வேத அத்யயனம் வேண்டாம்

This is an important and sensitive topic. I request someone to do translation so that others can benefit too.

ஸ்த்ரீகள் படிக்க வேண்டியதைச் சொன்னமாதிரியே படிக்க வேண்டாததையும் சொல்லவேண்டும். இப்படி நான் சொன்னால் கன்னா பின்னா புஸ்தகங்கள் படிக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்கிறேன் என்று எதிர்பார்பீர்கள். அதுவும் வாஸ்தவந்தான். ஆனால் கன்னா பின்னாவே இல்லாத இன்னொன்று, எல்லாக் கன்னா பின்னாக்களையும் போக்குகின்ற இன்னொன்றும் ஸ்த்ரீகளுக்கு வேண்டாம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதால் அதையும் நான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

வேதத்தைத்தான் சொல்கிறேன்.

வேதத்தின் தாத்பர்யத்தைச் சொல்லும் பல புஸ்தகங்கள் இருக்கின்றன. அவற்றை ஸ்த்ரீகள் படித்துச் தெரிந்து கொள்ளட்டும். நேரே வேதத்தைப் படிப்பதும் அதிலுள்ள ஸூக்தங்களைப் பாடம் பண்ணுவதும், புருஷர்கள் மாதிரியே அத்யயனம் பண்ணுவதும் வேண்டாம்.

இப்படிச் சொன்னால் ஒரே கோபமாகச் சில பேர் ஆக்ஷேபிக்கிறார்கள். ‘வேத, உப நிஷத, இதிஹாஸ புராணாதிகளைப் பார்த்தால் ஸ்த்ரீகளும் வேதத்தில் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றனவே! ஸ்த்ரீகளில் ப்ரஹ்மவாதினிகள் என்றே சொல்லப்பட்டவர்களும், மந்த்ரங்களைக் கண்டுபிடித்துச் கொடுத்த ஸ்த்ரீ ரிஷிகளும் கூட இருந்திருக்கிறார்களே’ என்று சான்று காட்டுகிறார்கள். பூர்வ யுகங்களில் அப்படி விதிவிலக்கு மாதிரியோ, என்னவோ, கொஞ்சம் இருந்திருப்பதை ஒத்துக் கொள்ளவேண்டியதே. ஆனால் அந்த யுகங்களில்  நடந்ததை இந்தக் கலியுகத்துக்குப் பொருத்துவதுதான் ஸரியில்லை. கலியுக ஜீவர்கள் அல்ப சக்தர்கள். அவர்களில் எது எவருக்கு ஆகும், ஆகாது என்பதற்கு தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து அதன்படிதான் பண்ண வேண்டும். தனிப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். ஒருவருக்கே இன்றைக்கிருக்கிற அபிப்ராயம் நாளைக்கு இல்லாமல் போகலாம். அதனால் இந்த அபிப்ராயங்களை வைத்துப் பொது ஸமூஹத்துக்கான எந்த முடிவையும் எடுப்பதற்கில்லை. தங்களுடைய தனி மநுஷ்யத் தன்மையை அப்படியே போக்கிகொண்டு ஆத்ம ஸாக்ஷாத்காரத்தையும் லோக க்ஷேமத்தையுமே நினைத்துக் கொண்டிருந்த ரிஷிகளை தர்மத்துக்கு அதிகார புருஷர்களாக ஈச்வரன் நியமித்து அவர்கள் மூலம் லோகத்துக்கான தர்ம-அதர்ம விதிமுறைகளை சாஸ்த்ரமாகக் கொடுத்திருக்கிறான். அந்த சாஸ்த்ரம் சொல்கிறதுதான் யாரும் ஆக்ஷேபிப்பதற்கில்லாத முடிவு. இங்கே நம்முடைய பகுத்தறிவைக் கொண்டுவந்து கேள்விகேட்டால் ப்ரயோஜனப்படாது. ஈசவர ஸ்ருஷ்டி தர்மத்தையும், மர்மத்தையுமே அந்த ஸ்ருஷ்டிக்குள் அகப்பட்ட இந்தச் சின்னூண்டுப் பகுத்தறிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றால் எப்படி முடியும்?

சீர்திருத்தவாதிகள் மேல்மட்டத்தோடு பார்த்துத் தங்களுக்கு நல்லதாகத் தோன்றுவதைச் சொல்கிறார்கள். அந்த மேல்மட்டம் நம்முடைய பகுத்தறிவின் எல்லைக்குள் வருவதால் நாமும் அந்தச் சீர்த்திருத்தக்காரர்களை ‘ஆஹா’ என்று பாராட்டிப் பேசுகிறோம். தர்ம சாஸ்த்ரத்தைத் தந்த ரிஷிகளோ உள்மட்டத்திற்கும் போய், ஈச்வர ப்ரேணையில் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த இடத்தில் ப்ரவேசிக்க நம்முடைய பகுத்தறிவால் முடியாது. நம்பிக்கையின் மேலேதான் அவர்கள் சொல்வதை எடுத்துக்கொண்டாக வேண்டும். நம்முடைய அப்படிப்பட்ட பூர்ண நம்பிக்கைக்குப் பாத்ரமாகும் யோக்யதாம்சம் பெற்றவர்களே அவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நமக்குத் தெரிந்த சீர்திருத்தவாதிகளைவிட அதீந்திரிய சக்தி பெற்ற ரிஷிகள்; லோக க்ஷேமத்தைப் பற்றிச் சீர்திருத்தவாதிக்கு இருப்பதைவிட அதிகக் கருத்துள்ளவர்கள். சீர்திருத்தவாதிகள் நினைக்கிற லோக க்ஷேமம் இந்த லோகத்தோடு நிற்பதுதான். ரிஷிகள் நினைத்த லோக க்ஷேமம் பரலோகத்தை லக்ஷ்யமாகக் கொண்டது. அதற்காக இந்த இஹலோகத்தை அவர்கள் தள்ளிவிடவில்லை. இதையே அதற்கு உபாயமாக ஆக்கிக் கொள்வதற்குத்தான் தர்மம், தர்மம் என்கிற ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்து, இந்த லோகத்தில் யார் எப்படிப் பண்ணினால் அவர்களுக்கும் நல்லது, மொத்த ஸமுதாயத்துக்கும் நல்லது என்று ‘ரூல்’கள் போட்டிருக்கிறார்கள்.

அப்படியொரு ரூல்தான் கலிகாலத்தில் ஸ்த்ரீகளுக்கு வேதத்தில் அதிகாரமில்லை என்பது. வேதம் படிப்பது எதனால்? அது நல்லதைச் கொடுப்பது என்பதால்தான். ஆனால் அந்த வேதமோ எல்லா ரூல்களையும் நமக்குப் புரிகிற மாதிரி codify செய்து கொடுக்கவில்லை! அப்படிப் பண்ணுவது எது என்றால் தர்ம சாஸ்த்ரங்கள்தான். ச்ருதி என்ற வேதத்துக்கு விளக்காக இருப்பது ஸ்ம்ருதியாகிற தர்ம சாஸ்த்ரம். வேதம் படிப்பது நல்லதைக் கொடுக்கும் என்று நமக்குத் தெரிவதே அந்த தர்ம சாஸ்த்ரம் அப்படிச் சொல்வதால்தான். ஆனால் அதே சாஸ்த்ரம் கலிகாலத்தில் அல்ப சக்தர்களான ஸ்த்ரீகள் வேதம் படித்தால் அது நல்லதைக் கொடுப்பதற்குப் பதில் கெட்டதைத்தான் உண்டுபண்ணும் என்று சொல்கிறதென்றால் அதைக் கேட்க வேண்டியது தானே? அது சொல்கிறபடியே Do’s ஐயும் Don’t’s -ஐயும் முறையே செய்வதும், செய்யாமலிருப்பதும்தான் நம் கடமை. சாஸ்த்ர ரூலையே மீறி சாஸ்த்ரம் படிப்பேன் என்றால் எப்படி? ‘பகுத்தறிவுக்கு எட்டும் காரணம் கேட்கப்படாது, நம்பிக்கையின் மேலேயே போகவேண்டும்’ என்று சொன்னேன். ஆனால் பகுத்தறிவுக்கு எட்டும் ஒரு காரணமும் இதற்கு இருக்கிறது. புருஷர்கள் செய்கிற மற்ற அநேக கார்யங்கள், துணிகரமான ஸாஹஸங்கள் ஸ்த்ரீகளும் செய்து ஜயித்தாலும் ஜயிக்கலாம். ஆனால் புருஷர்கள் வேத கோஷம் என்று கம்பீரமாக மந்த்ரங்களுக்குரிய ஸ்வரங்களின் ஏற்ற இறக்கங்களுடன் நாபியிலிருந்து சப்தம் எழுப்பி மணிக்கணக்கில் சொல்வதுபோல் சொல்வது ஸ்த்ரீகளாகப் பிறைந்தவர்களுக்கு முடியவே முடியாத கார்யம், வேத மந்த்ரங்களை அப்படி கோஷித்தால்தான் பூர்ண பலன். புருஷர்கள் அப்படி கோஷம் பண்ணிவிட்டு கை, கையாக நெய்யைச் சாப்பிட்டு சமனம் பண்ணிக் கொள்வது போல் பண்ணுவதற்கு ஸ்த்ரீகளின் ஜீர்ண சக்தி இடம் கொடுக்காது. பிடிவாதத்தின் மேல் ஸ்த்ரீகளும் பெருங்குரலெடுத்து வேத கோஷம் பண்ணினால், ஸ்த்ரீகளுக்கு என்றே இருக்கிற கர்ப்பப்பை முதலானவற்றுக்கும் பெரிய ஹானி உண்டாகும். இப்படி அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வதோடு லோகத்திலும் ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் பல கோளாறுகள் உண்டாகும். அந்த ஒரு சாரார் சாஸ்த்ரத்துக்கு அடங்க மறுப்பதே அத்தனை சாராரும் சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ராஜாங்கச் சட்டம், ஸ்தாபனங்களின் சட்டம், பெரியோர்களின் கண்டிப்பு முதலிய ஸகலத்துக்கும் அடங்க மறுப்பதற்கு தூபம் போடும்.

அடங்காமை என்பதுதான் இன்று நம்மைப் பீடித்திருகிற பெரிய தீமை. அது இருக்கிற வரையில் இன்றைக்கு லோகத்தில் உள்ள மாதிரி அசாந்திதான் ஸ்ர்வ வ்யாபகமாக இருக்கும். அந்த அடங்காமைக்கு மாற்று மருந்தாகத்தான் அடக்கத்தைத் தலையான அங்கமாகக் கொண்டுள்ள சாஸ்த்ரீயமான பெண்மையை இன்று எப்படியேனும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்பது. நேர்மாறாக, இந்த அடங்காமையை வேதத்தின் விஷயத்திலேயே கொண்டு வருவது மஹாபாபமாகும்.

வேதமோதும் உரிமை கோருவதேன்?

வேதத்தில் நிஜமான பக்தி இருந்துதான் அதைப் படிப்பேன் என்று ஸ்த்ரீகள் புறப்படுகிறார்களா என்றால் எனக்கு அப்படித் தோன்றவில்லை.  வேதத்தில் நிஜமான பக்தி இருந்துதால் அதன் ஸ்பிரிட்டை ரக்ஷித்துக் கொடுக்கிற தர்ம சாஸ்த்திரத்திலும் பக்தி-நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனபடியால் இப்போது சில பேர் இப்படி ஒரு போர்க்கொடி தூக்கியிருப்பதற்குக் காரணம் (ஆழ்ந்த, ஆழுத்தமான குரலில்) non-conformism தான் (மரபுக்குக் கட்டுப்படாமைதான்)! ‘இதுவரை சாஸ்த்ர ரீதியிலும் சட்ட ரீதியிலும் எதெதற்கு ஜனங்கள் கட்டுப்பட்டு வந்தார்களோ, நேற்று தாத்தா அப்பா வரை எப்படி ஒரு ஒழுங்குமுறையில் போனார்களோ, அந்தக் கட்டு எதற்கும் உட்படாமல் அறுத்துப் போட்டுவிட்டு, இஷ்டப்படி, மனம் போனபடிப் பண்ணுவேன்’ என்பதுதான் காரணம். லோகம் பூராவிலும் பரவியுள்ள ‘நான்-கன்ஃபார்மிஸ’த்துக்கு இது இன்னொரு உதாரணம்தான்.

ஒருபக்கம், சாஸ்த்ரம் ‘அத்யயனம் பண்ணு’ என்று சொல்கிற புருஷன், ‘எதற்குப் பண்ண வேண்டும்?’ என்று அதை விடுகிறான்; இன்னொரு பக்கம், அது ‘அத்யயனம் பண்ணாதே’ என்று சொல்கிற ஸ்த்ரீ, ‘ஏன் பண்ணாமலிருக்க வேண்டும்?’ என்று கேட்டுக்கொண்டு, தான் பண்ண வேண்டாததை, பண்ணக் கூடாததை எடுத்துக் கொள்ள வருகிறாள். இதே சாஸ்த்ரம் ஸ்த்ரீகளையும் அத்யயனம் பண்ணச் சொல்லியிருந்தால் அப்போது, “வேதாத்யயனம் பண்ணினால்தான் ஆச்சா? பக்தி பண்ணினால் போதாதா? நாமஸ்மரணமே போதாதா?” என்று புருஷர்கள் இன்றைக்குக் கேட்கிற கேள்விகளை அவர்களும் கேட்பார்கள்!

விஷயம், ஸ்த்ரீகள் வேதத்தில் நேராக ப்ரவேசிக்க வேண்டாம்; அவற்றின் பரம தாத்பர்யத்தை ஒரளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும்.

‘அத்யயனம் என்று பெரிசாகப் பண்ணாமல் ஏதோ ஒரு ஸ்ரீ ஸூக்தம், துர்கா  ஸூக்தம் சொல்கிறேனே!’ என்றால், இன்றைக்கு இப்படிக் கொஞ்சம் இடம் கொடுப்பதே நாளைக்குப் பெரிய துராக்ரஹத்தில் கொண்டுவிடும். அணையிலே ஒரு சின்ன உடைப்பு ஏற்பட்டால் அதுவே மேலே மேலே பெரிசாகிக் கொண்டு போய் வெள்ளக்காடாகி விடுகிற மாதிரி முடியும்.

வேதம் பெளருஷமான காம்பீர்யம் கொண்டது. அதைப் புருஷர்களுக்கு விட்டு விடுவோம். இன்றைக்கு அதர்ம வியாதி பிடித்துக் கிடக்கிற லோகத்துக்கு அருமருந்தாக வேண்டியிருப்பது ஸ்த்ரீகளின் மாதுர்யம்தான்; மென்மை, மென்மை என்று சொன்னதுதான். மனஸை உருகவைத்து அப்படி மதுரமாகவும் மென்மையாகவும் ஆக்குகிற ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ரங்கள், தமிழ் துதிப் பாடல்கள் ஆகியவற்றையே ஸ்த்ரீகள் சொல்லி லோகத்தில் மாதுர்யத்தை வளர்க்கட்டும்; தங்கள் க்ருஹங்களையும் மாதுர்யமாக ஆக்கட்டும்.



Categories: Upanyasam

Tags: ,

16 replies

  1. Highly convincing argument by Maha Periyaval.

  2. Anna, so glad to hear from you. I will try my best to get assistance from my Appa and translate this document to you as soon as possible. I would like to thank you for this opportunity in helping to spread Maha Periyava’s message.

  3. If someone could translate this for non-tamil devotees it would be of great help.

  4. பகவான் ரொம்ப கருணையான காரனத்தினலே பெரியவாளாக வந்து இத்தனை விளக்கங்களை கொடுத்து உள்ளார். இதை எதிர்த்து கருத்து சொல்வதற்கு தகுதி நம்முடைய மானுட அறிவுக்கு எட்டாத விஷயம். குதர்க்கமாக பேசுவதுதான் பகுத்தறிவு என்று நினைப்பில் அறிவுக்கு எட்டாத விஷயங்களை உண்மை இல்லை என்ற முடிவுக்கு மாந்தர் வந்து விடுகிறார்கள். ஹர ஹர சங்கர !

  5. Namaskaram Anna,

    I am willing to translate this document into english. I just wanted to know where I should post it.

  6. Am sharing this on my timeline in the FaceBook

    Hara Hara Sankara Jaya Jaya Sankara
    Kanchi Sankara Kamakoti Sankara

  7. nowadays everywhere gayathri mantra is being played in public place / supermarkets etc. that too in female voice. This gayathri mantra has to be chanted only after proper upadesam and it is called brahmopadesam and it is not for female. however here in mumbai in yoga classes, they teach gayatri mantra to women too. now we understand why natural calamities and other evil things happen quite often nowadays.

  8. eagerly awaiting for a translation EAGERLY AWAITING FOR A TRANSLATION thanks and regards

  9. Does anybody know what Periyava has told about chanting Vishnu sahasra naama and Lalitha sahasra naama by ladies? If so please share it…

    • Yes, women can and SHOULD chant Vishnusahasranamam, Lalitha Sahasranamam, etc. as per Sri Sri Periyvaa. You will see a lot of incidents where Sri Sri Periyava has re-iterated the same. It would be good if we get initiation from a Guru though. Irrespective it can be chanted. Care should be taken care when chanting these sthothras (cleaniniess, time, etc.). The restrictions for women are on Mantras/Vedas ONLY and not on Slokas and Sthrothras. Anything that contains Om and Namaha becomes a ‘Mantra’.

      Bhagavan Nama (like Rama, Krishna, Govinda, Siva, etc.) can and SHOULD be chanted irrespective of place, time, country, etc. There are ABSOLTUELY no restrictions in chanting Bhagavan Nama as it beyond all Niyamas (cleaniness, theetu, etc.).

      Jaya Jaya Shankara Hara Hara Shankara

      • Partly right. Initiation from a Guru is required for Lalitha Sahasranamam, be it a male or female. But Vishnu Sahasranamam is not to be chanted by women. Mahaperiyava did not wholeheartedly consent to women chanting the Vishnu Sahasranamam, although the famous recording of the same is by MSS, who is a great devotee of Mahaperiyava.

        There are ample evidences in the Phalasruti of VS for this.

        imam stavam bhagavathOr vishNor vyasena kIrtitam
        patedya icchet Puruṣhaḥ shreyah prAptum sukhAni cha

        In the above shloka the part “patedya icchet Purushah” indicates male.

        Further down, Sri Parameshwara extols the greatness of Rama nama at the request of Sri Parvathi devi, when She asks thus:

        PArvathyuvAcha-
        kEnOpAyEna laghunA viṣhṇOr nAmasahasrakam
        patyatE panditairnityam shrOtumicchAmyaham prabhO

        When Ambal Herself says “shrOtum icchAmi” – “I would like to listen”, there is no need for any further discussion on this.

        PS: Since the practice in the current days is much contrary to the above rule, nothing much can be done.

      • “Partly right” – is this comment to what Periyava said?

  10. Absolutely acceptable.

  11. Jaya Jaya Shankara, hara Hara Shankara!

  12. இன்றைய காலத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், வரப்போகும் காலங்களில் ஏற்படக்கூடிய அவலங்களுக்கும் காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் அன்றைக்கே நறுக்குத் தெரிக்கிறாற்போல் அழகாக அன்புடனும் வாத்ஸல்யத்துடனும் எடுத்துச் சொல்வதற்கும் தடுத்தாட்கொண்டு அருள் புரிவதற்கும் நம் மஹா பெரியவாளைத் தவிர வேறு யாரால் முடியும்? நன்றி மஹேஷ்.

Leave a Reply to mrs prema surenCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading