I believe the 2nd part of this article was posted earlier but don’t recall the 1st part, which is more important to know the significance of respecting vaidheekas….Sorry if this is a repeat….
Thanks to Surya Narayanan of FB for the article.
தரணிபுகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீபெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்தஆச்சார சீலர்.ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்யவேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென்றார்.
பெரியவா “சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டுண்டிருந்தா போறுமோன்னோ?” என்றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்யயனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு.என இழுத்தார்.பெரியவா, “அதான் அதான்சரி. எல்லாரும் போடறா!அதுக்குபேர் அன்னதானம். ப்ராம்ஹணபோஜனம்னாலே வைதீகாளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹணா! பூணல் மட்டும் போட்டுண்டா போறாது,ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணும் என்றார்.
சரி! நன்னா போடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக்கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிகருக்கு சந்தோஷம்.பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார்.உங்க ஊர்லயே பண்ணப்போறயோ!என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண்றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனென்றார்.திருவிடமருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக்கறேன்!என்றதும் வந்தவருக்கோ பூமி நழுவிற்று. இப்படியொரு பாக்யமா!என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திருநாளும் வந்தது.
ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந்தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர்.100 வேதப்ராம்ஹணர்கள் வந்தனர்.அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்யப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.
அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட்.பேணி,லட்டு,அல்வா,போளி,மைசூர்பாக். இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதேபோல் எல்லாமும்.தனிகரின் கையோ முறம் போலுள்ளது.ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது.சாப்பிடவே முடியவில்லை.பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன்போன்ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.
ஒருபெரிய சாட்டாங்கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங்கே முன்னின்று, “எல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடு” என்றார்.
அனைவரும் முழித்தனர்.இலையிலேயே அதிகமாகயிருக்கிறது உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது.பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரியவாளுக்கு மரியாதைகுறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வதறியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், ”முடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷமில்லை என்றார்.
அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு!என்று சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு எழுந்து விட்டனர்.
தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி,அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின் இலையெடுக்கலாமென உத்தரவிட்டார்.அதேபோல் சதப்ராம்ஹணர்களுக்கும் தக்ஷிணையளிக்கப்பட்டு, வாசனை தாம்பூலமும் கொடுத்து கௌரவமாக வழியனுபப்பட்டது.
பெரியவா தனிகரை விளித்தார்
எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒருமொழுகாத கூடையும் வேணுமென்றார்.
சடுதியில் கொண்டு வரப்பட்டது.
இப்போ ஒரு ஒத்தாச பண்ணுங்கோ எனக்கு,இந்த மொழுகின கூடைல லட்ட தவிர எறிஞ்சமீதியெல்லாம் ரெண்டு கையால வழிச்சுப்போடணும்.மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார்.
அப்படியே செய்யப்பட்டது.மொழுகின கூடைய குப்பதொட்டில போடுங்கோ என்றார். அதுவும் செய்யப்பட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்துண்டு என்னோட வாங்கோ! நாலுபேர் போறும் கூட்டம் வேண்டாம்,அப்பா!நீ வா என தனிகரை அழைத்துக்கொண்டு தண்டத்தோடு புறப்பட்டார்.
விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார்.பெரியவா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்? ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.
ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்களின்கூட்டம் நம் சமயக்குரவரை மொய்த்துக்கொண்டது.
சாட்டாங்கூடையை மண் இல்லாத புல் தரயா பாத்து போடுங்கோ! என்றார்.
அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற!சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா?ப்ராம்ஹணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது,நானோ சந்யாசி!எனக்கு எல்லாரும் சமம். நீயோ ரொம்ப ஆச்சாரம்,இவாளுக்கு கொடுன்னா சேஷமாயிடுமேன்னு தோணும்.இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலாமேன்னு படறதா?படும்!படும்!! ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டாமேன்னும் படும் சரிதானே? எச்சல்இலைல இருக்கற பதார்த்ததுக்கு சேஷம்கற தோஷம் போயிடறதோன்னோ! யார் கொடுக்கப்போறா இவாளுக்கு ஸ்வீட்டெல்லாம்,பரிஜாரகாள கேட்டேன் எது உபரியாயிருக்குன்னு,அவா லட்டு தான் மிஞ்சிப்போச்சுன்னா,அதான் ப்ராம்ஹணா எலல போடச்சொல்லி இவாளுக்கு கொடுத்தேன் உன் ஆச்சாரத்துக்கும் குந்தகமில்லாம! இப்படி செய்யலாமோன்னோ!
என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார்.
அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே என.
Categories: Devotee Experiences
Divinity lies here.we ,all human being are blessed by mahaperiava to read the article on sage of kanchipuram.he is watching all of us from the samadhi indeed.where love is there god is.ekambara dayanandan.e mail address is dayanandan_personal @yahoo.com
idhuthaan periava!!!shankaraaaaaaaaa