரப் போக்குக்கு அடிப்படைக் காரணம்

ஆண்-பெண்களுக்கு இடையிலான ‘ஈகாலஜிகல்’ பாலன்ஸை ‘அப்ஸெட்’ பண்ணி, பெண்ணாகப் பிறந்தவள் ஆணின் பெளருஷத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் நேச்சர் – இயற்கை – அதைச் சும்மா அப்படியே விட்டு விடவில்லை என்று ப்ரத்யக்ஷமாகப் பார்க்கிறேன்; நன்றாகவே பார்கிறேன். இந்த விஷயம் – நான் இப்போது சொல்லப் போகிற விஷயம் – கொஞ்சகாலமாகவே என் மனஸில் ஆழமாக இருந்து வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால்; பெண்ணாய்ப் பிறந்தவர்கள் தங்கள் மென்மையைக் குறைத்துக் கொண்டு ஆண்மையின் வன்மையை எடுத்துக்கொண்டால் அப்போது ஆண் வர்க்கத்தின் இயற்கை இப்படி ஆணும் பெண்ணும் ஸமமானதை ஒப்புக்கொள்ள மறுத்து, தான் மேலும் வன்மையில் இறங்குகிறது. அதனால் எங்கே பார்த்தாலும் அஸுரத்தனமான க்ரூரப் போக்கு தலைதூக்குகிறது.

தற்காலத்தில் ம்ருக வர்க்கம், மநுஷ்ய  வர்க்கம் என்று இரண்டைப் பிரித்து  ம்ருக வர்க்கம் மநுஷ்ய  வர்க்கத்தை விட வன்மையானது  என்று பொதுப்படச் சொல்கிறோம். பழைய காலங்களில் க்ரூரமான ம்ருங்கள் மாதிரியே, அல்லது அதை விடவும் க்ரூரமாக, ஆறறிவு படைத்த ஜீவர்களாக அஸூர வர்க்கம், ராக்ஷஸ வர்க்கம் என்றெல்லாமும் இருந்தன. அதே மாதிரி மநுஷ்ய வர்க்கத்தை விட மென்மை படைத்த தேவ வர்க்கமும். இப்போதும் இந்த தேவாஸுர சக்திகள்  ஸூக்ஷ்மமாக இருக்கவே செய்கின்றன. இப்போது  ஏன் இந்த விஷயம் சொல்கிறேன் என்றால்: மநுஷ்ய வர்க்கத்தில் ஈகாலஜியில் வன்மை குறைந்தவளாக இருக்க வேண்டிய ஸ்த்ரீ அப்படியில்லாமல் புருஷனின் வன்மையை ஸ்வீகரிக்க ஆரம்பித்தால் அப்போது பாலன்ஸின் சீர் கெடுகிற தோல்லியோ? அப்படி ஆவதை புருஷ இன இயற்கை –race consciousness – அநுமதிக்காமல், தான் எப்படியும் பெண்ணை விட வன்மையில் ஒரு படி மேலேதான் இருக்கவேண்டும் என்ற உண்ர்ச்ச்யில் முன்னைவிட வன்மையுள்ளதாக, மேலும் சொர சொரப்பாக, முரட்டுத்தனமாக கொடூரமாக ஆகப் பார்க்கிறது. அதாவது, அஸுர ஸ்வபாவத்தை எடுத்துக் கொள்ளப் பார்க்கிறது. மநுஷ்ய ஜாதி ஸ்த்ரீஅந்த ஜாதிப் புருஷன் மாதிரி ஆனால், அந்தப் புருஷன் உடனே அஸுர ஜாதி மாதிரி ஆகிறான்!

ஏனென்றால் பல ரகமானவையும் ஒரே போல ஸமமாவதில் ஈகலாஜிகல் பாலன்ஸ் இல்லை; பல ரகங்கள் ஒன்றுக்கொன்று அஸமமாக இருந்து கொண்டிருக்கிற போதிலும் அவை ஒன்றுக்கொன்று சீராக அட்ஜஸ்ட் செய்து கொள்வதாகத்தான் இந்த விசித்ரமான பாலன்ஸ் இருக்கிறது! அதனால் ஒருவிதமானது இன்னொரு விதமாகிறபோது ஏற்படுகிற ஸமத்வத்தினால் பாலன்ஸிங் சீராவதற்கு நேர்மாறாக சீர் கெடவே செய்கிறது. அப்படி ஏற்படுவதை அந்த இன்னொன்றின் ‘நேச்சர்’ ஒத்துக்கொள்வதில்லை. உடனே அது வேறுவிதமாகத் தன்னை ரூபப்படுத்திக் கொண்டு, மறுபடியும் அஸமத்துவமான பாலன்ஸிங்கையே அமலுக்குக் கொண்டுவரப் பார்க்கிறது.

இருபது-இருபத்தைஇந்து வருஷமாகப் புதுத் தலைமுறை ஸ்த்ரீகளில் கணிசமானவர்கள் பெளருஷத்தில் அதிகம் ப்ரவேசிப்பதாக ஏற்பட்டு, நடந்து வந்து கொண்டிருக்கிறது. இவர்களை ஆண்களும் ஊக்கி வருகிறார்கள். இவர்களுக்கே தெரியாத உரிமைப் போராட்டங்களைக்கூட ஆண்களே இவர்களுக்குச் சொல்லி கொடுத்து ‘ஸரிநிகர் ஸமான’த்தில் இவர்களை உத்ஸாஹப்படுத்துகிறார்கள். ஆனால் இயற்கை – இயற்கைப்படியான பாலன்ஸிங், எடை கட்டல் – ஸரிநிகர் ஸமானத்தில் இல்லையே! அதனால், என்ன ஆகிறது? வெளியிலே புருஷர்கள் ஸ்த்ரீ-புருஷ ஸமத்வத்தை பலமாக ஆதரித்தாலும் உள்ளுக்குள்ளே அந்த இனத்துடைய  ‘நேச்சர்’ இந்த ஸம நிலைக்கு மேலே தங்கள் ஆண்மையைக் காட்டவேண்டும் என்று குமறிக்கொண்டு வெடிக்கிறது. அந்த ஆண்மையை அதிகப்படி வன்மையான க்ரூரமாகக் காட்ட ஆரம்பிக்கிறது. ஸரியாக இருபது-இருபத்தைந்து வருஷமாகத்தான் ஒரு பக்கம் ஸ்த்ரீகள் ஆண்மைக்கு வருவதன் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் புருஷர்கள் மேலும் மேலும் வன்முறைகளில் ஈடுபடுவதாக ஏற்பட்டு வந்திருக்கிறது.

நம்முடைய தேச நிலைமை பற்றித்தான் சொல்கிறேன். வெளிதேசங்களை விட நம் தேசம்தான் எப்போதும் ஸாத்விகத்துக்குப் பெயர் பெற்று வந்திருக்கிறது. வெளிதேசத்தவர்களும் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் எல்லாம் வன்முறை என்கிற ஹிம்ஸா மார்க்கமும் ரொம்ப காலமாக உண்டு; ஸ்த்ரீ-புருஷ ஸம்த்வமும் அதே மாதிரி உண்டு. நம் ஸ்த்ரீகள் மாதிரி அடக்கம், கற்பு முதலியவற்றை அந்த தேசத்து ஸ்த்ரீகள் அப்யஸித்ததுமில்லை. நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. இருப்பதைச் சொன்னேன். எந்த தேசத்திலும் உத்தமமான ஸ்த்ரீ-புருஷர்கள் எக்காலத்திலும் உண்டு. அப்படி அங்கேயும் உண்டு. அது ஒருபக்கம் இருக்க, நாம் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தின்படி மொத்தத்தில் அங்கேயுள்ள ஸ்த்ரீகளுக்கு நம் தேசத்து ஸ்த்ரீகளைவிடப் பெளருஷ தாட்பூட் ஜாஸ்திதான். அப்படியிருந்தாலும், அங்கேயும் அவர்களைவிட ஆண்கள் அதிக வன்மை, வலிமைகளளோடு இருந்துகொண்டுதான், அப்படிப்பட்டவர்களில் பலர் ஹிம்ஸா மார்க்கத்திலேயே போவது. எங்கேயானாலும் ஸ்த்ரீகளைவிடப் புருஷர்கள்தான் ஹிம்ஸா மார்க்கத்தில் போவது. விதி விலக்காகத்தான் எங்கேயாவது ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கு ஒரு ஸ்த்ரீ தலைவியாயிருப்பது.

விஷயம் என்னவென்றால், பெண் தன் மென்மையைவிட்டால், அவளோடு எப்போதும் வன்மையில் ஒருபடி மேலேயே இருக்கிற புருஷ இயற்கையானது, அவனிடம் மநுஷ்ய ஜீவன் என்பதற்குரியதாக வைத்துள்ள மென்மைக் குணங்களை அறவே விட்டு அவனை அஸுர ஜாதி மாதிரி முழுக்க வன்மையாகவே, வன்முறையில் போகிறவனாக ஆக்கிவிடுகிறது.

ஒருத்தரையொருத்தர் மிஞ்சுவதை one-up-manship என்கிறார்கள். இதற்கு நான் இப்போது ஒரு புது அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ‘Manship’ என்பதைப் ‘புருஷனின் தன்மை’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன். அது எப்போதும் ஸ்த்ரீயானவள் தனக்கு ஸமதை ஆகிவிடுவதைப் பொறுத்துக் கொள்ளாமல் ஒருபடி மேலேயே –one-up- ஆகப் – போவதிலேயே இருக்கிறது என்று பார்க்கிறேன்.

இப்படிப் புருஷர்கள் அதிக வன்மையில் போவது ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும், இரண்டும் கைகோத்துக் கொண்டும் நடந்து வருகிறது. இருபது-இருபத்தைந்து வருஷம் முன்னாடி ஆண்களில் மீசைப் பழக்கம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள்கூட மீசை வைத்துக் கொள்வதில் இது ஆரம்பித்தது.

அதுவரை ஹிம்ஸா மார்க்க – துர்மார்க்கங்களைச் சேர்ந்தவர் களோடேயே ஸம்பந்தப்பட்ட பயங்கரமான பல தினுஸான கிர்தா மீசைகளை எல்லோரும் வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதே மாதிரி ட்ரெஸ்ஸும், அதுவரை கொள்ளைக்காரர்கள், கைதிகள் ஆகியவர்களுடைய சித்ரங்களில் எப்படிப் போட்டார்களோ, அப்படிப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த வெளிவேஷத்தோடு நிற்கவில்லை.

Non-violence என்பதை வெளிதேசங்களிலும் ‘அஹிம்ஸை’ என்று டிக்க்ஷ னிரிகளில் ஏற்றுகிற அளவுக்கு ஸ்மீப காலத்தில்தான் காந்தி பண்ணியிருந்தார். அப்படிப்பட்ட தேசத்தில் terrorism, militancy , வன்முறை, பயங்கரவாதம் என்கிற வார்த்தைகள்தான் News பேப்பரைப் புரட்டிய இடத்திலெல்லாம் கண்ணில் படுவதாக இப்போது ஆக்கியிருக்கிறோம்! ஆங்காங்கே யாரோ சில பேர் chain-snatching , அடிதடி, கொலை-கொள்ளை, கூட்டமாக வீட்டிலே புகுந்து சூறையாடுவது என்று பண்ணிவந்தது நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல், ஸைன்யங்கள் மாதிரியே, போலீஸும் பயப்படுகிற மாதிரி, பெரிய பெரிய அமைப்பாக ரஹஸ்யமாகவோ, பஹிரங்கமாகவோ பல கூட்டங்கள் சேர்ந்து ராஜாங்கத்துக்கே ஒயாத தலைவலி கொடுத்து வருகிறார்கள்.

ஏனிப்படிப்பட்ட மாறுதல் நடக்கிறதென்றும், இதை எப்படி அடக்கி தேசத்தில் ஸத்வ குணத்தையும் சாந்தியையும் உண்டாக்குவது என்றும் நல்லறிவாளர்கள் எனப்பட்டவர்கள் சிந்தனை பண்ணி நிறைய எழுதியும் பேசியும் வருகிறார்கள்; பலவிதமான யோஜனைகள் சொல்லி வருகிறார்கள். எனக்குத் தெரிந்தது ஒரே காரணந்தான். எனக்குத் தோன்றுவது ஒரே ஒரு ‘ஸொல்யூஷன்’தான். சொன்னால் எவராது கேட்பார்களா என்று ஸந்தேஹம்தான். பைத்தியம் மாதிரி உளறுகிறேன் என்றே நினைக்கக்கூடும்.

ஆனாலும் சொல்கிறேன். மற்றவர்கள், Intellectuals எனப்படுபவர்கள் சொல்கிற காரணங்களெல்லாம் தப்பு என்று  நான் சொல்லவில்லை. அவையும் காரணமாயிருக்கலாம். அவற்றோடு, ரொம்பவும் முக்யமான காரணமாக எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன். ஏற்கனவே சொல்லியாகிவிட்டது; அதுதான்.

அதாவது, இப்போது வன்முறை ஜாஸ்தியாயிருப்பதற்கு எனக்குத் தோன்றுகிற முக்கியமான காரணம், இயற்கையில் அமைந்த ஸ்த்ரீ-புருஷ குணங்களின் பாலன்ஸைக் கெடுத்து ஸ்த்ரீகள் தங்கள் அடக்கத்தை விட்டுப் பெளருஷ வியாபாரங்களில் இறங்கி விட்டதுதான். அது பொறுக்காமல் இயற்கை – புருஷர்களின் இயற்கை – இன்னும் உக்ர ரூபம் எடுத்துக்கொண்டு பழிவாங்குகிறது. புருஷர்கள் ஒரேயடியாக அடங்காமையில் தலைகுப்புற விழுந்து பலவிதமான ஹிம்ஸைகளில் இறங்குகிறார்கள்.Categories: Upanyasam

Tags:

5 replies

  1. if women embracing modernity is the reason for all the increasing violence in humanity, and also against women, why was Draupadi stripped by dhushaasan…or Sita Devi abducted by ravana… shoorpanaka tried to entice a married man… indra tried to seduce Ahalya….

  2. Periyava’s view shud not be questioned. That is the disclaimer i read on your page when u started publishing Periyava’s ideas abt “sthreethwam”. Neither shud u provoke anyone by stating something as Periyava’s punch. He is embodiment of equanimity and we shud not make the mistake of embossing our views on His ‘statements’.

    • Admittedly, it is in the final para that Sri Mahaperiyavaa tells firmly His considered views. He Himself states this as the most important reason and hence there is nothing to otherwise to call last para as the punchline. This article is in a fairly long series on Sri Mahaperiyavaa’s view on the so called `women empowerment’ and nowhere I have seen anybody imposing his views. If only we realise the danger of current trend, it will be a great saviour for our religion and what we call as the Sanatana Dharma

  3. sariya sonnel periyava

  4. Excellent article indeed.we copy the western life without knowing the implications behind it.why our Vedas preach on the way the man and woman should lead the life. our Hinduism must prevail.ekambara dayanandan

Leave a Reply

%d bloggers like this: