பெரியவாளின் சட்ட ஞானம்

Thanks to Shri PE Ramesh for sharing this…

namavali027

“cy pres doctrine n. (see-pray doctrine) from French, meaning “as close as possible.” When a gift is made by will or trust (usually for charitable or educational purposes), and the named recipient of the gift does not exist, has dissolved, or no longer conducts the activity for which the gift is made, then the estate or trustee must make the gift to an organization which comes closest to fulfilling the purpose of the gift. Sometimes this results in heated court disputes in which a judge must determine the appropriate substitute to receive the gift. Example: dozens of local Societies for Protection of Cruelty to Animals contested for a gift which was made without designating which chapter would receive the benefits. The judge wisely divided up the money.”

ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.

ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: “நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்? அந்த மாதிரிக் குடுக்கலியே! “ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”ன்னு ‘லா’வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட் ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.

ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம், கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா  பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்”- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம் பிரார்த்திக்கிறார்.

அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.

” ‘ஸீப்ரே’-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி உச்சரி்ப்புப் பாத்தா ‘ஸைப்ரஸ்’னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச் வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங் ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த வார்த்தை ஸ்பெல்லிங்படி ‘ஸைப்ரஸ்’ன்னு ஆகும்.ஆனாலும் ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு, C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். ‘ஸீப்ரே’க்கு C,Y, அப்புறம் ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே: U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்…E க்கு அப்புறம் கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த ‘S’ உச்சரிப்புல வராது. ‘ஸைலன்ட்’ ஆயிடும்.

ஃப்ரெஞ்ச் பாஷைல ‘ஸீ-ப்ரே-ன்னா ‘ரொம்பக் கிட்டே”னு அர்த்தம். ஒரு ட்ரஸ்ட் சொத்தை தனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும் கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்.”



Categories: Devotee Experiences

8 replies

  1. Mr. Mahesh Krishnamurthi, You reproduce my story Kanikkai on your website without even say courtesy to me i.e. Padman or my blog Narkoodal. However Sri. P. Swaminathan mentioned that. Thanks to him. Kindly give due recognition to author.

  2. Why do u wonder? HE is not a human like all of us. HE is “Poorna Brahmam” and nothing is unknown to BRAHMAM Jaya Sankara!

  3. What more can we do, except to surrender at His Lotus Feet?
    V.Ganesan

  4. Sitting here in Ontario next door to Quebec where French is the widely spoken language, my most humble admiration of this great Mahatma / Mahagyani / Maha Acharya knows no bounds. HE has to be the AVATAR of Lord Siva. My Sashtanga Namaskaarams to MAHA PERIAVA.
    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.

    V. K. Srinivasan, Toronto, Ont.

  5. What astounding knowledge? Will there ever be another like him?

  6. Sarvagnar, Sarvavyaapi, Needhi Devathai Sri Maha PeriyavaL ThiruvadigaLee CharaNam! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  7. surrender at his feet.Ocean of Knowledge

Leave a Reply to RCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading