என்னையே எனக்குக் கொடு

One must read this article entirely. This clearly means that asking Parameswaran for anything other brahma gnanam is pure foolish thing. Yet, we have a list of things to ask him (or) demand him (or) negotiate with him….This is one of my favorite articles.

 

Rarest17

 

 

உண்மையான பக்தன் ஒருவன், பரமேஷ்வரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான்: “ஈச்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது? திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா? விசுவாகாரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா! உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும் தான் நீ இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது? சரி, பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞனான உன்னிடம் பிரார்த்திபதும் அபசாரமாக அல்லவா ஆகிறது? பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். நீ ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாக இருக்கத்தானே செய்கிறேன்? அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அது சரி, எல்லாமான உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபம்; உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது. இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே? இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே! இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீ தான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்று ஆகும். அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” – இப்படிச் சொல்கிறார் அந்த பக்தர். இந்த ரீதியிலேயே ‘சிவ மானஸிக பூஜா’ என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.

மஹ்யம் தேஹி ச பகவன்

மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்

‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’ என்கிறார்.

இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டால் தவிக்கிறோமே, நம்மையே விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும்? நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்கவேண்டும். பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்க முடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்.

இதற்கு முதல்படியாக வெளிப்பூஜை, கோவில் வழிபாடு எல்லாம் வேண்டியிருக்கிறது. உலக நினைப்பே ஓயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச் சாதனங்களாகும். இந்தக் கட்டத்தில் ஸ்வாமி கோவிலில் மட்டுமின்றி எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார்; நாமும்கூட அவரேதான் என்று நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை. மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா? ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஓரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும் – சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்தெயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும். புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஞானாம்பிகை கிருபை செய்வாள்.Categories: Upanyasam

Tags:

12 replies

 1. Superb! May Maha Periyava remove our ignorance.

 2. Thank you for this wonderful article.
  We don’t even know to pray or how to ask God for the right thing.
  Thank you Periyavaa for your compassion and grace.

 3. Om Sri Gurubyo Nama: Om Sri Mahaganapataye Nama:

  Actually so much can be accomplished by this “Maanasa Pooja”. We can transport ourselves “Maanaseekam” to the seven oceans of the world, to Ganga, to Kasi, to Haridwar, to Badri-Kedarnath, to Tala Kaveri, to the Amma mandapa Padith-thurai of Srirangam, to the origin of Narmada, to Pushkaram, to Gangotri, to Kailash to anywhere, have a holy dip in the appropriate teerta, perform our Sandhyavandanam and Gayatri japam there.

  Perform our Maanaseeka pooja of our Guru, build Him temples, perform their Kumba Abhishekam, perform his abhishekam with all the holy waters of the universe, perform his archchanai with all the exotic flowers, vilva dalam, etc., offer him naivedyam of delicious things, offer him dhoopam, deepam, samasta upajaaram, Neeraajanam everything, offer him taenga vettrilai paaku taambulam, vastra-aabaranam, everything.

  You can do so much with your manas. There is no limit to what you can do with your manas. We can in a trice get rid of all our evil karmas over millions of births over eons.

  To reach that stage of performing “Maanaseeka Pooja” requires just this spark of an enlightenment. I am sure many reading this would have decided to perform their “Maanaseeka Pooja” everyday, every breathing moment of our lives.

  That kind of divine spark is akin to the lighter which lights up our stove. Just a spark is all needed to set the whole body ablaze with divine thoughts, lo and behold we are there merging into the nameless wonder!

  That is what made Sri Adi Sankaraachaarya exclaim Yasya Brahmani ramatae chittam [The thought of Brahmam in all the moments], Nandati nandati nandatyaeva [Bliss bliss supreme bliss — Aanandam Aanandam Parama Aanandam] in his Bhaja Govindam!

  Om Sri Gurubyo Nama: Om Sri Mahaganapataye Nama:

 4. Amazing..
  JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA

 5. குரு சந்திரசேகர பகவான் பாதம் சரணம்.

  அருமையான தகவல் ஏன் போன்ற அடி பமரணநுக்கு

 6. Siva manasa puja ..is it not “ratnaihi kalpitham..” By Adi Sankara?

  • even i was little confused…since this is from deivathin kural book, not sure why there is such a reference…

   • It is not Shiva manasa puja (composed by Sri Adi Shankaracharya), but it is Shiva manasika puja, which was composed by Sri Sadashiva Brahmendral. I searched in the internet and I couldn’t get the complete shloka. Kamakoti Kosasthanam, the publisher of Kamakoti pradeepam has published this shloka.

   • Siva Manasika pooja was penned by Sree Sadasiva Brahmendral. Sree Adi Sankara wrote Siva Manasa pooja. They are different.

 7. Terrrrriiiiffffiiiiiiccccccccc

Trackbacks

 1. திருமண உறவு மேம்பட | தமிழ் இனிமை
 2. குடும்ப உறவுகள் மேம்பட! | தமிழ் இனிமை

Leave a Reply

%d bloggers like this: