ஸ்த்ரீ ஜாதியின் மென்மை உயர்வு

 

 

26 Mahaperiyava in Rudhraksham 10082013

ஸ்த்ரீயின் ஸ்வபாவமும், அதற்கேற்ற ஸ்வதர்மமும் பரம உத்தமமானவை. ஸ்ருஷ்டியிலேயே உச்சமாக இருக்கிற உயர்ந்த குணங்களுக்கும் பண்புகளுக்கும் ஆச்ரயமாகவே ஸ்த்ரீ ஸ்வபாவம், அல்லது ஸ்த்ரீத்வம் என்ற பெண்மை இருக்கிறது. ஜீவ ராசிகளைப் பலவாகப் பிரித்து வைத்து வெவ்வேறு ஸ்வபாவ-ஸ்வதர்மங்களைப் பராசக்தி கொடுத்திருப்பதில் மநுஷ்ய ஜாதியில் ஸ்த்ரீ-புருஷாளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிற ஸ்வபாவ-ஸ்வதர்மங்களில் ஸ்த்ரீ தர்மமான பெண்மையே பெளருஷம் என்கிற  ஆண்மையை விட அநேக அம்சங்களில் உத்தமமானதாக இருக்கிறது. ஸாராம்சமாகச் சொன்னால் ஆண்மை, பெண்மை என்கிறவற்றில் ஆண்மையில் வன்மை தூக்கல்; பெண்மையில் மென்மை தூக்கல்.

வாழ்க்கைப் போராட்டம் என்பதாக ஜீவனத்தை ஒரு போராட்டமாகவே சொல்கிறோம். அதில் ஸ்த்ரீ அகத்துள்ளேயே செய்கிற பணி, புருஷ்ர் வெளியுலகத்தில் செய்கிற  பணி ஆகிய எதுவானாலும் போராடிப் போராடியே ஜயிக்க வேண்டுமாகையால் இரண்டிலும் போராடுவதற்கான வலிமை – வன்மை – வேணத்தான் வேணும்.

ஒரு அகத்தைக் கட்டி மேய்ப்பதற்கு எவ்வளவோ சரீர பலமும், மனோபலமும் வேணத்தான் வேணும். அதோடு கூட எந்தப் புருஷனுக்கும் கிடைக்க முடியாத பாக்யமாக, பரம ப்ரேமைக்கும் த்யாகத்துக்கும் உருவகமாக இருக்கிற தாய்மை என்பதை ஒரு ஸ்த்ரீ ஏற்கிறாளே, அதை ஏற்பதற்கு , கர்ப்பத்தைச் சுமப்பதிலிருந்து பிறந்த குழந்தைக்குத் தன் ஜீவரத்தத்தையே க்ஷீரமாக்கிக் கொடுத்து. ராப் பகல் பாராமல் ஸம்ரக்ஷிப்பது வரை எல்லாம் செய்வதற்கு எவ்வளவு வலிமை வேண்டும்?

அதே மாதிரி புருஷனுக்கும் மென்மையம்சங்கள் உண்டுதான். அவனும் ‘ஒரு மநுஷ்யனா? ம்ருகம் மாதிரி’ என்கிறோமே, அதிலிருந்தே தெரிகிறது. மநுஷ்ய ஜாதிப் புருஷனுங்கூட, க்ரூர மிருகங்கள் மாதிரி ஒரே வன்மையாக இல்லாமல் மென்மையும் கலந்து இருந்தாலே மநுஷ்யன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி உண்டு என்பது.

சரீர ரீதி, குணத்தின் ரீதி இரண்டிலும் க்ரூர ம்ருகங்களிலிருந்து மநுஷ்ய ஜாதிக்கு வரும்போது சொரசொரப்புப் போய் ‘மழ மழ’ உண்டாகிறது.  அந்த மநுஷ்ய ஜாதியிலும்  புருஷனைவிட ஸ்த்ரீயிடம் இந்த மழமழப்பு பூர்ணத்வத்தை அடைகிறது. அப்படித்தான் ப்ரக்ருதியில் பராசக்தி வைத்திருக்கிறாள். ஜீவராசிகளை நைஸ் பண்ணிக்கொண்டே போய் அதன் சிகர ஸ்தானம் ஸ்த்ரீ என்று வைத்திருக்கிறாள்.

ம்ருகத்தின் சரீரம் முழுவதும் ரோமம், மநுஷ்ய ஜாதிப் புருஷனுக்கு அப்படியில்லை. ஸ்த்ரீக்கோஅவனுக்கு இருக்கிற தாடி-மீசை கூட இல்லை! ம்ருகங்களிடம் மாம்ஸ பலம் நிறைந்திருக்கிறது. அந்த அளவுக்கு மநுஷ்ய ஜாதிப் புருஷனிடம் இல்லை. இல்லாவிட்டாலும் அவனுடைய உசரம், பருமன், கட்டுமஸ்து, கரணை கரணை (biceps ) ஆகியவையும் இல்லாத ஸெளகுமார்யம் (மென்மை) ஸ்த்ரீ சரீரத்துக்கே இருக்கிறது. சராசரியில் ஆண்கள் தானே பெண்களைவிட உயரமாக இருக்கிறார்கள்? க்ரூர ம்ருங்களின் உறுமல், கத்தல்களைவிட ஒரு புருஷனின் சாரீரம் ம்ருதுவாக இருக்கிறது என்றாலும், அவனுடைய கட்டைத் தொண்டையும் நைஸ்பட்டு ஸ்த்ரீக்குத்தான் மிகவும் மதுரமான சாரீரம் வாய்த்திருக்கிறது.

ஸமன் செய்கிற கோட்பாடு கொஞ்சங்கூட எடுபடாதபடி, ஒருகாலும் மாற்ற முடியாத மாறுபாடுகளோடுதான் இயற்கையே ஸ்த்ரீ-புருஷாளைப் பாகுபடுத்தி உருவாக்கியிருக்கிறது. லோக வாழ்க்கைக்கே மத்யமாக இருக்கிற ப்ரஜோத்பத்தியில் (ப்ராஜா உற்பத்தியில்) ஸ்த்ரீ-புருஷாள் வெவ்வேறு பணிகளைச் செய்வதற்கேற்ற முறையிலேயே அவர்களுக்கு சரீர அமைப்பை வேறுபடுத்திக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்குள்ளே மாறுபாடாக (ஆணுக்கு) ஆன்ட்ரஜன், (பெண்ணுக்கு) ஈஸ்ட்ரஜன் என்பது போலப் பல வைத்து அதையொட்டி ஒருவருக்கொருவர் ரொம்பவும் வித்யாஸமாக இயங்கும்படி வைத்திருக்கிறது. இது சரீரத்தோடு நிற்காமல், மனஸ், குணம் முதலியவற்றையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுகிறது. சரீரத்தோடு, அதற்கேற்ற குணமும் சேர்ந்தே ஒரு ஜீவன், body, mind இரண்டும் ஒரு unit – ஆக  ஆகிறது என்கிறார்கள். அப்படி குணத்தைப் பார்க்கும்போதும் வன்மை, மென்மைகளில் புருஷனிடம் முன்னது தூக்கல், ஸ்த்ரீயிடம் பின்னது தூக்கல் என்றே தெரிகிறது.

ம்ருகங்களுக்கு வெட்க குணம் இல்லை.  அவை பிறந்த மேனியாய் சுற்றுகின்றன. புருஷன் அப்படியில்லை. ஸ்த்ரீக்கு வெட்க குணம் இன்னும் ஜாஸ்தி – ஸ்வதர்மத்தை முறித்தேயாக வேண்டும் என்று அவர்கள் முனைந்து போகாத வரையில் அப்படித்தான் இருந்திருக்கிறது! கொஞ்சம் அஸப்யமான (பொதுச்சபைக்கு ஆக்குவதற்கில்லாத) பேச்சுக் கேட்டால்கூட அவர்கள் முகமே குப்பென்று சிவந்து வெட்க உணர்ச்சியைக் காட்டிவிடும்.Categories: Upanyasam

Tags:

4 replies

 1. Dear Mahesh,
  Its indeed an apt message given by periyava to the present generation to respect women. A society that gives reverence to women would flourish . Please can u post periyava’s suggested pariharams for begetting child.

 2. Thank u mr.mahesh for such a nice posting of mahaperiyava’s views and differenciating various aspects of men and women
  N seetharaman

 3. Periava sonnaal eppavumae correct. aanaal ippodu avargal sonnathu sreegalithil romba kuraivaga irukkirathu athanaalthaan periava ippodu sookshmamaga paarthukondirukirargal nammaipondrava abhagyavaangalukku darsinal sthoolamaga kodukkirathillai.

 4. What a great analysis of Men and Women by Sri Periyava

  “அப்படித்தான் ப்ரக்ருதியில் பராசக்தி வைத்திருக்கிறாள். ஜீவராசிகளை நைஸ் பண்ணிக்கொண்டே போய் அதன் சிகர ஸ்தானம் ஸ்த்ரீ என்று ைத்திருக்கிறாள்.”

  Sri Periyava Saranam

Leave a Reply

%d bloggers like this: