மாமியார் விஷயம்

Periyava_DPM1

(In the photo, you can see my father standing – 2nd from left – with only face shown – with glasses)

புருஷனின் மாதா-பிதாக்களைச் சொன்னேன். ஸமீப காலம் வரையில் மாமியார் என்பவள் வேண்டாதவளாக இருந்தாள்; இப்போது வேண்டியவளாகிவிட்டாள்; ஆனால் இது நல்ல திருப்பம் என்று  ஸந்தோஷப்படும்படி இல்லாமலிருப்பதுதான் பெரிய குறை. இப்போது மாமியார் எதற்குத் தேவைப்படுகிறாள் என்றால் மாட்டுப்பெண் ஆஃபீஸுக்குப் போயிருக்கிறபோது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான்! பேபி-ஸிட்டர்,  க்ரெஷ் முதலானதுகளை விட மாமியார் கவனிப்பிலேயே சள்ளையும் குறைச்சல், செலவும் குறைச்சல் என்பதாலேயே அவளை வா, வா என்று கார்யார்த்தமாகக் கூப்பிட்டு வைத்துக்கொள்கிறார்கள்.  பெண்கள் உத்யோகம் பார்ப்பது  ஸகலமான பேருக்கும் இப்போது பெருமையாக இருப்பதாலும், அது ரொம்ப அவச்யந்தான் என்று தோன்றுவதாலும், மாமியார்மார்களும், ஸந்தோஷமாகவே குழந்தைகளுக்கு ‘ஆயா பண்ண’ ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வயஸு காரணமகா உடம்பு இடம் கொடுப்பதில்லைதான். அக்கடா என்று படுத்துக் கொண்டிருக்க மாட்டோமோ என்றுதான் உள்ளூர இருக்கும். ஆனாலும் இன்றைய போக்குக்கே அவர்களும் ஆதரவாக இருப்பதால் ச்ரமப்பட்டுக் கொண்டே பொறுப்பைச் சுமக்கிறார்கள். அம்மாவை விடப் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்வாதீனம். ஜாஸ்தி; பயம் குறைச்சல். அதனால் படுத்தி எடுக்கத்தான் செய்யும். அதையும் பொறுத்துக்கொண்டுதான் பாட்டிமார்கள் செய்கிறார்கள். அவர்களே அப்படி ஸம்மதமாக இருந்தாலுங்கூட இப்படிப்பட்ட ஒரு நிலைமையை ஏற்படுத்துவது கொஞ்சமும் தர்ம ந்யாயங்களில் வராது.  வயஸுக்காலத்தில் அவர்களைப் பிள்ளை-மாட்டுப்பெண் உட்கார்த்தி வைத்து சுச்ரூஷை செய்யவேண்டியதே தர்மமும் ந்யாயமும். அதற்கு நேர்மாறாக, தங்கள் பொறுப்பை அவர்களிடம் தள்ளி வேலை வாங்கினால் அது மஹா தோஷமாகும். அந்த வயஸுகட்டத்தில் வீட்டுப் பொறுப்பு முழுதையும் மாட்டுப்பெண்ணே வாங்கிக்கொண்டு சுற்றுக் கார்யம் சிலதற்குத்தான் மாமியாரை எதிர்பார்க்கலாம்.

ஒரு ஸ்த்ரீ க்ருஹிணியாக வீட்டோடேயே இருந்து கொண்டிருஇந்தால்கூட, புருஷன்-குழைந்தைகளின் ஆஃபீஸ்-ஸ்கூல் அவஸரத்தில் காலை வேளையில் அவள் அவஸரமாகவே ஆக்கிப் போட வேண்டியிருந்தாலும் ராத்ரியாவது அதற்குக் ‘காம்பன்ஸேட்’ பண்ண வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

காலை வேளைச் சாப்பாடு எப்படிப் போனாலும் ஸாயந்திரம் பசங்கள் ஸ்கூல் விட்டு வந்ததும் தாயாரகப் பட்டவள் அதுகளுக்குப் புதிதாகத் தன்கையால் தினம் ஒரு தினுஸாக டிஃபன் பண்ணிப் போட்டு அந்த இளம் நெஞ்சுகள் ஸந்தோஷப் படுவதைப் பார்த்துத் தன் ஹ்ருதயமும் ஸந்தோஷப்படவேண்டும். அப்புறம் விளக்கேற்றி வைத்துவிட்டு, தெய்வ ஸ்தோத்ரம், பாராயண்ம் என்று கொஞ்சம் போது செலவு செய்துவிட்டு ராத்ரிச் சமையலுக்கு ஆரம்பிக்கவேண்டும்.

வயிற்றுக்குப் போடுவதோடு ஆத்மாவுக்குப் போடுவது

புருஷன் வைந்ததும் அவனையும் ஸந்த்யாவந்தனமோ – அவனுக்கான வழிபாடு வேறேயாக இருந்தால் அந்த வழியையோ பண்ணுவதற்கு அவனை ஊக்குவிக்க வேண்டும். இதுவும் ஒரு முக்கியமான  பணி. ஸமீபகாலம் வரையில் நம்முடைய ஸ்த்ரீகள் வெகு அழகாகச் செய்து வந்த பணி.  அன்ய மோஹத்தில் நம் மதாசரணைகளை அடியோடு விடத் துணிந்துவிட்ட புருஷர்கள் பலரைப் பொண்டாட்டிமார்கள்தான் திருப்பத் திரும்ப நச்சரித்துக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது மதத்தின் பக்கம் திருப்பி வந்திருக்கிறார்கள். அநேக வீடுகளில் அமாவாஸ்யை தர்ப்பணம், திவஸம்-திங்கள், பிள்ளைக்கு உபநயனம், தெய்வத்துக்கு வேண்டுதல் செய்வது முதலானவை ஸ்த்ரீகளின் ‘கம்பல்ஷ’னின் பேரிலேயேதான் புருஷர்கள் செய்திருக்கிறார்கள். வயிற்றுக்குப் போடுவதோடு, ஆத்மாவுக்கும் போடுவதான இந்த உத்தம கைங்கர்யத்தை எந்நாளும் ஸ்த்ரீ ப்ரஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

புருஷன் அந்த உபாஸனையை முடித்ததும், குடும்பம் முழுதுமாக – புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் – எல்லாரும் பக்கத்திலிருக்கிற கோவிலுக்குக் காற்றாடப் போய்விட்டு வரலாம். பிள்ளையார் கோவில்கள்தான் மூலைக்கு மூலை இருக்கின்றனவே! அப்படியொன்றுக்கு குடும்ப ஸஹிதம் தினமும் போய்விட்டு வருவது மனஸுக்கு ஒரு பெரிய டானிக். இந்த டானிக்கை ப்ரிஸ்க்ரைப் செய்யும் டாக்டராகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் சாப்பாடு. அப்புறம் கொஞ்ச நேரம் – கொஞ்ச நேரந்தான் – மனோரஞ்ஜகமாக டீவியில் ஆடல்-பாடல் பார்ப்பது. அப்புறம், எப்படியும் ராத்ரி 9.30 மணி 10 மணிக்கு முன்னால் நித்திரை போய்விடவேண்டும். அப்போதுதான் மறுநாள் விடிவதற்கு முன் பஞ்ச பஞ்ச உஷக்காலத்தில் எழுந்திருக்க முடியும். இப்போது ஒரே கோளாறாம். 11 மணி வரை கூட டீவி ப்ரோக்ராம் இருப்பதால் அதைப் பார்த்துவிட்டு, அந்த ஸ்ட்ரைன், ஆபீஸ் போய்விட்டு வந்த ஸ்ட்ரைன் எல்லாம் சேர்ந்து ஸ்த்ரீகளுக்கு விடியற்காலம், ஸூர்யோதயம் என்றாலே என்ன என்று தெரியாத தூக்கம் என்று ஆகியிருப்பதாகத் தெரிகிறது! * முன்னேயெல்லாம் விடிகிறதற்கு முந்தியே எழுந்து தெளித்து, மெழுகி, கோலம் போடுவார்கள். அது க்ருஹத்தை அழகு பண்ணுவது மட்டுமல்லாமல் க்ரஹிணியையும் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல மனத்தெளிவுடனும் இருக்கப் பண்ணிற்று. இப்போது இந்தப் பழக்கங்களெல்லாம் கொள்ளை போயிருப்பதைப் பார்க்க சொல்லி முடியாத கஷ்டமாக இருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க பணம், பதவி, அல்பமான லெளகிக ஸெளக்யங்கள் ஆகியவற்றுக்குப் பறப்பதாக் ஏற்பட்டு, நிஜமான ஸெளக்யத்தை – ஆத்ம ஸெளக்யம் மட்டுமில்லை; சரீர ஸெளக்யத்தையுமேகூட – காற்றிலே பறக்க விட்டிருப்பதாக ஏற்பட்டுவிட்டதே என்று வேதனையாயிருக்கிறது. தலைக்கு மேல் வெள்ளம் போய்விடவில்லை என்று சாஸ்திரீய வழியிலான நல்லதைச் சொல்கிறது. சொன்னால் ஆயிரம், பதினாயிரம், லக்ஷத்தில் ஒருத்தராவது கேட்டு அந்தப்படிப் பண்ணினால்கூட அது ஒரு லாபந்தான் என்பதால்தான் சொல்கிறது; புலம்புகிறது.

* (பல சானல்கள், கேபிள் டிவி முதலியன வந்து ஒரு நாளின் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கியதற்கு முற்பட்ட காலத்தில் கூறியது.)Categories: Upanyasam

Tags:

12 replies

 1. Periyavaa is a Trikaalagnani who could foresee our lifestyle as well as present his point of view so simply that every generation can understand and realize the value in it.

 2. Mahesh, Thanks for posting this one.

  Wish உத்தம கைங்கர்யத்தை எந்நாளும் ஸ்த்ரீ ப்ரஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

  Hara Hara Shankara Jaya Jaya Shankara

 3. Its a truth
  The present condition is still worser
  Periyava patharavindhangalukku namaskaram

 4. very informative.

 5. Except for Preiyava, everyone is posing (for the Camera)!!!!

 6. Now I know the reason for the stimulus that you are getting from Periyava!!

 7. Loved to read Periyavaa guidance on this family issue. The peace that you get in family as result of doing all this as said by Periyavaa by Sthri’s is that which sustains in the long run of family. Our future generations should take this guidance & lead their life peacefully & happily. Going to the nearest temple every week with family is the tonic to run the family in peace & those who practice will realise how true.

 8. Wow Mahesh, so blessed your Father is to be standing so close by? What a surprise.

  • Only I had no fortune of having the darshan of Him 🙁

   • Dear Mahesh,
    Don’t regret. HH Mahaperiyava in his sookshma roopam is always with you unlike us. For the yeoman service you do, to us people to think of Maha Periyavaa daily, in spite of your materialistic commitments, cannot be anywhereelse without being with you always. Let us pray for HIS blessings.
    Jaya Jaya Sankara
    Venkataraman

   • you need not feel bad. Periava will be much more happy with you with putting up this blog and informing the younger generation boldly. i only hope they are able to read what you are posting if not following fully, at least partially. to be hones my sons and daughters in law and myself are very happy since we are able to follow whatever is written above at least partially. we are happy that you are bold in writing this(in a lighter vein – in tamil and not english so that the modern ladies and gents who are against all these kattupatti ideas will shun this!!!)

   • There is no need of a darshan of such Mahapurushas! Your constant thought of Periyava and also making us think of him more than compensates for his darshan – let me assure you of this.

    Regards,
    N Subramanian

Leave a Reply

%d bloggers like this: