பெண்கள் வேலைக்குப் போவது

This is a sensitive topic. I want ALL of you to remember that these are Periyava’s words. If you do not agree to Him, that is fine – read it and leave it. I don’t want you to show your emotions here in the comments.

scan0120

 

வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் போகிறோம் என்றால் இரண்டிலுமே ‘டெடிகேஷன்’ குறைந்து போகும். இந்த மாதிரி இரட்டைப் பொறுப்பு எடுத்துக் கொண்டால் தாக்குப் பிடிக்க முடியாத ஸ்ட்ரெயின் ஆகி, ரொம்பவும் திணறி ச்ரமப்படும் படியாகும். டெடிகேஷன்  குறைவாதால் அந்த இரண்டு வேலைகளுமே த்ருப்திகரமாக அமையாமல் கெட்டுப் போகும். ஆஃபீஸ் போவதற்காக அகத்துக் கார்யத்தை அரக்கப் பரக்க அரைகுறையாகச் செய்வது, அதே மாதிரி அகத்துக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக் ஆபீஸில் அவஸரக் கோலமாகப் பண்ணுவது என்றாகி இரண்டுக்கும் பழுது  ஏற்படும். வேலைகளில் பழுது ஏற்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தப்பான ஆசையினால் இப்படிப்பட்ட பழுதை ஏற்படுத்துகிற ஸ்த்ரீக்கு அதனால் பாபமும் ஸம்பவிக்கும். பாபத்துக்குக் கூலியாகப் பல விதங்களில் கஷ்டம் வந்து சேரத்தானே செய்யும்?

வீட்டுப் பணிக்குக் குந்தகம் என்கிறதால் மட்டும்தான் பெண்களுக்கு உத்யோகம் வேண்டாம் என்று சொல்லவில்லை. வீட்டையும் நன்றாகக் கவனித்துக் கொண்டு , உத்யோகம் முறைப்படி பார்ப்பதற்கு முடிந்தாலும்கூட அது வேண்டாம்தான்.

ஏனென்றால் உத்யோகம் என்று ஏற்படுகிறபோது லோக வியவஹாரம் பலவற்றுக்கு ஈடு கொடுத்துத்தானாக வேண்டியிருக்கும். பல பேரிடை புழங்கிக் கொண்டு, பலவித  forces -ஐ சமாளித்தாகத்தான் வேண்டியிருக்கும். இதை வெளியில் நன்றாகவே செய்ய முடிந்தாலுங்கூட, இதனால் உள்ளூர ஸ்த்ரீத்வம், பெண்மை என்கிறதற்கே ஆணிவேரான மென்மை அரிபட்டுப் போகத்தான் செய்யும். அந்த மென்மையின் பெருமை இன்றைய ஸ்த்ரீகளுக்குத் தெரியாவிட்டாலும், வாஸ்தவத்தில் அப்படி ஸ்த்ரீத்வத்தைத் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது அடைகிற நிறைவான சாந்தியையும் ஆனந்தத்தையும் ஒருத்திக்கு எந்தப் பதவியும் ஸ்ம்பாத்யமும் தரவே தராது. தான் தானாக இருக்கிற இயற்கை நிலையின் பரிபூர்ண நிறைவு, தான் வேறே ஒன்று மாதிரி – ஸ்த்ரீயானவள் புருஷன் மாதிரி – இருக்கிற செயற்கை நிலையில் எப்படிக் கிடைக்க முடியும்?

உத்யோகத்துக்குப் போகாத பெண்களிலும் இந்த சாந்தியும் ஆனந்தமும் தெரியாதவர்கள்தான் நிறைய இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களும் ஏதோ ஒரு தினுஸில் அந்த மென்மை நிறைவைப் பறிகொடுத்தவர்களாகவே இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக, அந்த நிறைவுக்கு நிச்சயமாக ஹானி செய்யும் என்று தெரிந்த ஒன்றில் இறங்குவதை எப்படி அநுமதிக்க முடியும்?

சுக ஜீவனத்துக்குப் பதில் ஆரோக்யக் குறைவு

பொருளாதாரத்தைக் காரணம் காட்டி ஸ்த்ரீகளும் வேலைக்குப் போவதாகச் சொல்வதையும் ஏற்க முடியாமல்தான் இருக்கிறது. ஸ்த்ரீ ஸ்ம்பாதிப்பதில் முக்கால்வாசிக்கு மேலே அந்த ஸ்ம்பாத்தியத்துக்காக அவள் ‘ஸம்பாதித்து’க் கொள்கிற அநேக அநாவச்யச் செலவுகளுக்குத்தான் போகிறது. ஸுக ஜீவனத்துக்கு வழி என்ற பெயரில் ஒரு  ஜீவனுக்கு அவச்யமான உடலுழைப்பும் சுறுசுறுப்பும் இல்லாமல் சோம்பேறியாய் ஆவதற்கு உதவி பண்ணுகிற ஸாதனங்கள் – நூதன நூதனமான உபகரணங்கள் – தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. உற்பத்தி பண்ணுபவர்கள், எவையெல்லாம் இல்லாமலே நாம் வாழ்க்கை நடத்த முடியுமோ அவற்றை யெல்லாம் ரொம்பவும் அவச்யமானவைபோல் ஏகமாக விளம்பரப்படுத்தி, கடைகளில் புதுப் புதுப் பண்டங்களைக் குவித்துக் கொண்டே போகிறார்கள். ஸ்த்ரீகள் உத்யோகம் பார்த்துக் கையில் பணம் துள்ளுகிறதுபோது என்ன ஆகிறதென்றால் இந்த அநாவச்யப் பண்டங்களை யெல்லாம் வாங்கி  வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

பத்ரிகையிலே வேடிக்கையாகப் போட்டிருந்து – அரைக்கிறது, கரைக்கிறது முதலான கார்யங்கள் உடம்பால் உழைத்துப் பண்ணினால் அதுவே ஒரு ஸ்த்ரீக்கு யோகாஸனம் பண்ணுகிறதற்கு மேலே தேஹரோக்கயத்தைக் கொடுத்து விடும். அப்படிப் பண்ணாமல் இதற்கெல்லாம் இப்போது புதிசாக மிக்ஸி, க்ரைண்டர் மாதிரி உபகரணங்கள் வந்திருக்கிறவற்றை ஒரு ஸ்த்ரீவாங்குகிறாள். கையை, உடம்பை அசைத்து, தான் ஒன்றுமே பண்ணாமல் மெஷின்கள் மூலமே பண்ணிக் கொள்கிறாள். அதனால் ஸரிவர உடம்புக்கான எக்ஸர்ஸைஸ் இல்லாமல் போய்,  கோளாறுகள் வருகின்றன. ஆபீஸ் வேலையில் தேஹாப்யாஸம் இல்லையோன்னோ?  இன்னம் சொல்லப் போனால், தேஹாரோக்யத்துக்கு ஹானியாகவே கூட அதில் அநேகம் வந்து சேரும். அப்படித்தான்  இந்தப் பொம்மனாட்டிக்கும் ஆகிறது. டாக்டரிடம் போகிறாள். டாக்டர், ‘ஃபிஸியோதெரபி’ பண்ணுகிறார். அதில் அவளை என்ன பண்ணச் சொல்கிறாரென்றால்:  அம்மியில் ஓட்டி ஓட்டி அரைக்கிற மாதிரி, கல்லுரலில் சுழற்றிச் சுழற்றிச் அரைக்கிற மாதிரியெல்லாந்தான்.  ஏதோ பந்து, கிந்தைக் கொடுத்து எக்ஸர்ஸைஸ் பண்ணவைக்கிறார்!

ஒழுங்காக அகத்துக்  கார்யம் செய்யாததால் ஆரோக்ய ஹானி, மெஷின்கள் வாங்குகிற செலவு, அதைவிடப் பெரிசாக டாக்டர் செலவு, வீடு – ஆபீஸுக்கு நடுவே வைத்யத்துக்குப் போவதற்கு அவகாசம் ஏற்படுத்திக் கொள்வதன் டென்ஷன், அதனால் நரம்புக் கோளாறு, மனஸின் பாதிப்பு – இப்படி ஒரு அனர்த்த பரம்பரை!

பழைய காலத்துப் பொம்மனாட்டிகள் அகத்துக் கார்யங்களுக்கே அஞ்ச மாட்டார்கள். இழுத்துப் போட்டுக் கொண்டு எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். இடிப்பது, புடைப்பது, வடாம், அப்பளம் இடுவது என்று பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். குனிந்து, நிமிர்ந்து, கையைக் காலை ஆட்டி அவர்கள் அப்படிப் பண்ணியதுதான் அவர்களுக்கு நல்ல பசியை உண்டாக்கி, அதற்கேற்கச் சாப்பிட்டு உடம்பை நல்லாரோக்யத்தில் வைத்திருந்தது. இப்போது ஸ்த்ரீகள் மாத்திரையும் கையுமாக இருப்பதுபோல் அப்போது இல்லாமல் காப்பாற்றியது. பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலம் போட்டு, எச்சில் இட்டு வந்ததே அவர்களை அன்றைக்கு CESAREANனிலிருந்து காப்பாற்றி ஸுக ப்ரஸவமாகப் பெறச் செய்தது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது குனிந்து தரையில் எச்சில் இடுவதற்கு இல்லாமல் டேபிள் சாப்பாடு வந்துவிட்டது. அதோடு ஏகப்பட்ட அநாசாரம், அநாரோக்யம் வந்திருக்கிறது! சாப்பிடுகிற இடம், சமைக்கிற இடம், வாசலில் கோலம் போடுகிற இடம் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் இந்த ஃபாஷன் யுகத்தில் கோமயம் (சாணம்) ஓடியே போய்விட்டது. அதோடு மடியும் போய்விட்டது.  Antipollution -க்கு ஈடில்லாத அருமருந்தும் போய்விட்டது. கோமயம் எப்பேர்ப்பட்ட கிருமி நாசினி என்று ரஷ்ய தேசத்து ஸயன்டிஸ்ட் கூடச் சொல்கிறான். நம்முடைய ஃபாஷன் யுகத்து ஸ்த்ரீகளுக்கு அது ஸரிப்பட்டு வரவில்லை.

டேபிள் சாப்பாடு கூட நம்முடைய தேசத்து ஆஹாரத்துக்கு எடுத்ததில்லை என்று வெள்ளைக்கார ‘டயடீஷியன்’ ஒருத்தனே சொல்லியிருக்கிறான்! ‘நாற்காலியில் உட்காரிந்து கொண்டு, காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு இந்தியர்கள் தங்கள் சாப்பாட்டை – குறிப்பாக, தக்ஷிண தேசத்துப் சாப்பாட்டை – சாப்பிடுவது ஜீர்ணத்துக்கு  அவ்வளவு உகந்ததில்லை. அடி வயிற்றிலிருந்து மேலே சற்று ப்ரெஷர் கொடுக்கிற மாதிரி, காலை மடித்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலே அந்த தினுஸு ஆஹாரம் ஜெரிப்பதற்கு உதவியாயிருக்கும்’ என்று சொல்லியிருக்கிறான். புருஷர்கள் சப்பளாம்  கொட்டிக் கொண்டு (சப்பணம் கூட்டிக்கொண்டு) உட்காருவதும், ஸ்த்ரீகள் ஒரு காலைத் தரை சேர மடித்து, இன்னொன்றைக் குத்திட்டு வைத்துக்கொள்வதுந்தான் நம் தேச ஆசாரம். குத்திட்ட காலைக் கையால் கட்டக் கூடாது. அது மூதேவி, கையைக் காலுக்கு உட்பக்கமாகவே வைத்திருக்க வேண்டும், அதுவே ஸ்ரீ..

 



Categories: Upanyasam

Tags:

29 replies

  1. i am happy to see the comments and Periava will bless all i am sure. i have my cousins in u s who are managing with their single salary and of course has also some who have married earning couples. but a lot of research has been done on this subject of twin income and perhaps the ladies themselves are coming forward now not to go to job but unfortunately when we see the advertisements for grooms almost in every case the colum job for girl: MUST!!!!!!! will the parents advice the ill effects of the wife going to job (not only spoiling her health and morality – however strong she is – but the effect on children, her own health, her expenses on dresses etc and the ultimate result of whatever she earns being given to the hospitals and also losing the love their children!!!!

  2. there is a hidden fact in this periaval’s speech which i am able to understand that there won’t be any employment problem for men who are without job, moreover as periyava said if this is going to be followed, the jobless men may get job which may give chance to have so many happy families in our country and the poverty will not be there in our country.

  3. we have no contentment in life..we envy at neighbours ..there is no end for needs. hence all this problems and worries…only acharyas can cultivate the contentment among public..

  4. its a very good article and i like it very much and its a good massage for all women who are working.

  5. I am very happy to see such a 100 % Good & Assertive message in a public blog, knowing fully that there may be repercussions from so called social servers (!) , especially from women folks ( in that too, the majority resistanc e may be from Brahmins ).

    I was a bit apprehensive to go thro’ the comments, fearing worst arguments. But feeling releived of seeing a warm and instant response from people of reasonable thinking.

    I pray for Maha Periyava’s support to such noble public movement, to slow down the speed of destruction,
    our society is witnessing.

    Wishing Sri Mahesh, many more valuable sharings.

  6. Honestly, we people professing veneration and respect for Mahaperiyava really do so because we will be blessed by “hearing” him or attending his discourses (now in audio or YT videos). We have evolved an easy pattern to carry on withour life’s activities, being guided by what other ordinary people say or do, and not following the wisdom preached by Mahaperiyava. This is like our habits of going to the temples without willingness the strict rules of how to go about this religious function, or like performing many Poojas, rituals, religious ceremonies, without adhering to the pre-requisite of performing Sandhya and Gayatri, even though the Sastrigals tell us that the former without performing the latter as a preliminary will not fetch any beneficial results.

    We flout every rule of religious wisdom in practice even while appearing very religious in a totally superficial sense. Indeed, in the present era, and maybe, ever since the British began to enslave us, the proportion of people who are really religious correct and good in society is FAR FAR less among those who appear to be very religiously knowledgeable and even making a superficial show of being religious, than among those who do not make any such show and who may claim little knowledge of the religious rules but only try to believe in a God with omnipotence and omnipresence, and all mercifulness and grace, and in being of some positive service to fellowmen or at least not bearing illwilll towards them due to hidden or even selfish motives and greed. In other words it is clear that there can be no religiosity without righteousness in word, deed and thought.

    This hypocrisy and bigotry is true of every religion including Hinduism, and that is a harsh reality orthe inevitable trend of the Kaliyuga. Given this, what all one must follow as a rule is to take the good in others and leave out the rest, to inspire us, and try one’s level best to be ethically and morally sound without necessarily expecting authentication, certification or reward from anyone else. Our conscience and the example and the words of the wise from establidhedtradition should be our guide, while we must exercise discrimination in the tools and new secular knowledge of the modern era in a way that they will not corrode our moral and ethical frame. We need not worry about whether those who preach nice sounding wisdom are also practising them. We will be liberated, and the world will be one rascal less if we try, try and try, and be a better person on a constant and continuous basis.

  7. Very interesting……I am a professor and my job requires me to stand and teach for long hours…sit in front of the computer and write. I used to have severe back pain and knee pain……after observing mahaperiyava, I stopped using chairs and bed at home……I sit on the floor with my legs folded and sleep on the mat (I try to keep my back straight)………I am now 52…my back pain and knee pain have vanished completely.

    Many of the practices of our elders had meaning and therapeutic values. In the name of modern development we have moved away from those old practices to our own peril.

  8. I’d like to ask the men of our community and others here who have made comments like “girls of today won’t listen to this and so forth” —
    #1. I think you all are male chauvinist. If not, then the very nature of your comments is proof to that quality of yours.
    #2. Please read another one of comments above. Men of our community and society expect women to goto work. Even if a man does not expect this, I am not sure how much they really respect their (house)wives. I am sure such men also look upto women who work rather than their own wives who stay at home for the sake of family.

  9. Great advice and information by Maha Periyava. it is for everyone’s conscience to act accordingly. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  10. Dear Sir,
    Thank you very much for this wonderful blog. Whenever I read about MahaPeriyava, HE reminds me of our Guruji. All enlightened souls are the same. They cannot be different as they are nothing but the eternal Parabhrama. That is why their message is similar. We may find them outwardly different in their actions – this may be because they have the right action for that particular circumstance, which as mere mortals we have no way to comprehend. HE is everywhere – no doubt about this. I bow down to HIM.
    I am from Gujurat and I have a small request to anyone who has the time and who can translate whatever messages written on the blogs in english.
    Once again, thank you for all the efforts for this spiritual blog. May it grow and spread the message which shall only increase everyones peace and remove obstacles.

    dm

  11. Sankaraaaaaaaaaaaa

  12. May I request an English translation of this message pls ?

    Thank you
    Bhuvana

  13. this vew is very practical and absolutely correct

  14. இதை விட ஆணித்தரமாகவும் convince ஆகவும் எழுதுவது முடியாது. this is possible only by Sri Paramacharya only. We see so many ills of the society due to ladies going for work. Money is definitely not everything.

  15. I fully agree with periyava..our girls will not listen to this .mothers are responsible for childs’ morality and character. modern children are cursed ..they loose the mothers’ touch.

  16. periyava’s words are 100% correct. there is no appeal in all topics including this. i felt also the defects of job going without sharing love with children, husband etc. Education is must, but it should be homely oriented not for the job only to the ladies

  17. Wonderful advice no doubt. I don’t think any modern woman, particularly those who are employed, will agree to follow these rules.

  18. ‘குத்திட்ட காலைக் கையால் கட்டக் கூடாது. அது மூதேவி, கையைக் காலுக்கு உட்பக்கமாகவே வைத்திருக்க வேண்டும், அதுவே ஸ்ரீ.. ‘- very interesting news.

    After reading some portion of ‘Deivathin Kural’, I have done the following:
    1) Prefer to eat only Indian origin foods – as Mahaswamy has discussed in the origin of food in affecting the individual’s behavior in Deivathin Kural. This has brought immense peace to me.
    2) As much as possible, even while sitting in office, either sit in sukhasana or vajrasana to bind the flow of blood from going down the body to legs.
    3) Take food only in sukhasana and avoiding leaving legs down.

    When Mahaswamy mentions Ghomaya, just remembered, With Mahaswamy’s blessing, I saw in Hindu Spiritual Fair of the ‘Gho – Arka’ and Ghomaya ash powder and plan to intruduce them as disinfectant for cleaning during spiritual days like Dipavali, Amavasya, Pournami puja, etc., as well as use the Ghomaya ash powder for cleaning the utensils – seems the present day chemical dish cleaning powders are causing nail and skin allergies.

    Seeking Mahaswami’s grace.

    Thanks and regards,
    P.Vijay

  19. Can any one please update the transalation of this. I think a good message should reach many people.

  20. Thank you Mahesh. I truly agree with Periyava. I am a victim of circumstances and am forced to work even though I dont like to, because I dont have a confrontation at home.

  21. I am so happy you posted this on your blog. This is a topic considered so sensitive our people avoid any discussion. And there is hardly any Brahmin family now in which women do not take up a job or pursue a career.

    I have personally seen Mahaperiyava react to this and heard him speak his mind on this issue, quite forcefully. I had gone for his Darshan in February, 1972 when he was in Shivastanam. We were about 20-25 people standing in a semi -circle around him. He was in a talkative mood and looked at every one and spoke to us one by one, asking about our purvikam and taking his own time to react. Most of us talked about some personal problems. One among us was an elderly Brahmin gentleman, apparently from the lower middle class. He told Mahaperiyava that his daughter was studying well and had passed SSLC with good marks and that she had also passed typewiting and shorthand higher courses .Periyava said: ” Nalladu, kuzhandai nanna padikkattum” ( Well,let the child study well). Then the gentleman hesitated a bit and said that he was struggling for a living and was thinking of sending her for a job..Periyava reacted instantly saying ” penn kuzhandaigalai velaikku anuppakkoodatu” ( girls should not be sent for jobs). Silence fell on the gathering. In the meantime some more people had come and joined the gathering and so Periyava looked at the people and started talking to them. again one by one . In the process, people got a chance to talk again.. When his turn came, this gentleman again mentioned his poor financial state and about the relief he would get if his daughter got a job. Periava’s countenance became serious and in a stern voice he said : “Penn kuzhandaigal kandippa velaikku pogakkoodatu”. ( girls should surely not take up employment ) It was very clear and there was no scope for further discussion. And seeing Periyava’s mood and hearing his words and his tone, no one dared to open his mouth .There was silence again, till it was broken by the noisy arrival of some from nearby villages. We were there with Periyava for nearly 3 hours on that day.

    So I have witnessed this personally. I KNOW how strongly Mahaperiyava felt on this issue. In our Hindu tradition, especially among Brahmins, there is no one to enforce such rules of conduct. It is for us. who call oueselves devotees of Mahaperiyava to reflect on this sincerely and obey his words INDIVIDUALLY, without waiting for the whole world to follow or give us a lead. It is commendable on your part to have posted Mahaperiyava’s words on this.subject..

    • Thank you sir for sharing this experience to relate to this post.

    • Sir,
      This is indeed a nice message. And this, I say as a young educated lady here in the United States. Or even I were working in India, I’d agree. But the problem is, the men of our society have, by now, been conditioned to expect the lady to goto work. I have personally had experiences where a woman is respected more if she is working and less when she is at home. This attitude that the men of our own community have must be addressed first. Male chauvinism is a fact — It exists! So if our men have the magnanimity and the courage and kindness of heart to say that they will respect the lady in the household without expecting her to go outside and work, that will be the most effective to remedy this problem. Simply saying that women have become modern and hence they will not listen to this is again only displaying male chauvinistic attitude. There are some comments here like that — that women are modern and want to go outside and work. Yes, as much as that is true, it is also true that majority of men also do not want a housewife! It is considered lowly and menial! This is a fact. Noone can deny it. Thanks!

    • fantastic Sri Nanjappa ji, I saw in Dharmashastra program in Sankara TV ( also available in youtube in Sankara Tamil channel ), Sri Seshadrinadha Sastrigal explaining why ladies should not be sent to job based on both Dharma Sastra as well as Ayurveda.
      He said that a father is just a custodian of his daughter and actually the daughter belongs to first Soma or Chandra, then to Gandharva and then to Agni and that Agni is the one who gives her in wedding to the boy who then is the Guru to the daughter.
      He said that Soma represents the kapha and physical growth in the first stage, Gandarva represents vatha and mental growth in the second stage and Agni represents piththa or emotions in the third stage. So, when the girl is emotionally ready to be involved in a marriage, she is given by Agni to her human husband where in the Father is just acting as the custodian – Sastrigal uses the term ‘Nyaasam’ – meaning the protection to another’s property as the act of a father towards a daughter.
      In this respect, the father has to take utmost care in protecting the daughter and giving her in the best of the condition to the groom when he comes to ask his wife.
      In another place Mahaswamy ingeniously brings on how the repetition of jobs is wasteful and that both the household and external jobs are equally important, and that Males evolved for physical and mental stress where as females evolved for emotional intelligence and managerial capabilities.
      Today, we see all sorts of nonsense like
      1) Breaking up of joint families to nuclear families – due to one child policy, children never have the emotional support of siblings as well as grow up without developing tolerance or sharing nature.
      2) Kids growing without the care of parents or grand parents.
      3) Elders being sent to care homes.
      4) Elders spend time wastefully at retirement homes instead of helping grand children or the society.
      5) Chidlren spending ( rather killing ) lonely time at home watching nonsense in TV Serials or playing violent video games – turning into the violent characters when they grow up.
      6) Children being emotionally turmoiled by the burden of education and no emotional support of mother at home – they grow up like battery chickens – devoid of seeing the light of the day.
      7) Family planning has now brought in its own share of problems like the ovarian cysts, thyroid problems and many other harmonal imbalances in women taking contraceptives – this is the direct impact of nuclear family policy.
      It seems neither the govt. nor the common man are concerned in these problems. Our Acharyas are shouting out of their highest pitch.
      I am sure if everyone of us take a pledge to incorporate what Mahaswamy said in our life, we can surely get rid of all these social evils.
      Seeking Mahaperiyavaa’s grace to save this country.

      Thanks and regards,
      P. Vijay

      • This is also explained by HH Mahaperiyava in his discourse held on 17 November 1932. This was a detailed discourse wherein he had explained the role of male and female in a married life. He also mentioned the most important thing in the married life for both male and female. In this discourse he also explains the devathas who protector female at each life cycle.

  22. excellent. this reminds me(don’t think as bragging)of a few things. i refused a groom for my daughter because they demanded dowry. then after this marriage my daughter phoned me to say that i must inform their family that she does not know typing, she does not know tailoring or any art(she is diploma in tailoring embroidery etc.after her graduation) as the mother in law was trying to force her to a job though her husband is in favor of her being a home maker. today she is a good home maker. again, my daughter in law as many knows is Tenochtitlan tech. and she says that it is easier to be a CMD of a large company than to be a house wife (home maker!) as she is a housewife. we follow periava as much as possible and we are not unhappy. you say no comments are required but i know there are a lot of people who may grumble ‘how to run a family without twin income’ why waste education etc. i know even in America some of the people manage with their own single salary( of course once your wants are reduced – use of public transport etc. are utilised wants will be reduced). i agree it is difficult to go without mixie,grinder or washing machines these days but can they not be over come. what periava has said is only for our good and suiting our culture and there is nothing to get emotional on this or feel bad or good about it. these are factual statements which appeared in a newsmagazine ‘penmai’ sometime and your reiteration is timely though may not suit the west and be to the taste of east!!!!!!!!you are doing a service to the younger generation if they want to learn and if they read such things or if the elders try to tell them after reading this.

  23. Can someone kindly translate it in English.
    Thanks,
    Srikant

  24. Mahesh, these are HH Mahaperiyava’s words and as you said not everyone will agree to this nor like this. I also read in some other books that managing family and home affairs is an art and requires great technique and skills which most of men do not have. God has given that gift only to ladies. This is also emphasized by HH Mahaperiyava.

  25. very interesting

Leave a Reply to KailasCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading