ஜீவாதாரப் பணி சேதமாக விடலாமா?

namavali090

பொறுமையாகவும் பொறுப்பாகவும் அகத்துக்கான ஸகல காரியமும் தன் கையாலேயே செய்வது என்றால் அப்போது ஒரு பெண் ஆபீஸ் எண்ணத்தை ஸ்நானம் பண்ணிவிட்டு நாளில் பெரும் பகுதி வீட்டுப் பணிக்கேதான் செலவிட வேண்டியதாக இருக்கும். இப்போது வாய்க்கு வேண்டிய பக்ஷணம், பணியாரம் பண்ணக்கூட ஆபீஸ் போகிற பெண்களால் முடிவதில்லை. ஹோட்டல்களிலிருந்து வாங்குகிறார்கள். இதில் செலவுக்குச் செலவு. அதோடு அநாரோக்யம், அநாசாரம் எல்லாமும். இதெல்லாவற்றையும் விட ஒரு ஸ்த்ரீ ஹருதயத்துக்கு நிறைவைத் தருவது அவள் தன் கையால், தன் கையுழைப்பால், அகத்து மநுஷ்யர்கள் வயிற்றை நிறைவித்துப் பார்ப்பதுதான். பக்ஷணம், பணியாரம் மட்டுமில்லை.  தினப்படி சமையலும் இதில் சேர்த்துத்தான். அது நேராக உயிர் கொடுக்கிற உயர்ந்த பணி, ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!’ என்று ‘மணிமேகலை’யில் சொல்லியிருக்கிறது. உண்டி பெறுவதற்காகப் புருஷன் ஸம்பாதித்து வந்து மளிகை ஸாமான் வாங்கிப் போட்டாலும், அது நேராகச் சாப்பிடக்கூடிய உண்டியாகி வயிற்றுக்குப் போவது அவனுடைய க்ருஹிணியின் பணியால்தான். உடம்புக்கு எது நல்லதோ, அதோடு உள்ளத்துக்கும்  எந்த ஆகாரம் நல்லது என்று சாஸ்த்ரம் சொல்கிறதோ, அதை வாய்க்கும் ருசியூட்டுவதாக ஆக்கிப் போட்டு, உடலையும் உயிரையும் உள்ளத்தையும் ஒன்றோடொன்று ஒட்டி வளர்க்கும் பாக்யம் பெண்டுகளுக்கே உரியதாக இருக்கிறது. தான் நன்றாக சமைத்துப் போட்டு அதைத் தாலி கட்டிய ப்ரிய பதியும், வயிற்றிலே பிறந்த செல்வங்களும், மாமனார், மாமியார் போன்ற பூஜிதையான பெரியவர்களும் ரஸித்துச் சாப்பிடுவதைப்  பார்கும்போது ஒரு ஸ்த்ரீ பெறுகிற ஆத்மத்ருப்தி, (சிரித்து)  – இன்னது என்றே பெரிய  மானேஜிங் டைரக்டராக உத்யோகம் செய்கிற புருஷனுக்குக்கூடத் தெரியாது. நான் குழந்தையாயிருந்த நாளில் பார்த்திருக்கிறேன். பெண்டுகள் ஸந்தித்துக் கொள்கிறபோது முதலில் தாங்கள் செய்த சமையலைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்புறமும் விசாரித்துத் தெரிந்து கொண்டதில் இன்றைக்கு  வரயில்  அதுதான் அவர்களுக்கு முக்ய விஷயமாக இருக்கிறது என்பது தெரிகிறது. தாங்கள் பார்த்துப் பார்த்து வயிறுகளை ரொப்புகிற இந்தக் கார்யத்தை – உயிரோடு ஒட்டிப் போகிற கார்யத்தை – சொல்லிக் கொள்வதில் பெண்களுக்கு எப்படிப்பட்ட ஒரு த்ருப்தி இருக்கிறது! ஆஃபீஸ், அதற்காக அவஸரச் சமையல் என்று சொல்லிக்கொண்டு இப்படி ஜீவாதாரமாகச் செய்கிற பணி சேதப்பட்டுப் போகவிடக்கூடாது.

இவள் ஆஃபீஸ் போகாவிட்டாலும் காலை வேளையில் புருஷனுக்கு ஆஃபீஸ் அவஸரம் இருக்கலாம். குழந்தைகளும் அவஸரமாக ஸ்கூலுக்குப் போகவேண்டியிருக்கலாம். அதனால் அவர்கள் ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதாக இருக்கும். அப்படி இருக்கும்போது இவளும் ஆஃபீஸ் போய்விட்டு விளக்கு வைக்கிற நேரத்துக்கு அப்புறம்தான் வீடு திரும்புவது என்றால் ராத்ரிச் சாப்பாடும் அவஸர கதியில்தான் இருக்கும். அல்லது ஆசாரத்துக்கும் ஹானியாக ஆரோக்யத்துக்கும் ஹானியாக, காலை செய்த அவஸரச் சமையலிலேயே ஒரு பாகத்தை ஃபிரிட்ஜில் மிச்சம் வைத்து அதைச் சாப்பிடுவதாக இருக்கும். இதெல்லாம் உதவாது. ‘புத்தமுது’ என்று அப்போதே சமைத்ததைச் சாப்பிடுவதுதான் ஆசாரம், ஆரோக்யம் இரண்டுக்கும் உதவும். இந்தப் பெரிய அன்ன கைங்கர்யம் ராவேளையில் ஸரியாக நடப்பதற்காகவாவது பெண்டுகள் உத்யோகத்துக்குப் போகாமலிருப்பதுதான் நல்லது.

இரண்டாம் ஜாமம் பிற்ப்பதற்குள் – அதாவது ராத்ரி ஒன்பது மணிக்குள் – பக்வம் பண்ணின (சமைத்த) த்ருட பதார்த்தமான ஆஹாரம் சாப்பிட்டுவிட வேண்டும் என்பது சாஸ்த்ரம். அதற்கப்புறம் கஞ்சி, பால், பழம் மாதிரியானவைதான் சாப்பிடலாம். இப்போது பெண்கள் வேலை செய்து, அலுத்துச் சலித்து, வீடு வந்து சேருகிற போதே இருட்டிப் போய்விடுகிறது. அப்புறம் அலுப்பிலே ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. விச்ராந்தி பண்ணிக் கொள்வது என்ற பேரில் டீவி பார்க்கத் தோன்றுகிறது.  அதிலே வருகிற காட்சிகளோ விச்ராந்தி பண்ணுவதற்கு நேர்மாறாக இன்னும் நரம்புகளை முறுக்கேற்றி விடுவதாகத்தான் இருக்கின்றன என்று கேள்வி. அதையே ‘விச்ராந்தி’ என்று பொய்யாக எடுத்துக் கொண்டு அதன் இழுப்பில் அதை விட்டு நகர முடியாமல் ரொம்ப நேரம் உட்கார்ந்துவிட்டு, அப்புறம் ‘கடனே’ என்று சமையல் சாப்பாட்டை முடிக்கிறபோது மணி பாட்டுக்கு ஏறி விடுகிறது. பாவம், குழந்தைகளுக்கு வயிற்றைக் கிள்ளும். அது தெரியாமலிருக்க அதுகளுக்குக் கடையில் வாங்கிய கண்ட கண்ட தின்பண்டங்களைக் கொடுப்பது; அதனால் செலவு; வியாதி இன்னொரு பக்கம். இதுதான் நான் தெரிந்து கொண்டிருக்கிற வரையில் இக்கால உத்யோக புருஷிகள் நடத்துகிற க்ருஹ தர்மம்.

இதை இப்படி விடவே கூடாது. தங்களுக்குக் கிடைத்திருக்கிற வரப்ரஸாதத்தை ஸ்த்ரீகள் வ்ரயம் செய்யவே கூடாது. புருஷன், குழந்தைகள, புருஷனின் மாதா-பிதாக்கள் ஆகியோருக்கு தான் பட்டிருக்கிற கடமைக்கு மேலே அவளுக்கு எதுவுமில்லை.

 Categories: Upanyasam

Tags:

5 replies

 1. Mahaperiyava skills of observation and memory goes back to his younger days as is clear from this passage. It is not something honed solely by the power of anusthanam of his asrama is very clear.

  That we who are undergoing the current situation without any cognisance of the consequences can only be equated to kanirunthum kurudargal.

  Regards,
  N Subramanian

 2. all the views advice of mahaperiyavaa are true and realistic and practicable too, if followed there is no doubt it will bring full harmony in family and life

 3. MahaPeriyava Padma Padham Saranam

  Unbelievable — these are research these days europeans and americans doing — If we followed this in ourlife would have been fantastic, smooth — Shall we able to go back to the life as MahaPeriyava explained. I remember when I was kid my mother was at home — it was fantastic — I really feel for these days kids — We ruining our next generation

 4. Periyaa is spot on. Been there, done that with modifications, but end result= discontent, disharmony, anger, helplessness.
  I believed that once the kids went to school full time, they didn’t need you as much– wrong. They need you always in different ways. Life lesson learned.
  Since I wanted to do everything for them myself- I left early and returned early from work. Then, cook a full meal, take them to classes, do the laundry, keep a spotless house etc: end result exhaustion, feel like Mr. didn’t do enough, angry at the kids when they dawdled at meal time and had no time for conversation just ready to get on with the next chore. If the kids fell sick there was this feeling of fear and helplessness, what will happen at work? How much time can I afford to take off? That is a part of life that will never come back, your children leaning on you and the satisfaction and joy of doing everything as perfectly as possible for them.

  Hats off to women who can do both, I couldn’t

 5. wonderful and i am happy we are following this!!!!!how nice it would be if others aLSO FOLLOW!!!! i only pray periava while reading this that my grand daughter gets a husband who would treat her like this as she wants to be exactly like what has been said above!!!!

Leave a Reply

%d bloggers like this: