சம்பு நடனம் – நடேசாஷ்டகம்

ananda-natana-1024x451

 

Thanks to Smt Lalitha Subramaniam,D/O Sri Bharani Mani mama, one of the greatest devotees of Mahaperiyava for sharing this to me. Mama has published this as a small book and distributing this to as many people as possible as per the orders of Periyava. I am reproducing that here for all of you…Thanks to mama.

1949ஆம் ஆண்டு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் திருவிடைமருதூரில் பல மாதங்கள் தங்கியிருந்தபோது, நாட்டிய வித்வான் பரதம் நாராயண ஸ்வாமி அய்யர் ஸ்ரீ பெரியவாளை தரிசித்து, பதஞ்ஜலி அஷ்டகம் சிறு கவிதையை படித்துக் காட்டி இதை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, ஸ்ரீ பெரியவாளும் தானே அதை பாடிக் காட்டி, வீரட்டாணத் தலங்கள் எட்டையும் குறிப்பிட்டார்கள். அவை, காமனை எரித்த கொறுக்கை, அதன் பக்கத்தில் பரியனுர், வழுவூர், நன்னிலத்தருகே விற்குடி, காலசம்ஹார க்ஷேத்ரம் திருக்கடையூர், திருவையாறுக்கு அருகே கண்டியூர், பண்ருட்டி அருகே திருவதிகை திருக்கோவிலூர் என்று முடித்தார். அந்த எட்டு ஸ்லோகங்களை சுத்தமத்தளம் தாளத்தோடு அந்தந்த இடங்களில்பாடவும் ஏற்பாடு செய்தார்.

இந்த அஷ்டகம் வந்த கதையைப் பார்போம்.
பதஞ்ஜலி என்ற பெயருடன் உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவவும், அதன் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்ற முனிவர் ஒருவரும், புலியினது போன்ற கால்களைப் பெற்ற வ்யாக்ரபாதர் என்ற முனிவரும் மற்றும் நந்திகேஸ்வரர் போன்றவர்கள் சிதம்பரத்தில் நடன சபையில் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு களித்து வருகையில், ஒரு நாள், வ்யாக்ரபாதர் முதலியோர், பதஞ்ஜலி முனிவரைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புக்களுமில்லை, நீவிர் அம்பலவாணனின் நடனத்தை எப்படி ரசிக்க முடியும்?” என்று பரிஹாசம் செய்தனர். பதஞ்ஜலி யாதும் பதில் கூறாது, சற்று நேரம் ஸ்ரீ நடராஜாவை த்யானித்து இருந்தபோது ஸ்ரீ நடராஜரின் பரமானுக்ரஹத்தால், பதஞ்ஜலி வாய் திறந்து பகவானைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களைப் பாடினார். அவைகளில் ஒன்றிலாவது ஒரு எழுத்துகூட, காலோ, கொம்போ உடையதல்ல. உதாரணமாக சம்ஸ்க்ருத பாஷையில், ஏதேனும் எழுதும்போது, (கா) (பா) (கூ), (பூ) ஆகியவை போன்ற உயிர்மெய் எழுத்துகளுக்கு கால் போட வேண்டும். (கோ) (போ) போன்ற எழுத்துக்கள் கொம்பு உள்ளவை. பதஞ்ஜலி முனிவர் ஸ்ரீ நடராஜ பெருமானின் நடனத்தை ஒட்டி பாடிய ஸ்லோகங்களில் காலுள்ள எழுத்தோ, கொம்புள்ள எழுத்தோ கிடையாது. பதஞ்ஜலி இயற்றிய ஸ்லோகங்கல்தான் சம்பு நடன ஸ்தோத்திரம் எனப்படும்.
கடைசி ஸ்லோக பலஸ்ருதியைப் படித்தாலே நமக்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட இந்த அஷ்டகத்தை அனைவரும் பாடி, பாரத நாட்டிற்கே நன்மை தரும் அளவில் பெருமை சேர்ப்போம். அம்பலவாணனின் புகழ் வானளாவ எட்டட்டும். ஸ்ரீ மஹா ஸ்வாமியின் எண்ணங்கள் பூரணமடைய அவரையே நாம் துதிப்போமாக.

அன்னார் வழிவந்து, தற்போது ஸ்ரீ காமகோடி பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிற பீடாதிபதிகளும் இந்த சம்பு நடனம் ஒளி வீச அருளாசி பொழியட்டும்.

Here is the link to the ashtakam. I am pretty sure there are links to sanskrit version on the same site or in the web….Please look for “Natesashtakam”

Om Nama Sivaya!



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. Divine Dharshan of the Cosmic Dance of Lord Nataraja and Goddess Sivakaamasundari! Great Slokam and Great article! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  2. மஹாபெரியவா பத்ம பாதம் சரணம்.

    I am from Thriukoilur One of the Veeratanam — Also Here MahaGanapahi in the Veerateshwarar Temple was celebarated by Avaiyar — This is the place where She wrote Vinayagar Agaval. With His help only she went Kailash. Anyone who wants to to Kailash should visit Him and get His blessings for an and enlightment trip, I proud to say I have had one such dharsan. Also here Perumal is Mangalasasanam by three Alwars,பொய்கை ஆள்வார், பேய ஆள்வார், பூத்தத்து ஆள்வார். Please visit this divine place and is only 35 Kms from Villupuram (MahaPeriyava;s Birth place)

  3. namaskarams. not able to find the lank as well as the slogam

  4. In the book Thayumana Mahan Vedapuri mama says Periavaa used ask them to recite this in evenings. Supposedly brings Auspiciousness.
    Ramani

  5. Excellent . Reading this i feel like visiting attaveratennam. Maha periyava please bless me

  6. thanks, Mahesh & Lalitha Subramaniam.

    1.For those who may be interested, in the audio, please, search “audio sambu natanam” and download from ‘kamakoti.org’ clicking ‘click audio’
    If there is a better source kindly inform all of us.

    2.mahesh may kindly moderate this mail as reqd.

    regds,

    thamizh chelvan.

  7. Thanks for sharing the wonderful slokam with complete meaning. This slokam is also referred to as Charana Sringha Rahitha Sthothram. Shri Raa Ganapathi Anna had written in detail about this slokam in his book “Maha Periayaval Virunthu” Pages 154-156.

    Jaya Jaya Shankara Hara Hara Shankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading